கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பானூரில் ஒரு வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் போது திடீரென வெடித்து சிதறிய சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை சுமார் 1 மணியளவில் நடந்தது. இதில் சி.பி.எம் ஆதரவாளரான ஷெரின் என்பவர் மரணம் அடைந்தார். வினீத் என்பவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைபெற்றுவருகிறார். வெடிகுண்டு வெடித்த வீட்டுக்குச் சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். அந்த வீட்டில் இருந்து வெடிக்காத 4 வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. வெடிகுண்டு தயாரிப்பில் மொத்தம் 10 பேர் ஈடுபட்டதாக தெரியவந்தது. அதில் அதுல், அருண், ஷபின்லால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சி.பி.எம் கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மற்றொருவர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சிலர் தலைமறைவாக உள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. வெசிகுண்டு தயாரித்த வழக்கில் சிக்கியவர் கே.கே.சைலஜாவுடன் நிற்கும் போட்டோ
கைதுசெய்யப்பட்டவர்களை அழைத்துக்கொண்டு வெடிகுண்டு தயாரித்த பகுதியில் போலீஸார் சோதனை நடத்தினர். வெடிகுண்டு வெடித்த வீட்டுக்கு அருகே உள்ள இடத்தில் புதர்களுக்கிடையே 7 ஸ்டீல் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. துருபிடித்த ஆணிகள், உடைந்த கண்ணாடி துண்டுகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி ஸ்டீல் வெடிகுண்டை தயாரித்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து கருத்துதெரிவித்த காங்கிரஸ் மாநில தலைவர் கே.சுதாகரன், "சி.பி.எம் கட்சி ஒரு தீவிரவாத அமைப்பு. மனிதர்களை கொல்வதற்கு முயற்சி செய்யும் தீவிரவாத அமைப்புகள் இந்த நாகரீக சமூகத்திற்கு ஒருபோதும் ஏற்புடையதல்ல" என்றார்.
இதற்கிடையே சி.பி.எம் கட்சியை சேர்ந்த சிட்டிங் எம்.எல்.ஏ-வும், வடகரா தொகுதி வேட்பாளருமான முன்னாள் அமைச்சர் கே.கே.சைலஜாவுடன் வெடிகுண்டு தயாரித்த வழக்கில் சிக்கியவர்கள் நிற்கும் போட்டோவை இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ராகுல் மாம்கூட்டத்தில் தனது முகநூலில் பகிர்ந்திருந்தார். இதுகுறித்து கே.கே.சைலஜா கூறுகையில், "பானூரில் வெடிகுண்டு தயாரித்த கும்பலுடன் கட்சிக்கோ, எனக்கோ எந்த பந்தமும் இல்லை. திருமணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் செல்லும்போது பலரும் போட்டோ எடுத்திருப்பார்கள். காங்கிரஸ் கூட்டணிக்கு தேர்தல் சமயத்தில் சொல்ல ஒன்றுமே இல்லை என்பதால் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்" என்றார்.வெடிகுண்டு தயாரிக்கப்பட்ட வீடு
இது குறித்து காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி. சதீசன் கூறுகையில், "வெடிகுண்டு தயாரித்தவர்கள் சி.பி.எம் வேட்பாளருடன் நிற்கும் போட்டோக்கள் வெளிவந்துள்ளன. ஆனாலும் அவர் தங்கள் கட்சியை சேர்ந்தவர் இல்லை என கூசாமல் பொய் சொல்கிறார்கள். அவர் சி.பி.எம் கட்சி நிர்வாகிதான். இப்போது அவர்கள் யாருடனும் பந்தமில்லை என சொல்லுகிறார்கள். இவர் யாரையுமே தெரியாது என மறுத்து சொல்வார்கள். வெடிகுண்டு தயாரிக்கும் செயல்களில் ஈடுபடுவது சி.பி.எம் கட்சி தான். கண்ணூரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் சி.பி.எம் கட்சிக்கும் சமீப காலமாக எந்த பிரச்னையும் இல்லை. அதை எல்லாம் முதல்வரும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகளும் பேசி தீர்த்துவிட்டனர். அவர்கள் வெடிகுண்டு தயாரித்தது எங்களைக் கொல்வதற்காகத்தானோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தேர்தல் வரும்போது எதற்காக வெடிகுண்டு தயாரிக்கிறார்கள். முதல்வரும், போலீஸும் வெசிகுண்டு தயாரிப்பவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். வெடிகுண்டு தயாரிக்கும் சம்பவம் போலீஸுக்கு தெரியாதா? போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது. கேரளா மாநில மக்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார்.காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்
வெடிகுண்டு தயாரிப்புக்கும் சி.பி.எம் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என தொடர்ந்து மறுத்துவருகிறார்கள் அக்கட்சி நிர்வாகிகள். இதுபற்றி சி.பி.எம் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், "ஒரு வன்முறை சம்பவத்திலும் நாங்கள் ஈடுபடுவது இல்லை. எங்கள் கட்சி நிர்வாகிகள் தாக்குதலுக்கு ஆளான சம்பவங்களும் கேரளத்தில் நடந்துள்ளது. அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில்கூட தடுப்பு நடவடிக்கையாக கூட எந்த சம்பவத்திலும் நாங்கள் ஈடுபட்டதில்லை" என்றார்.
ஆலப்புழாவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், "வெடிகுண்டு தயாரித்தது சட்ட விரோத செயலாகும். அந்த சம்பவத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்கும். வெடிகுண்டு தயாரிப்பது குறித்து உளவுத்துறை ரிப்போர்ட் செய்துள்ளதா என தெரியவில்லை. அந்த சம்பவத்துக்கும் கட்சிக்கும் பந்தம் இல்லை என ஏற்கனவே சி.பி.எம் தெரிவித்துள்ளது" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5BD8j