Thursday 11 April 2024
``இங்கு உழைப்பவர்களுக்கு தான் மரியாதை..!" - அண்ணாமலையை சாடிய எடப்பாடி பழனிசாமி
பொள்ளாச்சி அதிமுக வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அதில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக 3 ஆக உடைந்துவிட்டது என ஸ்டாலின் சொல்கிறார். அவர் நம் கட்சியை உடைக்க எவ்வளவோ முயற்சி செய்தார்.எடப்பாடி பழனிசாமி
அவை அத்தனையும் தவிடு பொடியாக்கப்பட்டது. பாஜகவுக்கு புதிதாக ஒரு தலைவர் வந்துள்ளார். பேட்டி கொடுப்பது மட்டுமே அவர் வேலை. விமானத்தில் ஏறும்போதும், இறங்கும்போதும் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
தலைவர்கள் பல வழியில் மக்களை சந்திப்பார்கள். இவர் பேட்டி கொடுத்தே மக்களை நம்பவைத்து வாக்கு பெற முயற்சி செய்கிறார். அது தமிழ்நாட்டில் எடுபடாது. இங்கு உழைப்பவர்களுக்கு மட்டுமே மரியாதை கிடைக்கும். இங்கு அதிமுகதான் உழைக்கிற கட்சி. நீங்கள் எவ்வளவு பேட்டி கொடுத்தாலும் அது எடுபடாது.அண்ணாமலை
நாங்கள் நினைத்தாலும் பேட்டி கொடுக்கலாம். அதனால் என்ன பயன். எப்போது எதை சொல்ல வேண்டுமோ, அப்போது சொன்னால்தான் மக்களிடம் சென்றடையும். இவரைப் போல எத்தனை தலைவர்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது.
காவரி நதிநீர் பிரச்னை தீர்வுக்கு பிரதமரும், அண்ணாமலையும் வாய் திறந்தார்களா. மத்தியில் இருந்து அடிக்கடி வந்து சென்று கொண்டுள்ளார்கள். நேராக ஏரோ பிளேனில் இறங்குகிறார்கள். சாலையில் அப்படியே சென்று என்ன பயன். மக்கள் ஓட்டு போடுவார்களா. தமிழக மக்கள் அறிவுத்திறன் படைத்தவர்கள். ஏமாற்று வேலைகள் எல்லாம் இங்கு நடக்காது.அதிமுக பொள்ளாச்சி பொதுக்கூட்டம்
திமுக-வில் 4 முதல்வர்கள் உள்ளனர். ஸ்டாலின், உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என இப்படி 4 அதிகார மையங்கள் உள்ளன. உள்ளூரில் ஒனான் பிடிக்க முடியாதவன் காட்டில் சென்று சிங்கம் மேய்ப்பானாம். அப்படித்தான் இருக்கிறது இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்னும் விளம்பரம்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5Lv9S

`மோடி மீண்டும் வந்தால் சமூகநீதி குழிதோண்டி புதைக்கப்படும்!' - தேனியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
தேனி அருகே லட்சுமிபுரத்தில் திமுக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், திண்டுக்கல் தொகுதி திமுக கூட்டணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். தங்க தமிழ்ச்செல்வன், சச்சிதானந்தம்
அப்போது பேசி முதல்வர் ஸ்டாலின், ``உங்கள் வாக்கு எம்.பி.யைத் தேர்வு செய்வதற்காக மட்டுமல்ல. உங்கள் வாக்குகளால்தான் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜனநாயகவாதி வர முடியும். மக்களைப் பற்றி இரக்கப்படுபவராக வரமுடியும். தமிழ்நாட்டை மதிப்பவராக வரமுடியும்.
மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்பதை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியாவை அமளியாக்கிவிடுவார். மக்களை வேறுபடுத்தி நாட்டையே நாசம் செய்துவிடுவார்கள். நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நாடாளுமன்றத்தில் விவாதம் இருக்காது. தேர்தல் ஜனநாயகப்பூர்வமாக இருக்காது. மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்காது. சட்டமன்றங்கள் கூட இருக்குமா என்பது சந்தேகம். ஒரே மொழி – ஒரே மதம் – ஒரே பண்பாடு – ஒரே உடை – ஒரே உணவு என்று ஒற்றை சர்வாதிகார நாடாக மாற்றிவிடுவார்கள். சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைத்துவிடுவார்கள்.பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின்
மோடி ஷோ காட்டி வருகிறார். இதை நான் சொல்லவில்லை, அவரே ’ரோடு ஷோ’ காட்டுகிறேன் என்றுதான் சொல்கிறார். நேற்று சென்னையில் தியாகராயர் நகரில் ஷோ காட்டினார். அந்த இடம் நீதிக்கட்சித் தலைவர் தியாகராயர் – சவுந்திர பாண்டியனார் பெயரில் இருக்கும் பாண்டி பஜார், பனகல் அரசர் பெயரில் இருக்கும் பூங்கா என்று திராவிடக் கோட்டமாக இருக்கிறது. அந்த இடத்தில் மோடியின் ஷோ எடுபடாது.
சென்னை மெட்ரோ திட்டத்தை விரிவாக்கம் செய்யப்போவதாகக் கூறுகிறார். அந்தத் திட்டத்திற்கு தடையாக இருந்ததே அவர் தான். சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ இரயில் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால்தான் நிதி கிடைக்கவில்லை. அதனால்தான் திட்டப்பணிகள் தாமதமாகிறது. கடந்த 2020-இல் மத்திய உள்துறை அமைச்சர் இந்தத் திட்டத்திற்காக அடிக்கல் நாட்டினார். ஆனால், அனுமதி கொடுக்கவில்லை. நான் முதலமைச்சரான பிறகு முதல் சந்திப்பில் இருந்து கோரிக்கை வைக்கிறேன். பிரதமரை நேரில் சந்தித்தும் பலனில்லை. பொதுக்கூட்டம்
மதுரை எய்ம்ஸ் போன்று, சென்னை மெட்ரோவும் அடிக்கல்லோடு நிற்கக் கூடாது என்று இப்போது மாநில அரசின் நிதியில் இருந்து, மெட்ரோ பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இதனால் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டு, பணிகள் மெதுவாக நடக்கிறது. இந்தப் பணிகளால் ஆண்டுக்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகிறது. இதை மறைத்து பச்சை பொய் பேசுகிறார்.
ஊழலுக்கு ஒரு யூனிவர்சிட்டி கட்டி, அதற்கு ஒருவரை வேந்தராக நியமிக்க பொருத்தமான நபர் மோடி தான். ஊழலைச் சட்டப்பூர்வமாக்கியவர் மோடி தான். தேர்தல் பத்திரங்கள் மூலமாக ஊழல் பணத்தை நேரடியாகக் கட்சி வங்கிக் கணக்கிற்கு வரவும் - பி.எம். கேர்ஸ் நிதியாகவும் உருவாக்கிக் கொண்டார். வாஷிங் மெஷின் வைத்து ஊழல் அரசியல்வாதிகளை பா.ஜ.க.வுக்குள் சேர்த்துக் கொள்ளும் மோடி, ஊழலைப் பற்றி பேசக் கூடாது. பிரதமர் மோடி
சமூகநீதியைப் பேசும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை முஸ்லிம் லீக்கின் தேர்தல் அறிக்கைபோல் இருக்கிறது என்று கேலி செய்து பிரிவினைவாத அரசியல் செய்கிறார்கள். பத்தாண்டு கால சாதனைகளை கூற முடியாமல் மக்களைப் பிளவுப்படுத்தி பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும்" என்றார். `கோடீஸ்வர’ நண்பர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீதான ராகுல் சாடலும் பின்னணியும்!
http://dlvr.it/T5LDNp

Wednesday 10 April 2024
கிளியுடன் ஓட்டு கேட்ட திமுக மேயர் | களையெடுத்த பாஜக வேட்பாளர் | Election Clicks
தஞ்சாவூர் தொகுதி தி.மு.க.,வேட்பாளர் முரசொலியை ஆதரித்து, காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை பிரச்சாரம்.புதுச்சேரி தேர்தல் தலைமையகத்திலிருந்து வாக்குப்பெட்டிகள் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பலத்த போலிஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டை மகளிர் கல்லூரிக்கு கொண்டுச் செல்லப்பட்டது.பாமக வேட்பாளர் திலகபாமாபுதுச்சேரி காரைக்கால் பிராந்தியத்தில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பிரசாரம்புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து பிரசாரம்புதுச்சேரி நாம் தமிழர் கட்சியினர் கடற்கரை சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குகளை சேகரித்தனர்புதுச்சேரி தேர்தல் தலைமையகத்திலிருந்து பலத்த போலிஸ் பாதுகாப்புடன் மகளிர் கல்லூரிக்கு வந்த வாக்குப்பெட்டிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பார்வையிட்டார்விருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா கூரை குண்டு பகுதியில் தேர்தல் பிரசாரம்.திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனிக்கு ஆதரவாக பரமக்குடியில் வைகோ பிரசாரம்.மதுரையில் திமுக மேயர் இந்திராணி கிளியை வைத்துக்கொண்டு வாக்கு சேகரிப்பு களஞ்சியம் - நாம் தமிழர் கட்சிஓ.பி.எஸ் - அர்ஜுன் சம்பத்நமீதாவயலில் களையெடுத்து வாக்கு சேகரிக்கும் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம்வாக்கு இயந்திரங்களில் கட்சிகளின் சின்னம் மட்டும் பெயர்கள் ஒட்டும் பணியில் தாம்பரம் நகராட்சி ஊழியர்கள்ஸ்ரீ பெரம்பூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து, எம்.எல்.ஏ கருணாநிதி பல்லாவரம் ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வாக்குகள் சேகரித்தார்தேனி பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்
http://dlvr.it/T5Ksvs
http://dlvr.it/T5Ksvs
துப்பாக்கிச்சூடு நடத்திய மாணவன்... பெற்றோருக்கு சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!
நான்கு மாணவர்களை சுட்டுக் கொன்ற மாணவரின் பெற்றோருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது…
2021-ல் ஈதன் க்ரம்ப்ளே என்ற 15 வயது மாணவன் ஆக்ஸ்ஃபோர்டு உயர்நிலைப் பள்ளியில் தன்னோடு படிக்கும் சக மாணவர்கள் 4 பேரைச் சுட்டுக் கொன்ற சம்பவம் இன்றளவும் பலராலும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக உள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 மாணவர்கள் காயமடைந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவன் மற்றும் அவரின் பெற்றோர்கள் ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.நமக்குள்ளே- போக்ஸோ: குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவது அதிகரித்திருக்கின்றது; ஆனால், விசாரணை, தண்டனை?
இந்நிலையில் செவ்வாய்க்கிழமையன்று, இறந்த மாணவர்களின் பெற்றோர்கள், தங்களின் உணர்வுபூர்வ அறிக்கைகளை கலிஃபோர்னியா ஓக்லாண்ட் நீதிமன்றத்தில் அளித்தனர்.
ஜேம்ஸ் மற்றும் ஜெனிபர் க்ரம்ப்ளே தன் மகனின் மோசமான மனநிலையை கவனிக்கத் தவறியதாகவும், மேலும் 2021 தாக்குதலில் அவர் பயன்படுத்திய துப்பாக்கியை பெற்றோர்கள் வாங்கியதாகவும், அதோடு அந்தத் துப்பாக்கியை சரியாகப் பதுக்கி வைக்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டினர்.
குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறுவனுக்கு பரோல் இல்லா சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மகனின் மனநிலையை கவனிக்கத் தவறிய அலட்சிய போக்கிற்காக பெற்றோர்களுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
http://dlvr.it/T5KTLb

`ஓய்வில்லாமல் உழைப்பதாக கூறும் மோடிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்”- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உ.வாசுகி
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியின் தி.மு.க வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.கவுடன் இணைந்து பணியாற்றி பா.ஜ.க அரசு கொண்டு வந்த விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள், நீட் தேர்வு, கியூட் தேர்வு, குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு உடந்தையாக இருந்த அ.தி.மு.க இன்று பா.ஜ.க கூட்டணியில் இருந்து மக்களின் நலனுக்காக வெளியேறியதாகவும், கூட்டணி தர்மத்திற்காகவே அந்த சட்டங்களுக்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறுகிறார்கள். அப்படியானால், மக்கள் விரோத சட்டங்களுக்கு உடந்தையாக இருந்ததை அவர்களாகவே தற்போது ஒப்புக் கொண்டுள்ளனர். உ.வாசுகி
தங்கள் காரியங்களை எல்லாம் சாதித்துவிட்டு தற்போது பா.ஜ.கவை எதிர்ப்பதைப் போல எடப்பாடி பழனிசாமி நாடகமாடுகிறார். இந்தத் தேர்தலில் மோடியையும், எடப்பாடி பழனிசாமியையும் வீழ்த்த வேண்டும். தரம் குறைந்த மருந்துகளை தயாரித்தது தொடர்பாக வழக்கு மற்றும் விசாரணையில் உள்ள நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் ஆயிரம் கோடி ரூபாயை பா.ஜ.க வாங்கியுள்ளது. தரம் குறைந்த மருந்துகளை பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், அதானி, அம்பானி, அண்ணாமலை போன்றவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். ஏழை மக்கள்தான் இந்த மருந்துகளை பயன்படுத்துவார்கள். அவர்கள் உயிர்களை பற்றி மோடிக்கு அக்கறை கிடையாது.
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் பிரதமர் மோடி, ஓய்வில்லாமல் உழைத்து வருவதாகச் சொல்கிறார். அவர் யாருக்காக உழைத்தார் என்பது கேள்விக்குறிதான். அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மட்டுமே அவர் உழைத்துள்ளார். நிச்சயமாக நாம் அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். கடந்த பா.ஜ.க ஆட்சியில் ஒன்றிய தணிக்கைக் குழு அளித்துள்ள அறிக்கையில், ஏழரை லட்சம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பா.ஜ.க தலைவர்கள் யாரும் கருத்து தெரிவிக்கவில்லை. நாங்கள் ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று கூறிக் கொள்ளும் பா.ஜ.கவினர் இது குறித்து வாய்திறக்காதது ஏன்? ரஃபேல் போர் விமான கொள்முதலில் நடந்த ஊழலில் அனில் அம்பானிக்கு ஆதரவாக மோடி செயல்பட்டார். பல ஆயிரம் கோடி பங்குச்சந்தை மோசடியில் அதானிக்கு ஆதரவாகச் செயல்பட்டார். தேர்தல் பரப்புரை
பல ஆயிரம் கோடி ஊழல் செய்த ரெட்டியை கட்சியில் சேர்த்துள்ளனர். தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட ஊழல் பணத்தில் பல மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்த்தனர். பலரை விலை கொடுத்து கட்சியில் சேர்த்துள்ளனர். குற்றவாளிகள் எல்லாம் பா.ஜ.கவில் சேர்ந்து சுத்தவாளியாக மாறுகின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினர் ஊழல் செய்தனர் என்று கூறி, அவர்களை மட்டும் அமலாக்கத்துறை மூலம் கைது செய்து வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் போன்ற முதலமைச்சர்களை கைது செய்தனர். ஓட்டப்பந்தயத்தில் ஓடுகிறவர்களை தடுத்து நிறுத்திவிட்டு மோடி மட்டுமே வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அமலாக்கத்துறையின் செயல்பாடு உள்ளது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5K4W8

பா.ஜ.க-வின் தேர்தல் பயம் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர்கள் வேட்டையாடப்படுகிறார்களா? - ஒன் பை டூ
கனகராஜ், மாநிலச் செயற்குழு உறுப்பினர், சி.பி.எம்
“யாராலும் மறுக்க முடியாத உண்மை. பா.ஜ.க இரண்டு வழிகளில் ஒரு கட்சியைச் சிதைக்கப் பார்க்கும். மாநிலத்தில் வலுவாக இருக்கும் கட்சியுடன் கூட்டணிவைத்து உறவாடுவதுபோல, அந்த மாநிலக் கட்சியை முழுவதுமாகவே அழித்துவிடுவது ஒன்று. மற்றொன்று, தேர்தலுக்கு முன்பாக ஒரு கட்சியின் மீது ஆதாரமே இல்லாத அவதூறுகளை அள்ளி வீசுவது. இப்படித்தான், தமிழகத்தில் 2021 தேர்தலையொட்டி மு.க.ஸ்டாலினின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை, கேரளாவில் தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வருக்குத் தொடர்பு, கர்நாடகாவில் டி.கே.சிவகுமாருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை என்றெல்லாம் அவதூறுகளைப் பரப்பியது பா.ஜ.க. இப்போது மக்களவைத் தேர்தலுக்காக தெலங்கானாவில் கவிதா, டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகிய இருவரையும் மதுபானக் கொள்கை வழக்கில், கைதுசெய்து சிறையில் அடைத்துவிட்டது பா.ஜ.க. இதே ஊழல் வழக்கில், சம்பந்தப்பட்ட மதுபான நிறுவனம் பா.ஜ.க-வுக்கு 55 கோடி ரூபாயை நிதியாகக் கொடுத்திருக்கிறது. அப்படியென்றால் கைது செய்யப்பட வேண்டியவர் பா.ஜ.க தலைவர் ஜே.பி. நட்டாதானே... தோல்வி பயத்தில் இருக்கும் பா.ஜ.க., துளிகூட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சியினர் மீது சுமத்தி, அதைத் தேர்தல் வெற்றியாக மாற்ற முயல்கிறது. கடந்த பத்தாண்டுக்காலச் சாதனைகள் என்று சொல்லி வாக்கு கேட்க வக்கில்லாததால்தான், இப்படி இறங்கிவிட்டது பா.ஜ.க.”கனகராஜ், ஜி.கே.நாகராஜ்
ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க
“வாய்க்கு வந்ததைச் சொல்லியிருக்கிறார் பிரகாஷ் காரத். பாரதம் முழுவதும் பா.ஜ.க-வுக்குக்கான வெற்றி அலை வீசுகிறது. `இந்தியா’ கூட்டணி துடைத்து எறியப்படும் என்பதும் உறுதியாகிவிட்டது. இந்தத் தோல்வி பயத்தில், `இந்தியா’ கூட்டணியில் இருப்பவர்கள்தான் பொய் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். தமிழகத்திலும் இதே பயம் இருப்பதால்தான், ‘கோவையில் கூட்டணிக் கட்சி தோல்வியைத் தழுவும்’ என்று பயந்து தி.மு.க-வே நேரடியாகக் களமிறங்கியிருக்கிறது. இதே பயத்தில்தான் எதிரும் புதிருமாக இருந்துவரும் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று அனைவரும் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கிறார்கள். யார் எந்தக் கூட்டணி வைத்தாலும் வெற்றிபெறப்போவது பா.ஜ.க கூட்டணி மட்டுமே என்பது உறுதியாகிவிட்டது. 2004-2014 வரை மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில், அமலாக்கத்துறை கைப்பற்றிய பணம் 536 கோடி மட்டுமே. அதே 2014-2024 வரை பிரதமர் மோடி அரசில் கைப்பற்றப்பட்ட பணம் 93,000 கோடி ரூபாய். இந்தப் புள்ளிவிவரமே எந்த ஆட்சி சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதைக் காட்டும். மேலும், அமலாக்கத்துறையால் இப்போது கைதுசெய்யப்பட்ட யாரும் தவறு செய்யாதவர்கள் கிடையாது. எங்கள் தலைவர் நட்டா சொன்னதுபோல, `இந்தியா’ கூட்டணித் தலைவர்களில் பாதிப் பேர் சிறையில் இருக்கிறார்கள்... மீதிப் பேர் பெயிலில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை!”
http://dlvr.it/T5JD0n