இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டியில் 90 சதவீதம் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக தென்மாவட்டங்களான தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டகளில் அதிகளவு தீப்பெட்டி உற்பத்தி நடைபெற்று வருகிறது. அதிலும் கோவில்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில்தான் அதிக தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக 90 சதவீதம் பெண்கள்தான் தீப்பெட்டி ஆலைகளில் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிலை நம்பி 3 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். தீப்பெட்டி உற்பத்தி
மூலப்பொருள்களின் விலை உயர்வு, தீப்பெட்டியின் விலை அதிகரிப்பால் ஆர்டர்கள் குறைவு, தீப்பெட்டி பண்டல்களின் தேக்கம் என, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி உற்பத்தித் தொழில் அடியோடு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு சிகரெட் லைட்டர் விற்பனை, 20 தீப்பெட்டிகளின் விற்பனையை தடை செய்து வருகிறது. எனவே சீன லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில .அரசுகளுக்கு கடந்த சில ஆண்டுகளாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனையடுத்து கடந்த ஆண்டு ரூ.20-க்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. இருந்த போதிலும் சீனாவில் இருந்து நோபாளம் வழியாக இந்தியாவிற்கு பிளாஸ்டிக் லைட்டர்கள் திருட்டுத்தனமாக கொண்டு வரப்பட்டு விற்பனை ஜோரூராக நடைபெற்று வருகிறது. ரூ.8 முதல் ரூ.10 வரை பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை செய்யப்படும் நிலை இருப்பதால், தீப்பெட்டி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பலகோடி ரூபாய் மதிப்புள்ள தீப்பெட்டி பண்டல்கள் தேக்கம் அடைந்துள்ளன. இந்த நிலையில் இன்று (13-ம் தேதி) முதல் வரும் 21-ம் தேதி வரை தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள தீப்பெட்டி ஆலைகளில் தீப்பெட்டி உற்பத்தியை நிறுத்துவது என்று தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளதாக நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பரமசிவம் கூறுகையில், ”தீப்பெட்டி உற்பத்தித் தொழில் நலிந்து போவதற்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் சீன பிளாஸ்டிக் லைட்டர்கள் ஒரு காரணமாக இருக்கும். தீப்பெட்டி உற்பத்தி
மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தாலும், அதிகாரிகள் லைட்டர்களை ஒழிக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தீப்பெட்டி உற்பத்தி, விறப்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாங்கி பொருள்களுக்கு பணம் கொடுக்க முடியாத நிலை இருப்பதால், 10 நாள்கள் தீப்பெட்டி ஆலைகளில் உற்பத்தியை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதனால் பகுதி மற்றும் முழு இயந்திரம் என சுமார் 700 பகுதி நேர தீப்பெட்டி ஆலைகள், 1,200 தீப்பெட்டி உற்பத்தி சார்பு ஆலைகள் மூடப்படுவது மட்டுமின்றி, 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் நிலை ஏற்படும். நாள் ஒன்றுக்கு 6 கோடி ரூபாய் தீப்பெட்டி உற்பத்தி என ரூ.60 கோடி மதிப்பிலான தீப்பெட்டி உற்பத்தி பாதிக்கப்படும்” என்றார். தீப்பெட்டி உற்பத்தி பாதிப்பு; வெளிநாட்டு சிகரெட் லைட்டர்களைத் தடுக்க நடவடிக்கை..!
http://dlvr.it/T5RsDC