Sunday, 14 April 2024
``தேர்தல் பத்திரத் திட்டத்தின் மூலம் மிகப்பெரும் ஊழலைச் செய்திருக்கிறது பாஜக!" - சீதாராம் யெச்சூரி
"400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசும் மோடி, மீண்டும் மீண்டும் தமிழகத்திற்கு வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்று சி.பி.எம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தொகுதி சி.பி.எம் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஓபுளா படித்துறை பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் சி.பி.எம் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி பேசும்போது, "மதமாச்சர்யங்கள் இல்லாத மகத்தான சித்திரைத் திருவிழா நேரத்தில் மதுரை வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. வைகை நாகரிகம் நமது தத்துவார்த்த போராட்டத்திற்கு உந்துகோலாக உள்ளது. மதம்தான் நமது கலாசாரம் என பேசுபவர்ளுக்கு நமது நாகரிகம் மதச்சார்பற்ற நாகரிகம் என்பதை கீழடி சொல்லுகிறது. மதச்சார்பற்ற ஜனநாயக ஆன்மாவைக் காப்பாற்ற வேண்டிய நேரம் வந்துள்ளது.
1978 முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மையமாக உள்ள மதுரையில் சங்கரய்யா, ஜானகி அம்மாள், பி.ராமமூர்த்தி உள்ளிட்ட மகத்தான தலைவர்கள் வந்தவர்கள்.
ஆள்தூக்கி சட்டங்களையும், விசாரணை அமைப்புகளையும் ஏவி அரசுக்கு எதிராக பேசுபவர்களை சிறையில் அடைக்கின்றனர். பாஜக-வை எதிர்ப்பவர்களுக்கு தேசவிரோதி பட்டம் கொடுத்து எந்தவித குற்றச்சாட்டுமின்றி பல மாதங்கள் சிறையில் வைக்கின்றனர்.சீதாராம் யெச்சூரி
நாட்டின் பொதுச் சொத்துகளை பாஜக சூறையாடி வருகிறது. இயற்கை வளங்களையும், கனிமங்களையும் கார்ப்பரேட்டுகளுக்கு விற்கின்றனர்.
தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டியும், விசாரணை அமைப்புகளை ஏவியும், வழக்கு பதிவுசெய்தும் நிறுவனங்களிடமிருந்து முறைகேடாக நிதி பெற்று தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் மிகப்பெரும் நிதி ஊழலை செய்து இருக்கிறது பாஜக.
நஷ்டம் ஏற்பட்ட நிறுவனங்களிடமிருந்தும்கூட நிதியை பெற்றிருக்கிறார்கள். இது வெளிநாட்டு பணம் எனச் சந்தேகம் வருகிறது. இது போதைப்பொருள் கடத்தல் மூலம் வந்த பணமாக கூட இருக்கலாம். எனவே விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். இது குறித்தெல்லாம் அமலாக்கத்துறை விசாரணை செய்யாமல், எதிர்க்கட்சி தலைவர்களை சிறை வைப்பதிலேயே மும்முரமாக உள்ளது.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய ஊழல் தேர்தல் பத்திர திட்டம். இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கையிலெடுத்து, உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ள தனி விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.
எதிர்க்கட்சிகளை ஊழல்வாதிகள் எனச் சொல்லிவிட்டு பல கோடி ரூபாயை முறைகேடாகப் பெற்ற பாஜக, ஊழலை ஒழிக்கும் லட்சணம் இதுதானா?
இந்தியாவை ஒரே அரசாங்க முறையாக மாற்ற துடிக்கும் மோடியின் மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கையை தடுக்க வேண்டிய முக்கியமான கட்டத்தில் உள்ளோம். சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே இட ஒதுக்கீடு முறையை சிறப்பாக செயல்படுத்த முடியும். மனுவாத அடிப்படையிலான கட்டமைப்பை பாதுகாக்க பாஜக விரும்புகிறது. அதனால்தான் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என்று மறுக்கிறார்கள்.
மோடி நான் கியாராண்டி என சொல்லுகிறார். மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தீர்களா? அப்புறம் என்ன கியாரண்டி?
அசைவ உணவு சாப்பிடக் கூடாது எனவும், யார் இந்து, முஸ்லிம் என பேசுகிறார் மோடி. இதுதான் ஒரு பிரதமரின் வேலையா? 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என பேசும் மோடி, மீண்டும் மீண்டும் 9 முறை எதற்காக தமிழகத்திற்கு வருகிறீர்கள்? வட இந்தியாவில் தங்களுக்கு வெற்றி கிடைக்காது என்பதால், தென் மாநிலத்திற்கு படையெடுக்கிறார்கள்.
ஒருவேளை இ.வி.எம் மூலம் மோசடி செய்ய உள்ளார்களா என்ற சந்தேகம் எழுகிறது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கன்ட்ரோல் யூனிட்டில் இருந்து வி.வி பேடுக்கு என்ன செல்கிறது என்பது தெரியவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் செவி சாய்க்கவில்லை. அதற்கான வழக்கும் நீதிமன்றத்தில் இருக்கிறது
பாஜக-வுக்கும், மோடிக்கும் தென் மாநிலங்கள் எப்போதும் ஆதரவாக இருந்ததில்லை. இந்த நிலையில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என பேசும் பாஜக மீது எங்களுக்கு சந்தேகம் எழுகிறது. கடந்தமுறை போல தமிழகம் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறக் கூடாது. வெற்றி பெற முடியாது. தமிழக மக்கள் அளிக்கும் தீர்ப்பு முன்னோடியான மகத்தான தீர்ப்பாக இருக்கும்" எனப் பேசினார்."அதிமுக அழிந்துவிடும் என்று சொல்லும் அண்ணாமலை என்ன, விஸ்வாமித்திரரா?" - செல்லூர் ராஜூ கேள்வி
http://dlvr.it/T5V6tZ

இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இரான்; எச்சரிக்கும் அமெரிக்கா- நிலவும் போர்ச்சூழலால் பதற்றம்!
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் தொடர்பாக இஸ்ரேல் - ஹமாஸ் குழுவுக்கு இடையே தொடங்கிய போர் இன்றளவும் நீடிக்கிறது. இந்த போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைபாட்டில் இருந்த இரான், பாலஸ்தீனத்துக்கு உதவி வந்தது. மேலும் போரை நிறுத்தும்படி இஸ்ரேலை எச்சரித்தும் வந்தது. இந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக ஏப்ரல் 1-ம் தேதி சிரியாவில் இருந்த இரான் தூதரகம்மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ ஜெனரல்கள், ராணுவ அதிகாரிகள் சிலர் உயிரிழந்தனர்.இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
இதனால் கடும் கோபமடைந்த இரான், இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தத் திட்டமிடுவதாக அமெரிக்கா இஸ்ரேலை எச்சரித்தது. அதைப்போலவே, நேற்று இஸ்ரேல்மீது இரான் வான்வழித் தாக்குதல் நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதல் குறித்து விளக்கமளித்த ஐ.நா சபைக்கான இரானின் நிரந்தர தூதுக்குழு, ``சட்டபூர்வமான பாதுகாப்பு தொடர்பான ஐ.நா சாசனத்தின் 51 வது பிரிவின் அடிப்படையில், இரான் எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
இரான் குடியரசு ஐக்கிய நாடுகள் சாசனம் மற்றும் சர்வதேச சட்டத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகளுக்கான உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துகிறது, அதே நேரம் இரானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, தேசிய நலன்களைப் பாதிக்கும் எந்த ஒரு சட்டவிரோத சக்திகளுக்கும், ஆக்கிரமிப்புகளுக்கும் எதிராக எங்கள் நாட்டை பாதுகாப்பதற்கான உறுதியையும் வலியுறுத்துகிறது.இரான் தாக்குதல்
இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்க இரானுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இந்த மோதலில் இஸ்ரேல் மற்றுமொரு தவறு ஏதேனும் செய்தால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது முழுக்க முழுக்க இரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல். இதில் அமெரிக்கா தலையிட வேண்டாம். விலகி இருப்பதே நல்லது" எனத் தெரிவித்திருக்கிறது.
ஆனால், இரானின் வான்வழித் தாக்குதலை முறியடிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா கூடுதல் ஐயன் டோம் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கியிருக்கிறது. அதே நேரம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்றும் இரானைக் கேட்டுக்கொண்டிருக்கிறது. பிரிட்டனும் இஸ்ரேலுக்கு ஆதரவாக, ரைப்ரஸ் தீவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரிட்டன் போர் விமானங்களை அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.ஜோ பைடன்
இன்னொரு பக்கம் இரானுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும் போராக மாற அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாக வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில், இது குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூடுகிறது. இதில், இரானின் பாதுகாப்புப் படையைத் தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தும் எனக் கூறப்படுகிறது.உ.பி: சீருடையில் மாற்றம்; சாமியார்களாக மாறிய போலீஸார்... காவல்துறை முடிவும் எழுந்த விமர்சனமும்!
http://dlvr.it/T5Tdqy

இந்திய மாலுமிகள் 17 பேர் உட்பட 25 பேருடன் சென்ற இஸ்ரேல் சரக்கு கப்பல்... சிறை பிடித்துச்சென்ற ஈரான்!
வளைகுடாவில் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதட்டம் அதிகரித்துள்ளது. சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்குதல் நடத்தியது. அதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் தயாராகி வருகிறது. எந்நேரமும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அபாயம் இருந்து வருகிறது. இதையடுத்து இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க போர்க்கப்பல்கள் வளைகுடா பகுதிக்கு விரைந்துள்ளது. வளைகுடா பகுதியில் வரும் சந்தேகத்திற்குறிய கப்பல்கள் மீதும் சமீப காலமாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று எம்.எஸ்.சி.ஏரிஸ் என்ற கண்டெய்னர் கப்பல் ஓமன் வளைகுடா அருகே சென்ற போது ஈரான் கடற்படையினர் கப்பலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஈரான் கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கப்பலில் இறங்கினர்.
அவர்கள் கப்பலை ஈரான் நோக்கி கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர். அக்கப்பல் இத்தாலி மற்றும் ஸ்விஸ் நாட்டு நிறுவனமான எம்.எஸ்.சி. நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். கப்பலில் 17 இந்தியர்கள் உட்பட 25 பேர் இருந்ததாக அக்கப்பல் கம்பெனி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசு தூதரகம் வாயிலாக ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கப்பலை ஈரான் கடற்படை தனது கட்டுப்பாட்டில் எடுத்து இருப்பதை எம்.எஸ்.சி.கம்பெனியும் உறுதிபடுத்தி இருக்கிறது.
ஹெலிபோர்ன் ஆபரேசன் என்ற பெயரில் இந்த கப்பலை ஈரான் கைப்பற்றி இருக்கிறது. கப்பலை எம்.எஸ்.சி.நிறுவனம் பயன்படுத்தி வந்தாலும் அக்கப்பல் இஸ்ரேலில் கோர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமானது ஆகும். எனவேதான் அக்கப்பலை ஈரான் பிடித்துச்சென்றுள்ளது. கப்பலை உடனே விடுவிக்கும்படி அமெரிக்கா தெரிவித்துள்ளது. கப்பலையையும் சர்வதேச மாலுமிகளையும் உடனே விடுவிக்கவேண்டும் என்றும், சரக்கு கப்பலை பிடிப்பது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகும் என்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு செய்தித்தொடர்பாளர் வாட்ஸ்சன் தெரிவித்துள்ளார்.
கப்பலை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதை ஈரானும் உறுதிபடுத்தி இருக்கிறது. கப்பலை பிடித்ததற்கு ஈரான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது. இச்சம்பவத்தால் இரு நாடுகளிடையான பதட்டம் மேலும் அதிகரித்து இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5TQQL

"யூதாசின் புதிய அவதாரம் அனில் ஆண்டனி" - ஏ.கே.ஆண்டனி மகனை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ் செயல் தலைவர்!
கேரள மாநில முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி. காங்கிரஸ் கட்சியில் தேசிய அளவில் பதவி வகித்துவந்த அனில் ஆண்டனி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க-வில் இணைந்தார். பா.ஜ.க-வில் அவருக்கு முக்கியத்துவம் அளித்துவரும் நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பத்தனம்திட்டா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். இது அவரது தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ஏ.கே.ஆண்டனிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அனில் ஆண்டனி, "காங்கிரஸ் தலைவர்கள் காலாவதியானவர்கள்" என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதைத்தொடர்ந்து ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களை சந்தித்தபோது, "எனது மகன் அனில் ஆண்டனி தோற்க வேண்டும். நான் காங்கிரஸ், எனது மதம் காங்கிரஸ்" என கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார்.காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ.கே.ஆண்டனி
இந்த நிலையில் அனில் ஆண்டனி யூதாசின் அவதாரம் என காங்கிரஸ் செயல் தலைவரும், யு.டி.எஃப் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான எம்.எம்.ஹசன் விமர்சித்துள்ளார். எம் எம் ஹசன் செய்தியளர்களிடம் கூறுகையில், "காங்கிரஸ் தலைவர்கள் காலாவதி ஆனவர்கள் என தன் தந்தையை போன்ற தலைவர்களை விமர்சித்து இருக்கிறார் அனில் ஆண்டனி. தந்தையை விமர்சித்ததன்மூலம் பித்ரு நிந்தை செய்துள்ளார்.கேரளா மாநில காங்கிரஸ் செயல் தலைவர் எம்.எம்.ஹசன்
அனில் ஆண்டனி யூதாசின் புதிய அவதாரமாக தேர்தல் களத்தில் நிற்கிறார். அவரைபார்த்தால் பரிதாபம்தான் தோன்றுகிறது. அனில் ஆண்டனி வெற்றிபெற வேண்டுமானால் பத்தனம்திட்டாவில் காகம் மல்லாந்து பறந்தால்தான் அது நடக்கும். அனில் ஆண்டனி செலுத்தி உள்ள டெபாசிட் தொகை கூட அவருக்கு கிடைக்காது" என்றார். காங்கிரஸின் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய உள்த்துறை அமைச்சர் என முக்கிய பதவிகளை அலங்கரித்த ஏ.கே.ஆண்டனியின் மகனை யூதாசின் அவதாரம் என விமர்சித்திருப்பது அரசியலில் அதிர்வலையை கிளப்பி உள்ளது.
http://dlvr.it/T5TFzD

Saturday, 13 April 2024
‘ஏ.சி.சண்முகம் கேம்..!’ - உளவுத்துறை நீட்டிய ரிப்போர்ட்; வெடித்துப் பேசிய துரைமுருகன்!
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த், பா.ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் இடையேயான போட்டி உச்சக்கட்ட பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கதிர் ஆனந்திடம் கடந்த முறை வெறும் எட்டாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே பின்தங்கிய ஏ.சி.சண்முகம், இந்த முறை அனுதாப அலையில் கரை சேர முயல்கிறார். பிரதமர் மோடியை வேலூருக்கு அழைத்து வந்தும் வாக்காளர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார் ஏ.சி.சண்முகம். இந்த நிலையில், கடந்த வாரம் இருந்த கள நிலவரம், இந்த வாரம் தலைகீழாக மாறியிருப்பதும் தி.மு.க தரப்பைக் கடுமையாக ‘அப்செட்’ ஆக்கியிருக்கிறது. கள நிலவரம் மாறியதற்குப் பின்னணியில் சில `டீல்’கள் இருப்பதாகவும் உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. துரைமுருகன்
கதிர் ஆனந்தின் தந்தையும், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகனிடம் உளவுத்துறை நீட்டியிருக்கும் ‘டீல் ரிப்போர்ட்’ தந்தை, மகனை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது. இருவரும் யார் யாரையெல்லாம் நம்பினார்களோ, அவர்களில் சிலர் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, வேலூர் மாநகராட்சியிலுள்ள சில ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலரும் ‘சமூக’ ரீதியாக ஏ.சி.சண்முகத்துக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பதும், இன்னும் சில கவுன்சிலர்கள் கதிர் ஆனந்த் மீதான அதிருப்தியில் ஏ.சி.சண்முகம் தரப்பினரிடம் பேசியதாகவும், உளவுத்துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.
நேற்று மாலை, வேலூர் மாநகர தி.மு.க அலுவலகத்தில் அவசரக் கூட்டம் நடத்திய அமைச்சர் துரைமுருகன், பட்டியலை வாசித்து கடுமையாகக் கண்டித்திருக்கிறார். ‘‘சத்துவாச்சாரி, ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், காகிதப்பட்டறை, சைதாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தி.மு.க பலவீனம் அடைந்திருக்கிறது. என்னக் காரணம். விளக்கம் கொடுங்கள்’’ என்றும் சத்தம் போட்டிருக்கிறார் துரைமுருகன்.
அதோடு மட்டுமல்லாமல், ரங்காபுரம் பகுதியில் வசிக்கும் தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், அ.தி.மு.க வேட்பாளருக்குச் சால்வை அணிவித்தது தொடர்பாகவும் கடுமையாகக் கண்டித்திருக்கிறார். அ.தி.மு.க வேட்பாளருக்குச் சால்வை அணிவித்த நிர்வாகி உடனே எழுந்து விளக்கம் தர முயன்றார். அப்போது, ‘உட்காருய்யா... அங்கு நடந்தது எனக்குத் தெரியும்’ என்றும் கோபப்பட்டிருக்கிறார் துரைமுருகன். ஏ.சி.சண்முகம்
சத்துவாச்சாரி 20-வது வார்டு பகுதியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கான வாக்குவங்கி இருக்கிறது. அங்குள்ள அந்தக் கட்சி பிரமுகர் ஒருவரும் ஏ.சி.சண்முகம் தரப்பைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு பிரசாரத்தில் ஆர்வம் காட்டாமல் அமைதியாக இருப்பதாகவும் கொதித்திருக்கிறார் துரைமுருகன். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இன்னும் இரண்டு கவுன்சிலர்களும் ஏ.சி.சண்முகத்திடம் பேசியுள்ளார்களாம். அதையும் குறிப்பெடுத்துக் கொடுத்திருக்கிறது உளவுத்துறை. இந்த ரிப்போர்ட்டில், முக்கியமான ஒரு விவகாரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பா.ஜ.க-வுக்கு ஆதரவாக முன்னின்று `அனைத்து’ பணிகளையும் கவனிப்பதே அ.தி.மு.க-வைச் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் தானாம். ‘‘ரிசல்ட் எப்படியிருந்தாலும், இந்த பட்டியலில் இருக்கின்ற ஆளுங்கட்சிப் புள்ளிகள் தேர்தலுக்குப் பிறகு களையெடுக்கப்படுவார்கள். அமைச்சர் துரைமுருகன் அந்த அளவுக்குக் கொதித்துப் பேசினார்’’ என்கின்றனர் இந்த விவகாரத்தை அங்கு கவனித்துவிட்டு வந்த நிர்வாகிகள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/47zomWY
">
https://bit.ly/47zomWY
/>
http://dlvr.it/T5SfRl

டிடிவி-யிடம் கனி பெற்ற அண்ணாமலை | பாஜக-வுக்கு ஓட்டு கேட்ட காமெடி நடிகர் செந்தில் - Election Clicks
திருப்பூர் தொகுதி அந்தியூர் பகுதியில் செங்கல் சூளை தொழிலாளர்களிடம் பாஜக வேட்பாளர் முருகானந்தம் வாக்கு சேகரித்தார்.100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் பழங்குடி மக்களிடம் பேசினார்.புதுச்சேரி தேர்தல் பாதுகாப்பு குறித்து தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், கடலூர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கேலிஸ்டை சந்தித்து ஆதரவு கோரினார்.மத்திய அமைச்சர் அமித்ஷா ரோட் ஷோ - கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைவிருதுநகர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா சரத்குமார் அருப்புக்கோட்டையில் தறி நெய்வதை பார்வையிட்டு பிரசாரம் செய்தார்.தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பிரசாரம்.புதுச்சேரி அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து அவரது மனைவி நிவேதிதா வாக்குகள் சேகரிப்பு.ஈரோடு கொடுமுடி பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் பிரசாரம்.புதுச்சேரி காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் காரைக்கால் பகுதியில் வாக்கு சேகரிப்பு.விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து கே.எஸ்.அழகிரி தேர்தல் பிரசாரம்.தேனி அ.ம.மு.க வேட்பாளர் டிடிவி தினகரனை ஆதரித்து, பாஜக தலைவர் அண்ணாமலை பிரசாரம்.ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு வாக்கு சேகரிக்க அண்ணாமலை வருகை தந்த ஹெலிகாப்டர் ,தேர்தல் கமிஷன் அலுவலர்களால் ஆய்வு.ராமநாதபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணல்மேல்குடி ஒன்றியத்தில் பிரசாரம்.புதுச்சேரி பாஜக வேட்பாளரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பிரசாரம்.
http://dlvr.it/T5SNQv
http://dlvr.it/T5SNQv