ராகுல் காந்தி கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸின் பாரம்பர்ய தொகுதி அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், அமேதியில் தோல்வியடைந்த ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் வெற்றிபெற்று மீண்டும் எம்.பி-யானார். இதனால், அமேதியில் மீண்டும் ராகுல் காந்தி போட்டியிடுவாரா என்ற கேள்வி ஒருபக்கம் இருக்க, முதலாவதாக வயநாடு தொகுதியில் அவர் மனு தாக்கல் செய்தார்.ராகுல் காந்தி
பின்னர், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் வயநாடு தொகுதியில் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த ஒருவாரத்தில், காங்கிரஸின் மற்றொரு பாரம்பர்ய தொகுதியான ரேபரேலியில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் முடிவை விமர்சித்த பா.ஜ.க, வயநாட்டில் தோல்வியடைந்துவிடுவோம் என்ற பயந்த ராகுல் காந்தி, அமேதிக்குப் பயந்து ரேபரேலிக்கு சென்றிருக்கிறார் என்று பிரசாரம் செய்தது.
இன்னொருபக்கம், தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸுடனும், கேரளாவில் காங்கிரஸுக்கு எதிராகவும் இருக்கும் கம்யூனிஸ்ட், ராகுல் காந்தி வயநாடு மக்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறியது. இப்படியிருக்க, இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுவது தொடர்பாக விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.விகடன் கருத்துக்கணிப்பு
அதில், `கேரளாவின் வயநாடு, உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி என இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுவது?' என கேள்வி கொடுக்கப்பட்டு, `தேர்தல் யுத்தி, தோல்வி பயம், கருத்து இல்லை' என மூன்று விருப்பங்களும் தரப்பட்டிருந்தது.விகடன் கருத்துக்கணிப்பு
இந்த நிலையில், கருத்துக்கணிப்பு முடிவில் `அதிகபட்சமாக 59 சதவிகிதம் பேர், இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுவது தேர்தல் யுத்தி' என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, 38 சதவிகிதம் பேர் தோல்வி பயம் என்றும், 3 சதவிகிதம் பேர் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருக்கின்றனர்.விகடன் கருத்துக்கணிப்பு
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிலையில், தி.மு.க-வின் மூன்றாண்டு கால ஆட்சி குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்கை க்ளிக் செய்யவும்...
https://www.vikatan.com/``வெள்ளை சட்டை மட்டும் அணிவது ஏன்..?" - ராகுல் காந்தி விளக்கம்
http://dlvr.it/T6XWNx