`அம்பானி, அதானி போன்ற பெரு தொழிலதிபர்களுக்காகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்வதெல்லாம் அதானி நிறுவனங்களுக்கு ப்ராஜெக்ட் வாங்கிக்கொடுக்கவே. அதானிக்காக மோடி, மோடிக்காக அதானி' போன்ற குற்றச்சாட்டுகளைக் காங்கிரஸ் தொடர்ச்சியாக கூறிவந்தது.ராகுல் காந்தி - Adani
அதானி தொடர்பாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானபோது, மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அதானியும் உடனிருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகின. தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில்கூட, `அம்பானி, அதானி போன்றோரின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு ரூ.16 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்திருக்கிறது' என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பிரசாரம் செய்துவந்தார்.
ஆனால், இதில் ஒருபோதும் பிரதமர் மோடி பெரிதாக பதில் கருத்து தெரிவித்ததாக இல்லை. இப்படியிருக்க, இந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தில் முதன்முறையாக அம்பானி, அதானி பெயர்களை மோடி குறிப்பிட்டிருக்கிறார்.மோடி
மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில் தெலங்கானாவில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொண்ட மோடி, ``தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, அம்பானி - அதானியைப் பற்றிப் பேசுவதை ராகுல் காந்தி நிறுத்திவிட்டார். அம்பானி - அதானியிடமிருந்து எவ்வளவு தொகையைப் பெற்றுக்கொண்டு, அமைதியாக இருக்கிறார்... அம்பானி - அதானியைப் பற்றிப் பேசுவதை இரவோடு இரவாக நிறுத்திவிட்டீர்களே... உங்களுக்குள் என்ன ஒப்பந்தம்... உங்களுக்குள் ஏதோ இருக்கிறது" என்று பேசினார்.நரேந்திர மோடி - மல்லிகார்ஜுன கார்கே
இந்த நிலையில், மோடியின் இத்தகையப் பேச்சுக்கு தனது X சமூக வலைதளப் பக்கத்தில் எதிர்வினையாற்றியிருக்கும் காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ``காலம் மாறிக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் இனி நண்பர்கள் அல்ல. மூன்று கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், பிரதமர் இன்று தனது சொந்த நண்பர்களையே தாக்க ஆரம்பித்துவிட்டார். மோடியின் நாற்காலி ஆட்டம் கண்டிருப்பதையே இது பிரதிபலிக்கிறது. முடிவுகளின் உண்மையான போக்கு இதுதான்" என்று பதிவிட்டிருக்கிறார்.10 ஆண்டுகளில் முதன்முறையாக அதானி, அம்பானிக்கு எதிராக மோடியின் கமென்ட்... பின்னணி என்ன?!
http://dlvr.it/T6bbrn