நாடாளுமன்றத் தேர்தலில் 32 இடங்களில் அ.தி.மு.க போட்டியிட்டது. தேர்தல் முடிந்ததும், பூத் விவகாரங்களை ஒருவாரத்துக்குள் சமர்பிக்க வேண்டுமென்று கறார் உத்தரவு போட்டு இருந்தது தலைமை. ஆனால், இன்று வரை பூத் விவகாரங்கள் தலைமைக்கு வந்து சேரவில்லை. இதுஒருபுறமிருக்க, எடப்பாடியும் முழு ஓய்வில் இருக்கிறார். இதனால், தேர்தலுக்கு பிந்தைய பணிகள் எதுவும் செய்யாமல், அ.தி.மு.க படு அமைதியாக இருக்கிறது.
மறுபக்கம் திமுக தலைவர்,முதல்வர் ஸ்டாலின் தேர்தல் முடிந்ததும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் பொறுப்பு அமைச்சர்களுடன் சந்தித்தார். சம்பிரதாய சந்திப்பாக நடந்தாலும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் சந்தித்துவிட்டார். பாஜக தரப்பில் தேர்தலுக்கு பிந்தைய கலவரங்கள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. கட்சி பணத்தை சுருட்டி விட்டார் என புகார்கள் போஸ்டர்களாக வலம் வந்தன, வருகின்றன. ஆனால் அதிமுக தரப்பிலோ, அமைதியோ அமைதி!எடப்பாடி பழனிசாமி
இதுதொடர்பாக அ.தி.மு.க அமைப்பு செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். ``நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தபின்னர், சென்னைக்கு 22-ம் தேதி வந்தார் இ.பி.எஸ். மறுநாள்... சித்திரை பவுர்ணமி என்பதால், அன்று தலைமை அலுவலகத்துக்கு சென்றால் நல்லது என்று அவருக்கு நெருக்கமான தரப்பில் சொல்லி இருக்கிறார்கள் போல. அதனால், அவசர அவசரமாக 22-ம் தேதி இரவு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னையின் மாவட்ட செயலாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை தலைமை அலுவலகத்துக்கு வர சொன்னார்கள்.
இந்த தேர்தல் தொண்டர்கள் மத்தியில் இருந்த உணர்வை வெளிக் கொண்டு வந்திருந்தது. ஆனால், சித்தரை பவுர்ணமிக்கு தலைமை அலுவலகத்துக்கு வரவேண்டும் என்பதற்காகவே, ஒரே சம்பிரதாய மீட்டிங் ஏற்பாடு செய்யப்பட்டதாலேயே, அன்று தலைமை அலுவலகம் கூட்டம் இல்லாமல் கலையிழந்து இருந்தது.
அந்த கூட்டத்தில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான விவகாரமும் நடக்கவில்லை. தலைமையே இப்படி இருந்ததால், தேர்தலுக்கு பிந்தைய விவகாரங்களை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆர்வம் இல்லாமல்போய்விட்டது.குடும்பத்தோடு எடப்பாடி
அம்மா இருக்கும்போது, தேர்தல் முடிந்தபிறகு மீட்டிங் என்றாலே நிர்வாகிகள் கதி கலங்கிவிடுவார்கள். அதேபோல, தேர்தல் முடிந்ததும் புகார்களை விசாரிக்க குழு ஒன்றும் அமைக்கப்படும். ஆனால், இ.பி.எஸ் அப்படி ஒரு விஷயத்தையும் மேற்கொள்ளவில்லை. சென்னை மற்றும் புறநகர் தொகுதிகளுக்கு நடந்ததைபோல, பிற தொகுதி பொறுப்பாளர்கள், நிர்வாகிகளை அழைத்து சம்பிரதாய கூட்டத்தையாவது நடத்துவார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அதுவும் நடக்கவில்லை.
குடும்பத்தாரோடு கேரளாவுக்கு சென்ற எடப்பாடி, ஒருவாரம் ஓய்வில் இருந்தார். அங்கிருந்து திரும்பியவர் தற்போது சேலம் வீட்டிலேயே ஓய்வில் இருக்கிறார்.
ஜூன் 4 தேர்தல் முடிவு வெளியான பின்னர்தான், ஆக்டிவ் அரசியலில் ஈடுபடும் முடியும் என்பது எல்லாருக்கும் தெரிந்ததுதான். ஆனால், கட்சியின் தற்போதைய நிலைமையை தெரிந்து கொள்ள, இந்த கால இடைவெளியை இ.பி.எஸ் ஆக்கபூர்வமாக பயன்படுத்தி கொள்ளவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து மூன்று வாரங்கள் ஆகியும், கட்சியின் நிலைமை குறித்து தலைமை கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. தேர்தல் முடிவு வந்தபின்னர், கட்சி ஆலோசனை கூட்டங்களை நடத்தலாம் என்ற முடிவில் இ.பி.எஸ் இருக்கிறார். ஆனால் இது தொண்டர்களை சோர்வடைய செய்துவிடும்.எம்.ஜி.ஆர் மாளிகை
குறிப்பாக, இந்த தேர்தலில் சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை உள்ளடி வேலை பார்த்து இருக்கிறார்கள். அவர்கள் குறித்து தலைமைக்கு ஏற்கனவே புகார் வந்திருக்கிறது. ஆனால், எப்போதும்போல, இப்போதும், கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுவிடும். " என்றனர் விரக்தியுடன்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T6dm0W