ஆந்திர மாநிலத்தில் வரும் 13-ம் தேதி, நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் கைகோத்து களம் காண்கிறார். மீண்டும் அவர் குப்பம் சட்டமன்றத் தொகுதியிலேயே போட்டியிடுகிறார். இன்றைய தினம், குப்பம் தொகுதியில் சந்திரபாபு நாயுடுவை ஆதரித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார்.
அன்புமணி பேசுகையில், ``என்னுடைய நண்பர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆந்திர முதல்வராக வரவேண்டும். சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்குவந்த பிறகு ஆந்திராவிலுள்ள பின்தங்கிய சமுதாயத்துக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வருவார். அன்புமணி ராமதாஸ்
என்னிடமும் பெரியத் திட்டம் இருக்கிறது. அதுதான் `கோதாவரி - காவிரி’ இணைப்புத் திட்டம். இந்தத் திட்டத்தை பிரதமர் மோடி ஒருவரால் மட்டுமே கொண்டு வர முடியம். கோதாவரி ஆற்றில் இருந்து ஆண்டுதோறும் 3,200 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாகக் கலந்துகொண்டிருக்கிறது. அதில் இருந்து 1,200 டி.எம்.சி தண்ணீரை நீரேற்று மூலமாகக் கொண்டுவந்து கிருஷ்ணாவில் இணைத்து, அங்கிருந்து பெண்ணை ஆற்றின் வழியாக காவிரியில் இணைக்கின்ற திட்டம்தான் `கோதாவரி - காவிரி’ இணைப்புத் திட்டம்.
இது சம்பந்தமாக, பிரதமர் மோடியிடம் நான் பலமுறை அழுத்தம் கொடுத்திருக்கிறேன். அவரும் உறுதி கொடுத்திருக்கிறார். பல மாநிலங்கள் சார்ந்த பிரச்னை என்றாலும், இந்தத் திட்டம் உறுதியாக நிறைவேற்றப்படும். இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு 200 டி.எம்.சி தண்ணீர், ஆந்திராவுக்கு 500 டி.எம்.சி., தெலங்கானாவுக்கு 500 டி.எம்.சி தண்ணீர் கிடைக்கும். இங்கெல்லாம் விவசாயம் செழிக்கும். அன்புமணி ராமதாஸ்
இந்தியாவின் அடுத்த பிரதமரும் மோடிதான் என்று மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். மத்தியிலும் நம்முடைய ஆட்சி, மாநிலத்திலும் நம்முடைய ஆட்சி நடைபெற்றால்தான் நமக்கு திட்டங்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி நடக்கிறது. மத்திய பா.ஜ.க அரசுடன் எதற்கெடுத்தாலும் தி.மு.க சண்டைப்போடுவதால்தான் தமிழ்நாட்டுக்கு நிதி கிடைப்பதில்லை. திட்டங்களும் வருவதில்லை. `நிதி கொடுங்கள். தண்ணீர் கொடுங்கள்’ என்று நல்ல அணுகுமுறை இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் நிலை ஆந்திராவுக்கு வரக் கூடாது. மீண்டும் மோடிதான் பிரதமர். எனவே, ஆந்திராவிலும் சந்திரபாபு நாயுடுவை முதல்வராக்கினால்தான் கேட்டது கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறவேண்டும்’’ என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbHD Revanna: விசாரணை கைதி எண் 4567... தேவகவுடா குடும்பத்தில் முதல் நபராக சிறையிலடைக்கப்படும் ரேவண்ணா!
http://dlvr.it/T6f8SV