கொதிக்கும் அமைச்சர்கள்!'தேர்தல் ரிப்போர்ட்' கேட்ட கம்பெனி...
தி.மு.க தலைமையிலான அரசு மூன்றாவது ஆண்டை நிறைவு செய்துவிட்டு, நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைத்திருக்கிறது. இதையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திலும் கோட்டையிலும் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு கிளம்பியிருக்கிறார்கள், அமைச்சர்கள். அப்போது குறுக்கே வந்த கம்பெனி தரப்பு, “நீங்கள் பொறுப்பு வகித்த தொகுதிகளில் பூத்வாரியாக எவ்வளவு வாக்குகள் பதிவாகின, யாரெல்லாம் தேர்தலில் வேலை செய்தார்கள், யாரெல்லாம் வெலை செய்யாமல் ஏமாற்றினார்கள் என்பவை உள்ளிட்ட விவகாரங்களை விசாரித்து, தலைமை அலுவலகத்தில் கொடுங்கள்” எனக் கேட்டார்களாம். மு.க.ஸ்டாலின்
“தேர்தலில் உதவி செய்வதற்குத்தான் கம்பெனியே தவிர, கட்சி விவகாரங்களில் தலையிடுவதற்காக இல்லை. தலைமை நேரடியாகக் கண்காணிக்கவேண்டிய விவகாரத்தில்கூட கம்பெனியை நுழைப்பது நல்லதில்லை. இதையெல்லாம் பார்க்கும்போது கட்சியைத் தலைமை நடத்துகிறதா, இல்லை கம்பெனி நடத்துகிறதா என்றே தெரியவில்லை…” எனப் புலம்பியபடியே கிளம்பினார்களாம் சீனியர் அமைச்சர்கள்.துடியாய் நிற்கும் துறை மேலிடம்!விரைவில் கூட்டுறவு சங்கத் தேர்தல்...
தமிழ்நாட்டில் சுமார் 22,000 கூட்டுறவு சங்கங்கள் இருக்கின்றன. அனைத்திலும் அ.தி.மு.க-வினரே பொறுப்பில் இருந்தார்கள். எனவே, தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், கூட்டுறவு சங்கப் பொறுப்புகளுக்கான பதவிக்காலத்தை ஐந்திலிருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்கத் திட்டமிட்டு, சட்ட மசோதாவெல்லாம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். தற்போது கூட்டுறவு பொறுப்புகளுக்கான பதவிக்காலம் நிறைவடைந்து, ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், ‘தேர்தல் நடத்துவதற்கான எந்த முன்னெடுப்பையும் தலைமை மேற்கொள்ளவில்லை’ எனப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கலகக்குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. ‘நாடாளுமன்றத் தேர்தல் முடிவு என்னவானாலும் பரவாயில்லை.மிஸ்டர் கழுகு: கோட்டைக்குச் செல்ல ஆசை... ஜாமீனுக்கே சிக்கல்... அப்செட்டில் செந்தில் பாலாஜி!
கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்திவிட வேண்டும். அதுதான் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் நமக்குப் பெரிய அளவில் கைகொடுக்கும்’ என சிலர் ஆளும் தரப்புக்கு அட்வைஸ் செய்ய, கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளைத் தொடங்கச் சொல்லி, துறை மேலிடத்துக்கு உடனடி உத்தரவு பறந்திருக்கிறது. இதையடுத்து, இந்தத் தேர்தலைவைத்து, பெரிய அளவில் பசை பார்த்துவிட வேண்டும் என்று துடியாய் இருக்கிறதாம் துறை மேலிடம்.பீதியில் இனிஷியல் புள்ளி!அபாயம்... யாகம்... ஆலோசனை…
தேர்தல் முடிந்த கையோடு வெளிநாட்டுக்குப் பறக்க ஆயத்தமான இனிஷியல் தலைவருக்கு 'கட்டம் சரியில்லை' எனவும், 'பழைய வழக்குகளால் அபாயம் சூழும்' எனவும் ஜோதிடர்கள் குறி சொல்ல… பயணத்தை ஒத்திவைத்துவிட்டு, சொந்த மாவட்டத்திலுள்ள தனது வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறாராம். வீட்டிலேயே சில யாகங்களை நடத்தியவர், வழக்குகள் தொடர்பாக வக்கீல் டீமுடனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாராம். இதற்கிடையே, தான் போட்டியிட்ட தொகுதியில் தேர்தலுக்குப் பின்னான கள நிலவரம் குறித்து விசாரித்தவருக்கு வந்த தகவல்களும் இடியை இறக்க, மன உளைச்சலின் உச்சத்துக்கே சென்றுவிட்டாராம்!தப்பியோடிய வேட்டைப் புள்ளி!கைவிரித்த மாஜி…
கொடநாடு பங்களாவின் ஃபர்னிஷிங் வேலைகளைச் செய்து கொடுத்த ‘ஜீவ’ புள்ளி, இலைக் கட்சியின் பெல் ‘மாஜி’-க்கு ரொம்பவே நெருக்கமாக இருந்தவர். கொடநாடு பங்களாவின் மொத்த புளூ பிரின்ட்டும் அறிந்தவர் என்பதால் அங்கு நடந்த கொலை, கொள்ளை வழக்கின் சாட்சிகளில் ஒருவராகவும் சேர்க்கப்பட்டிருந்தார். இதற்கிடையே ‘பெல்’ மாஜியின் ஆதரவால் இலைக் கட்சியில் மாநிலப் பொறுப்புவரை உயர்ந்த ‘ஜீவ’ புள்ளி, தற்போது வனவிலங்கு வேட்டை வழக்கில் சிக்கியிருக்கிறார். ‘ஜீவ’ புள்ளிக்குச் சொந்தமான இடத்தில், வேட்டையாடப்பட்ட வனவிலங்கின் உடல் பாகங்கள், வேட்டைத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் எனப் பல பொருள்களைக் கைப்பற்றியிருக்கிறது வனத்துறை. பயந்துபோன `ஜீவ’ புள்ளி, பழைய பாசத்தில் மாஜியை அணுகியிருக்கிறார். ஆனால், 'இந்த விஷயத்தில் ‘தன்னால் எந்த உதவியும் செய்ய முடியாது’ எனக் கைவிரித்துவிட்டாராம் பெல். கைதுக்கு பயந்த ‘ஜீவ’ புள்ளி, முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துவிட்டு, வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டாராம்.நிர்வாகிகளைத் திருப்பியனுப்பும் கமலாலயம்!"இன்று போய் ஜூன் மாதம் வாங்க..."
தேர்தல் தொடர்பான புகார்களை எடுத்துக்கொண்டு கமலாலயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்படி சமீபத்தில் தென்மாவட்டத்திலிருந்து சிலரும், திருவள்ளூர், டெல்டா பகுதிகளிலிருந்து சிலரும் ‘பணம் கையாடல், தேர்தலுக்குப் பிந்தைய உட்கட்சி மோதல்’ உள்ளிட்ட புகார்களோடு கமலாலயத்துக்கு வந்திருக்கிறார்கள். கமலாலயம்
ஆனால், அங்கு யாருமே இல்லையாம். அலுவலக உதவியாளர்களிடம் விசாரிக்க, “தேர்தல் பரப்புரைக்காக எல்லோரும் பக்கத்து மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறார்கள். இதேபோல தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றையெல்லாம் ஜூன் மாதம் தேர்தல் முடிவுகள் வந்த பிறகு தலைமை விசாரிக்கும்” எனச் சொல்லி திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். ``சொந்த மாநிலத்தில் இருக்கும் பிரச்னைகளைத் தீர்க்காமல் இப்படி அடுத்த மாநிலங்களுக்குப் போய் பிரசாரம் செய்தால், இங்கே எப்படிக் கட்சி வளரும்?” என முணுமுணுத்தபடி செல்கிறார்களாம் கட்சி நிர்வாகிகள்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T6dmGQ