இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க தலைமையில் போட்டியிடும் என்.டி.ஏ கூட்டணியும், காங்கிரஸ் தலைமையில் போட்டியிடும் இந்தியா கூட்டணியும் ஒருவரை ஒருவர் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், முன்னாள் நீதிபதிகள் மதன் பி.லோகுர், அஜித் பி.ஷா, மூத்த பத்திரிகையாளர் என்.ராம் ஆகியோர் நாடாளுமன்ற தேர்தல் குறித்த பொது விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுத்து கடிதம் எழுதினர்.ராகுல் காந்தி
அதில், ``இரு தரப்பினரும் ஒருவரையொருவர் எதிர்த்து குற்றச்சாட்டுகள் மற்றும் சவால்களை முன்வைப்பதை மட்டுமே கேட்டமுடிகிறது. அதற்கான அர்த்தமுள்ள பதில்கள் கிடைக்கவே இல்லை. அதனால் பொதுமக்கள் கவலையடைந்திருக்கிறார்கள். எனவே, ஒரு பொது விவாதத்தில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தங்கள் அறிக்கைகள் மற்றும் சமூக நீதியின் அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட திட்டம் குறித்த தங்கள் நிலைப்பாடு குறித்து விவாதிக்கலாம்" எனக்குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தக் கடிதத்துக்கு ராகுல் காந்தி பதிலளித்திருக்கிறார். அதில், ``ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கான முக்கிய கட்சிகள் தங்கள் பார்வையை ஒரு தளத்திலிருந்து நாட்டுக்கு முன்வைப்பது ஒரு நேர்மறையான முயற்சி. மேலும் இது போன்ற விவாதம் நம்முடைய பார்வையைப் புரிந்துகொள்வதற்கும், தகவலறிந்து, யாரை தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்க மக்களுக்கு உதவும். அந்தந்த கட்சிகள் மீது கூறப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் முக்கியமானது.ராகுல் காந்தி - மோடி
இந்த அழைப்பு குறித்து மல்லிகார்ஜுன கார்கேவுடன் கலந்தாலோசித்தேன். பொதுமக்கள் தங்கள் தலைவர்களிடம் நேரடியாக கேள்வி கேட்க தகுதியுடையவர்கள். ஒரு ஆக்கப்பூர்வமான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க இந்த விவாதத்தில் பங்கேற்க ஆவலுடன் இருக்கிறோம். பிரதமர் எப்போது பங்கேற்க ஒப்புக்கொள்கிறார் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்தவும், அதைத் தொடர்ந்து விவாதத்தின் விவரங்கள் மற்றும் அதன் வரைமுறை பற்றி முடிவெடுக்கலாம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையே லக்னோவில் நடைபெற்ற பிரசாரத்தில், ``மோடியை விவாதத்தில் எதிர்கொள்ள 100 சதவீதம் தயாராக இருக்கிறேன். ஆனால் பிரதமர் மோடி அதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார் என்றும் எனக்குத் தெரியும்" எனப் பேசினார். இந்த விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்ட ராகுல் காந்தியின் பதிலுக்கு பா.ஜ.க எம்.பி தேஜஸ்வி சூர்யா, ``பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய ராகுல் காந்தி யார்... இந்தியக் கூட்டணி ஒருபுறம் இருக்கட்டும், காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராகக்கூட இல்லை.மோடி
அவரை முதலில் காங்கிரஸின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கட்டும். அவர் தனது கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்பார் என்று கூறிவிட்டு, பின்னர் பிரதமரை விவாதத்திற்கு அழைக்கவும். அதுவரை விவாதத்தில் கலந்து கொள்ள எங்கள் செய்தித் தொடர்பாளர்களை நியமிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். பா.ஜ.க தேசிய செய்தித் தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில், ``பாராளுமன்றத்தில் ராகுல் காந்தியின் சாதனை: வருகை: 51%, தேசிய சராசரி: 79%. கலந்துகொண்ட விவாதங்களின் எண்ணிக்கை: 8, தேசிய சராசரி: 46.7%
அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளின் எண்ணிக்கை: 99, தேசிய சராசரி: 210. அதாவது, பாராளுமன்றத்தை விட்டு ஓடி, அமேதியில் இருந்து ஓடி, கட்சித் தலைவர் பதவியை விட்டு ஓடிவிட்டு, இன்னும் பிரதமர் மோடியுடன் விவாதம் செய்ய உரிமை இருப்பதாக உணர்கிறீர்களா? ஓடிப்போன பொழுதுபோக்கு அரசியல்வாதிகளுடன் விவாதிப்பது மோடியின் நேரத்திற்கு மதிப்பில்லாமல் ஆக்கிவிடும். தகுதியானவர்கள் ஆசைப்பட வேண்டும் என்ற அடிப்படை விதியை ராகுல் காந்திக்கு யாரும் கற்பிக்கவில்லை என்பது தெளிவாகிறது" எனப் பதிவிட்டிருக்கிறார்.மோடி, அமித் ஷா
பா.ஜ.க தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா, ``விவாதம் நல்லது. ஆனால், பதவியில் இருக்கும் பிரதமர், ராகுல் காந்தியுடன் ஏன் விவாதிக்க வேண்டும்? அவர் I.N.D.I.A கூட்டணியின் காங்கிரஸ் தலைவருமல்ல, பிரதமர் வேட்பாளருமல்ல. ராகுல் காந்தி தனது அரசியல் பயணத்தை மீண்டும் தொடங்க மோடி என்ற பிராண்டைப் பயன்படுத்துவதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppb`YSR காங்கிரஸை கூட்டணிக் கட்சியாக நினைத்ததில்லை; ஆனால் நாடாளுமன்றத்தில்..!' - மோடி கூறுவதென்ன?
http://dlvr.it/T6m75g