சென்னையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட நாக்பூர், பெங்களூரு, கொச்சி மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்திருக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டு மட்டும் நிதி ஒதுக்காமல் சென்னை மெட்ரோவை புறக்கணித்திருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் சேவை பலதரப்பட்ட மக்களுக்கும் பயனுள்ள வகையில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசின் கூட்டு நிறுவனமாக சமமான பங்குகளை வைத்திருக்கும் `சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்' சென்னைக்கான மெட்ரோ சேவையைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. முதல்கட்டமாக, வண்ணாரப்பேட்டை - விமான நிலையம் வரையிலும் (23.085 கிமீ), சென்ட்ரல் - செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் (21.961 கிமீ) மொத்தம் 45.046 கி.மீ. நீளத்திற்கு இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அதைத்தொடர்ந்து படிப்படியாக, இரண்டு வழித்தடங்களின் எல்லையும் படிப்படியாக நீட்டிக்கப்பட்டன. சென்னை மெட்ரோ ரயில்
இந்த நிலையில், சென்னை புறநகர் உள்ளிட்ட மற்ற நகரங்களையும் இணைக்கும் விதமாக இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்தில், மாதவரம் - சிறுசேரி சிப்காட் ஐடி பூங்கா(45.8 கி.மீ), கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ் (26.1 கி.மீ), மாதவரம் - சோழிங்கநல்லூர் (47 கி.மீ) என மொத்தம் 118.9 கி.மீ நீளத்திற்கு கூடுதலாக மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்கள் இடம்பெற்றன. இந்த திட்டத்துக்கான மொத்த பட்ஜெட் ரூ.63,246 கோடி என மதிப்பிடப்பட்டன. அந்த நிலையில், கடந்த 2021-2022 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மத்திய பா.ஜ.க அரசு, சுமார் 118.9 கிலோமீட்டர் நீளம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்காக நிதி ஒதுக்கப்படும் என அறிவித்தது. அதோடு சேர்த்து, பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.14,788 கோடியும், கொச்சி மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.1,957 கோடியும், நாக்பூர் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.5,976 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்தது
ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ஒரு ரூபாய் நிதியைக்கூட வழங்காமல் மத்திய அரசு இழுத்தடித்து வந்தது. தமிழக அரசு சார்பில் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசு அதைக் கண்டும்காணாமல் இருந்துவரும் போக்கே நீடித்தது. இருப்பினும், சென்னை மெட்ரோ திட்டத்துக்கான மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்கீடு 50-50 என்றிருப்பதால் மாநில நிதியைக்கொண்டு இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. ஆனாலும் மத்திய அரசின் நிதி இல்லாமல் இந்தப் பணிகளை முழுமையாக முடிக்க முடியாது என்பதால், தொடர்ந்து மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுத்து வந்தது.மெட்ரோ ரயில் பணிக்காக சென்னை கலங்கரை விளக்கம் முதல் மைலாப்பூர் வரை சுரங்கப்பாதை தோண்டும் பணி.
இந்தநிலையில், மெட்ரோ ரயில் நிதி பங்கீடு தொடர்பாக சமீபத்தில் வெளியாகியிருக்கும் ஆர்.டி.ஐ தகவல் ஒன்று பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மத்திய பட்ஜெட்டில் சென்னையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட நாக்பூர், கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட மற்ற மூன்று நகரங்களின் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கும் மத்திய அரசு நிதி விடுவித்திருக்கிறது. அதேசமயம், சென்னைக்கு மட்டும் நிதியை விடுவிக்காமல் புறக்கணித்திருப்பது ஆர்.டி.ஐ தகவலில் அம்பலமாகியிருக்கிறது. மோடி
குறிப்பாக, கடந்த 2022 நவம்பர் மாதத்தில் கொச்சி மெட்ரோ திட்டப் பணிகளுக்காகவும், 2022 டிசம்பர் மாதத்தில், நாக்பூர் மெட்ரோ பணிகளுக்காகவும் அதையடுத்து பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்துக்காகவும் சேர்த்து மொத்தம் ரூ.18,978 கோடியை மத்திய அரசு அறிவித்தபடியே வழங்கியிருக்கிறது. ஆனால், சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக அறிவிக்கப்பட்ட நிதியில் ஒரு பகுதி அளவைக்கூடத் தராமல் முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பது ஆர்.டி.ஐ தகவலில் அம்பலமாகியிருக்கிறது. இது சென்னை உள்ளிட்ட தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மூன்றாண்டுகளாக நிதி வழங்காததால் சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் பாதியில் முடங்கும் அபாயம் ஏற்பட்டியிருக்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ``சென்னையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு.. தமிழ்நாட்டை மட்டும் மீண்டும் வஞ்சித்த மோடி தலைமையிலான ஒன்றிய அரசு! இதற்கு தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதில் சொல்வாரா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறது.ஸ்டாலின்
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பாக ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டு விமர்சித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், ``இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி; ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி; சாகர்மாலா திட்டத்திற்கு ரூ.2 லட்சம் கோடி என ஒட்டுமொத்தத் தமிழ் மக்களையும் ஏமாற்ற பார்க்கிறது பாஜக; இவற்றுக்கெல்லாம் மேலாக... தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய ரூ.2.5 லட்சம் கோடி கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல மத்திய பாஜக அரசு கூறிக்கொள்கிறது; எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்?எங்கள் காதுகள் பாவமில்லையா!?" எனக் கேள்வி கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T6rTW0