மதுரை மாவட்டம் செல்லம்பட்டி வட்டாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்ட ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கட்டுமான நிறுவனங்களுக்கு அரசு விடுத்திருக்கிற புதிய கட்டுப்பாடுகளை பார்த்து தமிழ்நாட்டு மக்களுக்கு அழுவதா, சிரிப்பதா என்று தெரியவில்லைஆர்.பி.உதயகுமார்
தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் உச்சத்தில் இருந்த நாள்களில் கும்பகர்ண தூக்கத்தைவிட அதிகமாக ஆழ்ந்த நித்திரையில் இருந்த திமுக அரசு, அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது தூங்கியெழுந்து புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளதை பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது.
இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட முன்னதாகவே, அதாவது மே 19-ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பொழிகிறபோது, நம் மாநிலத்தில் அனைத்து அணைகளும் நிறையக்கூடிய வாய்ப்பு உள்ளது.கட்டுமானப் பணி
கடந்த ஆண்டு எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாததால் தமிழக அணைகளில் போதிய நீர் கிடைக்கவில்லை, இந்த சூழலில் பொதுவாக ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை மே மாதம் கடைசியில் அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது.
இன்றைக்கு குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல சுழற்சி காணப்படுகிற காரணத்தினால் திண்டுக்கல், தேனி , தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய எட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னையிலும் சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
தமிழகத்தில் வெப்பச் சலனம் அதிகரித்து முடிந்து தற்போது கோடை மழை பெய்கிறது. ஆனால் அரசின் அறிவிப்போ தாலி கட்டிய பிறகு மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம் என்பது போல முட்டாள்தனமாக இருக்கிறது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்தவர்கள் இப்போதுதான் எழுந்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா?
சுட்டெரித்த வெயில் காரணமாக ஹீட் ஸ்ட்ரோக் என்று தொழிலாளர்கள் உயிரை பறிகொடுத்தபோதெல்லாம் தூங்கிக் கொண்டிருந்த இந்த அரசு, கோடைமழை பொழிந்து தென்மேற்கு பருவமழை தொடங்குகிற அறிவிப்பு வந்த பிறகு கட்டுமான வேலைகளுக்கு கட்டுப்பாடு விதித்ததை பார்க்கிறபோது திமுக அரசுக்கும், மக்களுக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என்பதை இந்த அறிவிப்பு நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆர்.பி. உதயகுமார்
முதலமைச்சர் மக்கள் மீது உண்மையிலேயே அக்கறையோடு இருக்கிறாரா? மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் விவரங்களை கேட்டு அறிந்து கொள்கிறாரா? அல்லது ஒரு பொம்மை முதலமைச்சராக செயல்படுகிறாரா?
தேர்தல் அறிக்கையிலே 10,000 கோடியில் ஏரி குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று சொன்னார்கள். மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அதேபோல ரூ.2,000 கோடியில் 200 தடுப்பணைகள் கட்டப்படும் என்று சொன்னார்கள், அதையும் செய்யவில்லை. அது கூட பரவாயில்லை, ஆனால் விவசாயிகள் பயன்பெற்ற குடிமராமத்து திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சியால் குழிதோண்டி புதைத்திருக்கிறார்கள்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T6xv66