மகளிர் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநில அரசுகள் மகளிருக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் செய்யும் திட்டம் செயல்படுத்தி வருகின்றன. வேலைக்குச் செல்லும் மகளிருக்கு இந்தத் திட்டம் பெரும் பயனுள்ளதாக இருப்பதால் மகளிர் மத்தியிலும் இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
இந்நிலையில், தெலங்கானாவில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக, எல்&டி இயக்குநர் சங்கர் ராமன் விமர்சித்துள்ளார். மேலும் 2026-க்கு பிறகு, மெட்ரோ திட்டப் பணிகளில் இருந்து விலக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். L&T இயக்குநர் சங்கர் ராமன்விமான சேவை ரத்தானதால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!
ஹைதராபாத் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பொது-தனியார் கூட்டாண்மை முறையில் லார்சன் அண்ட் டூப்ரோ (எல்&டி) நிறுவனம் கையாண்டு வருகிறது. இந்த நிலையில், எல் &டி நிறுவனத்தின் இயக்குநர் சங்கர் ராமன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ``பெண்கள் மெட்ரோ ரயில்களை பயன்படுத்துவது குறைந்துவிட்டது. இலவச பேருந்துகளில் அதிக எண்ணிக்கையில் செல்கிறார்கள். அதேவேளையில், பஸ்களின் எண்ணிக்கை மற்றும் தரம் உயர்த்தப்படவில்லை. பஸ்களில் பயணம் செய்த ஆண்கள் ரயில்களுக்கு வருகிறார்கள்.
தேர்தல் வாக்குறுதிகளின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் மாநிலத்தின் நிதிநிலைக்கு சாதகமாக அமைவது இல்லை. இந்த விவகாரத்தில் எந்த வேடிக்கையும் இருக்கக் கூடாது. நவீன, பூஜ்ஜிய மாசுபடுத்தாத போக்குவரத்து அமைப்பை உருவாக்க தனியார் முதலீடு பயன்படுத்தப்படுகிறது. ஆனால், அதே நேரத்தில், மாசுபடுத்தும் பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவதற்கு மாநில அரசு பணம் செலவழிக்கிறது. இது மாநில போக்குவரத்து கழகத்தை திவாலாக்கும் நடவடிக்கை. மெட்ரோ ரயில்சென்னை மெட்ரோ ரயில் திட்டமும் மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு பாரபட்சமும்! - RTI தகவல் சொல்வதென்ன?
இலவச பேருந்து பயணத் திட்டம் பொது போக்குவரத்தில் பாலின வேறுபாடுகளுக்கு வழிவகுக்கிறது. பெண்கள் பேருந்துகளை இலவசமாகப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆண்கள் ஒரு பயணத்துக்கு சராசரியாக 35 ரூபாய் செலுத்து கிறார்கள், ஹைதரபாத் மெட்ரோ ரயில் திட்டத்திலிருந்து 2026-க்குப் பிறகு, வெளியேற திட்டமிட்டுள்ளோம்" எனவும் அவர் கூறினார்.
இருப்பினும், இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப் படுவதற்கு முன்பே ஹைதராபாத் மெட்ரோ நிதி நெருக்கடியை எதிர்கொண்டது. கடந்த ஜூன் 2021, L&T மெட்ரோ ரயில் அதிகாரிகள், நிதி உதவி கோரி அப்போதைய முதல்வர் சந்திரசேகர் ராவை சந்தித்தனர். அப்போது பிஆர்எஸ் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த விவரங்களில், அந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் நிறுவனம் ரூ.400 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகத் தெரிவித்திருந்தது.
மெட்ரோ ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்காதது, கூட்ட நெரிசலைக் கையாளாதது, மெட்ரோவை நீட்டிக்கத் தவறியது போன்றவையே பயணிகளின் எண்ணிக்கை குறையக் காரணமாக இருந்ததாக விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
http://dlvr.it/T6ybpm