மேற்கு வங்கத்தில் மே 20-ம் தேதி ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ``இந்தியா கூட்டணி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைத்தால் திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் இருக்காது. ஆனால், கூட்டாளியாக வெளியிலிருந்து ஆட்சியமைக்க ஆதரவளிப்போம். மசோதாக்களில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார். மம்தா பானர்ஜியின் இந்த கருத்து இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.மம்தா பானர்ஜியுடன் ராகுல் காந்தி
அதைத் தொடர்ந்து, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரி,``மேற்கு வங்கத்தில் கூட்டணியை உடைத்த மம்தாவை என்னால் நம்பமுடியவில்லை. அவர் சந்தர்ப்பவாதத் தலைவர். மேற்கு வங்க முதல்வர் ஏற்கனவே என்.டி.ஏ கூட்டணிக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கிறார். ஒருவேளை தேர்தல் முடிவு அவர்களுக்குச் சாதகமாக இருந்தால், அவர் அங்குச் சென்றுவிடுவார். இந்தியா கூட்டணியில் விரிசல் விழ மம்தா பானர்ஜிதான் காரணம்" எனச் சாடியிருந்தார்.
வங்காள சிபிஐ(எம்) மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி, ``திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரின் கருத்து இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுகிறது. அவர் இரண்டு கதவுகளையும் திறந்து வைக்க விரும்புகிறார். ஒருபுறம், அவர் தனது ஆதரவை இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு உறுதியளிக்கிறார். மறுபுறம், பிரதமர் மோடிக்கு 'இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து மட்டும் தான் ஆதரவை வழங்குவேன்' என்று செய்தி அனுப்புகிறார். இது ஒரு சமநிலைப்படுத்தும் செயல். சூழலுக்கு ஏற்ற முடிவெடுக்கும் உத்தி" எனக் குறிப்பிட்டார்.ஆதிர் ரஞ்சன் சௌத்ரி
இந்த நிலையில், மம்தா பானர்ஜி அவரின் கருத்தை 24 மணி நேரத்தில் திரும்பப் பெற்றிருக்கிறார். இது குறித்து அவர் தம்லுக்கில் நடந்த பிரசாரம் கூட்டத்தில்,``அகில இந்திய அளவில், எனது அறிக்கையைச் சிலர் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். நான் இந்தியக் கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கிறேன். இந்தியக் கூட்டணி எனது சிந்தனையில் உருவானது. நாங்கள் தேசிய அளவில் ஒன்றாக இருக்கிறோம், தொடர்ந்து ஒன்றாக இருப்போம். ஆனால் மாநில கூட்டணிக்கும் தேசிய அளவில் இந்தியக் கூட்டணிக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. மேற்குவங்கத்தில் சிபிஐ(எம்), காங்கிரஸ் கட்சிகள் தான் பா.ஜ.க-வுடன் இருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`காங்கிரஸ், சி.பி.எம் கட்சிகளுக்கு வாக்களிப்பது மோடிக்கு சாதகமாகிவிடும்..!' - எச்சரிக்கும் மம்தா
http://dlvr.it/T70st5