2014-ல் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, 2019 தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துகொண்டார். இந்த நிலையில், மூன்றாவது முறையாக '2024 - மீண்டும் மோடி வேண்டும் மோடி' என்ற முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொண்ட பாஜக (BJP) மோடி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே பல்வேறு மாநிலங்களுக்கு இரண்டு முறைக்கும் மேலாகச் சென்று, அரசு திட்டங்களை தொடங்கி வைத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.மோடி
`நான் மனிதப் பிறவியல்ல... என்னை பரமாத்மாதன் தேர்ந்தெடுத்து அனுப்பினார்!' - மோடி பிரசாரம்
இதற்கிடையில், காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி உருவாகி, இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரத்துக்கான 76 நாள்களில், 200-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்கள், 80 முறை ஊடங்கங்களுக்கு பேட்டி எனத் தீவிரமாகச் செயல்பட்ட பிரதமர் மோடி, 'காங்கிரஸ் வெற்றிபெற்றால் தீவிரவாதிகளுக்குப் பிரதமர் இல்லத்தில் விருந்து நடக்கும், சி.ஏ.ஏ சட்டத்தைத் திரும்பப் பெறும், சட்டப்பிரிவு 370 ஜம்மு காஷ்மீரில் மீண்டும் கொண்டுவரப்படும், ராமர் கோயில் புல்டோசர் வைத்து இடிக்கப்படும்.
முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது, காங்கிரஸ் இந்துகளின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு பிடுங்கி கொடுக்க முயற்சிக்கிறது, அதானி, அம்பானியிடம் காங்கிரஸ் பணம் வாங்கிவிட்டது, நான் மனிதப் பிறவியல்ல. என்னை பரமாத்மாதன் தேர்ந்தெடுத்து அனுப்பினார், நான் கப், பாத்திரம் கழுவித்தான் வளர்ந்தேன்' எனப் பல்வேறு வகையில் பேசி, பிரசாரத்தை நடத்தி முடித்து, கன்னியாகுமரி தியானத்துக்குப் பயணமானார். இந்த நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின.விகடன் கருத்துக்கணிப்பு
தகர்ந்துபோன பாஜக -வின் பெரும்பான்மை கனவு!
அதில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க 240 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்றிருக்கிறது. கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தலைவிட பா.ஜ.க-வின் வாக்கு சதவிகிதம் கடுமையாக வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. பல முக்கிய பிரபலமான அமைச்சர்கள் தங்கள் பதவியை இழந்திருக்கிறார்கள். ராமர் கோயில் இருக்கும் ஃபைசாபாத் தொகுதியில்கூட பா.ஜ.க தோற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க கோட்டையாக இருந்த உத்தரப்பிரதேசத்தில் 40-க்கும் குறைவான இடங்களில்தான் வென்றிருக்கிறது.
எனவே, இவ்வளவு மெனக்கெட்டும் 'மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க சரிவைச் சந்தித்திருப்பதற்கு காரணம் என்ன?' என்ற கேள்வியோடு, விகடன் வலைதளப் பக்கத்தில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். அதில், மதவாத வெறுப்பு அரசியல், மக்கள் மாற்றத்தை விரும்பினர், மோசமான நிர்வாக செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என 4 விருப்பத் தேர்வுகளையும் கொடுத்திருந்தோம்.விகடன் கருத்துக்கணிப்பு
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவில், மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சரிவை சந்தித்திருப்பதற்கு காரணம், மதவாத வெறுப்பு அரசியல் என 62 சதவிகித வாசகர்களும், மக்கள் மாற்றத்தை விரும்பினர் என 11 சதவிகித வாசகர்களும், மோசமான நிர்வாக செயல்பாடு என 11 சதவிகித வாசகர்களும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என 16 சதவிகித வாசகர்களும் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbNDA: `உள்துறை, நிதி, பாதுகாப்புத்துறை கிடையாது' - கூட்டணியினரிடம் கறார்.. 4-1 கணக்கு போடுகிறதா பாஜக?
http://dlvr.it/T7ySSR