தமிழகத்திற்கு முறைப்படி வழங்க வேண்டிய தண்ணீரை கொடுக்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்து வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் பெரும்பாலான அணைகளில் தண்ணீர் இல்லாத போதும் கர்நாடக தனது நடைமுறையை மாறிக்கொள்ளவில்லை. எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால், குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே எங்களிடம் இருக்கிறது. இதனைக்கொண்டு மாநிலத்தின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். தமிழகத்திற்கு வழங்க முடியாது என தெரிவித்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது தமிழக அரசு. இந்த சூழலில் கடந்த 30-ம் தேதி டெல்லியில் காவிரி ஒழுங்குமுறை குழுவின் 95-வது கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.காவிரி
கூட்டத்தில் பேசிய தமிழக அதிகாரிகள், "ஆணையத்தின் உத்தரவுகளை பின்பற்றாமல் கர்நாடக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் மே மாத சுற்றுச்சூழல் நீர் அளவான 2.5 டி.எம்.சி, ஏற்கனவே தர வேண்டிய நீர் அளவான, 5.317 டி.எம்.சியை சேர்த்து வழங்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கர்நாடக அதிகாரிகள், "கர்நாடக அணைகளின் இருக்கும் நீரை கொண்டு மாநிலத்தின் குடிநீர் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். எனவே தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது" என மறுத்தனர். இதையடுத்து குழுவின் அடுத்த கூட்டம் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், "நடப்பு மே மாதத்தில் காவிரியில் இருந்து 10 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால், இதுவரை 3.8 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டுள்ளது என்றும் மீதம் 6.2 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியுள்ளது. அடுத்த மாதம் 9.17 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும். அதிலும் கால தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது. இதேபோல் கர்நாடக அதிகாரிகளும் தங்களது கருத்துக்களை தெரிவித்தார்கள். இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட ஒழுங்காற்று குழு, "2.5 டிஎம்சி தண்ணீரை திறந்துவிட வேண்டும்' என காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் 21-ம் தேதி நடைபெறும் காவிரி மேலாண்மை வாரிய ஆலோசனை கூட்டத்தில் இந்த பரிந்துரை எற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் மீண்டும் கர்நாடக மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அதையடுத்து இறுதியாக எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் தண்ணீர் திறக்கப்படும்.முதல்வர் ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையில் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்றது தவறான முடிவு என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், "கர்நாடகத்தில் தங்களது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில்கூட, காவிரியில் தமிழகத்திற்குண்டான உரிமை நீரை கேட்டுப் பெறாமல் கபட நாடகம் ஆடி வருகிறார் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின். காவிரி நீர் முறைபடுத்தும் குழுக் கூட்டத்தில், தமிழக நீர்வளத் துறை அதிகாரிகள் நேரடியாகச் சென்று பங்கேற்பதை இந்த விடியா திமுக அரசு தடை விதித்துள்ளதாக வந்துள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் காவிரியில் இருந்து 177.25 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஒவ்வொரு மாதமும் முறைப்படி தண்ணீர் வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைபடுத்தும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மைக்கு தேவையான பரிந்துரைகளை, முறைபடுத்தும் குழு வழங்க வேண்டும். இந்த அமைப்புகளின் கூட்டங்கள் டெல்லியில் நடைபெறுவது வழக்கம்.தமிழக அரசு
இதில் உறுப்பினர்களாக உள்ள தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் டெல்லி சென்று கூட்டத்தில் பங்கேற்று தங்களது மாநிலங்களின் கருத்துகளை வலியுறுத்துவார்கள். தமிழக அரசு அதிகாரிகள் டெல்லி செல்லாமல், ஆன்லைன் வாயிலாக காவிரி மேலாண்மை வாரியக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று நீர்வளத் துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. காவிரி மேலாண்மை ஆணையத்தைவிட, காவிரி நீர் முறைபடுத்தும் கூட்டத்தில்தான் திடமான விவாதங்கள் நடத்தி தமிழகத்தின் உரிமையைக் காக்க முடியும். விடியா திமுக அரசு பதவியேற்றதில் இருந்து, நீர்வளத் துறை அதிகாரிகள் இந்தக் கூட்டங்களில் தமிழகத்தின் உரிமைகளைப் பெரிதாக விவாதிப்பதில்லை என்று சக அதிகாரிகளே குற்றம் சாட்டுவதாகச் செய்திகள் வருகின்றன.காவிரி விவகாரம்: `நீங்க வேணும்னா தண்ணீர் குடிக்காம சிக்கனமா இருங்க!’ - துரைமுருகனைச் சாடிய பிரேமலதா
கடந்த முறை டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், தமிழகப் பிரதிநிதிகளுக்கு தெரியாமலேயே, மேக்கேதாட்டூ அணை கட்டுமான பிரச்னையை மத்திய நீர்வளத் துறை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்ட அவலமும் அரங்கேறியது. அந்தக் கூட்டத்தில் நேரில் பங்கேற்ற நீர்வளத் துறைச் செயலாளர் ஏமாற்றப்பட்டதாக, நீர்வளத் துறை அமைச்சர் அவர்களே ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். நேரில் பங்கேற்கும்போதே இந்த நிலை என்றால், ஆன்லைன் மூலம் பங்கேற்கும் போது, தமிழகத்தின் உரிமைக் குரல் முழுமையாக ஒலிக்குமா என்று டெல்டா விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
இந்த நிலையில், மேக்கேதாட்டூ அணை மற்றும் காவிரி நீர் விவகாரங்களில் கவனமுடன் செயல்பட வேண்டிய இந்த ஏமாற்று மாடல் அரசு, இனி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்று எடுத்த முடிவு தவறானது. தமிழகத்தின் உரிமைகளை கர்நாடக காங்கிரஸ் அரசின் கால்களில் அடமானம் வைத்துவிட்டு, தங்களது குடும்பத்தினருடைய தொழில்களை எவ்வித இடையூறும் இல்லாமல் நடத்த நினைக்கும் இந்த கபட நாடக விடியா தி.மு.க அரசை கடுமையாகக் கண்டிக்கிறேன்" என காட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கெனவே காவிரி விவகாரத்தில் தி.மு.க மென்மையாக அணுகுகிறது என்கிற குற்றச்சாட்டு நிலவி வரும் சூழலில் ஆன்லைனில் அதிகாரிகள் பங்கேற்ற விவகாரம் சர்ச்சையாகி இருக்கிறது.
இதுகுறித்து தி.மு.க செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், "கபடி பாடும் விஷயமா இது?. நேரில் சென்றால் மட்டும் பயந்து தண்ணீரை திறந்து விடப்போகிறார்களா?. ஏதற்கு எதை பேசுவது என்பது வேண்டாமா?. அந்த கூட்டத்தில் நேரில் சென்று பங்கேற்கவில்லை. இருப்பினும் ஆன்லைன் மூலமாக நமது நியாயத்தை தெரிவித்தோம். இதையடுத்து தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என அவர்கள் ஆணை பிறப்பித்து விட்டார்கள். இது எடப்பாடியின் அறியாமையை காட்டுகிறது. புரியாமல் பேசி கொண்டு இருக்கிறார். அவர்கள்தான் நேரில் வந்தால் வரலாம் இல்லை என்றால் ஆன்லைன் மூலம் பங்கேற்கலாம் என சொல்லி இருக்கிறார்கள். அதன்படிதான் அதிகாரிகள் நடந்து கொண்டார்கள். நேரில் செல்ல வேண்டும் என எடப்பாடி சொல்வது எந்த விதத்திலும் நியாயம் இல்லை" என கடுப்பானார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88காவிரி விவகாரம்: `நீங்க வேணும்னா தண்ணீர் குடிக்காம சிக்கனமா இருங்க!’ - துரைமுருகனைச் சாடிய பிரேமலதா
http://dlvr.it/T71gFC