No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news pape,no 1 tamil news website, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily,national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines,tamil news paper, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper,tamil news paper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,Tamil News | Online Tamil News | Tamil News Live | Tamilnadu News ,llive tamil news Portal offering online tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & all Tamil Newspaper updates, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture

Tuesday 11 June 2024

Tamil News Live Today: வீடுகளில் கழிவறை மூலமாக வெளியேறிய விஷவாயு - புதுச்சேரியில் பெண்கள் பலியான சோகம்

வீடுகளில் கழிவறை மூலமாக வெளியேறிய விஷவாயு! - பெண்கள் பலியான சோகம்



புதுச்சேரி ரெட்டியார்பாளையம் புது நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் வடிக்காலில் இருந்து கசிந்த விஷவாயு வீடுகளில் உள்ள கழிவறை மூலமாக வெளியேறியதால், இரண்டு பெண்கள் உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக வீட்டிலிருந்து வெளியேறுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அப்பகுதிக்கு நகராட்சி ஊழியர்கள் அந்த கழிவு நீர் வாடிக்காலை சரி செயயும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலைய புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்தது!



திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தின் 2ஆவது புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

ஏற்கெனவே இருந்த முனையம் மூடப்பட்ட நிலையில் 2ஆவது புதிய முனையம் செயல்படத் தொடங்கியது.


http://dlvr.it/T86KBR
Share:

Monday 10 June 2024

மணிப்பூர்: முதல்வர் கான்வாய்மீது துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்- கண்டனம் தெரிவித்த முதல்வர்| Manipur

மணிப்பூரில் பழங்குடியல்லாத மைதேயி சமூகத்தினரையும் பழங்குடி பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி குக்கி சமூகத்தினர் கடந்த ஆண்டு மே மாதம் முன்னெடுத்த போராட்டம், இரு சமூகத்தினருக்கிடையேயான வன்முறையாக வெடித்தது. ஓராண்டுக்கும் மேலாக நடந்துகொண்டிருக்கும் இந்த மோதல் நீடித்துக்கொண்டிருக்கிறது.மணிப்பூர்

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க இன்னும் இதைக் கட்டுப்படுத்தாததே வன்முறை நீடிப்பதற்கு காரணம் என்று எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று காலை காங்போக்பி மாவட்டத்தில் முதல்வர் பிரேன் சிங் பாதுகாப்பு வாகனத்தின்மீது கலவரக்காரர்கள் பதுங்கியிருந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து பேசிய போலீஸ் அதிகாரியொருவர், காலை 10:30 மணியளவில் ஜிரிபாம் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்ததாகவும், இதில் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு தோள்பட்டையில் புல்லட் பயந்து காயம் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரி இம்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க தேடுதல் தொடங்கியிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்

Manipur : `முதல்வர்மீதான தாக்குதல்... மக்களின்மீதான நேரடி தாக்குதல்!' - மணிப்பூர் முதல்வர்



இந்த நிலையில், முதல்வர் பிரேன் சிங் இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பிரேன் சிங் தனது X சமூக வலைதள பக்கத்தில், ``நாட்டுக்கு இரவு பகலாக சேவையாற்றிவரும் பாதுகாப்பு படையினர்மீது நடத்தப்படும் கொடூரத் தாக்குதல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தாக்கியவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்" என்று பதிவிட்டிருக்கிறார். மேலும், காயமடைந்த அதிகாரியை மருத்துவமனையில் பார்த்துவிட்டு திரும்புகையில், முதல்வர்மீது தாக்குதல் நடத்துவது நேரடியாக மக்களின்மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு சமம் என்றும் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரேன் சிங் தெரிவித்தார்.பா.ஜ.க-வை விரட்டியடித்த மணிப்பூர் மக்கள்!


http://dlvr.it/T85J92
Share:

Suresh Gopi: `நான் மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேனா?' - சுரேஷ் கோபி விளக்கம்!

கேரள மாநிலத்தில் பா.ஜ.க காலூன்ற காரணமான திருச்சூர் எம்.பி நடிகர் சுரேஷ்கோபி, மத்திய இணை அமைச்சராக நேற்று பதவி ஏற்றார். அதன் பிறகு நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, "ஒரு எம்.பி-யாகவே செயல்பட முடிவுசெய்துள்ளேன். நான் டெல்லி தலைமையில் எதுவுமே கேட்கவில்லை. எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் கூறியிருந்தேன். அமைச்சரவையில் இருந்து என்னை விரைவில் விடுவிப்பார்கள் எனத் தோன்றுகிறது. தாமதப்படுத்தாமல் என்னை விடுவிப்பார்கள். திருச்சூர் மக்களுக்கு எம்.பி என்ற நிலையில் சிறப்பான செயல்பாட்டை காட்டுவேன். நான் சினிமாவில் நடித்தே தீருவேன். மற்ற விஷயங்கள் குறித்து தலைமை தீர்மானிக்கட்டும்" எனக் கூறினார். கேபினெட் அமைச்சர் பதவி வழங்காத அதிருப்தியில் சுரேஷ் கோபி இவ்வாறு கூறுவதாக விமர்சனம் எழுந்தது. மேலும், கேரளாவைச் சேர்ந்த பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லியில் சுரேஷ் கோபியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுரேஷ் கோபி-யின் முகநூல் பதிவு

மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்ற மறுநாளே பதவியை துறக்க தயாரான சுரேஷ் கோபியின் நடவடிக்கை விவாதத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் குரியன் கூறுகையில், "சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில்தொடர வேண்டும். அவர் கேரளாவில் பா.ஜ.க-வின் கணக்கை தொடங்கியதால்தான் இரண்டு இணை அமைச்சர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. எனவே சுரேஷ் கோபி மத்திய அமைச்சர் பதவியில் தொடர வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்றார்.பிரதமர் மோடியுடன் சுரேஷ்கோபி

பா.ஜ.க தலைவர்கள் பேச்சுவார்த்தையின் முடிவில் மத்திய இணை அமைச்சர் பதவியில் தொடர்வதாக சுரேஷ் கோபி அறிவித்துள்ளார். இது குறித்து சுரேஷ் கோபி தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "மோடி அரசின் அமைச்சரவையில் இருந்து நான் விலகபோவதாக சில ஊடகங்கள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. அது முற்றிலும் தவறானது. மோடி அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும், கேரள மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதும் எனக்குப் பெருமையாக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கேரளாவின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் கடந்த 2 நாள்களாக நடந்த விவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbSuresh Gopi: `சினிமாவில் நடித்தே தீருவேன்' - கேபினெட் பதவி கிடைக்காததால் சுரேஷ் கோபி அதிருப்தியா?


http://dlvr.it/T84vN7
Share:

Suresh Gopi: `சினிமாவில் நடித்தே தீருவேன்' - கேபினெட் பதவி கிடைக்காததால் சுரேஷ் கோபி அதிருப்தியா?

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் நடிகர் சுரேஷ் கோபி வென்றதை அடுத்து, கேரளாவில் கால் பதித்துள்ளது பா.ஜ.க. இந்தியாவே திருச்சூர் தொகுதியை உற்று நோக்கும் அளவுக்கு அரசியலில் முக்கியத்துவம் பெற்றார் சுரேஷ் கோபி. இதையடுத்து சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க டெல்லி தலைமை முடிவு செய்தது. பிரதமர் அலுவலகத்தில் இருந்து சுரேஷ் கோபிக்கு அழைப்பு வந்ததை அடுத்து, அவர் டெல்லி சென்று மத்திய இணை அமைச்சராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார். கேரளாவில் இருந்து டெல்லி புறப்படும் முன்பு செய்தியாளர்களை சந்தித்த சுரேஷ் கோபி, "கேரளாவையும் தமிழ்நாட்டையும் கவனித்துக் கொள்ளும் முக்கிய எம்.பி ஆக நான் செயல்படுவேன். 10 முக்கிய துறைகளை செயல்படுத்தும் வகையில் எனக்கு பொறுப்பு கிடைத்தால் வளர்ச்சியை கொண்டுவருவேன்" என்ற ரீதியில் பேசினார். இந்த நிலையில் கேரளா மாநிலத்தில் சுரேஷ் கோபி மற்றும் ஜார்ஜ் குரியன் ஆகியோர் நேற்று மத்திய இணை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.திருச்சூர் பா.ஜ.க எம்.பி சுரேஷ் கோபி

இந்த நிலையில் திடீரென அமைச்சர் பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சுரேஷ் கோபி தலைமைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். சுரேஷ் கோபி செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஒரு எம்.பி-யாகவே செயல்பட முடிவுசெய்துள்ளேன். நான் டெல்லி தலைமையில் எதுவுமே கேட்கவில்லை. எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என்றுதான் கூறியிருந்தேன். அமைச்சரவையில் இருந்து என்னை விரைவில் விடுவிப்பார்கள் எனத்தோன்றுகிறது. தாமதப்படுத்தாமல் என்னை விடுவிப்பார்கள். திருச்சூர் மக்களுக்கு எம்.பி என்ற நிலையில் சிறப்பான செயல்பாட்டை காட்டுவேன். நான் சினிமாவில் நடித்தே தீருவேன். இதுபற்றி தலைமை தீர்மானிக்கட்டும்" என்றார்.பிரதமர் மோடியுடன் சுரேஷ்கோபி

இதுகுறித்து கேரளா அரசியல் விவரப்புள்ளிகள் கூறுகையில், "2019 நாடாளுமன்ற தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ் கோபிக்கு ராஜ்யசபா எம்.பி பதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் கேரளாவில் கால்பதித்த பா.ஜ.க-வின் முதல் எம்.பி என்ற வகையில் மத்திய கேபினெட் அமைச்சர் பதவி கிடைக்கும் என சுரேஷ் கோபி எதிர்பார்த்துள்ளார். இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சுரேஷ் கோபி அதிருப்தியில் உள்ளர். டெல்லியில் இருந்து அழைப்பு வந்ததும் பதவி பிரமாணம் செய்துகொள்ள விரைந்து சென்றார் சுரேஷ் கோபி. ஆனால், இணை அமைச்சர் பதவி என்றதும் அதை கவுரவ குறைச்சலாக எண்ணி பின்வாங்குகிறார். சினிமாவில் நடிப்பதுதான் முக்கியம் என்றால் அமைச்சராக வேண்டும் என டெல்லி அழைத்த உடனேயே தனது கருத்தை கூறி பதவி ஏற்புக்கு செல்லாமல் இருந்திருக்கலாமே. கேபினெட் அமைச்சர் பதவி வேண்டும் என்பதற்காக சுரேஷ் கோபி இப்படி நடந்துகொள்கிறார்" என்றனர். இதற்கிடையே சுரேஷ் கோபிக்கு சினிமாவில் நடிக்க அனுமதி வழங்கப்படும் எனவும், அவர் மத்திய அமைச்சராக தொடருவார் எனவும் கேரளா மாநில பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர். சுரேஷ் கோபியை சமாதானப்படுத்த பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான பி.கே.கிருஷ்ணகுமார் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbSuresh Gobi: `எனக்கு அமைச்சர் பதவியில் விருப்பமில்லை' - பதவியேற்ற மறுநாளே விலக சுரேஷ் கோபி விருப்பம்


http://dlvr.it/T84Tdt
Share:

`வேற்றுமையில் ஒற்றுமை' - மோடிக்கு பாடம் சொன்ன இந்தியா அல்லது பாரதம்!

சர்வதேச நாடுகள் பலவும் உற்றுநோக்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா முடிந்திருக்கிறது. இத்திருவிழாவின் வெற்றிச்செல்வர்்கள்... வேறு யார்? இந்திய மக்கள்தான். இது, காலங்காலமாக சொல்லப்படுவதுதான். என்றாலும், ஒவ்வொரு கால கட்டத்திலும் அதைச் சொல்லும்போது அழுத்தமான கூடுதல் காரணங்கள் இருக்கும். இம்முறையும் அப்படியே!

கடந்த பத்தாண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த மோடி, மூன்றாவது முறையாக பிரதமர் ஆகியிருக்கிறார். தனிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக... கூட்டாகப் போட்டியிட்ட கட்சிகளுடைய வெற்றியையும் சேர்த்து, அவருக்குத்தான் வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள், மக்கள். இந்த வெற்றிக்கு ஊடாக ஓர் அழுத்தமான செய்தியை வெளிப்படையாகவும் விளக்கமாகவும் உலகத்துக்கே புரியும் வகையிலும் சேர்த்துச் சொல்லியிருக்கிறார்கள். அது, ‘ஒன்றாக இருப்போம்... நன்றாக இருப்போம்' என்பதுதான்!

பா.ஜ.க-வுடன் கைகோத்திருக்கும் கூட்டணிக் கட்சிகள் மட்டும் இணைந்திருப்பதற்கு பெயர், `ஒன்றாக இருப்போம்' அல்ல. பதவி ஏற்புக்கு முன்பாக, `140 கோடி மக்களுக்கும் ஆட்சி நடத்தத் தீர்மானித்திருக்கிறோம்' என்று மோடியைத் திருப்பிச் சொல்ல வைத்தார்கள் அல்லவா மக்கள்... அதற்குப் பெயர்தான் ஒன்றாக இருப்போம்.

‘மூன்றாவது முறையாக நேருவைப் போல பிரதமர் பதவி ஏற்று இருக்கிறார்’ என்று வரலாற்றுப் பெருமை கொள்வதோடு... ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று அதே நேரு சொன்னதையும் சேர்த்தே உளமாரச் சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டால்... நிச்சயமாக அனைவருமே ஒன்றாக இருப்போம்... நன்றாகவும் இருப்போம். அதுவே, மாற்றத்துக்கான முதல் விதையாகவும் இருக்கும். பா.ஜ.க மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இங்கே நிறையவே இருக்கின்றன.

முதலில் மாநில உரிமைகள்... ‘ஒரே தேசம்... ஒரே கலாசாரம்’ என்ற கருத்துருவாக்கத்தை பா.ஜ.க அனைத்துவிதங்களிலும் முன்னிறுத்தியது. ஒரே தேசமாக இருப்பது வேறு. தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு மாநிலங்களுக்குமான தனிப்பட்ட மற்றும் கலாசாரம் சார்ந்த நலன்கள் தொடர்புடைய விஷயங்கள் வேறு.

ஜி.எஸ்.டி பங்கீடு, வெள்ள நிவாரணம், கல்வி, விவசாயம், மொழி எனப் பல விஷயங்களில் மாநில உரிமைகளில் கை வைத்ததுதான் பிரச்னையே.

அடுத்து மதவாதம்... தேர்தல் பரப்புரையில் மோடியும் அவர் கட்சி வேட்பாளர்களும் வெளிப்படையாக அதிகம் பேசியது மதவாதம் பற்றிதான். ராமர் கோயிலை முன்வைத்து, சிறுபான்மையினரை மிரட்டவே செய்தார்கள். ஆனால், ராமருக்குக் கோயில் கட்டிய அதே அயோத்தி (பைசாபாத்) தொகுதியிலேயே பா.ஜ.க-வுக்குத் தோல்வி. இந்துக்களின் அடையாள பூமிகளில் ஒன்றான வாரணாசி தொகுதியில் முதல் சில சுற்றுகள் மோடியே பின்னடைவைத்தான் சந்தித்தார்.

மதம் தனிப்பட்டவர்களின் பட்டியலில் இருக்கவேண்டிய விஷயம். மனிதம்... பொதுப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கவேண்டிய விஷயம். இதைத்தான் பட்டவர்த்தனமாக உணர்த்தியிருக்கிறது, அயோத்தித் தோல்வி.

கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்தாலும் அவர்களின் குரல் முக்கிய நேரத்தில் ஒலிக்க முடியாத அளவுக்கு பா.ஜ.க-வுக்கு மிருகபலம் இருந்தது. நினைத்த சட்டங்களை நினைத்த நேரத்தில் நினைத்தபடியெல்லாம் மாற்ற முடிந்தது. அதற்குக் கடிவாளம் போட்டிருக்கிறார்கள் மக்கள். 234 பேரை எதிரில் உட்கார வைத்துள்ளனர்.

இனி, எதிர்த்தரப்பின் குரலும் சமமாக ஒலிக்கும். நிதானமாகத்தான் போக முடியும். இதையும் மனம் மாறி... மனமுவந்து ஏற்றுக்கொள்வதில்தான் இருக்கிறது அரசியல் பக்குவம்.

நாட்டில் எது முக்கியமான பிரச்னை என்பதற்குத்தான் எப்போதுமே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். `மதுராவிலிருக்கும் மசூதிக்குக் கீழேதான் எங்கள் கிருஷ்ணர் வாழ்ந்தார்' என்றெல்லாம் சொல்லிக்கொண்டு மீண்டும் கடப்பாரைத் தூக்கினால், வெற்றி என்று பழையபடி கிளப்பிவிடாதீர்கள். `புல்டோசர் புகழ் யோகி ஆதித்யநாத்' என்று மோடியே புளகாங்கிதமடைந்த அளவுக்கு அத்துமீறிய அத்தனை புல்டோசர்களுக்கும் பூட்டுப் போடுங்கள்.

பங்குச்சந்தையில் உச்சங்களைத் தொட்டுக்கொண்டே இருக்கிறோம். இதனால், தேசம் மொத்தமும் வளர்ந்துவிட்டதா? பொருளாதாரத்தில் உலக அளவில் ஐந்தாம் இடம். ஆனால், 125 நாடுகள் கொண்ட பட்டினி குறியீடு பட்டியலில் 111-வது இடம், பாரதத்துக்கு. நாட்டு மக்களின் பசியைக்கூட போக்க முடியாத வளர்ச்சி, என்ன வளர்ச்சி?

கோடிக்கணக்கான மக்கள் வேலையின்றி உழன்றுகிடக்கிறார்கள். உங்களை நம்பி, தொடர்ந்து உங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் வட இந்திய மற்றும் வடகிழக்கு சகோதரக் கூட்டம், வேலை தேடி தென்னகத்துக்கும் படையெடுக்கிறார்கள்... கூலிகளாக!

`தேனாறும் பாலாறும் ஓடும்' என்று காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே சொல்லப்படுவது வாய் வார்த்தைகளாக மட்டுமே இருக்கின்றன. அன்று தொடங்கி, இன்று வரையிலும் மாறிமாறி ஆட்சியைப் பிடிக்கும் உங்களைப் போன்றவர்களின் குடும்பங்களிலும்... உங்களைப் போன்றவர்களுக்கு அனுசரணையாக இருக்கும் குடும்பங்களிலும்... உங்களைப் போன்றோருக்கு சேவை செய்யும் அதிகார வர்க்கக் குடும்பங்களிலும் மட்டும்தான் ஓடிக்கொண்டிருக்கிறது, தேனாறும் பாலாறும். மற்றபடி கோடானுகோடி மக்களின் வீட்டில் குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லை என்பதே நிதர்சனம்.

கூட்டணிக் கூட்டத்தில் இந்திய அரசமைப்புச் சட்டப் புத்தகத்தை வணங்கியபின் பேசிய மோடி, `அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்பிலிருந்து வழுவாமல் நடைபோடுவதே என் பணி' என்று புதுக் குரலில் பேசி இருக்கிறார். `தேர்தல் முடிவுகளுக்கு முன்பு பேசிய மோடியா இது?' என்று நாடே கிள்ளிப் பார்த்துக் கொண்டது.

`மக்கள்தான் வெற்றிச்செல்வர்கள் எனச் சொன்னது இப்போது புரிகிறதா? இதுதான் இந்திய அல்லது பாரத மக்களாட்சியின் சிறப்பு. இந்தக் கூட்டு மனசாட்சியைப் புறந்தள்ளுபவர்களும் புரிந்து கொள்ளாதவர்களும் இந்த மக்களை இனி ஆள முடியாது. இப்போது ஆளப்போகும் மோடியும் சரி... எதிர்காலத்தில் ஆள்வதற்காக வரவிருக்கும் எவரும் சரி... இதையெல்லாம் உணர்ந்து தங்களை மாற்றிக்கொண்டே ஆக வேண்டும்.

வீழ்வது யாராயினும்... வாழ்வது நாடாகட்டும்!


http://dlvr.it/T83mjl
Share:

Sunday 9 June 2024

Ram Mohan Naidu : 36 வயதில் நாட்டின் இளம் மத்திய அமைச்சர் - யார் இந்த ராம் மோகன் நாயுடு?

3-வது முறையாக நாட்டின் பிரதமராக, இன்று பதவியேற்றிருக்கிறார் மோடி. அவருடன் 71 பேர் அமைச்சர்களாகப் பதவி ஏற்றுக் கொண்டனர்.

இந்த அமைச்சரவையில் தெலுங்கு தேசம் கட்சியின் கிஞ்சராபு ராம் மோகன் நாயுடு (36), அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கிறார். மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் 36 வயதில் ஒருவரை அமைச்சராக நியமிப்பது இதுவே முதன்முறை. ராம் மோகன் நாயுடு குடும்பத்துடன்

யார் இந்த ராம் மோகன் நாயுடு?



பர்டூ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியலில் பட்டம் பெற்ற ராம் மோகன் நாயுடு, லாங் ஐலேண்ட் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றிருக்கிறார். ராம் மோகன் நாயுடுவின் தந்தை, முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி-யான மறைந்த கே யர்ரான் நாயுடு. இவர் 1996,1998 க்கு இடையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் மத்திய அமைச்சராக இருந்தார். இவரின் மாமா கே அட்சேன் நாயுடு தெக்கலி எம்.எல்.ஏ-வாகவும், தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவராகவும் இருக்கிறார்.

ராம் மோகன் நாயுடு படிப்பு முடித்து, சிங்கப்பூரில் தொழிலதிபராக இயங்கினார். ஆனால் 2012- ல் முன்னாள் மத்திய அமைச்சர் கே.யெர்ரன் நாயுடு சாலை விபத்தில் இறந்ததால், ராம் மோகன் நாயுடு இந்தியா வரவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதைத் தொடந்து, ராம் மோகன் நாயுடு அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு, இரண்டே ஆண்டுகளில், அதாவது 2014-ல் ஸ்ரீகாகுளத்திலிருந்து, 16-வது மக்களவையில் இரண்டாவது இளம் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 26.ராம் மோகன் நாயுடு

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு உடனான நெருங்கிய தொடர்பு ராம் மோகன் நாயுடுவின் அரசியலில் பெரியளவில் உதவியது. அதனால், ராம் மோகன் நாயுடு, தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராகப் பணிபுரிந்தார். சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டபோது, ​​டெல்லியில் நாரா லோகேஷ் உடன் இணைந்து முக்கிய தலைவர்களின் ஆதரவை கோரி தீவிரமாக செயல்பட்டார். பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களில் முன்மாதிரியான செயல்பாட்டிற்காக 2020-ம் ஆண்டு சன்சத் ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb />
வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbPM Modi Oath Ceremony : `நரேந்திர தாமோதர தாஸ் மோடி ஆகிய நான்...' - 3-வது முறையாக பிரதமரானார் மோடி - Modi Sworn In | Live


http://dlvr.it/T82xw4
Share:

Daily Tamil News. Powered by Blogger.

Contributors

Search This Blog

Labels

tamil nadu (1374) India (1281) chennai (1031) New delhi (664) world (360) jayalalitha (203) politicians (196) Jallilkattu (190) Tamilnadu (130) Black money (125) World news (115) narendra modi (108) dmk (97) O paneer selvam (90) indian politcis (85) sasikala (75) ALADMK (74) BJP (74) struggle (69) bank (68) government (64) jallikattu (64) supreme court (63) cm (61) washing ton (59) india politics (57) mumbai (57) tamil nadu politics (55) lucknow (53) US (52) bangalore (51) climate (51) madurai (51) Reserve bank of india (49) Tamilnadu politics (48) shashikala (48) vardha.cyclone (46) MK stalin (45) srilanka (45) election (42) modi (41) minister edappadi palanisamy (39) Railway (37) income tax (37) congress (36) panneer selvam (36) world terrorism (36) Accident (34) central government (34) rahul gandhi (34) tamil nadu cinema (34) fisherman (33) pakistan (33) ADMK (32) federal government (32) jammu kashmir (32) Alanganallur (31) kerala (31) apollo hospital (30) marina beach (30) tami nadu (30) MLA (29) court (29) ATM (28) uttar pradesh (28) Tamilnadu Police (27) stalin (27) OPSVsSasikala (26) UP (26) karunaanithi (26) cyclone (25) OPS Vs Sasikala (24) governor (24) india sports (24) Sasikala vs OPS (23) andra pradesh (23) deepa jayakumar (23) heavy rain (23) tirunelveli (23) election commission of india (22) pm (22) sports (22) weDoJallikattu (22) cricket (21) kolkata (21) money seized (21) thirukural (21) vidyasagar rao (21) china (20) pranab mugarjee (20) lok sabha (19) world sports (19) Coimbatore (18) OPS (18) america (18) donald (18) parliment (18) venkaiah naidu (18) UP chief minister Akhilesh (17) ban (17) cbi (17) death (17) india army (17) karnataka (17) ram mohan rao (17) vaiko (17) AIADMK (16) ISIS (16) SasikalaVsOPS (16) india cinema (16) pongal festival (16) rain (16) rajya sabha (16) students (16) Delhi (15) Hyderabad (15) R.K.nagar (15) Tamil Nadu Assembly (15) agriculture (15) airport (15) donald trump (15) islambad (15) jeyalalitha (15) nada cyclone (15) salem (15) state assembly election (15) tamilnadu cinema (15) alanganallur Jallikattu (14) arrest (14) earthquake (14) india-pakistan (14) london (14) poes garden (14) pon radha krishnan (14) puducherry (14) samajwadi party (14) tamil nadu election (14) tamil nadu police (14) thiruvananthapuram (14) world politics (14) State government (13) madras high court (13) punjub (13) republic day (13) sasikala puhpa (13) school (13) ISupportOPS (12) New CM (12) SupportJallikattu (12) arun-jaitley (12) attack (12) india terrorism (12) old banknotes (12) old notes (12) patna (12) srinagar (12) Assembly election (11) RBI (11) bank notes (11) bay of bengal (11) chandigarh (11) emergency law (11) indian army (11) notes (11) parliament (11) president (11) pudukottai (11) ramadoss (11) tamilnadu politics (11) trump (11) CM edappadi palanisamy (10) Rajiniganth (10) UN (10) farmer (10) japan (10) maharashtra (10) meterorological center (10) metrological centre (10) minister sushma swaraj (10) new banknotes (10) vardha (10) Army (9) colombo (9) crop farmer (9) dinakaran (9) dindigual (9) electricity (9) kanimozhi (9) north Korean (9) russia (9) tirupathi (9) MDMK (8) bank new notes (8) barack obma (8) cho ramaswamy (8) cinima (8) cuddalore (8) federal budget (8) finance minster arun jaitley (8) hospital (8) kamal hassan (8) kancheepuram (8) mayawathi (8) mp (8) nagapattinum (8) new york (8) petrol (8) rameshwaram (8) sexual harassment (8) shekhar reddy (8) strike (8) subramaniya samy (8) tamilnadu chief secretary (8) tiruvannamalai (8) twitter (8) vijay mallya (8) MarinaProtest (7) Tirunavukkarasar (7) america politics (7) australia (7) budget (7) dhanapal (7) gujarat (7) high court (7) hydro-carbon plan (7) indian national flag (7) indian police (7) injured (7) kejriwal (7) killed (7) marina jallikattu (7) minister (7) political parties (7) social networking (7) tamil (7) tamil nadu people (7) tamilisai (7) thambidurai (7) thanjavur (7) tiruvarur (7) varanasi (7) GST (6) Girija Vaidyanathan (6) ISRO satellite (6) Krishnagiri (6) Peta (6) Rajnath Singh (6) SBI (6) aadhaar card (6) aardhar card (6) bangladesh (6) bank account (6) banknotes (6) beijing (6) bhopal (6) bihar (6) chandrababu naidu (6) christmas (6) cricket sports (6) dubai (6) ennore (6) erode (6) facebook (6) gandhinagar (6) india cricket (6) jail (6) kauvery hospital (6) kuvattur (6) madhya pradesh (6) madusudanan (6) pandiyarajan (6) prime minister (6) soldiers (6) sonia gandhi (6) student (6) sucide (6) syria (6) theni (6) tuticorin (6) voting (6) withdrawal (6) Afghanistan (5) BJP.finance minister arun jaitley (5) Vijayawada (5) airlines (5) american politics (5) andaman and nicobar islands (5) arvind kejriwal (5) avalanche (5) border security force (5) cho (5) depositing bank (5) digital transaction (5) elangovan (5) former justice markandey katju (5) france (5) goa (5) gunfight (5) india-england (5) indonesia (5) iraq (5) kanyakumari (5) mahatma gandhi (5) metro railway (5) mexico (5) money laundering (5) murder (5) national Green Tribunal (5) neduvasal (5) newyork (5) palanisamy (5) petrol bunk (5) plus 2 (5) prison (5) ration card (5) sarath kumar (5) tamilsai soundarajan (5) terrorist (5) thiruvalluvar (5) tiruchirapalli (5) trichy (5) union minister finance arun jaitley (5) uttarakhand (5) vellore (5) vidhyasagar rao (5) villupuram (5) visa (5) whatapp (5) BSP (4) MPs (4) Madurai high court (4) Paris (4) advani BJP (4) agrahara jail (4) aircraft (4) amazon (4) amit shah (4) amritsar (4) balasore (4) barley (4) beta (4) bi-election (4) colleges (4) dam (4) doctors (4) farmer suicide (4) fog (4) former justice markandeya katju (4) germany (4) gunfire (4) human rights (4) india news (4) indian bank (4) indian cricket (4) israeli (4) jaipur (4) jan dhan bank (4) judgement (4) kanpur (4) kashmir (4) kasparov cycle (4) madurai tamil nadu (4) mahendra dhoni (4) mamata banerjee (4) mamtha banerjee (4) march 8th (4) mobile smart phone (4) mulayam singh yadav (4) new general secretary (4) new year (4) new zealand (4) open tennis (4) orissa (4) pakistan politics (4) panaji (4) sabarimala (4) satellite (4) security (4) sezied (4) tennis (4) terrisom (4) thiruvullar (4) train accident (4) tv channels (4) union home minister (4) union minister rajnath singh (4) vendhar movies (4) vijaykanth (4) virat kohli (4) withdrawn (4) .world (3) 10 (3) 10th and 12 th (3) 2000 notes (3) ALDMK (3) CBSE (3) DSP (3) Gk.vasan (3) H-1B (3) India budget 2017-2018 (3) LiveUpdates (3) MGR (3) S.R.Balasubramain (3) Seoul (3) Tokyo (3) WeSupportOPS (3) agra (3) ahmedabad (3) ankara (3) army chief (3) assembly committee (3) assert (3) bahujan samaj (3) berlin (3) bipin rawat (3) birthday party (3) boat accident (3) brazil (3) cabinet committee (3) california (3) cauvery (3) chennia (3) chicago (3) chidambaram (3) chief Velupillai Prabhakaran's (3) cinema (3) cm chandrababu naidu india (3) collector (3) congres (3) deepak (3) dengue fever (3) depty CM (3) economic (3) england (3) federal minister (3) fight (3) flag hoist (3) former chief minister jayalalithaa (3) gas (3) gayatri Prajapati. (3) general meeting (3) government hospital (3) granite (3) indians (3) interest (3) jamaluddin (3) japanese prime minister shinzo (3) jobs (3) judge (3) kadalur (3) karachi (3) karthikeya sivasenapathy (3) kavery (3) kerala politics (3) kodaikanal (3) last evening (3) latest news (3) madhan (3) maneka gandhi (3) manmohan singh (3) melbourne (3) melur (3) military (3) muslim (3) nagercoil (3) namakkal (3) nashik (3) navjot singh sidhu (3) nirmala sitharaman (3) nitish kumar (3) noida (3) olymbic (3) pakistan army (3) paneerselvam (3) police (3) pollachi (3) pon radhakrishna (3) ponniyan (3) pyongyang (3) radhakrishna (3) raghava lawrence (3) rama rao (3) ramanadhapuram (3) release (3) rocket (3) sahitya academy (3) san francisco (3) sengottaiyan (3) silent struggle (3) south Korean (3) speaker (3) special buses (3) state governor (3) suresh prabu (3) tamil nadu government (3) telangana (3) terrorist attack (3) thirumavalavan (3) tirupur (3) tiruvallur (3) tnpsc (3) tsunami (3) union ministry (3) us government (3) vadivasal (3) vijay (3) won (3) yogi (3) yuvraj singh (3) 26 week period (2) Ariyalur (2) BCCI (2) British (2) CIA (2) IAS (2) India-Bangladesh (2) Iphone (2) Kabul (2) M.P.pandiyanrajan (2) M.R.Vijaya Baskar (2) MGR memeorial (2) NIA (2) Qatar (2) Rk (2) State bank (2) Taliban terrorist (2) Tamil Nadu legislative Assembly (2) US president donald trump (2) abu bakr baghdadi (2) act (2) against (2) air india (2) ajith kumar (2) allahabad (2) ambur (2) anbumani ramadoss (2) animal welfare board (2) anna hazare (2) assam (2) aswin (2) austrian (2) avaniyapuram (2) award (2) awards (2) baba ramdev (2) badminton (2) baghbad (2) balachandran (2) banglore (2) bashar al-assad (2) bhairava (2) blast (2) bollywood (2) bus accident (2) canara bank (2) chief minister narayanaswamy (2) chinnama (2) ciricena (2) coin (2) coke (2) commissioner (2) corruption (2) credit card (2) cuba (2) cylinder (2) dehradun (2) deputy governor (2) deputy speaker thambidurai (2) dharamshala (2) dharmapuri (2) died (2) double leaf symbol (2) doubt (2) driving license (2) duraimurukan (2) election campaign (2) european (2) examination (2) fake doctors (2) fake website (2) federal minister manohar parrikar (2) female employee (2) formars loan (2) former cricketer (2) former minister (2) gambia (2) geneva (2) gold (2) google app (2) gun battle (2) guwahati (2) heart attack (2) heavy security (2) heavy snow (2) hike (2) hiphop adhi (2) hiphop gen (2) hirakhand express (2) hosur (2) hunger strike (2) ias officers (2) incident (2) india budget (2) indian sports (2) international women's day (2) istanbul (2) italy (2) jakarta (2) jayakumar (2) jio (2) kachchatheevu (2) kantaleru (2) karunas (2) kenya (2) kerala cinema (2) kingfisher owner (2) kohima (2) kohli (2) kollywood (2) kudankulam (2) luncknow (2) madurai tamilnadu (2) mahabratam (2) maitreyan (2) malasiya (2) manila (2) manju virattu (2) march (2) meeting (2) mellur (2) memorial (2) missile (2) missing (2) mist (2) monsoon rains (2) mullaimani (2) munisamy (2) mysore court (2) naam thamizhar leader seemam (2) nadukkuppam (2) nagarajan (2) nagpur (2) natraj (2) nattional anthem (2) nawaz sharif (2) neet exam (2) new chief justice (2) new notes (2) new rules (2) new year calendar (2) nigeria (2) nonviolent (2) nsg (2) nuclear weapons (2) obma (2) online money transfer (2) pahraic (2) passport (2) people (2) people suffer (2) pepsi (2) permpalur (2) petrol punk (2) philippines (2) pinarryi vijayan (2) polling (2) pondicherry (2) president election (2) private company (2) pune (2) rahul (2) raipur (2) rajiv gandhi (2) rama chandran (2) ramakrishnan (2) ratan tata (2) ravi shankar prasad (2) rekla race (2) resignation (2) robert vadra (2) rupee (2) russian (2) russian president putin (2) sasikala upset (2) saudhi prince (2) sea shore (2) seized (2) shiva sena (2) shock (2) siddaramaiah (2) simbu (2) sivagangi (2) social website (2) solar (2) solider (2) south africa (2) south china (2) south korea (2) spy agency (2) srilanka navy (2) state election commission (2) suicide (2) supporter (2) surat (2) surya (2) syrain.government (2) syrian (2) tamil language (2) tamil nadu school education department (2) tamil nadu government examination (2) tamil nadu sports (2) tamilnaducongresscommittee (2) tamukkam (2) thalibans (2) thane (2) thief (2) traffic (2) transport (2) travelling (2) triplicane (2) turkey (2) uk (2) unemployment (2) urjit patel (2) us presidential election (2) veeraghav (2) virender sehwag (2) virudhu nagar (2) water problem (2) west bengal (2) white house (2) wifi (2) world AIDS awareness day (2) world election (2) 10 lakhs (1) 12 satellites (1) 127 (1) 14 years girl (1) 150 hours 50 results (1) 200 railway station (1) 24 indian lauguages (1) 35 thousand (1) 4.6 richter (1) 5 dead (1) 500 (1) 5G (1) 62 candidates (1) 84 projects (1) A.K.Saseendran (1) A.R Nagar (1) AIMS doctors (1) ALLMS (1) AR rahman (1) ARA (1) Al - Qaeda leader (1) Anurag Thakur (1) Ashoka (1) Asia top 10 beach (1) Babri Masjid (1) Ban PetaJallilkattu (1) British government (1) C.V.shanmugam (1) CM akhilesh yadav (1) Cairo (1) Coimbatore corporation (1) Coimbatore industry association (1) DRC (1) Damascus (1) Dayanidhi maran (1) Ddmk (1) E-wallet (1) EU law (1) Egypt (1) Ernakulam (1) FM (1) Former Secretary General ban Ki moon (1) GAAR (1) GH (1) GSP (1) GSSV (1) GTF (1) Gate (1) George Michael (1) Haridwar (1) Himachal Pradesh (1) ICF (1) ICU (1) IFS (1) IGP (1) INS virat ship (1) IOA (1) IPL (1) IPS (1) IRCTC (1) Identity card (1) India budget 2017 (1) Indian Embassy warning (1) Indus os (1) JIPMER (1) K.A.sengottaiyan (1) LK advani (1) Lahore (1) Lalu prasad (1) Los Angeles (1) Lss nagar (1) MBBS Entrance (1) MNS (1) Maharajganj (1) McDonald (1) Megaserials (1) Muzaffarnagar (1) NGO (1) NGT (1) NITI AAYOG (1) Nakappattinam (1) Obama wife (1) P.H.pandiyan (1) P.S.P Jawan Tej Bahadur (1) PM benjamin netanyahu (1) PM justin (1) PMs office (1) Panipat (1) R.K (1) R.j balaji (1) R.k singh (1) RSS (1) RSS office (1) Richmond (1) S.K.kaul (1) S.P.B (1) S.V.shekher (1) SIS (1) Saudi (1) Singampunari (1) Sunderlal patwa (1) TNSPC (1) TNSTC (1) Thamirabarani (1) Tindivanam (1) Tondiarpet (1) UAE (1) UK government (1) UN to hawaii (1) UP chief minister yogi (1) UP. (1) US Michelle Obama (1) US citizen (1) US congress (1) Ukraine (1) Union Agriculture Minister Radha Mohan (1) V.M.C sivakumar (1) VOC (1) VRS website (1) VS Acharaya (1) Vannadasan (1) abbas mohamed (1) abdul basit (1) abhay chautala (1) abhishek singhvi (1) abu dhabi (1) aceh (1) actor dhanush (1) actor vishal (1) advani (1) advice (1) affect growth (1) after-143-years-tamil-nadu-will-reel-worst-water-scarcity-redalert (1) agartala (1) agni 5 (1) agni-4 (1) agriculture technology (1) ahmed (1) air force (1) air force station (1) air pollution (1) air traffic (1) airforce commander (1) akarttala (1) aleppo (1) alganganallur (1) almora (1) amalanatan (1) amaran (1) amarinder (1) ambassador (1) american (1) american intelligence agency (1) american tennis player (1) amethi (1) amitabh kant (1) ammonia (1) amravati (1) amrut (1) anandhraj (1) anbumani (1) anciyo (1) andhiyur (1) anemia (1) animal welfare activists (1) anna library (1) announcement (1) anoyta (1) anpuselvan (1) anti-national slogans (1) anti-terrorism (1) antonio (1) antriv kolov (1) anushka (1) anwar (1) anxiety (1) apoorva verma (1) apple (1) archives (1) arest (1) army honor (1) arnab goswami (1) arni (1) arrived (1) artiai (1) artifical intelligence (1) arun kumar (1) arunachal pradesh (1) ashoka chakra (1) ashokamittrian (1) ashwin (1) asian cup (1) asian-pacific (1) assembly budget (1) assembly contituency (1) assembly secretary (1) assistant commissioner (1) associate general secretary (1) astrologer (1) athikadavu avinashi project (1) athur (1) atinam (1) attach (1) attur (1) auckland (1) australia-india (1) australian (1) awarness (1) axix bank (1) ayodhya babri masjid (1) azhagiri (1) azmi (1) babri-3 (1) baby (1) baby death (1) bach (1) back money (1) bacteria (1) bairava (1) balkans (1) bamoko (1) ban Ki moon (1) banaskantha (1) bangaldesh (1) bangalore-chennai (1) bank fraud (1) bank of india post (1) banking service (1) bankloans (1) banned (1) baran (1) barcelona (1) barnala (1) beam of app (1) beating (1) beggar (1) beirut (1) benami (1) benjamin netanyahu (1) bharat mata temple (1) bharat ratna (1) bhavana (1) bhogi (1) bhubaneswar (1) bhutton's son (1) bike (1) black mail (1) blessed baby (1) blocked (1) boat symbol (1) bogey festival (1) bolivia (1) bombing (1) boris johnson (1) borra kolin (1) brain tumor (1) bsnl (1) budget session (1) budget2017 (1) bulls (1) bunyan (1) burj khalifa (1) burn fire (1) burned house (1) buses (1) business (1) cable (1) canada (1) canceled (1) canda (1) cannabis (1) cantipur (1) cartoon (1) cash (1) castro (1) cattur (1) cavery (1) celebration (1) central bank governor (1) central board of direct taxes (1) central buget (1) chain protect (1) chairman pratab reddy (1) change.org (1) channel programme (1) chargesheet (1) chariman cyrus mistry (1) cheenai (1) chemmai (1) chengalpattu (1) chenna (1) chennai court (1) chennai flood (1) chennai marathan (1) chennai.tamil nadu (1) chenni (1) chief minister (1) chief rakil sharif (1) chittoor (1) christchurch (1) church (1) cinema election (1) civil servants (1) class X (1) cleaning (1) cliamte (1) cm of india (1) coast guard HC (1) cocaine (1) cockroach (1) collect (1) collectors (1) college campus (1) commitment room (1) committe (1) congressled national democratic alliance (1) constittutional Law (1) cool drink (1) council secretary jamaluddin (1) crashed (1) criminal action (1) criminal court (1) cristian (1) cristiano ronaldo (1) crying (1) cryogenic engine (1) cuban (1) current shutdown (1) cuttack (1) cyclone thanjavur (1) dangal (1) darshan (1) daughter (1) davidson (1) dawood ibrahim (1) dead body (1) death certificate (1) debit card (1) debit money bank (1) debosit (1) debts (1) defense ministry (1) dehradan (1) delhi high court (1) delhi metro rail (1) delhi police (1) delhi university (1) delta (1) demolition (1) deposit (1) depression (1) deputy cm sukhbir singh badal (1) destroy (1) devakottai (1) devil guinea (1) dhaka (1) diesel (1) digital money transfer (1) dinanath bhargava (1) discipline (1) divorce (1) dmk leader stalin (1) dmk-mla (1) document missing (1) dog (1) domestic technology (1) donation (1) double leaf off (1) dr.besant road (1) dress (1) drinking achohol (1) driver (1) dropped (1) drought relief (1) drugs (1) duraisamy (1) early life (1) earth (1) eastern european (1) editorial (1) education minister sengottaiyan (1) election date (1) election government (1) electronic transaction (1) elepant (1) elepants (1) email (1) employee (1) enforcement (1) engineer (1) engineering entrance examination 2018 (1) ennore port (1) environment pollution (1) etah (1) ettayapuram (1) exam start (1) examination result (1) extreme stress (1) fake note (1) fake political (1) fallen (1) farmer association (1) farmers (1) fasting (1) federal environment minister Anil Madhav Dave (1) federal environment minister Anil kumar Dave (1) federal interior ministry (1) federal revenue secretary (1) federal sakthikanth das (1) female priest (1) festival prize award (1) final balance (1) financial sector (1) fire accident (1) fire fight (1) fireworks factory (1) flight (1) floods (1) florida (1) food menu (1) food ration (1) food waste (1) foodstuff (1) football (1) foreign car (1) foreign secretary (1) foreigners (1) forest fire (1) former federal minister mathan singh (1) former CM (1) former chairman (1) former chief commander (1) former nationl security adviser (1) former president akbar rafasanjani (1) former president pervez musharraf (1) free cycle (1) free gas (1) freedom day (1) freedom struggle (1) french brie (1) friend geeta (1) gangtok (1) gazette (1) general manager (1) george HW Bush (1) geroge (1) ghaziabad (1) global economic growth (1) gokula indira (1) gold seized (1) good luck rajendran (1) google (1) greetings (1) guinea (1) guinness (1) gujranwala (1) gulf (1) gun (1) gurushathira award (1) gurvayar (1) hacked (1) hamid ansari (1) handicapped (1) hanoi (1) hanumantha rao (1) harbor (1) harsimrat Kaur Badal (1) hasmuk atiya (1) head masters (1) headquaters (1) health (1) health mental (1) health tips (1) heart disease (1) heavy damage (1) heavy hot (1) heavy police (1) heavy raid (1) hekarai jekatis (1) held (1) helicopter (1) helping (1) hema malini (1) higher education institution (1) hijacked (1) hillary (1) hilter's phone (1) hindhirai (1) hockey (1) hoilday (1) hollywood meryl streep (1) honolulu (1) hosting (1) hot news (1) housing (1) houston (1) husband (1) hydrocarbon project (1) hyperloop (1) iPad (1) illayaraja (1) illness (1) income (1) increase (1) inda (1) india accide (1) india economy (1) india management insititutes (1) india people (1) india. (1) india.dam opened (1) indian attack (1) indian exports (1) indian external affairs (1) indian fisherman (1) indian judiciary (1) indian navy (1) indian ocean (1) indian panic (1) indian plane (1) indian postal department (1) indian premier league (1) indian rocket (1) indian singer (1) indian space research organisation (1) indian tourism industry (1) indira nooyi (1) indore (1) indus river (1) infection (1) innasipuram (1) inner sheet (1) instruction (1) insulin (1) internal problem (1) international terrorist (1) irrigation expert (1) isi (1) islamists (1) itanagar (1) jallianwala bagh (1) jamaica (1) jared kouchner (1) jarvis (1) jayendra bend (1) jeevan nedujaliyan (1) jerusalem (1) jharkhand (1) jio news (1) job (1) joe biden (1) johannesburg (1) john Kirby (1) john glen (1) juvenile reformatory (1) k.P.Munisamy (1) kaccat island (1) kadular (1) kalahasthi (1) kalappattu (1) kalmadi (1) kalraj mishra (1) kalyani (1) kamal orders (1) kamal writer (1) kampala (1) kanasa (1) kandahar (1) kantheri (1) kapil dev (1) karaikudi (1) karrur (1) karthigai (1) karthik chidambram (1) karuppupanam (1) kasimedu (1) kastli (1) katchativu.tamil nadu (1) kathmandu (1) katju (1) kattaras (1) kedar jadhav (1) kehar jakatis singh (1) kelakatti (1) khadi (1) kholi (1) killing cattle (1) killing cow (1) kim yang-us (1) kindi (1) kiran bedi (1) kiran bhatt (1) kiran kumar (1) kishore pajivala (1) kochi (1) kolkata high court karna (1) korea (1) kottaikadu (1) kottayam (1) kovai (1) kovilpatti (1) koyampet (1) krisha water (1) kudimaramath (1) kumbakonam (1) kurian (1) kuwait city (1) kyrgzstan army (1) labor department report (1) lakshmi rama krishnan (1) laser (1) lashkar terrorist (1) launch (1) lawyer (1) leading news agency (1) leaked (1) legislative elevtion (1) letter (1) libya (1) libyato malta (1) lifetime achievment (1) limca book of adventure (1) link (1) literature award (1) live update (1) local airlines (1) lokesh india (1) london ISIS (1) london doctor (1) london. (1) low (1) m.g.r (1) madhavan patrick (1) madras court (1) madura (1) makara jyothi (1) makaraju sakshi (1) male employees (1) mali (1) mammooty (1) mamtha (1) manipur (1) manov (1) mantri jwala (1) maoist (1) maran brother (1) marathan (1) march 16 (1) march 9 (1) mariappan (1) marina (1) marithripala (1) mark zuckerbergs (1) markandey katju (1) markandeya kadgu (1) marry (1) maternity leave (1) mathura (1) may 15 (1) mayavadhi (1) mayawati (1) media (1) medical (1) medical entrance examination (1) meerut (1) meerut bjp (1) meet (1) mega app (1) mehabooba (1) mekapupa (1) men and women (1) mice (1) miitary (1) military aircraft (1) military helicopter (1) military hospital (1) milk agents (1) milla trading system (1) ministry of health (1) ministryof finance (1) minsiter (1) mirzappur (1) missile launcher (1) missile test (1) mod (1) mohali (1) mohammad ali tirani (1) mohammad kaif (1) mohamud ali durrai (1) mohan bhagwat (1) mokaticu (1) mollywood (1) money lender (1) money transaction (1) money trapped (1) money trapping (1) moon (1) mosal (1) moscow (1) mosow (1) mosquitoes (1) ms dhoni (1) mudumali (1) mukesh Ambani (1) muktcar (1) mumbai cinema (1) municipal corporation (1) munusamy (1) murali vijay.cricket (1) mushroom drugs (1) myanmar (1) mylapre (1) mysore (1) nagaland (1) nagar (1) nagare (1) nagercoil to chennai (1) najipjan (1) nallakannu (1) namanathapuram (1) nanjil sampath (1) napier bridge (1) narcotics (1) natarajan (1) national anthem (1) national conference (1) national crime records bureau (1) national day (1) national family welfare in india (1) national forest (1) national human rights commission (1) national khadi village industries commission (1) national physics laboratory (1) national satellite (1) national symbol (1) national unity and community reconcilation day (1) nationalist congress (1) nationwide driver licence renewal (1) navaneetha krishnan (1) naveen jindal (1) navsari (1) naxal (1) ndia (1) nehru (1) nellai (1) nellai university (1) nepal india (1) neptune statue (1) nesapakkam (1) new app (1) new bill (1) new city (1) new coins (1) new delhi rahul gandhi (1) new release (1) new report (1) new secretary (1) nigera (1) niligiris district (1) nirmala (1) nirmala periyasamy (1) nitin patel (1) nobel prize (1) nomination (1) norway (1) notice (1) nugampakkam (1) obama (1) odisa (1) offical (1) office (1) ola (1) old pipes (1) om puri (1) om puri kalamanar (1) online reservation (1) ooty (1) open cermony (1) opening (1) oscar ward (1) oslo (1) ottawa (1) pacific ocean (1) pakistan based terrorist (1) palakkad (1) palamedu (1) palani (1) pan card (1) panchayat leader (1) pandas (1) pandiyan (1) panjul (1) parkash singh (1) parrikaar (1) passes away (1) patanjali (1) patayun (1) pathankot (1) pavutista medvedev (1) paytm wallet (1) pellat (1) pemetara (1) pen or boat or grapes (1) pension (1) peon freedom fighter (1) perambalur (1) periyasamy (1) peshawar (1) petta (1) photos (1) pilgrims (1) pina niyeto (1) pirankoyis hollande (1) piratyankara (1) piryankiyan (1) pitivarant (1) plane (1) planes collision (1) planned budget (1) poet (1) police shot (1) police station (1) poll (1) ponniah anandarajah (1) portugal (1) pound (1) pouring kerala (1) pradhan (1) prakash javadekar (1) praveen nair (1) pregnant (1) prema kantu (1) prescription (1) prime minister manmohan singh (1) prime minister sheikh hasina (1) princess leah (1) private (1) private banks (1) priyanka chopra (1) priyanka gandhi (1) problem issue (1) producer association (1) promotion (1) property (1) public leave (1) puerto rico (1) pujas (1) punishment (1) punjub india (1) puthin (1) puzzle (1) queensland (1) radha rajan (1) radhakrishnan (1) radhanagar (1) radio (1) rae bareli (1) rahul amethi (1) rahul dravid (1) raid (1) railway minister (1) railway strike (1) raised (1) raj (1) rajaji hall (1) rajapaksa (1) rajasthan (1) rajbhavan (1) rajendra balaji minister (1) rajesh lakkani (1) rajeshkumar (1) rajeshwaram (1) raju (1) ram mohan roy (1) rama sigh (1) ramajayam (1) ramasamy (1) ramathapuram (1) ramki-nirosa (1) ranchi (1) ranjini (1) rao (1) raped teacher (1) ration shops (1) ratnam (1) real estate (1) red fort (1) refused (1) repayment (1) report (1) rescue (1) research project (1) retired judge (1) retired officer (1) retirement (1) rice dealer (1) rice price (1) richard verma (1) rijiju kiran (1) rio de janeiro (1) rishikesh (1) riyadh (1) road accident (1) road destroy (1) rohan bopanna (1) rohtak (1) romania (1) rome (1) rubber stamp (1) russian ambassaor (1) s.balachandran (1) sabha (1) sachin tendulkar (1) sahara chief subrata roy (1) sahara group (1) saipulla (1) sajahanpur (1) sakthi kantha das (1) salt (1) sami (1) samsung (1) sandalwood (1) sandstone (1) sania (1) santiago (1) sao paulo (1) sarabjit's dalbir kaur (1) saravan (1) saroja devi (1) sasikala pushpa (1) satta sabai (1) saudi arabia (1) saudi-led (1) saving account (1) schemes (1) school chennai (1) school student (1) school vechile (1) scientists (1) sea birds (1) search engine (1) second captial (1) secretary general (1) secretary higher education (1) secrete messages (1) serena (1) serena willams (1) servant sandals (1) servay (1) service tax (1) sexual exploitation (1) shanghai (1) shankarsubu (1) sharad pawar (1) sharada sit funds (1) sharapova (1) shashi tharoor (1) sheikh hasina (1) sheila dikshit (1) sheila dixit (1) shekanur (1) shellby (1) sheryas Iyer (1) shimla (1) ship accident (1) ship collision (1) shiva temple (1) shivaji (1) shot (1) siberia (1) sikkim (1) sindh (1) sindhu (1) singapore (1) singer (1) sitaram yechurv rokkamar (1) slary (1) smoke inhalation (1) snake catching (1) social (1) social activist (1) social media (1) solar laboratory (1) somalia (1) son (1) south america (1) south american (1) south monsoon (1) southern railway (1) space (1) special court (1) speed (1) spider venom (1) sridhar (1) srilanka jallikattu (1) srilanka president ciricena (1) srilanka world (1) sriperamputhur (1) sripriya (1) stalin. (1) state cabinet (1) state chief secretary (1) state election (1) state former cm (1) state high court (1) state responsibility (1) statue trafficking (1) stress damage (1) struggler (1) student murder (1) success (1) sugar (1) sugarcane (1) summer (1) sun (1) superbug (1) surgical strike (1) suriya (1) surjeet singh barnala (1) surjit singh (1) sushil chandra (1) suthaharan (1) swine flu (1) swiss bank (1) sydney (1) syed ali shah geelani (1) syed modi (1) symbol (1) tahsildar (1) taj mahal (1) taka (1) tambaram railway station (1) tamil nadu chief electoral officer (1) tamil nadu cinema association (1) tamil nadu film industry (1) tamil nadu.lap-top (1) tamil national alliance (1) tamilnadu congess party (1) tamilnadu terrorism (1) tamils (1) tamilsai (1) tao (1) tata groups (1) tatri (1) tavos (1) teenage girl (1) telengana (1) telugana (1) telugu ganga project (1) temple (1) ten rupee coin (1) terrorist masood azhar council (1) thaipusam (1) thambaram air force (1) thamiraparani (1) thenmalli (1) third place (1) thiruchengode (1) thirukonamalai (1) thirupattur (1) thiruthani (1) thousand (1) thrown bank notes (1) thursday (1) ticket (1) tienpiesci (1) tillerson (1) time list (1) timeline (1) tirnamool congress (1) tirpur (1) tisa (1) tncongress (1) toilets (1) tokoyo (1) toll (1) top richest person (1) toronto (1) town hall (1) traffic jam (1) traffic road tamil nadu (1) train (1) train blast (1) train bomb (1) train fares (1) train journey (1) train service (1) travancore (1) treatment india (1) trichy siva (1) tripura (1) trisha (1) truck crashed (1) trump nephew (1) tta (1) ttr (1) ttv dinakaran (1) tughlaq (1) turkey ambassador (1) turn bull (1) tweeted (1) twenty20 (1) two indians (1) tyagi (1) udham singh (1) uma bharti (1) union budget (1) union environment (1) union government (1) union law ministry (1) union minister finance arun jalitey (1) union minister krishna (1) union minister nirmala sitharaman (1) union minister shankar prasad (1) union ministerof state (1) union secretary anil paijal (1) united nations survey (1) united natons security council (1) united states (1) unmarried women (1) unnikrishnan (1) upsc (1) us force (1) us intelligence (1) usa (1) uthayakumar (1) vaadivasal (1) vaali (1) vadapalani junction (1) vairamuthu (1) vajpayee (1) vapse (1) varta (1) vasan (1) vasistha jori (1) vechile parking (1) veeramani (1) veeranam (1) vegetable (1) vehicle registration (1) vellaiyan (1) vellakovil samynadhan (1) venus williams (1) vice bills (1) vice president (1) vice president ansari (1) vice president mike pence (1) victims (1) vijay rupani CM (1) vijay tv (1) vijayadarani (1) vijayakanth (1) vijaymallya (1) vikram (1) vilas paswan (1) vipin rawat (1) virendar (1) virginia (1) virus (1) vishal (1) viskhapatnam (1) vivek (1) viveks (1) viyalentrian (1) vote (1) voting board (1) vrnkaiah naidu (1) warning (1) weak (1) website (1) wind power (1) wine shop closed (1) wipro (1) wishes (1) wolrd (1) women (1) women india (1) women nt allowed (1) wonders (1) work from home (1) workers (1) world bank (1) world bank officer (1) world cinema (1) world fisherman (1) world health organization (1) world most population (1) world record (1) world war (1) world women's day (1) world world news (1) writer (1) yahoo (1) yashoda ben (1) yoga (1) youth (1) youth congress (1) yuva puraskaar saravanakumar lakshmi (1) zakir naik (1) கபாலி (1)

Blog Archive