விழுப்புரம் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக இருந்த செஞ்சி கே.எஸ்.மஸ்தான் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக டாக்டர் சேகர் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாகத் தலைமை அறிவித்துள்ளது. நிர்வாக ரீதியில் விழுப்புரம் மாவட்டத்தையே ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்திருக்கிறது தி.மு.க தலைமை.
இதன் பின்னணியை விசாரித்தோம். “விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் புகழேந்தி உயிரிழந்ததை அடுத்து, அவரது மாவட்டச் செயலாளர் பதவியும் விக்கிரவாண்டி சட்டமன்றத் தலைவர் பதவியும் காலியாக இருந்தன. இந்த இடத்தைப் பிடிக்க பலரும் போட்டியிட்ட நிலையில் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை மாவட்டப் பொறுப்பாளராக அறிவித்திருக்கிறது தலைமை. பொன்முடியும் தன் மகனுக்காக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்ட நிலையில் அவருக்கு மாவட்டப் பொறுப்பைக் கொடுத்திருக்கிறது தலைமை. செஞ்சி மஸ்தான்
மற்றொரு நிர்வாக மாவட்டமான விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் செயலாளராக இருந்த அமைச்சர் மஸ்தானை நீக்கிவிட்டு விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவர் டாக்டர் ப.சேகரை அந்த மாவட்டத்தின் பொறுப்பாளராக நியமித்திருக்கிறது. தேர்தலில் சரியாக வேலை செய்யவில்லையென்றால் அவர்களின் பதவி தப்பாது என முதல்வர் விடுத்த எச்சரிக்கையின் முதற்கட்ட நடவடிக்கை தான் இது என்கிறார்கள் கட்சி விவகாரம் அறிந்தவர்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டணி சார்பில் போட்டியிட்ட ரவிக்குமார் வெற்றிபெற்றுவிட்டார் என்றாலும், அமைச்சர் மஸ்தான் பொறுப்பிலிருந்த விக்கிரவாண்டி தொகுதியில் வி.சி.க மற்றும் அ.தி.மு.க வேட்பாளர்கள் இடையே 6,823 வாக்குகள்தான் வித்தியாசம். அதுமட்டுமல்ல, தேர்தலில் தொடர்ந்து சரியாக வேலை செய்யவில்லை எனவும் மஸ்தான்மீது புகார்கள் அடுக்கப்பட்டன. இதோடு பொன்முடியும் தனக்கும் மஸ்தானுக்கும் இருந்த முரண் பகையை இதன்மூலம் தீர்த்துக்கொண்டார் என்கிறார்கள்.
வருமான வரித்துறை வழக்கில் பதவியை இழந்து மீண்டும் பதவியைப் பெற்ற `சிம்பத்தி’ பொன்முடிக்கு வெகுவாக இந்த விவகாரத்தில் உதவியிருப்பதாகச் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மாவட்டச் செயலாளர் பதவியை மட்டுமே பறித்திருக்கிறது தலைமை. அமைச்சராக மஸ்தான் தொடர்வார் எனவும் சீனியர் அமைச்சர்கள் சொல்கிறார்கள். பொன்முடி, ஸ்டாலின்
கட்சி விவகாரம் அறிந்தவர்கள், “பெரிய காரணம் எதுவும் இல்லை. விழுப்புரம் வன்னியர், உடையார் சமூகம் அதிகமுள்ள மாவட்டம். அங்கே ஒரு வன்னியர் மற்றொரு மாவட்டத்தை வன்னியர் அல்லாதவருக்குக் கொடுக்க வேண்டும் என்பதுதான் தலைமையின் எண்ணம். எனவே, தெற்கு மாவட்டத்தை உடையார் சமூகத்தைச் சேர்ந்த கௌதம சிகாமணிக்குக் கொடுத்த தலைமை மற்றொரு மாவட்டமான வடக்கை, வன்னியரான டாக்டர் சேகரிடம் ஒப்படைத்திருக்கிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலையும் மனதில் வைத்தே இந்த மாற்றத்தைத் தலைமை செய்திருக்கிறது.” என்கிறார்கள்.
“அறிவிப்பு வெளியான சமயம், ஆரணி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தரணி வேந்தனுடன் உதயநிதியின் முகாம் அலுவலகமான குறிஞ்சியில் இருந்திருக்கிறார் அமைச்சர் மஸ்தான். காலை 11 மணி வரை அங்கே காத்திருந்திருந்தவருக்கு எங்கிருந்தோ ஒரு போன்கால் வர பதற்றமான அமைச்சர் மஸ்தான் உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டார். செஞ்சி மஸ்தான்
கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களோடு உதயநிதியைப் பார்க்க வந்த அமைச்சர் மஸ்தான் ஏன் எனத் திடீரென கிளம்பிச்சென்றார் என்ற குழப்பத்தில் இருந்தவர்களுக்கு அறிவிப்பு வெளியான பிறகுதான் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதே தெரியும்” என்கிறார்கள் மஸ்தானுக்கு நெருக்கமானவர்கள்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T8736c