.செ.ன்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய் குமார், அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் சிறிவல்ல் பிரசாத், முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.சத்திய மூர்த்தி பவன்
பிறகு, "மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றி பெற கூட்டணிக்கு தலைமையேற்று கடுமையாக உழைத்து பரப்புரை மேற்கொண்ட தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனது எண்ணிக்கையை இருமடங்காக கூட்டி இன்றைக்கு 102 இடங்களை பெற்றுள்ளது. இத்தகைய மகத்தான வெற்றி பெற்றதற்காக தீவிரமான பரப்புரை மேற்கொண்ட அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அன்னை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
நடைபெற்ற மக்களவை தேர்தல் ஜனநாயகமா ? சர்வாதிகாரமா ? என்ற அடிப்படையில் நடந்தது. இறுதியாக ஜனநாயகம் வெற்றி பெற்றது. சர்வாதிகாரம் வீழ்த்தப்பட்டது. தற்போது அமைந்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே தவிர, எதேச்சதிகார மோடி ஆட்சி அல்ல. இதன்மூலம் நரேந்திர மோடியின் சர்வாதிகார பாசிச அரசியலுக்கு மக்கள் தேர்தல் தீர்ப்பின் மூலம் முடிவு கட்டியிருக்கிறார்கள். இத்தகைய தீர்ப்பை வழங்கிய இந்திய வாக்காளப் பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். நீட் தேர்வு குறித்து மாநில அரசுகளே முடிவு செய்கிற உரிமையை மத்திய அரசு வழங்க வேண்டும்.
செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியை அடிமட்டத்திலிருந்து வலிமைப்படுத்துவதற்கு எத்தகைய வியூகத்தை வகுக்கிறாரோ, அதனை அனைவரும் ஏற்றுக்கொண்டு அவரது முயற்சிகள் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். கேரளா புதிய அணை கட்டுகிற முயற்சியை தடுக்கிற வகையில், தமிழக அரசு நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ராகுல் காந்தியை நாடாளுமன்ற மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்" என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. “அ.தி.மு.க-வினர் நிலையான புத்தி இல்லாதவர்கள்!” - தாக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
இதையடுத்து மைக் பிடித்த செல்வப்பெருந்தகை, "நாம் பிறரை சார்ந்து இருக்கப் போகிறோமா.. அல்லது சுயமாக இருக்கப் போகிறோமா.. எத்தனை காலம் பிறரை சார்ந்திருக்கப் போகிறோம்.. காங்கிரஸ் பெரியக்கத்துக்கு என்று வரலாறு இருக்கிறது. நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேர் வெற்றிபெற்று இருக்கிறார்கள். இரண்டு பேர் தாமாக முன்வந்து காங்கிரஸ் பக்கம் இணைந்துள்ளார்கள். ஆகவே நம்முடைய கணக்கு 101. இது இன்னும் ஏறப்போகிறது. என்.டி.ஏ கூட்டணியில் அமைச்சர்களாக இருப்பவர்களும், நம்முடைய காங்கிரஸ் பேரியக்கத்துக்கு வந்தால் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. எனவே தோழமை என்பது வேறு. தோழமையுடன் இருப்பதில் நமக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை. ஆனால் எவ்வளவு காலம் சார்ந்து இருக்கப் போகிறோம் என்கிற கேள்வி எழுகிறது. அதற்கு விடை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், "இன்று 40 இடங்களில் வெற்றிபெற்று இருக்கிறோம். அதற்கு தி.மு.க-வும், ஸ்டாலினும்தான் காரணம். நாம் தனித்து நின்றபோது சிவகங்கை, கன்னியாகுமரியில் மட்டும் ஒரு லட்சம் வாக்குகளை பெற்று தோற்றோம். பிற இடங்களில் டெபாசிட்கூட பெற முடியவில்லை. யாருக்கு ஆசை இல்லை. ஆனால் நமது எதிரியை முதலில் வீழ்த்த வேண்டும். அதற்கான பாதைகளை நாம் தேர்ந்தெடுத்து போக வேண்டும். நான்தான் வெல்வேன்.. நான்தான் தனியாக நிற்பேன்.. நான்தான் தோற்பேன் என்றால் அது உங்கள் இஷ்டம். தேர்தலில் நின்ற அனைவரும் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றால் அதற்கு தி.மு.க-வும், ஸ்டாலினும்தான் காரணம். ஆசை இருக்கலாம். ஆனால் அது பேராசையாக மாறி கடைசியில் ஒன்றும் இல்லாமல் போய்விடக் கூடாது" என்றார். இவ்வாறு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் முன்னாள், இந்நாள் தலைவர்களுக்கு இடையேயான தொடர் மோதலால் அதகளமாகியிருக்கிறது, கதர் வட்டாரம்.
இதன் பின்னணி குறித்து நம்மிடம் பேசிய சத்திய மூர்த்தி பவன் சீனியர்கள், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றிபெற்றார். அந்தநேரத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி அவருக்கு அளிக்கப்படுமென எதிர்பார்ப்பு எழுந்தது. இதற்கு இளங்கோவன்தான் சீனியர். அவர் ஆக்டிவ் பாலிடிக்ஸ் செய்த காலத்தில் சட்டசபைக்குள் வந்தாலே என்ன பேசப்போகிறார் என்கிற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். ஆனால் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் ஆசியும், தி.மு.க-வின் சிபாரிசும் இருந்ததால் அந்த பதவியை செல்வப்பெருந்தகை கைப்பற்றினார். தற்போது மாநில தலைவராகவும் ஆகிவிட்டார். மேலும் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவி ராஜேஷ்குமாருக்கு சென்றது.
இந்தச் சூழலில்தான், `தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்' என செல்வப்பெருந்தகை பேசி வருகிறார். இதற்கு, `காமராஜர் ஆட்சியை ஸ்டாலின் தருகிறார்' என இளங்கோவன் பதிலடி கொடுக்கிறார். இதன் மூலம் எந்த தி.மு.க செல்வாக்கை வைத்து பதவிகளை பிடித்தாரோ, அவர்களுக்கு எதிராக செல்வப்பெருந்தகையை திருப்பிவிட முயற்சிக்கிறார் இளங்கோவன். இதன் மூலம் தனது அரசியல் ஆட்டத்தை தொடங்கியிருக்கிறார். வரும் காலங்களில் இந்த மோதல் அடுத்த கட்டத்தை எட்டும். அப்போது இன்னும் என்னவெல்லாம் நடக்கபோகிறதோ தெரியவில்லை?" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppb“அ.தி.மு.க-வினர் நிலையான புத்தி இல்லாதவர்கள்!” - தாக்கும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
http://dlvr.it/T87TNr