Tuesday 9 July 2024
சுட்டிக்காட்டிய ஜூ.வி; பள்ளி மாணவர்களின் பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்ட சேலம் மாவட்ட ஆட்சியர்!
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே வடுகப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு பொன்னி அம்மாள் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாய மற்றும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகள் சுமார் 250 பேர் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இ.புதுப்பாளையம், துத்திப்பாளையம், நாயக்கன் வலவு, மயில்புறாகாடு, தாதவராயன்குட்டை, காஞ்சாம்புதூர், மாவெளிபாளையம், ஒழுகுபாறை, சங்ககிரி கெமிக்கல் பிரிவு போன்ற பகுதிகளிலிருந்து பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களுக்கு நேரத்திற்குப் பேருந்து இல்லாமலும், அதேபோல கடந்த 2 ஆண்டுகளாக பஸ் பாஸ் வழங்காமலும் இருந்தது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு ஜூ.வி தகவலைக் கொண்டு சென்றது.பிருந்தா தேவி
அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உடனடியாக சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பேசி, பள்ளிக்குழந்தைகளுக்கு உடனடியாக போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்க உத்தரவிட்டார்.
அது தொடர்பாக, விகடன் இணைய தளத்தில் ‘சேலம்: 2 ஆண்டுகளாகச் சிரமப்பட்ட அரசுப்பள்ளி மாணவர்கள்; பேருந்து வசதி ஏற்படுத்திக்கொடுத்த மாவட்ட ஆட்சியர்’ என்கிற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய நேரத்திற்குப் பேருந்து அனுப்புவது குறித்து ஆலோசித்து, நேற்று காலை துத்துப்பாளையம், நாயக்கன் வலவு, இ.புதுப்பாளையம், மயில்புறாகாடு பகுதிக்குப் பேருந்து போக்குவரத்தைத் தொடங்கி வைத்தனர். அதன்மூலம் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்தனர்.சேலம்: 2 ஆண்டுகளாகச் சிரமப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள்; பேருந்து வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆட்சியர்!
http://dlvr.it/T9MDr0

Monday 8 July 2024
NEET: `வினாத்தாள் கசிந்திருக்கிறது'- NTA, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றத்தின் கேள்விகளும், உத்தரவும்
மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு நடத்தப்பட்ட நீட் (NEET) தேர்வு முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானது. 23 லட்சம் பேர் எழுதிய இந்த நீட் தேர்வில், இதுவரையிலும் இல்லாத அளவுக்கு 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். நிறைய பேர் 719, 718, 717 மதிப்பெண்களைப் பெற்றிருந்தனர். இதனால், வினாத்தாள் கசிவு நடந்திருப்பதாக நாடு முழுவதும் குற்றச்சாட்டுகள் எழ, அவ்வாறு எதுவும் நிகழவில்லை என்றும், தேர்வு நடத்திய மையங்கள் நேரம் தவறியமைக்காக 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதாக நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA) கூறியது.NEET
இருப்பினும், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் குவிந்தன. அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்துமாறும், இந்த மறுதேர்வில் பங்கேற்காதவர்களுக்குக் கருணை மதிப்பெண் போக அவர்கள் பெற்ற மதிப்பெண்ணை இறுதி மதிப்பெண்ணாக வழங்குமாறும் NTA-க்கு உத்தரவிட்டது.
அதன்படி, நடத்தப்பட்ட மறுதேர்வில் பாதிக்கும் மேற்பட்டோர் தேர்வெழுத வரவில்லை. இதனால், இந்தாண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்துமாறு உச்ச நீதிமன்றத்தில் 33 மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மானுஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.நீட் தேர்வு
அப்போது, மறுதேர்வு நடத்துவதற்கான கோரிக்கையை எதிர்த்த தேசிய தேர்வு முகமை, `இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக ஆதாரம் எதுவும் இல்லாத நிலையில், மறுதேர்வு நடத்தக் கோருவது சரியல்ல. அவ்வாறு செய்வது, தேர்வெழுதிய லட்சக்கணக்கான மாணவர்களைப் பாதிக்கும்' என்று தெரிவித்தது. இன்னொருபக்கம், மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களின் தரப்பு வழக்கறிஞர், தேர்வுக்கு ஒருநாள் முன்பு வினாத்தாளும், அதற்கான விடைகளும் டெலிகிராம் குழுக்களில் பரப்பப்பட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக பாட்னாவில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருப்பதாகவும் வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், ``வினாத்தாள் கசிவு நடந்திருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தேர்வின் புனிதத்தன்மை மீறப்பட்டிருக்கிறது என்பது அப்பாற்பட்டது. ஆனால், வினாத்தாள் கசிவு எந்த அளவுக்கு பரவலாக நடந்திருக்கிறது என்பதே இங்கு கேள்வி. வாட்ஸ்அப், டெலிகிராமில் வினாத்தாள் கசிந்திருந்தால் அது காட்டுத்தீ போல பரவியிருக்கும். 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிடுவது கடினமான பணி. அதற்குமுன், வினாத்தாள் கசிவின் தன்மை என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.உச்ச நீதிமன்றம்
வினாத்தாள் கசிவு முழு தேர்வு செயல்முறையையும் பாதித்திருந்தால், அதனால் பலனடைந்தவர்களைக் கண்டறிய முடியாது. அப்போது, மறுதேர்வு நடத்துவது அவசியமாகும். அதேசமயம், வினாத்தாள் கசிவால் பலனடைந்தவர்களைக் கண்டறியமுடியுமென்றால், அனைவருக்கும் மறுதேர்வு நடத்துவது பொருத்தமாக இருக்காது. எனவே, வினாத்தாள் கசிவு எப்போது நடந்தது, எவ்வகையில் அது பரவியது, கசிவுக்கும் தேர்வுக்கும் இடையிலான கால அளவு என்ன என்பது குறித்த முழு தகவலை தேசிய தேர்வு முகமை சமர்ப்பிக்க வேண்டும்.உயர் நீதிமன்றம் உத்தரவு
அதோடு, வினாத்தாள் எப்போது இறுதி செய்யப்படுகிறது, அது எப்போது அச்சுக்கு அனுப்பப்படுகிறது, எப்போது அச்சிடப்படுகிறது, அவை எப்போது தேர்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பதைத் தேதி வாரியாக சமர்ப்பிக்க வேண்டும். 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவில் இருக்கிறது. இவர்களில் எத்தனை பேர் கருணை மதிப்பெண்களால் பயனடைந்துள்ளனர்... இவை தொடர்பான பிரமாண பத்திரங்களை, ஜூலை 10-ம் தேதி மாலை ஐந்து மணிக்குள் தேசிய தேர்வு முகமை, மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும். அதேபோல், வினாத்தாள் கசிவு எஃப்.ஐ.ஆர் தொடர்பான விசாரணைகளின் அறிக்கையை சிபிஐ ஜூலை 10-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.சத்தீஸ்கர்: `காய்கறிகள் வரவில்லை... மஞ்சப்பொடி சாதம்தான் சத்துணவு!' - அரசுப் பள்ளியில் அதிர்ச்சி
http://dlvr.it/T9KVfg

`நாங்க முன்னாடி போறோம், நீங்க பின்னாடி வாங்க' - அதிமுக-வில் இணைந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்!
தஞ்சாவூரைச் சேர்ந்த அறிவுடைநம்பி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டவர். ஆரம்பத்திலிருந்தே அ.தி.மு.க-வில் இருந்த அறிவுடைநம்பி, வைத்திலிங்கத்தின் நம்பிக்கையைப் பெற்று அவரது தீவிர ஆதவாளராக மாறினார். கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ”ரதிமீனா” சேகர். இவர் மனைவி ரத்னா சேகர் கும்பகோணம் நகராட்சியின் முன்னாள் நகர்மன்றத் தலைவர். ரதிமீனா சேகரும் வைத்திலிங்கத்தின் ஆதரவாளராக வலம் வந்தவர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என தனி அணியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் அணியில் வைத்திலிங்கம் தலைமையில் அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் ஆகியோர் இருந்தனர். அதிமுக-வில் இணைந்த அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர்
கடந்த சில மாதங்களாகவே வைத்திலிங்கத்தின் செயல்பாடுகளால் இருவரும் அதிருப்தியில் இருந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோருடன் சேலத்தில் இன்று எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தனர். இதற்கான ஏற்பாட்டை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களான ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் இருவரும் செய்திருந்தனர். தன் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ் அணியிலிருந்து விலகி, அ.தி.மு.க-வில் இணைந்தது வைத்திலிங்கம் தரப்பை அப்செட் ஆக்கியுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர், ரத்னா சேகர், பொன்.த.மனோகரன், பசுபதிகோயில் முத்து உள்ளிட்ட தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்கள் சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் செல்வதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என வைத்திலிங்கம் மெனக்கெட்டார். அவர்களிடத்தில் `யாரும் இப்போதைக்கு போகாதீங்க, இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... நல்ல சேதி வரும்' என்றுள்ளார்.அதிமுக-வில் இணைந்த வைத்திலிங்கம் ஆதரவாளர்கள்
ஆனால் அவர்கள் வைத்திலிங்கம் பேச்சை கேட்கவில்லை. அப்போதும் விடாமல் பேசிய வைத்திலிங்கம், `ஏன் அவசர படுகிறீர்கள் எல்லோரும் ஒன்றாக போய் சேர்ந்தால், பலனடையலாம்' என்றும் சிலரிடத்தில் பேசியுள்ளார். அதற்கு, `நாங்க தி.மு.க போன்ற மாற்றுக்கட்சிக்கு செல்லவில்லை, தாய் கழகத்திற்குத்தான் செல்கிறோம், நாங்க முன்னாடி போறோம், நீங்க பின்னாடி வாங்க'ணு சொன்னதாக பரவலாக பேசப்பட்டது. என்ன சொல்லியும் வைத்திலிங்கத்தால் இணைப்பை தடுக்க முடியவில்லை. இதைத் தொடர்ந்து அறிவுடைநம்பியின் ஆதரவாளரான தாஸிடம், `நான் உன்னை பகுதி கழக செயலாளராக ஆக்குகிறேன், நீ போயிடாதே'னு வைத்திலிங்கம் பேசியதாக தகவல் பரவியது.
இதையறிந்த அறிவுடைநம்பி, `எத்தனை வருடங்கள் வைத்திலிங்கம் கூட நான் உண்மையாக இருந்தேன், ஆனால் எனக்கே துரோகம் செய்கிறாரே'னு வருத்தப்பட்டாராம். இந்நிலையில் 4 மற்றும் 5-ம் தேதிகளில் இணைய இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், சில காரணங்களால் அது தள்ளிப்போனது. பின்னர், இன்று சேலத்தில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். ஆர்.காமராஜ், ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் இதற்கான ஏற்பாட்டை செய்தனர். வைத்திலிங்கத்திடம் இருந்த மிக முக்கிய நிர்வாகிகளான அறிவுடைநம்பி, ரதிமீனா சேகர் அ.தி.மு.க-வில் இணைந்திருப்பது, வைத்திலிங்கம் தரப்பை சோர்வடைய செய்திருக்கிறது" என்று தெரிவித்தனர்.
வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் தரப்பில் பேசினோம், ``அறிவுடைநம்பி உள்ளிட்ட யாரையும் வைத்திலிங்கம் தடுக்கவில்லை. இரண்டு மாதங்களில் கட்சி சேரப்போகிறது அதற்குள் சென்று என்ன பலனடைய போகிறார்கள்... போகட்டும் என விட்டுவிட்டார். வைத்திலிங்கத்தால் ஆளானவர்கள், அவரால் பயனடந்தவர்கள் விசுவாசம் இல்லாமல் செல்கின்றனர். இதனால் அவர்களுக்குத்தான் பின்னடைவே தவிர வைத்திலிங்கத்துக்கு ஒரு போதும் இல்லை" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbசென்னை காவல் ஆணையர் மாற்றம்! - ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியா?
http://dlvr.it/T9K3h9

பட்டா, சிட்டா பதிவிறக்கம் ரொம்ப ஈஸி... நிலம் தொடர்பான சேவைகளை பெற உதவும் அரசின் இணையதளங்கள்!
நிலம் தொடர்பான ஆவணங்களான பட்டா, சிட்டா உள்ளிட்டவற்றை நீங்கள் எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதற்கான பிரத்யேக இணையதள சேவைகளை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.
கணினி மயமாக்கப்பட்ட அரசு சேவைகள்
முன்பெல்லாம் அரசு சேவைகளை அணுகுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது. அரசு அலுவலகம் செல்ல வேண்டும்; விண்ணப்பம் எழுதித்தர வேண்டும். பின்னர் அவர்கள் வரச்சொல்லும் மற்றொரு நாளில் போய்ப் பார்க்க வேண்டும். அப்போதும் வேலை எளிதாக நடந்துவிடாது . ஒரு வேலைக்காக, பல நாட்கள் விடுப்பு எடுத்து அலைந்து திரிந்தாலும் வேலை ஆகாது. சில நேரங்களில் பணத்தை நீட்டினால்தான் நமக்கான கோப்பு நகரும் என்ற நிலையெல்லாம் முன்பு இருந்தது.
ஆனால், முறைகேடுகள் மற்றும் காலதாமதம் போன்றவற்றை போக்கும் வகையில், கால வளர்ச்சிக்கேற்ப அரசின் சேவைகளும் கணினி மயமாக்கப்பட்டன. இதனால், குடும்ப அட்டை மாற்றம் போன்ற அத்தியாவசிய சேவைகளை சில நிமிடங்களில் விண்ணப்பித்து, அடுத்த ஓரிரு தினங்களில் பணி முடிந்துவிடுகிறது. இணையதளம் மூலம் இனி பட்டா மாறுதல்2.75 லட்சம் ஹெக்டேரில் இயற்கை விவசாயம்... வெற்றிநடை போடும் குஜராத் விவசாயிகள்..!
பட்டா, சிட்டா பெறுவது எளிது
இந்த நிலையில், நிலம் தொடர்பான மிக முக்கிய ஆவணங்களான பட்டா, சிட்டாக்களை எங்கிருந்தும், எப்போது வேண்டுமானாலும் பதிவிறக்கும் செய்யும் வசதியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குனர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பல்வேறு வகையான நில ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு இணையவழியில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நில உரிமைதாரர்கள் பயனடையும் வகையில் பல்வேறு இணையவழிச் சேவைகளை நிலஅளவை மற்றும் நிலவரித் திட்டத்துறை வழங்கி வருகிறது.
பட்டா மாற்றம் செய்ய வேண்டுமா?
அதன்படி, கிராமப்புறம், நகர்ப்புறம் மற்றும் நத்தம் ஆகிய பகுதிகளுக்கான பட்டா மாற்றம் மேற்கொள்ள
https://tamilnilam.tn.gov.in/citizen/">
https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில், அதில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் விண்ணப்பம் செய்து பலனடையலாம்.
அதேபோல், நில உரிமைதாரர்கள் தங்களது புல எல்லைகளை அளந்து பார்க்க வேண்டும் என்றால் அதற்கும் விண்ணப்பிக்கலாம். புல எல்லைகளை அளந்து காட்டக்கோருவதற்கு
https://tamilnilam.tn.gov.in/citizen/">
https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
கிராமப்புற மற்றும் நத்தம் நில ஆவணங்களின் பட்டா / சிட்டா, 'அ' பதிவேடு மற்றும் புலப்படம் ஆகியவற்றையும், நகர்ப்புற நிலஅளவைப் பதிவேட்டின் நகல், நகர நிலஅளவை வரைபடம் மற்றும் புல எல்லை வரைபடம் / அறிக்கை ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ள,
https://eservices.tn.gov.in என்ற இணையத்தை பயன்படுத்தி, கொள்ளலாம். இதன் மூலம் பட்டா மாற்றத்திற்கு அளித்த விண்ணப்பத்தின் நிலையை பயனாளி அறிந்து கொள்ளலாம்.survey website
பொதுச்சேவை மையங்களையும் அணுகலாம்!
கிராம வரைபடங்கள் மற்றும் பழைய நிலஅளவை எண்களுக்கான புதிய நில அளவை எண்களின் ஒப்புமை விளக்கப்பட்டியல் போன்றவற்றை
https://tnlandsurvey.tn.gov.in எனும் இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதில், முதலிரண்டு இணையவழிச் சேவைகளை அருகாமையில் இருக்கும் பொதுச்சேவை மையங்கள் மூலமாகவும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏக்கருக்கு ரூ.56,000 மானியம்... சொட்டுநீர் பாசனம் அமைப்பது எப்படி? யாரை அணுக வேண்டும்?
http://dlvr.it/T9JgrP

சென்னை காவல் ஆணையர் மாற்றம்! - ஆம்ஸ்ட்ராங் படுகொலை எதிரொலியா?
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், ஜூலை 5-ம் தேதி இரவு பெரம்பூரில் அவரது வீட்டருகே மர்ம நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தவே ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால், பொதுமக்கள் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என எதிர்க்கட்சிகள், தி.மு.க அரசைச் சாடின.ஆம்ஸ்ட்ராங் படுகொலை
அதோடு, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவதாகவும், காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இன்னொருபக்கம், இந்தச் சம்பவத்தில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கும் 8 பேர் உண்மையான குற்றவாளிகள் அல்ல என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, சென்னை மாநகர காவல் ஆணையராக செயல்பட்டுவந்த சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.மாநில உள்துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு.
உத்தரவின்படி, காவலர் பயிற்சி கல்லூரியின் டி.ஜி.பி-யாக சந்தீப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு, தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் இயக்குநராக கூடுதல் பொறுப்பும் சந்தீப் ராய் ரத்தோருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.சந்தீப் ராய் ரத்தோர் - அருண்
அதேசமயம், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக செயல்பட்டுவந்த அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும், சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி-யாக டேவிட்சன் ஆசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbஜெயக்குமார் முதல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வரை - காவல்துறையின் தோல்விதான் காரணமா?!
http://dlvr.it/T9JgbR