Thursday 11 July 2024
Wednesday 10 July 2024
Nitish: `காலில்கூட விழுகிறேன்'- சாலை பணி தொடர்பாக தனியார் அதிகாரியிடம் நிதிஷ்; விமர்சிக்கும் தேஜஸ்வி
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி உருவாக அடித்தளமிட்டு, கூட்டணி உருவான பிறகு அதிலிருந்து பாதியிலேயே வெளியேறி, பின்னர் செத்தாலும் கூட்டணி கிடையாது என்று கூறிய பா.ஜ.க-விடமே மீண்டும் கூட்டணியமைத்து, இறுதியில் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மை இழந்தபோதும் கூட்டணியாட்சி அமைக்க உதவியதன் மூலம் ஊடக வெளிச்சம் பெற்றார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். அதைத் தொடர்ந்து, பீகாரில் மூன்று வாரங்களில் 13 பாலங்கள் இடிந்துவிழுந்ததன் காரணமாக கடந்த சில நாள்களாக மீண்டும் கவனம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில், சாலைத் திட்டத்தைக் குறிப்பிட்ட நேரத்தில் முடிக்குமாறு, தனியார் நிறுவன அதிகாரியிடம் காலில்கூட விழுகிறேன் என கோபமாக நிதிஷ் குமார் கூறியிருப்பது, எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றிருக்கிறது.நிதிஷ் குமார்
முன்னதாக, ஜே.பி கங்கா பாதை சாலைத் திட்டப்பணி தொடர்பாக பாட்னாவில் இன்று நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா மற்றும் உள்ளூர் எம்.பி ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது, ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் நிதிஷ் குமாரிடம், ஜே.பி கங்கா பாதையை பாட்னாவிலுள்ள கங்கன் காட் வரை விரிவுபடுத்துவதை விரைவுபடுத்துமாறு கூறினார்.
அப்போது, ``உங்கள் காலில்கூட விழுகிறேன், தயவுசெய்து குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடியுங்கள்" என நிதிஷ் குமார் தனியார் நிறுவன அதிகாரியிடம் கோபமாகக் கூறி அவரை நோக்கிச் சென்றார். இதனால் பதறிய அந்த அதிகாரி, `ஐயா, தயவுசெய்து இப்படியெல்லாம் செய்யாதீர்கள்' என்றார்.
Watch: Bihar CM Nitish Kumar urged an IAS officer to expedite the extension of JP Ganga Path up to Kangan Ghat in Patna, says "I touch your feet; please complete the work on time" pic.twitter.com/bAkFU6aAOK— IANS (@ians_india) July 10, 2024
நிதிஷ் குமார் கடந்த நாள்களுக்கு முன்பும் இதேபோல, நில பிரச்னைகளில் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு விரைவாகத் தீர்க்க வேண்டும் என ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் கூறி அவரின் பாதங்களைத் தொட முயன்றார்.
இவ்வாறிருக்க நிதிஷ் குமாரின் இத்தகைய செயல்களைத் தொடர்ந்து மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், ``முதல்வர் பலமற்றவராக இருக்கிறார். ஏனென்றால், அரசு அதிகாரியாக இருந்தாலும், தனியார் நிறுவன அதிகாரியாக இருந்தாலும் அனைவரின் காலிலும் விழ எப்போதும் தயாராக இருக்கிறார்'' என்று விமர்சித்திருக்கிறார்.Bihar: `எந்தப் பாலம் எப்போது விழும் எனத் தெரியவில்லை' - JD(U) கூட்டணியில் இருக்கும் பாஜக விமர்சனம்!
http://dlvr.it/T9QS5Q

`தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை' - டி.டி.வி.தினகரன் சாடல்!
கும்பகோணத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ``தி.மு.க ஆட்சியில் தமிழகத்தில் ஸ்டாலின் குடும்பத்தை தவிர மற்ற யாருக்கும் பாதுகாப்பு இல்லை. ஒரு நாளைக்கு மூன்று, நான்கு கொலைகள் நடக்கிறது. அதில் கைதாகிறவர்கள் எல்லாம் இருபது வயதிற்குட்பட்டவர்களாக இருக்கிறார்கள். வேலை இல்லாததால் தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள கஞ்சா கலாசாரம், போதைப்பொருள்கள் கலாசாரத்துக்கு இளைஞர்கள் அடிமையாவதுடன் ரூ.5,000, 10,000 கொடுத்தால் கொலை செய்கின்ற கூலிப்படைகளாக நிறைய இளைஞர்கள் மாறுகின்றனர். திருமண நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன்
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். சென்னை மாநகர கமிஷனரை மாற்றியதால் மாற்றம் வரப்போவதில்லை. முதல்வர் இரும்புகரம் கொண்டு அடக்குவோம் என்கிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் இல்லாத நிலையில் உள்ளது. தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், அப்போதுதான் சட்டம் ஒழுங்கு சரியாகும். தமிழகம் அமைதி பூங்காவாக மாறும். முன்னாள் அமைச்சர்கள் அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கிறார்களா என்று தெரியவில்லை... எல்லாருமே ஜெயலலிதாவின் தொண்டர்கள் தான். அவர்கள் தான் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என விரும்புகின்றனர்.
காவிரியில் தண்ணீர் வராமல் விவசாயிகள் கஷ்டப்படுகின்றனர். முதல்வரும் நம்ம மாவட்டம் என்று கூறுகிறார். தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளது, அவர்களிடம் பேசி தண்ணீர் பெற்று தரவில்லை, மேகதாது அணை கட்டுவதையும் தடுக்கவில்லை. காங்கிரஸிடம் காவிரியில் தண்ணீர் திறக்க வலியுறுத்த வேண்டும்" என்றார்.`மாயாவதி அவரது ஆட்சிக் காலத்தை மறந்துவிட்டார்..!' - அமைச்சர் ரகுபதி
http://dlvr.it/T9QRml

`சட்டம் ஒழுங்கு; தனிப்பட்ட முறையில் நடைபெறும் சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது' - சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்ல திருமண விழாவுக்காக மணமக்களைச் சந்திக்க வந்த தமிழ்நாடு சட்டப்பேரவைத் சபாநாயகர் அப்பாவு, புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
``இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் எல்லா வழிபாட்டுத் தலங்களிலும் அவரவர்கள் இஷ்டப்படி செல்கிறார்கள். அது போன்று பாதுகாப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் என்று கூறி உலக அளவில் செஸ் ஒலிம்பியாட் மாமல்லபுரத்தில்தான் நடைபெற்றது. இந்தியாவில் தொழில்துறையில் 14-வதாக இருந்த மாநிலம் இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் எந்த மாநிலத்தில் தொழில் முதலீடு செய்யலாம் என்று சொன்னால், அதற்கு சட்டம் ஒழுங்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று கூறி அதிகப்படியானோர் வந்து கொண்டு உள்ளனர். அது அனைவருக்கும் தெரியும். இதற்குப் பிறகு சட்டம் ஒழுங்கு பாதிப்பு என்று கூறினால் என்ன சொல்வது என்று தெரியவில்லை... அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்கக்கூடிய மாநிலம்தான் தமிழ்நாடு. தனிப்பட்ட முறையில் நடக்கும் பிரச்னைகளுக்கு இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. சட்டமன்றத்தில் கடந்தாண்டு எவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றது.. இந்த ஆண்டு எவ்வளவு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என்ற புள்ளி விவரங்களோடு எடுத்துரைக்கப்பட்டது. ஒரு அரசின் மீது குற்றச்சாட்டு எப்போது சொல்ல வேண்டும் என்றால் ஒரு குற்ற சம்பவம் நடைபெற்று நடவடிக்கை எடுக்கவில்லை என்றால்தான் சொல்ல வேண்டும். ஆனால், இந்த அரசு சம்பவம் நடைபெற்ற அடுத்த நிமிடமே நடவடிக்கை எடுத்து யாராக இருந்தாலும் அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து சரியான நடவடிக்கை எடுத்து நீதிமன்றம் முன்பு நிறுத்துகிறார்கள். காவல்துறை அவர்களால் முடிந்தவற்றை செய்து வருகின்றனர். அப்பாவு
நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு முடிந்த அளவு கொடுக்க வேண்டும். பல இடங்களில் ஒத்துழைப்பு குறையும் போது வழக்கை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இன்று பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாக உள்ளனர். நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம். நானும் பாதுகாப்பாக தான் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திக்கு வருகிறேன். இதற்கு மேல் என்ன பாதுகாப்பு வேண்டும்... தனிப்பட்ட முறையில் நடைபெறும் சம்பவங்களை நாம் பெரிதுபடுத்தக் கூடாது. எதிர்க்கட்சியினர் சட்டமன்றத்தில் அமர்ந்து பேச வேண்டும். கள்ளக்குறிச்சி விவகாரம் என்று கூறுகின்றனர். பிரதான எதிர்க்கட்சியின் பேச்சு ஒன்று கூட சட்டமன்றத்தில் பதிவாகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. சட்டமன்றம் என்றால் அதற்கு ஒரு விதிமுறை உள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி பேரவை விதிப்படிதான் சட்டமன்றம் கூடும். காலையில் கேள்வி நேரம். அப்பாவு
ஆனால், கேள்வி நேரத்திற்கு முன்பாகவே வெளியே செல்ல வேண்டும் என்று தகராறு செய்தால் நாம் என்ன செய்ய முடியும்?. ஜனநாயகத்தின் நான்காவது தூண் சரியாக இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும். நடக்கும் குற்ற சம்பவங்களை காவல்துறையினரிடம் ஊடகத் துறையினர் கொண்டு சென்று சேர்த்தால் சரியாக நடக்கும். நான்காவது பெண் சரியாக இருந்தால் நாடே சரியாக இருக்கும். அதற்காக நான், நீங்கள் சரியாக இல்லை என்று கூறவில்லை" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbரூ.900 கோடி குத்தகை பாக்கி; ஊட்டி குதிரை பந்தய மைதானத்துக்கு சீல்; பாதுகாக்க வலுக்கும் குரல்கள்!
http://dlvr.it/T9Q3cJ

`ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ, அந்த மொழியில்..!’ சென்னையின் புதிய கமிஷனர் அருண் கடந்து வந்த பாதை!
`ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழிகளிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்' எனக்கூறி எடுத்த எடுப்பிலேயே அதிரடி காட்டியிருக்கிறார் புதிதாக சென்னை போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் அருண். பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவரான ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை அடுத்து சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனராக இருந்துவந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசால் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டிருக்கிறார். சென்னையில் நாளுக்கு நாள் சட்ட ஒழுங்கு பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், அருணை நம்பி இந்த பொறுப்பை முதலமைச்சர் ஒப்படைக்க காரணம் என்ன? அதிரடிக்குப் பெயர்போன அருணின் பின்னணி என்ன? என்பவற்றைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.ஆம்ஸ்ட்ராங் கொலை
குடும்பமும் கல்வியும்:
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி அருகிலுள்ள சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் அருண். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி, இரண்டு மகள்கள் இருக்கின்றனர். சிறு வயதிலேயே போலீஸ் அதிகாரியாகவேண்டும் என்ற எண்ணம் அருணை உந்தித் தள்ள, சென்னையில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்த கையோடு, ஐதராபாத்திலுள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டயப் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.
காவல்துறையில் தொடக்க காலங்கள்:
அதன்பின்னர், 1998-ம் ஆண்டில் முதல்முறையாக ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தனது கனவை நனவாக்கினார். அதைத்தொடர்ந்து பயிற்சியை முடித்த அருண், 2002-ம் ஆண்டு வரை நாங்குநேரி மற்றும் தூத்துக்குடி கோட்டங்களில் உதவி காவல் கண்காளிப்பாளராகப் (ASP) பணியாற்றினார். அதன்பின்னர், பதவி உயர்வு பெற்று கரூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்தடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பணியாற்றினார். தொடர்ந்து, திருப்பூர் மாவட்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவில் திறம்பட செயலாற்றினார். அருணின் துரிதமான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக அவருக்கு பதிவு உயர்வை பெற்றுத்தந்தது. 2012-ல் திருச்சி சரக டி.ஐ.ஜியாக பணியாற்றிவந்த அருண் 2016-ம் ஆண்டில் திருச்சி மாநகர கமிஷனராகப் பதவி உயர்வு பெற்றார்.ஆம்ஸ்ட்ராங் - சென்னை முன்னாள் காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்
சென்னைக்கு அடியெடுத்து வைத்த அருண்:
தூத்துக்குடி, கன்னியாகுமரி, கரூர், திருச்சி என தான் பணியாற்றிய தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் அருண் திறமையாக செயல்பட்டதால் சென்னைக்கு அழைத்துவரப்பட்டார் அருண். ஏற்கெனவே, சென்னை அண்ணா நகர் துணை ஆணையராகவும், பரங்கிமலை துணை ஆணையராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருந்தது. மேலும், தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில்(CBCID) காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். இதையடுத்து, 2012-ல் சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல்பிரிவு டி.ஐ.ஜியானார். அதன்பிறகு, சென்னை தெற்கு மண்டல சட்டம் - ஒழுங்கு காவல் இணை ஆணையராகவும் பணியாற்றினார். தொடர்ந்து, வட சென்னை சட்டம் - ஒழுங்கு கூடுதல் காவல் ஆணையரானார். பின்னர், சென்னை காவல் கூடுதல் ஆணையராகவும், காவலர் பயிற்சி பள்ளியின் ஐ.ஜி.யாகவும் பதவி வகித்தார். கமிஷனர் அருண்
துறையில் சமீப கால வளர்ச்சி:
2021-ம் ஆண்டில் திருச்சி மாநகர கமிஷனராக மீண்டும் பொறுப்பேற்ற அருண், அங்கு சட்டவிரோதமாக கொடிகட்டிப் பறந்த லாட்டரி டிக்கெட் விற்பனைக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். தீவிர நடவடிக்கையின் மூலம் லாட்டரி ஏஜெண்டுகள் முதல் லாட்டரி முதலாளிகள் வரை ஒட்டுமொத்த கும்பலையும் கைதுசெய்து சிறையிலடைத்தார். தொடர்ந்து, 2022-ம் ஆண்டு தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக பதவி உயர்வு பெற்றார். அதன்பின்னர், 2023-ல் ஆவடி மாநகர காவல் ஆணையரானார். அதன்பின்னர், கடந்த ஆண்டு சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பியாக பொறுப்பேற்றவர் மாநிலம் முழுவதும் பல்வேறு குற்றங்களையும் காவல்துறையினரின் நடவடிக்கைகளையும் கண்காணித்து வந்தார். சட்ட ஒழுங்கை நிலைநாட்ட சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான ரெளடிகளை கைது செய்து சிறையிலடைத்தார்.
சென்னையின் புதிய கமிஷனராக...
இந்த நிலையில், தொடந்து தலைநகர் சென்னை தொடங்கி பல்வேறு மாவட்டங்களிலும் அடுத்தடுத்து பல்வேறு அரசியல் படுகொலைகள் நடந்தன. ரெளடிகள் அட்டகாசம், படுகொலைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் என எங்கும் குற்றசெயல்கள் அதிகரித்தவண்ணம் இருக்க, அதிர்கட்சிகளும் ஆளும் தி.மு.க அரசைக் கடுமையாக விமர்சித்தன. குறிப்பாக, தலைநகர் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது வீட்டுக்கு அருகிலேயே வைத்து கொடூரமாக வெட்டிக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியெடுத்தது. தேசிய கட்சியின் தலைவர் என்பதால் இந்த விவகாரம் தேசிய தலைவர்கள் அளவில் பெரும் பேசுபொருளாகி திமுக அரசுக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதையடுத்து, சென்னை மாநகராக போலீஸ் கமிஷனராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, தமிழக அரசால் சென்னையின் புதிய போலீஸ் கமிஷனராக அருண் நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழ்நாடு போலீஸ்
சென்னை மாநகரின் 110-வது போலீஸ் கமிஷனராகப் பொறுப்பேற்றிருக்கும் கூடுதல் டி.ஜி.பி அருண், ``சென்னை மாநகரில் ரெளடிகளை கட்டுப்படுத்துவதே என் முதல் பணி. ரெளடிகள் முற்றிலும் ஒடுக்கப்படுவார்கள். ரெளடிகளுக்கு எந்த மொழி புரியுமோ அந்த மொழியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்தி, சட்ட ஒழுங்கை நிலைநாட்ட தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். என்னை நம்பி இந்தபொறுப்பை ஒப்படைத்த தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன்!" என உறுதியளித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T9Pfyf

Tuesday 9 July 2024
New Criminal Laws: புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்; வழக்கறிஞர்கள் கூறும் காரணமென்ன?!
இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்த மூன்று குற்றவியல் சட்டங்கள் மாற்றப்பட்டு, புதிய குற்றவியல் சட்டங்கள் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டன. புதிய குற்றவியல் சட்டங்களால் பல குழப்பங்களும் பாதிப்புகளும் ஏற்படும் என்று குற்றம்சாட்டும் வழக்கறிஞர்கள், பல மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் சென்னை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.நாடாளுமன்றம்
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு பதிலாக, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, பாரதிய நகரிக் சுராக்ஷா சன்ஹிதா 2023, பாரதிய சாக்சியா அபினியம் 2023 என்ற புதிய சட்டங்களை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவந்திருக்கிறது. புதிய குற்றவியல் சட்டத்தில், ‘பூஜ்ஜிய முதல் தகவல் அறிக்கை’ என்ற அம்சம் இருக்கிறது.
அதன்படி, குற்றம் நிகழ்ந்த இடத்தின் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமன்றி, எந்தவொரு காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்ய முடியும். காவல் நிலையத்துக்கு நேரில் செல்லாமல் ஆன்லைனிலேயே புகார் அளிக்கலாம் என்பன உள்ளிட்ட வரவேற்கத்தக்க அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டங்களில் இருக்கின்றன என்று வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், புதிய குற்றவியல் சட்டங்கள் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற வளாகம் அருகில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அதில் பங்கேற்ற அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளரான வழக்கறிஞர் சிவக்குமாரிடம் பேசினோம். “இந்தச் சட்டங்களை நாங்கள் எதிர்ப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலில், நாடாளுமன்றத்தில் 140-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்களை இடைநீக்கம் செய்து அவையிலிருந்து வெளியேற்றிவிட்டுத்தான் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. இது, ஜனநாயக விரோதமானது.வழக்கறிஞர் ச.சிவக்குமார்
இந்தச் சட்டங்களுக்கு சம்ஸ்கிருதத்தில் ஏன் பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது பெரும்பான்மையான தமிழக வழக்கறிஞர்களின் கேள்வியாக இருக்கிறது. மேலும், இந்தச் சட்டங்கள் பொதுப்பட்டியலில் இருப்பதால், இந்த மாற்றம் குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து பேசியிருக்க வேண்டும். ஆனால், மாநிலங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது.
உச்ச நீதிமன்றம் முதல் கீழமை நீதமின்றங்கள் வரை, இந்தியாவில் மொத்தம் சுமார் 28,000 நீதிமன்றங்கள் இருக்கின்றன. அதேபோல, இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் இருக்கின்றன. புதிய சட்டங்கள் தொடர்பாக நீதித்துறையினருக்கும், காவல்துறையினருக்கும் போதிய பயிற்சி வழங்கப்படவில்லை. தற்போது, நாட்டில் ஐந்தரை கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இவற்றில், நாலரை கோடி வழக்குகள் கீழமை நீதிமன்றங்களில் இருக்கின்றன. இந்த நிலையில், புதிய குற்றவியல் சட்டங்களால் நிறைய குழப்பங்கள் ஏற்படும். அந்த குழப்பங்கள் காரணமாக, நீதி வழங்குவதில் கடுமையான தாமதம் ஏற்படும். இதனால், சாதாரண பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.வழக்கறிஞர்கள் போராட்டம்
பொதுவாக, முன்னாள் நீதிபதிகள், தேர்வுசெய்யப்பட்ட வழக்கறிஞர்கள், சட்ட ஆசிரியர்கள் ஆகியோர் கொண்ட சட்ட ஆணையத்தின் மூலமாகத்தான் சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால், சில தனிநபர்களை நியமித்து குற்றவியல் சட்டங்களைக் கொண்டுவந்திருக்கிறார்கள். இது, ஜனநாயக விரோதம். எனவேதான், இந்தச் சட்டங்களை எதிர்க்கிறோம்” என்கிறார் வழக்கறிஞர் ச.சிவக்குமார்.
புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளரும், வழக்கறிஞருமான தராசு ஷ்யாமிடம் பேசினோம். “புதிய குற்றவியல் சட்டங்கள் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டன. ஆறு மாத கால இடைவெளியில் ஒட்டுமொத்த குற்றவியல் நடைமுறையும் அவசரமாக மாற்றப்படுகிறது. இதில், பல சிக்கல்கள் இருக்கின்றன. சட்டப் பாடத்திட்டத்துக்குள் புதிய சட்டங்களை மொழிபெயர்த்துக் கொண்டுவர நீண்ட காலம் தேவைப்படும். சட்டம் படித்து முடித்தவர்கள், இனி சட்டம் படிக்கப்போகிறவர்கள் என எல்லோருக்கும் பாதிப்புகள் வரும். பழைய குற்றவியல் சட்டங்களின் படியும் வழக்குகள் நடத்த வேண்டும், புதிய குற்றவியல் சட்டங்களின்படியும் வழக்குகள் நடத்த வேண்டும்.
நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் பெரும்பாலானவை சிவில் வழக்குகள். ஆனால், சிவில் சட்டம் மாற்றப்படவில்லை. சாட்சிய சட்டத்தை மாற்றியதால், சிவில் சட்டம் பாதிக்கப்படுகிறது. காரணம், சாட்சிகள் சட்டத்தை வைத்துத்தான் சிவில் வழக்குகளை நடத்த வேண்டும். எனவே, வழக்குகள் முடிவதற்கு பல ஆண்டுகள் பிடிக்கும்.தராசு ஷ்யாம்
எங்கிருந்து வேண்டுமானாலும் வழக்குப் பதிவு செய்யலாம்... ஆன்லைனில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யலாம் என்ற சிறப்பு அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டத்தில் இருக்கின்றன. ஆனால், இதை மட்டுமே பெருமையாகப் பேசுகிறார்கள். சாதாரண அடிதடி போன்ற விவகாரங்களில் எஃப்.ஐ.ஆர் போடாமல் சமாதானமாகப் பேசி முடிப்பது வழக்கமாக இருக்கிறது. கொலை, கொள்ளை, வன்குற்றங்கள், பாலியல் குற்றங்கள் என்று குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தண்டனைக்குரிய குற்றங்கள் என்றால்தான் காவல் நிலையத்துக்கு போகும் வழக்கம் இருக்கிறது. அந்த வழக்குகளில எஃப்.ஐ.ஆர் பதியப்படும். ஆனால், அதன் சதவிகிதம் குறைவு.
ஆன்லைன் வசதி என்று வந்த பிறகு சிறிய தகராறு அனைத்துக்கும் ஆன்லைனில் புகார் செய்யப்பட்டு எஃப்.ஐ.ஆர் பதியப்படும். வழக்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அதை சமாளிக்கவே முடியாது. சிறு சிறு வழக்குகளெல்லாம் நீதிமன்றம் போகும். இதனால், ஒட்டுமொத்த சிஸ்டமும் ஸ்தம்பித்துவிடும்’‘ என்கிறார் தராசு ஷ்யாம்.சித்தராமையா vs டி.கே சிவக்குமார்... கர்நாடக காங்கிரஸ் மோதல் போக்கும் எதிர்காலமும்?!
இந்த விவகாரம் குறித்து ஓய்வுபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் எம்.கருணாநிதியிடம் பேசினோம். “இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் பிரிவுகள் அப்படியே நினைவில் இருக்கின்றன. இந்த நிலையில், புதிய சட்டங்களில் பிரிவுகளின் எண்களை மாற்றியிருப்பதால் குழப்பங்கள் ஏற்படும். நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது புதிய சட்டப்பிரிவுகள், பழைய சட்டப்பிரிவுகள் தொடர்பான விளக்கங்களை ஒவ்வொரு முறையும் கொடுக்க வேண்டியிருக்கும்.
ஏற்கெனவே, நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்கிக்கிடக்கின்றன. புதிய குற்றவியல் சட்டங்களால் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. இப்போது, காவல்துறையினருக்கு சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வருபவர்கள் ஐ.பி.சி., சி.ஆர்.பி.சி ஆகிய சட்டங்களைப் படித்திருப்பதுடன் அனுபவ ரீதியாகவும் வகுப்பெடுப்பார்கள். இனி, புதிய சட்டங்கள் குறித்து வகுப்பெடுக்க வருபவர்களும் மாணவர்களைப் போலத்தான் வருவார்கள். அதாவது, ஆசிரியரும் மாணவர்களும ஒரே நிலையில் இருக்கப்போகிறார்கள். இது மிகவும் சிரமம்.எம்.கருணாநிதி
மாற்றங்கள் அவசியம் என்று சொல்கிறார்கள். ஆனால், இவ்வளவு அவசரப்பட்டு மாற்றங்களைக் கொண்டுவந்திருக்க வேண்டாம். அன்றாடம் பயன்படுத்தும் விஷயம் என்பதால், போகப் போக சரியாகிவிடும் என்றும் சொல்லிவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக சரியாகும் நேரத்தில், பிரச்னைகளும் அதிகரிக்கும். இது நமக்கு ஒரு சோதனை காலம்தான்” என்கிறார் கருணாநிதி.
புதிய குற்றவியல் சட்டங்களால் பிரச்னைகள் அதிகரிக்கும்போது, அதற்கு எதிராக மற்ற மாநிலங்களிலும் போராட்டங்கள் தொடங்கும் என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/2b963ppb
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/2b963ppbModi In Russia: `வெடிகுண்டுகளுக்கு மத்தியில் அமைதிப் பேச்சுவார்த்தை வெற்றியடையாது!' - புதினிடம் மோடி
http://dlvr.it/T9N2NV

`ராகுலை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும்!' - கர்நாடக பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு
நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனிப்பெரும்பான்மையை இழந்தபோதிலும், தேசிய ஜனநாயக கூட்டணியாக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறது. மறுபக்கம், 2019-ல் பெற்ற இடங்களை விட கிட்டத்தட்ட இரு மடங்காக 99 இடங்களைப் பெற்ற காங்கிரஸ், மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது. கூடவே, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்திருக்கிறார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மக்களவையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தனது முதல் உரையில், `தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்போதும் வன்முறை, வெறுப்பு ஆகியவற்றையே பேசுகிறார்கள்' என்று பா.ஜ.க-வைத் தாக்கினார். கூடவே, சிவனின் படத்தைக் காட்டி, `இதிலிருப்பது அபயமுத்ரா. இது அச்சமின்மை, உறுதி, பாதுகாப்பின் சைகை. இதுதான் காங்கிரஸின் சின்னம்' என்றும் ராகுல் காந்தி கூறினார்.பிரதமர் மோடி
இதற்கு உடனடியாக எதிர்வினையாற்றிய பிரதமர் மோடி, `ஒட்டுமொத்த இந்துக்கள் மீதான தாக்குதல்' என ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்தார். ஆனால், அடுத்த கணமே ராகுல் காந்தி, `மோடியோ, பா.ஜ.க-வோ, ஆர்.எஸ்.எஸ்ஸோ ஒட்டுமொத்த இந்துக்களின் பிரதிநிதிகள் அல்ல' என்றார்.
இந்த விவகாரத்தை பா.ஜ.க நாடாளுமன்றத்துக்கு வெளியேயும், ராகுலும், காங்கிரஸும் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று கூறின. இவ்வாறிருக்க, கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவர் இந்த விவகாரத்தில், ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்குள் பூட்டிவைத்து அறைய வேண்டும் என்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.பா.ஜ.க எம்.எல்.ஏ பாரத் ஷெட்டி
நேற்று இதைத் தெரிவித்த மங்களூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ பாரத் ஷெட்டி, ``இவ்வாறு செய்வது ஏழு முதல் எட்டு எஃப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்ய வழிவகுக்கும். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மங்களூருக்கு வந்தால் இதை அவருக்கு ஏற்பாடு செய்வோம். சிவன் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறந்தால், அவர் சாம்பலாகிவிடுவார். இந்துக்களைப் பற்றி என்ன சொன்னாலும் இந்துக்கள் அமைதியாகக் கேட்பார்கள் என்று அவர் நினைக்கிறார். இந்துக்களுக்கு எதிரான கொள்கையை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் அவர் குரைத்தால் உள்ளூர் தலைவர்கள் இங்கு வாலை ஆட்டத் தொடங்குவார்கள்.ராகுல் காந்தி - Constitution of India
இந்துக்களும், இந்துத்துவாவும் வேறு வேறு என்று காங்கிரஸ் கூற ஆரம்பித்துவிட்டது. இத்தகைய தலைவர்களால் இந்துக்கள் எதிர்காலத்தில் ஆபத்தைச் சந்திக்க நேரும். இந்துக்கள் வீட்டை விட்டு வெளியே வராத சூழ்நிலையை அவர்கள் உருவாக்குவார்கள். சிவாஜியும் மகாராணா பிரதாப்பும் இந்து சமூகத்தில் பிறந்தவர்கள்தான். தேவைப்படும்போது நாங்கள் ஆயுதங்களை எடுப்போம். ஆயுதங்களை வணங்கிவிட்டு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, நாடாளுமன்றத்தில் பலமான அறைக்குப் பிறகு ராகுல் காந்தி சரியாகிவிடுவார்" என்று கூறினார்.
பா.ஜ.க எம்.எல்.ஏ-வின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, அவரைக் கைதுசெய்யுமாறு மங்களூரு காவல் ஆணையரிடம் காங்கிரஸ் புகாரளித்திருக்கிறது.`இந்து மதம் வன்முறையை நிராகரிக்கிறது என்றுதான் கூறினார்' - ராகுல் பேச்சுக்கு சங்கராச்சாரியார் ஆதரவு!
http://dlvr.it/T9Mdt1