டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த மார்ச் மாதம் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைதுசெய்தது. அதைத் தொடர்ந்து, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு விசாரணை கடந்த மே மாதம் முடிந்தது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் உச்ச நீதிமன்றம் நிபந்தனையுடன் அதே மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது.உச்ச நீதிமன்றம்
அதன்படி ஜாமீனில் வெளிவந்த கெஜ்ரிவால், நாடாளுமன்றத் தேர்தல் இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் திகார் சிறையில் சரணடைந்தார். அதைத் தொடர்ந்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிபதி நியாய் பிந்து, கெஜ்ரிவாலுக்கு கடந்த மாதம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனை எதிர்த்த அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய ரோஸ் அவென்யூ நீதிமன்ற உத்தரவின்மீது தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவின்மீது இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். அதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா, ``அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே 90 நாள்கள் சிறை தண்டனை அனுபவித்திருப்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமின் வழங்கப்படுகிறது" எனக் குறிப்பிட்டு ஜாமீன் வழங்கியிருக்கிறார்.சிபிஐ, அமலாக்கத்துறை
டெல்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக சி.பி.ஐ கடந்த சனிக்கிழமை டெல்லி நீதிமன்றத்தில், ``டெல்லி கலால் கொள்கை உருவாக்கி செயல்படுத்தியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான அனைத்து தரப்பு விசாரணையும் முடிந்துவிட்டது. ஆனால், கெஜ்ரிவால் மட்டும் இன்னும் விசாரிக்கப்பட வேண்டும். அது மட்டும் இன்னும் முடிக்கப்படவில்லை" எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடதக்கது. எனவே, அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த பி.எம்.எல்.ஏ வழக்கில்தான், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரம் சி.பி.ஐ தொடர்ந்த வழக்கிலும் கெஜ்ரிவால் காவலில் இருப்பதால், அவர் சிறையில்தான் இருப்பார் என்கிறது டெல்லை திகார் சிறை வட்டாரம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88கட்டாய மாதவிடாய் விடுப்பு' மாதிரி கொள்கை வகுக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை
http://dlvr.it/T9VVVn