காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அரசைக் குற்றம்சாட்டி மக்களிடம் முன்வைத்த நாட்டின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று `வேலைவாய்ப்பின்மை'. தொடர்ச்சியாக 25 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் குஜராத்தில் கடந்த வாரம்கூட, தனியார் நிறுவனத்தில் சொற்ப இடங்களுக்கான இன்டெர்வியூக்காக சுமார் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள் முண்டியடித்துக்கொண்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகியது.Job opportunities | வேலைவாய்ப்புகள்
இவ்வாறிருக்க, மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய பிரதமர் மோடி, `சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த விரிவான அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. அந்த அறிக்கையின்படி, கடந்த 3, 4 ஆண்டுகளில் சுமார் 8 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த எண்ணிக்கை வேலைவாய்ப்புகள் குறித்த போலிக் கதைகளைப் பரப்புபவர்களை மௌனமாக்கியிருக்கிறது' என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் கமிட்டி தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான கார்கே மோடியிடம் இது தொடர்பாக மூன்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.
இதுகுறித்து கார்கே தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``மும்பையில் நேற்று நீங்கள் (மோடி) வேலைவாய்ப்புகள் பற்றி பொய் பரப்பிக்கொண்டிருந்தீர்கள். எனவே, National Recruitment Agency (NRA)-ஐ அறிவிக்கும் போது நீங்கள் கூறியதை இந்த நேரத்தில் மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.மல்லிகார்ஜுன கார்கே
`கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு NRA ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இந்தப் பொதுவான தகுதித் தேர்வின் மூலம், பல தேர்வுகள் நீக்கப்பட்டு பொன்னான நேரம் மிச்சப்படுத்தப்படும். மேலும், இது வெளிப்படைத்தன்மைக்கும் மிகுந்த ஊக்கமளிக்கும்' என்று 2020 ஆகஸ்டில் நீங்கள் கூறியிருந்தீர்கள். இப்போது, உங்களுக்கு என்னுடைய மூன்று கேள்விகள்... `(1) கடந்த நான்கு ஆண்டுகளாக NRA ஒரு தேர்வைக்கூட நடத்தாது ஏன்? (2) கடந்த நான்கு ஆண்டுகளில் NRA-க்கு ரூ.1,517.57 கோடி நிதி வழங்கப்பட்டும், இதுவரை ரூ.58 கோடி மட்டுமே செலவிடப்பட்டது ஏன்?பிரதமர் மோடி
(3) அரசுப் பணிகளுக்கான ஆள்சேர்ப்புக்காக NRA உருவாக்கப்பட்டது. அதில், SC, ST, OBC மற்றும் EWS இளைஞர்களின் இட ஒதுக்கீடு உரிமைகள் பறிக்கப்பட வேண்டுமென்பதற்காக வேண்டுமென்றே NRA செயலிழக்கச் செய்யப்பட்டதா?'. வினாத்தாள் கசிவு போன்ற மோசடி தேசிய தேர்வு முகமையால் செய்யப்பட்டது. மறுபக்கம், NRA ஒரு தேர்வைக் கூட நடத்தவில்லை. கல்வி முறையைச் சீரழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் பணியை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கையிலெடுத்திருக்கிறது. NRA பிரச்னையை நாங்கள் முன்பே எழுப்பியிருந்தோம். ஆனாலும், மோடி அரசு இதில் மௌனம் சாதிக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.அரசே செய்யும் வேலைவாய்ப்பு மோசடி!
http://dlvr.it/T9ZbVX