காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு நாள்தோறும் 1 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருக்கும் நிலையில், `8000 கன அடி நீர் மட்டுமே திறந்துவிட முடியும். உத்தரவிட்டபடி கொடுக்கமுடியாது' என கர்நாடக காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா முரண்டு பிடித்திருக்கிறார். இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அனைத்துக்கட்சிகள் கூட்டத்தில் டி.கே.சிவக்குமார், சித்தராமையா
தமிழ்நாட்டுக்குரிய காவிரி நீரை திறந்துவிடாமல் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கிறது கர்நாடக அரசு. கர்நாடகாவில் பா.ஜ.க ஆட்சியிருந்தாலும் சரி, தி.மு.க கூட்டணியிலிருக்கும் காங்கிரஸ் ஆட்சியிருந்தாலும் சரி `தமிழ்நாடு கேட்கின்ற காவிரி நீர் இல்லை' என்ற ஒற்றை பதிலில் அந்த மாநில அரசு உறுதியாக இருக்கிறது. அந்தவகையில், தமிழ்நாடு எதிர்க்கும் மேக்கேதாட்டு அணை காவிரியின் குறுக்கே கட்டப்பட்டேதீரும் என வேகம்காட்டிவரும் கர்நாடக அரசு, வழக்கமாக தமிழ்நாட்டுக்கு கொடுக்கவேண்டிய நீரையும் கொடுக்காமல் அணைகளின் கதவுகளை அடைத்துவைத்திருக்கிறது. குறிப்பாக, தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கியிருக்கும் நிலையில், கர்நாடகாவிலுள்ள ஹாரங்கி அணையில் 73%, ஹேமாவதி அணையில் 55 %, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 54%, கபினியில் 96% நீர் நிரம்பியிருக்கும் நிலையிலும், தங்கள் மாநிலத்தில் தண்ணீர்பற்றாக்குறை இருப்பதாகக் கூறி தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை திறந்துவிட மறுக்கிறது.
இந்தநிலையில், கர்நாடக அணைகளில் உள்ள நீர்வரத்தை கணக்கில்கொண்ட காவிரி நீர் ஒழுங்காற்று குழு, ``தமிழ்நாட்டுக்கு வரும் ஜூலை 12-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை வினாடிக்கு 11,500 கன அடிநீர் வீதம் நாளொன்றுக்கு 1 டி.எம்.சி நீரை விடுவிக்க வேண்டும்" எனக்கூறி அதிரடியாக உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, அவசர அவசரமாக அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டிய கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, தமிழ்நாட்டுக்கு காவிரிநீர் திறந்துவிட முடியாது என்று அறிவித்தார். அதன்பின்னர் நேற்று ஜூலை 14-ம் தேதி நடந்த கர்நாடக மாநில அனைத்துக்கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலவரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார், கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், விவசாய அமைப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர். பல்வேறு விவாதங்கள் எதிர்ப்புகளுக்கிடையே ஆலோசனைக் கூட்டத்தை இறுதிசெய்த முதலமைச்சர் சித்தராமையா, ``தமிழ்நாட்டுக்கு 1 டி.எம்.சிக்கு பதிலாக தினமும் 8,000 கன அடி காவிரி நீர் திறந்துவிடலாம் என அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது'' எனத் தெரிவித்தார். காவிரி
இது தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. கர்நாடகாவின் முடிவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். அதேபோல, `ஒரே கூட்டணியில் இருக்கும் கர்நாடக காங்கிரஸிடமிருந்து தி.மு.கவால் தண்ணீர் பெற்றுத்தர முடியவில்லை' என அ.தி.மு,க., பா.ம.க, பா.ஜ.க போன்ற தமிழக எதிர்கட்சிகளும் கடுமையாக விமர்சித்துவருகின்றன.
குறிப்பாக, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ``விளம்பர போட்டோ ஷூட்டில் மட்டுமே கவனம் செலுத்தும் விடியா திமுக முதல்வர், காங்கிரசின் தயவிற்காக தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையை விட்டுக்கொடுப்பது அவரின் தொடர் செயலற்றத்தன்மை மூலம் தெளிவாகத் தெரிகிறது. மேடையில் மட்டும் மாநில உரிமை பற்றி வாய் கிழிய பேசும் விடியா திமுக அரசின் முதல்வர் தன்னுடைய செயலற்ற தன்மையால், தமிழக மக்களின் வாழ்வோடு விளையாடி வருவது கடும் கண்டனத்திற்குரியது!" என விமர்சித்திருக்கிறார். ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி
அதேபோல பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ``கர்நாடக அணைகளில் 77 டி.எம்.சி தண்ணீர் உள்ளது. தினமும் 3.15 டி.எம்.சி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனாலும், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. இதைக் கண்டிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அக்கறை கூட இல்லாமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. காவிரியில் தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளை திமுக அரசு எந்த அளவுக்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது தான் வருந்தத்தக்க எடுத்துக்காட்டு ஆகும். கர்நாடகத்தின் அநீதியை தமிழக அரசு இனியும் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது" என கொந்தளித்திருக்கிறார்.
மேலும், தமிழக பா.ஜ.க துணைத்தலைவர் கரு.நாகராஜன், ``தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டிப்போம்! வேடிக்கை பார்க்கும் திமுக அரசையும் கண்டிப்போம்! காவிரி பிரச்னையில் தமிழகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸை எதிர்த்து இண்டி கூட்டணியில் இருந்து தி.மு.க விலகுமா? அரசியல் லாபத்திற்காக தமிழக மக்களின் உரிமையை இழக்கலாமா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார். இதையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என தி.மு.க கூட்டணி கட்சிகளான வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றன. ராமதாஸ் - முதல்வர் ஸ்டாலின்
இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``கூட்டணி என்பது வேறு; அவரவர் பிரச்னைகள் என்பது வேறு. காவிரி ஒழுங்காற்றுக்குழு 1 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு வழங்கவேண்டும் என்று கூறியது. கர்நாடக அணைகளிலும் போதிய நீர் இருப்பு உள்ளது. ஆனால் 1 டி.எம்.சி நீரை தமிழகத்துக்கு வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. 8,000 கன அடி நீர் மட்டுமே தரமுடியும் என்கிறது. கர்நாடகா இப்போது `கொடுக்க மாட்டேன்' என்று சொன்னாலும் மழை பெய்தால் நாம் `வேண்டாம்' என்று சொன்னாலும் கொடுத்துவிடும். கர்நாடகாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் உரிமையை அவர்கள் கேட்கிறார்கள்; நமது உரிமையை நாம் கேட்போம். காவிரி பிரச்னை தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதா, இல்லை கர்நாடக முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவதா? என முதலமைச்சர் ஸ்டாலின்தான் முடிவெடுப்பார்!" எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், கர்நாடக அரசின் முடிவை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், ``காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த, காவிரி நீர் ஒழுங்காற்று குழு (CWRC) மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) ஆகிய அமைப்புகளை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி, 2018-ம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தீர்ப்புகளின் படி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால், வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி நீரைப் பெற்றது. தற்போதைய தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் தமிழகத்துக்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டிஎம்சி நீரை விடுவிக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆணையிட்டுள்ளது.அமைச்சர் துரைமுருகன்
இந்த நிலையில், இந்த ஆணைப்படி தமிழகத்துக்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழக அரசு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு ஒழுங்கற்று குழு ஆணையின்படி நீரை விடுவிக்காத கர்நாடகத்தின் செயல் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறுவதாகும். இன்றைய அளவில் (15.07.2024) கர்நாடகாவின் 4 முக்கிய அணைகளின் நீர் இருப்பு 75.586 டி.எம்.சி. ஆகும். மேலும், IMD-யின் அறிக்கையின்படி மழை சரியான அளவில் பெய்ய வாய்ப்புள்ளது. மேட்டூர் அணையில் வெறும் 13.808 டிஎம்சி அளவிற்கு மட்டுமே நீர் உள்ளது. இந்தச் சூழலில், ஒழுங்காற்று குழு ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடகா நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். தி.மு.க | மு.க. ஸ்டாலின்
இவ்வாறு, தமிழகத்துக்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் ஏற்று கொள்ளாது. காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16.07.2024) காலை 11.00 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளேன். இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநர்களின் கருத்துக்களைப் பெற்று, தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்!" எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/T9cdjv