கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் ஆமை இழஞ்சான் தோடு என அழைக்கப்படும் கழிவுநீர் ஓடை அமைந்துள்ளது. சுமார் 13 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ள இந்த கழிவுநீர் ஓடையில் சுமார் 6 கிலோ மீட்டர் பகுதி திருவனந்தபுரம் மாநகராட்சி எல்லைக்குள் வருகிறது. அதில் சுமார் 100 மீட்டர் பகுதி திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலைய பகுதியில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையை தூய்மைப்படுத்தும் பணியில் தூய்மைப்பணியாளர்கள் நான்கு பேர் நேற்று முன் தினம் ஈடுபட்டிருந்தனர். மூவர் கரையில் நின்றுகொண்டிருந்த நிலையில், ஓடையை சுத்தம் செய்ய ஜோய் (42) என்பவர் கழிவுநீரில் இறங்கியுள்ளார். அப்போது திடீரென கழிநீர் பெருக்கெடுத்து ஓடியதில் ஜோய் அடித்துச் செல்லப்பட்டார். உடனிருந்த தொழிலாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஓடையில் மாயமான ஜோய்யை தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். ஜோய்யைக் கண்டுபிடிக்க முடியாத நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களும் தேடுதல் பணியில் இறங்கினர். கழிவுநீருடன் டன் கணக்கில் பிளாஸ்டிக் உள்ளிட்ட திடக்கழிவுகளும் தேங்கி கிடந்ததால் மீட்புப் படையினரின் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று நடந்த தேடுதல் வேட்டையில் இந்திய கடற்படை வீரர்களும் ஈடுபட்டனர். அப்போது தொழிலாளி மாயமான பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் தகரப்பறம்பு வஞ்சியூர் ஓடையில் ஜோயின் உடன் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸார் அந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து சுமார் 46 மணிநேர தேடுதல் பணி முடிவுக்கு வந்தது.மரணமடைந்த தொழிலாளி ஜோய்
திருமணம் செய்துகொள்ளாமல் தாய் மெல்ஹி-யுடன் வசித்துவந்துள்ளார், தொழிலாளி ஜோய். அவர் வசிக்கும் மிகவும் மோசமான நிலையில் உள்ள வீட்டுக்குச் செல்ல பாதை இல்லை என்பதால், தனது அண்ணனின் வீட்டில் வசித்துவந்துள்ளார். வேலைக்காக யார் அழைத்தாலும் செல்வார். வேலை இல்லாத நாட்களில் பழைய பொருட்களை சேகரித்து ஆக்கர் கடையில் விற்றுவந்துள்ளார் ஜோய். ஆமை இழஞ்சான் ஓடையை சுத்தம் செய்யும் பணியை ஒப்பந்ததாரர் ஒருவர் எடுத்துள்ளார். அந்த ஒப்பந்ததாரர் அழைத்ததன் அடிப்படையில்தான் ஜோய் பணிக்குச் சென்றுள்ளார். ஜோய் மரணத்தைத் தொடர்ந்து அவரது தாய்க்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுடன், வீடு கட்டிக்கொடுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அத்துடன் அந்த வீட்டுக்கு பாதை ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஆமை இழஞ்சான் ஓடையில் உள்ள அனைத்து குப்பை கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா ஐகோர்ட் கூறியுள்ளது.
தூய்மை தொழிலாளி ஜோய் மரணத்துக்கு ரயில்வே துறைதான் காரணம் எனவும், ரயில் நிலையத்தில் இருந்து அதிகப்படியான கழிவுகள் ஆமை இழஞ்சான் ஓடையில் விடப்படுவதாகவும் திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் கூறியிருந்தார்.
அதேபோல ரயில்வே தரப்பில், ``சம்பந்தப்பட்ட பகுதியில் ரயில்வேக்குச் சொந்தமான இடம் என்றால், வெறும் 100 மீட்டர் தூரம்தான். அதனால் எங்களால் அங்கு பெரிய அளவில் பணிகளை மேற்கொள்ள முடியாமல் போனது. இருப்பினும் இத்தகைய சம்பவத்துக்கு மாநகராட்சி அதிகாரிகளின் கவனக்குறைவே காரணம்" எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
அதே சமயம், ``மழைக்காலத்துக்கு முன் ஓடைகளை சுத்தம்செய்ய தவறியது மாநகராட்சி நிர்வாகம். ஜோய் மரணத்துக்கு காரணமான மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும்" என பா.ஜ.க மாநில தலைவர் கே.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். ஜோய் மரணம் குறித்து முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஜோய் மரணம் மிகவும் துக்ககரமானது. ஜோய் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். குடும்ப உறுப்பினர்களின் துக்கத்தில் பங்கெடுத்துக்கொள்கிறேன். ஜோய்யை மீட்க 46 மணிநேரம் பல்வேறு துறைகள் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டன. மனித சக்தியால் முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. போலீஸ், தீயணைப்புத்துறை முதல் கப்பற்படை வரை கை மெய் மறந்து பணிசெய்த அனைவருக்கும் நன்றி" என்றார்.ஆம்ஸ்ட்ராங் கொலை: கைதான ரௌடி திருவேங்கடம் என்கவுன்ட்டர்; `சந்தேகம்' கிளப்பும் கட்சிகள்!
http://dlvr.it/T9d1xq