டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா நேற்று ஜாமீனில் வெளியில் வந்தார். குறிப்பாக உச்ச நீதிமன்றம், 17 மாதங்களாக எந்தவொரு விசாரணையுமின்றி சிறையில் அடைத்துவைத்திருப்பதும், ஜாமீன் மனுக்களை நிராகரிப்பதும் அவரின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று கூறி ஜாமீன் வழங்கியிருக்கிறது.மணீஷ் சிசோடியா , அரவிந்த் கெஜ்ரிவால்
இந்த நிலையில், பா.ஜ.க-வுக்கு நன்கொடை அளிக்காத தொழிலதிபர்கள் சிறையிலடைப்பட்டிருப்பதாக மணீஷ் சிசோடியா குற்றம்சாட்டியிருக்கிறார். ஜாமீனில் சிறையிலிருந்து வெளிவந்த மறுநாளான இன்று ஆம் ஆத்மி கட்சித் தலைமையகத்தில் தொண்டர்கள் மத்தியில் மணீஷ் சிசோடியா உரையாற்றினார்.
அப்போது மணீஷ் சிசோடியா, ``அரசியலமைப்பை விடவும் அவர்கள் (பா.ஜ.க) சக்திவாய்ந்தவர்கள் அல்ல. எதிர்க்கட்சித் தலைவர்களை சிறையிலடைப்பது மட்டுமல்லாமல், நாட்டின் குடிமக்களையும் துன்புறுத்தும் இந்த சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒவ்வொரு நபரும் போராட வேண்டும். நான் சிறையிலிருந்தபோது ஜாமீன் பெறுவதைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், பா.ஜ.க-வுக்கு நன்கொடை அளிக்காததால் போலி வழக்குகளில் தொழிலதிபர்கள் சிறையிலடைக்கப்படுவதைப் பார்த்து வேதனையடைந்தேன்.மணீஷ் சிசோடியா
இதுபோன்ற சர்வாதிகாரத்தை மிதிக்கும் வகையில்தான், அரசியலமைப்பின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது. அதேசமயம், ஏழிலிருந்து எட்டு மாதங்களுக்குள் நீதி கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால், அதற்கு 17 மாதங்கள் ஆகிவிட்டது. இருப்பினும், இறுதியில் உண்மை வென்றிருக்கிறது. எனவே, சர்வாதிகாரத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், கெஜ்ரிவால் வெறும் 24 மணி நேரத்தில் சிறையிலிருந்து வெளியே வருவார்" என்று கூறினார்.
மேலும், மல்யுத்த விவகாரத்தில் பெயர் எதுவும் குறிப்பிடாமல் பா.ஜ.க-வை தாக்கிய மணீஷ் சிசோடியா, ``ஒரு வீராங்கனை தனது தலைவருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தார். இப்போது, அவருக்கு ஒலிம்பிக்கில் என்ன நடந்தது என்பதை மக்கள் பார்த்தனர்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88வினேஷ் போகத் தகுதி நீக்கம், `பின்னணியில் பிரிஜ்பூஷன்?' மத்திய அரசுக்கு மஞ்சூரியா வீரரின் கடிதம்!
http://dlvr.it/TBlTsx