காவிரி நீருக்காகப் போராடும் தார்மிக உரிமையை தி.மு.க உள்பட தமிழகத்தில் இருக்கும் அத்தனை கட்சிகளுமே இழந்துவிட்டன. இவர்களுடைய போராட்டமெல்லாம் வெறுமனே தங்களின் இருப்பைப் பறைசாற்றிக் கொள்வதற்காக மட்டுமே. மற்றபடி விவசாயிகளின் நலனில் துளிகூட இவர்களுக்கு அக்கறை கிடையாது என்பதை, தி.மு.க அரசு சமீபத்தில் அரங்கேற்றிய ஓர் அநியாயம், வெட்டவெளிச்சமாக்கியுள்ளது. இதற்கு எதிராக சின்னதாக ஓர் அறிக்கையைக்கூட வெளியிடாத அரசியல் கட்சிகளின் முகமூடிகளும் கிழிந்து தொங்குகின்றன.
ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறப்பது வழக்கம். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் திறக்க வேண்டிய நீரை, கர்நாடக மாநில அரசு திறப்பதே இல்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அரசியலைத் தாண்டி `காவிரி நம்முடையதே' என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதனால், பெருமழை காரணமாக அணைகள் முழுக் கொள்ளளவை எட்டிய பிறகே, நிரம்பி வழியும் நீரை மட்டுமே திறந்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டுவிட்டது கர்நாடகா.
இதே சூழல்தான் இந்த ஆண்டும். ஜூலை கடைசியில்தான் கர்நாடகத்திலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. மேட்டூர் அணை முழுக்கொள்ளவை எட்டிய பிறகு திறக்கப்பட்ட உபரி நீர், முக்கொம்பு அணையை அடைய, அங்கிருந்து சுமார் ஒரு லட்சம் கன அடி நீர் நேரடியாகக் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. அடுத்து, காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீரும் கல்லணை வந்துசேர, அங்கிருந்தும் கொள்ளிடத்துக்கே அதிகமாகத் திறக்கப்பட்டது. ஆகக்கூடி, கொள்ளிடத்தில் மட்டும் ஒரு லட்சத்து 28,000 கன அடி நீர் அப்படியே கடலுக்குப் பாய்ந்தோட... காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றில் சில ஆயிரம் கன அடிகளே கசிந்தன.
உண்மையில் அதிகப்படியான பாசன பகுதிகள் இருப்பதே இந்த காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகியவற்றை நம்பிதான். இவற்றிலிருந்து பிரியும் சிற்றாறுகள், பெரும் கால்வாய்கள், சிறு கால்வாய்கள் ஆகியவற்றின் வழியாகத்தான் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்ட நிலங்கள் செழிப்படைகின்றன. குளம், குட்டை, ஏரிகள் என நீர்நிலைகள் நிரம்புவதால் நிலத்தடி நீர் பெருகுவதோடு கால்நடைகளுக்கும், மரம் மட்டைகளுக்கும் தேவையான நீர் கிடைக்கிறது.
இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம்கூட கவலைப்படாமல், மொத்தமாக கடலுக்குப் பாய்ந்த தண்ணீரை அமைச்சர்களும் அதிகாரிகளும் பூதூவி வேடிக்கை பார்த்ததுதான், கொடூரத்தின் உச்சம்.
ஒரு விநாடிக்கு ஒரு லட்சத்து 28,000 கன அடி வீதம், ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 4 வரையிலான 5 நாள்களுக்கு மொத்தம் 55 டி.எம்.சி நீர், கொள்ளிடம் வழியாக அப்படியே கடலுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது (உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகா நமக்குத் தரவேண்டிய தண்ணீரின் அளவு, 50 டி.எம்.சி மட்டுமே).
இந்த விஷயம், `பசுமை விகடன்' முகநூல் பக்கத்திலும், இணைய தளத்திலும் விவசாயிகளின் வேதனை மற்றும் கண்டனக் குரலுடன் ஆகஸ்ட் 4-ம் தேதி அன்று பதிவிடப்பட்டது. ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் முகமூடி கிழிபட்டது. ஆனாலும், கொஞ்சம்கூட குற்ற உணர்ச்சியே இல்லாமல், கை தவறி ஒரு குவளை தண்ணீர் கீழே விழுந்து விட்டது என்பதுபோல, மறுநாள் காவிரி உள்ளிட்ட ஆறுகளில் கூடுதல் தண்ணீரைத் திறந்துவிட்டு, கமிஷன் கணக்குப் பார்க்க போய் விட்டார்கள். ஆம்... காவிரி டெல்டாவே காய்ந்து கிடக்கும்போது, மொத்த நீரையும் இப்படிக் கடலுக்கு அனுப்பியதன் பின்னணியில் மறைந்திருப்பது கமிஷன் கணக்கு மட்டுமே.தலையங்கம்
ஜூன் மாதம் 12-ம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். அதனால், தூர்வாருதல், கரைகள், பாலங்கள் மற்றும் மதகுகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை முன்கூட்டியே முடித்திருக்க வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஜூலை 30 வரையில் கூட பணிகள் முடிக்கப்படவில்லை. பெரும்பாலும் ஆளும் தி.மு.க-வினர்தான் மொத்தமாக கான்ட்ராக்ட் எடுத்து பணம் பண்ணிக் கொண்டுள்ளனர். தண்ணீரைத் திறந்துவிட்டால், இந்த ஆண்டே பில் போட்டு அவர்கள் பணம் பார்க்க முடியாது... அதன் மூலமாக அவர்களிடமிருந்து கமிஷனையும் கறக்க முடியாது. அதேசமயம், கொள்ளிடத்தில் மொத்தமாகத் தண்ணீரைத் திறந்துவிட்டால், அங்கே புதிதாக மணல் சேகரமாகும். அதையும் அள்ளி, பணத்தை மூட்டைக் கட்டலாம் என ஒவ்வொரு துளியிலும் கமிஷன்... கமிஷன்... கமிஷன் மட்டுமே.
இப்படிக் கடலுக்கு தாரைவார்க்க முடிவெடுத்த அகங்காரம் படைத்த அதிகாரிகள் யார், யார்? அவர்களுக்கு உத்தரவிட்ட அநியாயக்கார மக்கள் பிரதிநிதிகள் யார், யார்? இவர்கள் அனைவருக்கும் பண மழை பொழிந்த ஒப்பந்ததாரர்கள், மணல் மாஃபியாக்கள் யார், யார்?
திட்டமிட்டு இதை அரங்கேற்றிய இவர்கள் அத்தனை பேருமே குற்றவாளிகள். அனைவர் மீதும் கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆனால், ஆட்சியாளர்களுக்கும் இந்த அநியாயத்தில் பங்கிருப்பதால், நீதிமன்றங்கள்தான் தாமாக முன்வந்து அத்தனை பேரையும் கூண்டிலேற்றி... தண்டிக்க வேண்டும்.
இதோ, மேட்டூரில் தண்ணீர் குறைய ஆரம்பித்து விட்டது. நீதிகேட்டு உச்ச நீதிமன்றப் படியேறுதல்... மத்திய அரசுக்கு மனு கொடுத்தல்... காவிரி டெல்டாவில் கடையடைப்பு என்று கரை வேட்டியை உதறிக்கொண்டு கிளம்பிவிடுவார்கள்.
துரோகம், அரசியல் மோசடி, நயவஞ்சகம் என்று பலவற்றையும் உள்ளடக்கியபடி நூற்றாண்டுக்கும் மேலாகத் தொடர்கிறது... காவிரி விவசாயிகளின் துன்பியல் வரலாறு!
http://dlvr.it/TBpmPz