Thursday 15 August 2024
Wednesday 14 August 2024
பெண் மருத்துவர் Rape & Murder: `குற்றம்சாட்டப்பட்டவரை காப்பாற்ற முயற்சி?!' - ராகுல் கண்டனம்
மேற்கு வங்கத்தில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை மாநில காவல்துறை முதலில் விசாரணைக்கு எடுத்த நிலையில், தற்போது சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது.ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - கொல்கத்தா
மேலும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றன. இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூரமான செயலால், மருத்துவர்கள் சமூகம் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்? ராகுல் காந்தி
நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் தோல்வியடைந்தது ஏன்... ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சமயத்தில், தாள முடியாத வலியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நான் நிற்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதோடு, இந்த சமத்துவம் குற்றவாளிகளுக்கு சமுதாயத்தில் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Doctor protest: `எனக்கும் மகள் இருக்கிறார்' - போராட்டத்தில் கலந்துகொள்ளும் திரிணாமுல் காங்கிரஸ் M.P
http://dlvr.it/TBwBWg

``நான் மோடி அரசை விமர்சிப்பதால் எனது கணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்" - சுப்ரியா சுலே காட்டம்
முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தனது பெரியப்பா மகனும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார் மனைவியை பாராமதி தொகுதியில் தோற்கடித்தார். இத்தேர்தல் தோல்வி அஜித் பவாருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து சுப்ரியா சுலேவுக்கு மத்திய அரசு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்ரியா சுலேயின் வாட்ஸ் ஆப் ஹேக் செய்யப்பட்டது. ஹேக் செய்த நபர் 400 டாலர் கேட்டு மிரட்டினார். இது நடந்து அடுத்த சில நாட்களில் சுப்ரியா சுலேயின் கணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இது குறித்து சுப்ரியா சுலே அளித்துள்ள பேட்டியில், ''நான் பிரதமர் நரேந்திர மோடி அரசை விமர்சனம் செய்ததால் எனது கணவருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. எத்தனை முறை நோட்டீஸ் வந்திருக்கிறது என்ற விபரத்தை தயாரிக்கும்படி எனது கணவரிடம் தெரிவித்துள்ளேன். நாங்கள் அதிகாரத்தில் இருந்த போது நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. இப்போது எனது கணவர் அந்த நோட்டீஸ்களுக்கு பதிலளித்துக்கொண்டிருக்கிறார். மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்ததால்தான் மகாராஷ்டிரா அரசு பெண்கள் மற்றும் விவசாயிகளுக்கு பணம் சப்ளை செய்து கொண்டிருக்கிறது.
பணம் கொடுப்பதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். புதிய திட்டங்கள் மூலம் உங்களுக்கு பணம் கொடுப்பதாக அரசு நினைக்கிறது. ஆனால் அந்த பணம் முழுவதும் நீங்கள் வரியாக கொடுத்த பணமாகும். விவசாயிகளின் உரம், டிராக்டர் போன்ற விவசாயிகள் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி.வரி வசூலிக்கப்படுகிறது''என்றார்.
மேலும் சுப்ரியாவை மத்திய அரசு பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் கண்காணிப்பதாக தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) குற்றம் சாட்டி இருக்கிறது. இது குறித்து அக்கட்சி செய்தி தொடர்பாளர் மகேஷ் அளித்த பேட்டியில், ''மத்திய அரசு மக்களவை தேர்தலில் பாராமதியில் தோல்வி அடைந்த பிறகு சுப்ரியா சுலே பேசுவதை பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் கண்காணித்து வருகிறது.” என்றிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TBvRWT

`உள் இட ஒதுக்கீடு தீர்ப்பு; பட்டியல் சமூகத்தை பல்வேறு குழுக்களாக பிரிக்கும்' - திருமாவளவன் விளக்கம்!
பட்டியல் சமூக பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம், மாநிலங்களுக்கு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் இத்தகைய தீர்ப்பை வரவேற்று வரும் சூழலில், விடுதலை சிறுத்தைகள் கட்சி அத்தீர்ப்பைக் கண்டித்து ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருப்பது, பேசுபொருளாகியுள்ளது.
உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரம் மாநிலங்களுக்கு இருக்கிறது என தீர்ப்பு வழங்கியதோடு எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்துவது அவசியம் என்ற கருத்தையும் நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள். நீதிபதி பி.ஆர்.கவாய், ‘எஸ்.சி., எஸ்.டி பிரிவில் கிரீமிலேயர் நடைமுறையை அமல்படுத்த புதிய கொள்கையை வரையறுக்க வேண்டும். இது தொடர்பாகச் சட்டம் இயற்றப்பட வேண்டும்’ என்றும் கூறியிருக்கிறார். விசிக ஆர்ப்பாட்டம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ``ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூகநீதியை நிலைநாட்டும் நமது பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது” என வரவேற்றார்.
அதேபோல் அ.தி.மு.க-வும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். ஆனால் இத்தீர்ப்பையும் கிரீமிலேயர் கருத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி கடுமையாக எதிர்த்ததோடு, ஆர்ப்பாட்டமும் நடத்தியிருக்கிறது.உச்ச நீதிமன்றம்
ஆர்ப்பாட்ட நிகழ்வில் பேசிய வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், ``உள் ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் மாநில அரசுகளுக்கான உள் ஒதுக்கீடு உரிமையும், கிரிமிலேயர் ஆகிய இரண்டும்தான் இங்கே மிக முக்கியமான பிரச்சனைக்குரியவை என்பதை நாம் உணர வேண்டும். தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஆந்திராவில் வழங்கப்படும் உள் ஒதுக்கீட்டிற்கும் வேறுபாடுகள் உண்டு. தமிழ்நாட்டில் அருந்ததியருக்கு வழங்கப்படுவது sub quota அதாவது... பட்டியல் சமூக இட ஒதுக்கீட்டில் முன்னுரிமை. ஆனால் ஆந்திராவில் வழங்கப்படுவது sub class. இது பட்டியல் சமூகத்தை தனி அங்கமாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்குவது. எனவே பட்டியலின சமூகத்தின் இட ஒதுக்கீட்டு உரிமையையே நசுக்கும் விதமாக இத்தீர்ப்பு அமைகிறது” என்றார். ஆர்ப்பாட்டம் நடத்திய வி.சி.க
தொடர்ந்து பேசியவர், ``பட்டியல் சமூகத்தினரைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து இட ஒதுக்கீட்டைப் பங்கீடு செய்வதற்கு மாநில அரசுகளிடம் அதிகாரம் அளிப்பதையும்; வருமான வரம்பு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கிரீமிலேயர் முறையைத் திணிக்க முயல்வதையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு செய்வதற்கு இந்திய ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.
இத்தீர்ப்பை எதிர்ப்பதனால், பல தரப்பினர் வி.சி.க-வை எதிர்த்து வருகின்றனர். அதற்கு பதிலளிக்கும் விதமாகப் பேசிய திருமாவளவன், ``சமூகநீதி குறித்தும் ஜனநாயகம் குறித்தும் வி.சி.க-வுக்கு யாரும் பாடமெடுக்க வேண்டிய அவசியமில்லை. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்ப்பதினால் சாதி அமைப்புகள் உள்ளிட்ட பலர் விமர்சிக்கின்றனர். இதனால் தமிழ்நாட்டில் உள்ள அருந்ததியினருக்கான உள் ஒதுக்கீட்டில் எந்த பாதிப்பும் வராது. மாநில அரசுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் வழங்குவதைத்தான் கடுமையாக எதிர்க்கிறோம். சாதி இந்துகளின் அரசுதான் இந்தியா முழுவதும் பல்வேறும் மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இந்த அதிகாரத்தை கொண்டு உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித் மக்கள் சிதறடிக்கப்படுவார்கள்” என்றார்.
ஆர்ப்பாட்ட நிகழ்வில் வி.சி.க பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனைசெல்வன், துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.``தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!” - வலியுறுத்தும் திருமாவளவன்
http://dlvr.it/TBv3kr

Tamil News Live Today: செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டதாக தற்போதைய திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். வருடக்கணக்கில் இந்த வழக்கு விசாரணை நீண்டு கொண்டிருக்கும் நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கேட்டு தொடர்ச்சியாக முயன்று வருகிறது. அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் கடும் ஆட்சேபனையும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை, நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி
அப்போது அமலாக்கத்துறையிடம் உச்ச நீதிமன்றம், காட்டமாகச் சில கேள்விகளை எழுப்பியது. அதைத் தொடர்ந்து இரு தரப்பு வாதங்களைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை, மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்த நிலையில் இன்று (14-08-2024) செந்தில் பாலாஜியின் ஜாமீன் மேல்முறையீடு மனு வழக்கில், தீர்ப்பு வழங்கவிருக்கிறது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா அல்லது என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் எகிறியிருக்கிறது! `புனையப்பட்ட வழக்கு..!’ - குற்றச்சாட்டு பதிவு; மறுத்த செந்தில் பாலாஜி - நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
http://dlvr.it/TBtnbd

சட்டமன்றத் தேர்தல்களை குறிவைத்தே வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை கொண்டு வருகிறதா மத்திய அரசு?
ஜி.கே.நாகராஜ்
ஜி.கே.நாகராஜ், மாநில விவசாய அணித் தலைவர், பா.ஜ.க
“நாட்டு மக்களுக்காக ஒரு நல்ல திருத்தத்தைக் கொண்டுவரும்போது அதை எதிர்ப்பதே எதிர்க்கட்சிகளுக்கு வேலையாகிவிட்டது. ஏற்கெனவே, முத்தலாக் தடைச் சட்டத்தை கொண்டுவந்தபோதும் இவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பா.ஜ.க கொண்டுவந்த முத்தலாக் தடைச் சட்டத்தை இஸ்லாமியப் பெண்கள் கொண்டாடி வருவதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம். அதேபோலவே, இந்த வக்பு வாரிய சட்டத் திருத்தமும், இஸ்லாமிய மக்களுக்குப் பெருமளவில் பலனளிக்கும். தமிழகத்தில் எப்படி அறநிலையத்துறையின் மூலம் இந்துக்கள் பயன்பெறாமல், ஆளுங்கட்சியினர் மட்டும் பயன்பெறு கிறார்களோ... அதேபோல, வக்பு சொத்துகள் மூலம் ஒரு தரப்பினர் மட்டுமே பயன்பெறுகிறார்கள். அந்த நிலையை மாற்றி, அனைத்து இஸ்லாமிய மக்களுக்கும் பலன் கிடைக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப் பட்டிருக்கிறது. ‘சிறுபான்மையினரின் பாதுகாவலர்’ வேடம் போடும் காங்கிரஸ், வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்திருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. முத்தலாக் முறைக்குத் தடையும் கொண்டுவர முன்வரவில்லை. அவர்களுக்குத் தேவை சிறுபான்மையினரின் வாக்குகள் மட்டுமே. பா.ஜ.க ஒருபோதும் வாக்கு அரசியல் செய்யாது. இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்ப்பதன் மூலம் எதிர்க்கட்சிகள்தான் இஸ்லாமிய மக்களுக்குத் துரோகம் செய்கின்றன என்றுதான் அர்த்தம்.”ஹசீனா சையத்
ஹசீனா சையத், தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர்
“பா.ஜ.க-வின் சுயநல அரசியலைச் சரியாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் கே.சி.வேணுகோபால். மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதற்காக ஒவ்வொரு தேர்தலுக்கும், பா.ஜ.க ஒவ்வொரு மாதிரியான யுத்தியைக் கையிலெடுக்கும். 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்காக புல்வாமா தாக்குதல், 2024 தேர்தலுக்காக ராமர் கோயில்போல, வரப்போகும் மகாராஷ்டிரா, ஹரியானா தேர்தலை மனதில் வைத்துக்கொண்டே வக்பு வாரிய சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். ‘இஸ்லாமியர்களுக்குச் சொந்தமான ஒரு வாரியத்தில் மாற்று மதத்தினரும் உறுப்பினர் ஆகலாம்’ என்று திருத்தம் கொண்டுவந்ததிலிருந்தே பா.ஜ.க-வின் அயோக்கியத்தனத்தைப் புரிந்துகொள்ள முடியும். இதேபோல, ‘ராமர் கோயில் நிர்வாகத்தில் மாற்று மதத்தினரை அனுமதிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையைச் சிறுபான்மையினர் யாராவது முன்வைத்திருந்தால், இந்நேரம் அதை மதக்கலவரமாகவே மாற்றியிருப்பார்கள் பா.ஜ.க-வினர். தங்கள் அமைச்சரவையில் ஓர் இஸ்லாமியருக்குக்கூட வாய்ப்பு கொடுக்காத பா.ஜ.க-வுக்கு, சிறுபான்மையினரைக் கரித்துக்கொட்டுவதையே வழக்கமாக வைத்திருக்கும் பா.ஜ.க-வுக்கு இஸ்லாமிய மக்கள்மீது ஏன் இந்த திடீர் அக்கறை... நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்கவும், பிரிவினையைத் தூண்டவும் பா.ஜ.க அரசு கொண்டுவரும் எந்தச் சட்டத்தையும், சட்டத் திருத்தத்தையும் நிறைவேற்ற அனுமதிக்க மாட்டோம்.”
http://dlvr.it/TBtbCF

Tuesday 13 August 2024
மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்... சவால் விடும் முதலமைச்சர்... சமாளிக்குமா சென்னை?
"எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம்" என்று மீண்டும் சவால் விட்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2021-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஒவ்வொரு பருவமழைக்கு முன்பாகவும், இப்படி முழங்குவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார் ஸ்டாலின். அதேபோல, சென்னை மூழ்குவதும் வாடிக்கையாகவே இருக்கிறது என்பதுதான் கொடுமை.கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள்
'வாய்புளித்ததோ... மாங்காய் புளித்ததோ' என்று சொல்லவில்லை. கடந்த ஆண்டின் டிசம்பரில் வரலாறு காணாத அளவுக்கு சென்னையே மூழ்கிப் போனதை யாராவது மறுக்க முடியுமா? பல ஆயிரம் கோடிகளை நிவாரணப் பணிக்காக செலவிட்டதை மறுக்க முடியுமா? பற்பல ஆயிரம் கோடிகளைக் கேட்டும் மத்திய அரசு கொடுக்காமல் இருப்பதையும் மறக்க முடியுமா? வெள்ளாத்தல் பல உயிர்கள் பலியாகின. வீடுகள், வாகனங்கள், உடமைகள் என்று எல்லாவற்றையும் இழந்து வீதிக்கு வந்தனர் மக்கள். இதையெல்லாம் மறக்கமுடியுமா?
தி.மு.க ஆட்சியைப் பிடித்த 2021-ம் ஆண்டிலிருந்து கோடி கோடியாகக் கொட்டி மழைநீர் கால்வாய்களைச் சரி செய்துகொண்டே இருக்கிறார்கள். இந்த முறையும்கூட செப்டம்பருக்குள் முடித்துவிடுவோம் என்று வாக்குறுதிக் கொடுத்தார், கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் (கடைசியில், அவரையே வேறு இடத்துக்கு மாற்றிவிட்டது தனிக்கதை). இதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம், இந்த தி.மு.க அரசின் ஆமைவேக செயல்பாடுகளை.
இந்த லட்சணத்தில்தான், 'எவ்வளவு பெரிய மழை வந்தாலும் சமாளிப்போம்' என்று சவால் விடுகிறார் மு.க.ஸ்டாலின். மழைநீர் கால்வாய்களை சீரமைப்பது ஒருபக்கம் இருக்கட்டும். ஓரளவுக்கு சென்னையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் கூவத்தில் கல், மண் என்று கொட்டி மூடிக் கொண்டிருப்பதை முதலில் தடுத்து நிறுத்தவேண்டும். இல்லையென்றால்... 'இதுவரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னை வெள்ளக்காடாக மாறியது' என்று மீண்டும் வரலாறு படைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
பருவமழை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ‘எது எப்படி போனா எனக்கென்ன...’ என்று கூவம் ஆற்றில் மதுரவாயல்- துறைமுகம் ஈரடுக்கு நெடுஞ்சாலைக்கான பணிகளுக்காக மண்ணை கொட்டி சாலை அமைக்கும் பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள்மூடப்படும் கூவம்... காத்திருக்கும் பெருமழை வெள்ளம்... சென்னையை காப்பாற்றப்போவது யார்?
சமீபத்தில் பருவழை முன்னேற்பாடு குறித்தான ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. அப்போது பருவ மழைக்குள் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கல் மற்றும் மண் அகற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை. மாறாக, பறக்கும் சாலைக்கான பணிகள் தொடர்கின்றன. சொல்லப்போனால், கூடுதலாக கட்டடக்கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டி மேற்கொண்டும் கூவத்தை மேடாக்கிக் கொண்டுள்ளனர்.
வயநாடு சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதால் சென்னை, பருவமழைக்கு இப்போதே நீரியல் வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால், கூவம் ஆற்றுக்குள்ளேயே சாலைப் பணிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து, கடந்த மே மாதமே விகடன் இணையதளத்தில் கட்டுரைகளும், பசுமை விகடன் சமூக வலைதளத்தில் வீடியோக்களும் வெளியிட்டிருந்தோம். கட்டுரையை வெளியிட்ட கையோடு, சம்பந்தப்பட்ட துறைகளின் (1. முதன்மைச் செயலாளர், பொதுப்பணித்துறை, 2. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ), 3. தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், 4. பெருநகர சென்னை மாநகராட்சி, 5. தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு மற்றும் ஆறுகள் சீரமைப்புத்துறை, 6. சென்னை மாவட்ட ஆட்சியர், 7. தலைமைப் பொறியாளர் (நீர் வள அமைப்பு) மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொதுப்பணித்துறை.) அதிகாரிகளுக்கெல்லாம் விரிவான கடிதங்களையும் அனுப்பி வைத்தோம்.கூவம் ஆற்றில் கட்டுமான பணிகள்``செப்டம்பர் மாதத்துக்குள் கூவம் ஆற்றில் உள்ள கட்டடக் கழிவுகள் அகற்றப்படும்...'' - அமைச்சர் நேரு
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை கூட்டிய நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் அசோகன், 'மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலை திட்டப் பணி தொடர்பாக எங்களிடம் எந்த அனுமதியும் பெறவில்லை. எனவே, கூவம் ஆற்றில் திட்டத்தை நிறைவேற்றுவது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத் துறை சில உறுதிமொழிகளை இரண்டு நாள்களில் கையெழுத்திட்டுக் கொடுக்கவுள்ளனர். என்றாலும், அத்துமீறி பணிகளை மேற்கொண்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள காவல்நிலையங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மீது புகார் கொடுத்துள்ளோம். அதற்காகத் தற்போது பணிகள் நிறுத்தி வைத்துள்ளனர்’ என்று சொன்னார்.
இதுதொடர்பாக துறையின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு, 'கூவம் ஆற்றில் கொட்டப்படும் கட்டடக்கழிவுகளை உடனடியாக அகற்றவேண்டும். இதை உறுதிப்படுத்த வேண்டும்' என்று கடிதங்களை அனுப்பினார்கள். அவற்றின் நகல்களை நமக்கும் அனுப்பினார்கள். ஆனால், அதற்குப் பிறகுதான் பணிகள் இன்னும் வேகமெடுத்துள்ளன. முன்பு சின்ன வண்டிகளில் வந்து கொட்டியவர்கள், தற்போது பெரிய வண்டிகளில் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். கூடவே, 16 சக்கரங்கள் கொண்ட பெரிய லாரிகளில் பெரியபெரிய இரும்பு கட்டுமான அமைப்புகளையும் கூவத்துக்குள் கொண்டு வந்து குவிக்க ஆரம்பித்துள்ளனர். ஆகக்கூடி, தமிழ நீர்வளத்துறை சொன்னபடி எதுவுவே நடக்கவில்லை.கூவம் ஆற்றில் கட்டடக் கழிவுகள் அதன்மீது பணிகள்
கட்டட கழிவுகளைக் கொட்டினால் ஆற்றின் நீரோட்டம் பாதிக்கும் என்பதுகூட தெரியாதவர்கள்தான் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்களா... அல்லது பறக்கும் சாலையை அமைத்துக் கொண்டிருக்கும் கட்டுமான நிறுவனத்தின் 'கவனிப்பு'கள் காரணமாக கண், வாய் மூடிக்கிடக்கிறார்களா? என்றுதான் கேட்கத்தோன்றுகிறது!
http://dlvr.it/TBsrJf