Friday 16 August 2024
Thursday 15 August 2024
சுதந்திர தினம்: தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்றப்படாத தேசியக் கொடி - கண்டித்த பாஜக
இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடெங்கும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசு சார்பிலும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொடியேற்றப்பட்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் சிறந்த பஞ்சாயத்து, நகராட்சி, தேர்வுநிலை பேரூராட்சி, மாநகராட்சி என தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி சிறப்பிக்கபட்டு வருகிறது. அந்த வகையில், தூத்துக்குடி மாநகராட்சி தமிழகத்தின் 2வது சிறந்த மாநகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன் ஆகியோர் சென்னை சென்றுள்ளனர். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் புதிய கொடி கம்பத்தில் சுதந்திர தின நாளில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை. இதனைக் கண்டித்து தூத்துக்குடி பா.ஜ.க தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டன அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடிக்கம்பம்
அதில், “சுப்பிரமணிய பாரதி, வ.உ.சிதம்பரம்பிள்ளை, கட்டபொம்மன், வீரன் அழகுமுத்து கோன், வெள்ளையத்தேவன், சுந்தரலிங்கம் உள்ளிட்ட பல விடுதலைப் போராட்ட தலைவர்கள் பிறந்த மாவட்டம் தூத்துக்குடி. இந்த மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றப்படவில்லை. மேயர், துணை மேயர் வெளியூர் சென்ற நிலையில் தாங்கள் இல்லாமல் கொடி ஏற்றக்கூடாது என கட்டளையிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் தூத்துக்குடியில் இருந்த போதிலும் தேசியக்கொடி ஏற்றப்படவில்லை.
மாநகராட்சி அலுவலகத்தில் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்ட பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் என மாநகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் கொடி ஏற்றப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. திராவிடக் கட்சிகள் ஆட்சி செய்யக்கூடிய பகுதிகளில் இவ்வாறு சுதந்திரதினவிழாவை புறக்கணிப்பது கண்டனத்திற்குரியது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் பேசினோம், “மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பிரமாண்ட கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. பிராமாண்ட கொடிக் கம்பம்
ஆனால், கொடியேற்றுவதற்கான மோட்டார் பொருத்தும் பணி இன்னும் நிறைவடையவில்லை. அதனால், அந்த கம்பத்தில் கொடி ஏற்றப்படவில்லை. அதே நேரத்தில் மாநகராட்சி அலுவலக கட்டிட மேற்பகுதியில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டல அலுவலகங்களிலும் உதவி ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்து சுதந்திர தின விழாவை கொண்டாடியுள்ளனர். முழு காரணம் தெரியாமல் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TByRRx

தூத்துக்குடி: கிராம சபைக் கூட்டத்தில் கட்டபொம்மன் வேடமணிந்து மனு அளித்த கல்லூரி மாணவி!
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாப்பிள்ளை யூரணி ஊராட்சியில் ஜோதிபாசு நகர் எனும் பகுதியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் பல்வேறு அரசின் துறைகள் சார்ந்த அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டார்கள். கட்டபொம்மன் வேடத்தில் வந்த கல்லூரி மாணவி
கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் சரவணகுமார் தலைமை தாங்கினார். சாலை வசதி, மின் விளக்கு, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளித்தனர். அத்துடன் 12 முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தூத்துக்குடி ஏ.பி.சி மகாலெட்சுமி மகளிர் கல்லூரியில் மூன்றாவது ஆண்டு வேதியல் பிரிவில் கல்வி பயின்று வரும் மாணவி சந்தியா வீரபாண்டிய கட்டபொம்மன் வேடமணிந்து மனு அளிக்க வந்தார்.
திடீரென கட்டபொம்மன் வேடமணிந்து வந்தபோது அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இதுகுறித்து அந்த மாணவியிடம் பேசினோம், ”மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் குடியிருந்து வருகின்றனர். இந்த மக்களில் பல குடும்பங்களின் குடியிருப்பு மனைகளுக்கு இலவசவீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. கிராமசபைக் கூட்டம்
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்த பலனுமில்லை. ஏனென்றால் இந்த ஊராட்சி, தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்து 16 கிலோ மீட்டர் சுற்றளவு உள்ள பகுதியில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக்கூடாது என, தடை ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை ஆணையை ரத்து செய்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கிட வேண்டும் என, பாஞ்சாலங்குறிச்சி மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர், வீரபாண்டிய கட்டபொம்மனின் வேடமணிந்து மனு அளித்துள்ளேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TBy2qn

நகராட்சிகளை `மாநகராட்சி'களாக தரம் உயர்த்துவதன் பயன்கள் என்னென்ன?!
திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தி, அதற்கான ஆணைகளை புதிய மாநகராட்சிகளின் மாமன்றத் தலைவர்களிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். மேலும், `தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் உருவானவை என்பதைப் பெருமையோடு சொல்வோம்!' என்றும் சிலாகித்திருக்கிறார். இந்த நிலையில் நகராட்சிகளை மாநகராட்சிகளாக மாற்றுவதன் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்து அலசினோம். திருவண்ணாமலை
தமிழ்நாடு அரசின் அறிவிப்பிலேயே நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதனால் ஏற்படும் நன்மைகள், அதற்கான தேவைகள் குறித்து விரிவாகத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
ஏன் மாநராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட வேண்டும்?
``தமிழகம் நாட்டிலேயே அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் நகர்ப்புற மக்கள்தொகையின் சதவீதம் 48.45 ஆகும். தற்போது, மொத்த மக்கள்தொகையில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்கள்தொகை சதவீதம் 53 சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. விரைவான நகரமயமாக்கல், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் உருவாக்கப்பட வேண்டிய அடிப்படை உட்கட்டமைப்புகளையும், குடிமைச் சேவைகளையும் மேலும் சிறப்பாக வழங்குவதற்கான எண்ணற்ற சவால்களை உருவாக்கியுள்ளது. மாநிலத்தின் நகர்ப்புற பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்க, இந்த சவால்களை திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என அரசு கருதுகிறது.
தி.மு.க-வின் மூன்றாண்டு ஆட்சியில் உருவாக்கப்பட்ட மாநகராட்சிகள்:
இதன்படி, தி.மு.க அரசால் கடந்த 3 ஆண்டுகளில், 28 புதிய நகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சிபுரம், கடலூர், கும்பகோணம், கரூர், சிவகாசி ஆகிய 6 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. தரம் உயர்த்தப்பட்ட இந்நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் போதுமான நிதியை ஒதுக்கீடு செய்து, மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், வரலாற்றுத் தலைநகரமாக விளங்கிய புதுக்கோட்டை, கோயில் நகரமான திருவண்ணாமலை, தொழில் நகரமான நாமக்கல், கல்வி நகரமான காரைக்குடி போன்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டுமென பெறப்பட்ட கோரிக்கைகளை ஏற்று அந்நகரங்களையும், அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள விரைந்து நகரமயமாகி வரும் பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளையும் ஒன்றிணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 30.03.2023 அன்று அறிவித்தார்.நாமக்கல்
புதிதாக நான்கு மாநகராட்சிகள்:
இந்த அறிவிப்பினை செயல்படுத்துவது தொடர்பான உரிய பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டதன் அடிப்படையில், 4 புதிய மாநகராட்சிகளை அமைத்து உருவாக்குதற்கான நடைமுறைகளை தொடங்கிட தற்போது ஆணையிடப்பட்டிருக்கிறது. இதன்படி, புதுக்கோட்டை நகராட்சி மற்றும் 11 ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை மாநகராட்சி, திருவண்ணாமலை நகராட்சி மற்றும் 18 ஊராட்சிகள், அடி அண்ணாமலையிலுள்ள பகுதிகள் ஆகிவற்றை ஒன்றிணைத்து திருவண்ணாமலை மாநகராட்சி, நாமக்கல் நகராட்சி மற்றும் 12 ஊராட்சிகளை ஒன்றிணைத்து நாமக்கல் மாநகராட்சி, காரைக்குடி நகராட்சி மற்றும் இரண்டு பேரூராட்சிகள், ஐந்து ஊராட்சிகளை ஒன்றிணைத்து காரைக்குடி மாநகராட்சி என மொத்தம் 4 புதிய மாநகராட்சிகளை உருவாக்குவது தொடர்பான அரசின் உத்தேச முடிவினை அறிவித்து 15.3.2024 அன்று ஆணைகள் வெளியிடப்பட்டன.
இதனால் ஏற்படும் பயன்கள் என்ன?
இதனடிப்படையில், அரசு, பெருநகரங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ள நகர்ப்புறத் தன்மை கொண்ட, விரைந்து நகரமயமாகி வரும் பகுதிகளிலும் நகரங்களுக்கு இணையான தரமான சாலைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், ஆற்றல்மிகு மின்விளக்குகள், பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திதரும் நோக்கோடு, விரைவாக நகரமயமாகி வரும் பகுதிகளை அவற்றின் அருகாமையில் அமைந்துள்ள நகரங்களோடு இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட நகராட்சி அல்லது மாநகராட்சிகளாக அமைத்து உருவாக்கி வருகிறது.தமிழ்நாடு அரசு
1998-ஆம் ஆண்டு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டு புதிய மாநகராட்சிகள் அமைத்து உருவாக்கப்படும். இதன்மூலம், புதுக்கோட்டை, நாமக்கல், திருவண்ணாமலை, காரைக்குடி ஆகிய நகராட்சிகள் மற்றும் அதன் அருகாமையில் அமைந்துள்ள உள்ளாட்சி பகுதிகளில் சாலைகள், பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேலும் சிறப்பாக ஏற்படுத்தவும் மற்றும் இப்பகுதியில் வசிக்கும் மக்கள், பல்வேறு தேவைகளுக்காக இப்பகுதிகளுக்கு வந்து செல்வோர், சுற்றுலாப் பயணிகள், வணிக நிறுவனங்கள், தொழில் துறையினர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்பாகவும் அமையும்!" என தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TBxMwt

Live சுதந்திர தினம்: "மேலும் 75,000 பேருக்கு அரசு வேலை டு முதல்வர் மருந்தகம்" - முதல்வர் ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்
முதல்வர் ஸ்டாலின் வழங்கிய விருதுகள் விவரம்
நாடாளுமன்றத்தில் தமிழில் பேச அனுமதி கிடைக்க செய்தவரான முனைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
அறிவியல், கலை, மாணவர் நலன் ஆகிய துறையில் சீரிய பங்களிப்புக்காக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருது, சந்திரயான் -3 மிஷனின் திட்ட இயக்குனர் முனைவர் ப.வீரமுத்து வேலுக்கு வழங்கப்பட்டது.
துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, வயநாடு நிலச்சரிவு பகுதிகளில் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிய செவிலியர் அ.சபீனாவுக்கு வழங்கப்பட்டது.
கலைஞர் உதவி தொகை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களில் தகுதிமிக்கவர்களை தேர்வு செய்த, தலைமை தொழிற்நுட்ப அலுவலர் த.வனிதாவுக்கு முதலமைச்சரின் நல் ஆளுமை விருது வழங்கப்பட்டது.
``தமிழ்நாட்டு மக்கள் தொடந்து அளித்து வரும் வெற்றிக்கு தலை வணங்குகிறேன்” - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``ஜனவரி மாதம் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில், 6,64,180 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம், 14,54,712 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 12,35,945 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் உள்ளது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். இறையூரில் தொழிற் பூங்கா, திருச்சி, மதுரையில் புதிய டைட்டில் பூங்கா, விழுப்புரம், திருப்பூர்,வேலூர், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் மினி டைட்டில் பூங்கா, பரந்தூரில் விமான நிலையம் என திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது.
இன்று சில திட்டங்களை அறிவிப்பதில் மகிழ்கிறேன். முதல்வர் மருந்தகம், ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் தொழில் தொடங்க முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம், தியாகிகள் ஓய்வூதியம் ரூ,1000 உயர்த்தி ரூ.21,000-மாக வழங்கப்படும். தியாகிகளின் குடும்ப ஓய்வூதியத்தில் ரூ.500 உயர்த்தி ரூ.11,500 வழங்கப்படும். இயற்கை பேரிடர் ஏற்படும் பகுதியை ஆய்வு செய்ய பல்துறை அறிஞர்கள் மூலம் ஆய்வு செய்யப்படும். இந்த குழு எதிர்காலத்தில் ஆபத்துகளை குறைக்க அரசு மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கை சமர்பிக்க வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு திகழவேண்டும் என்பதற்காக என்னை நான் ஒப்புக் கொடுத்திருக்கிறேன். மக்களுக்கு உண்மையாக இருப்பதே மக்கள் தொண்டு என செயல்பட்டு வரும் எனக்கு தமிழ்நாட்டு மக்கள் தொடந்து அளித்து வரும் வெற்றிக்கு தலை வணங்குகிறேன்.” என்றார்.
`உங்கள் குடும்பங்களில் ஒருவனாக..!’ - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சி பல்துறை வளர்ச்சியாக இருந்து வருகிறது. குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள், விடியல் பயணம் திட்டம், புதுமை பெண் திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கல்வி வளர்ச்சி திட்டங்களில், இந்தியாவின் முன்னோடி திட்டமான முதல்வரின் காலை உணவுத் திட்டம். இந்த திட்டத்தால் மாணவர்களின் வருகை அதிகரித்திருக்கிறது. இதுபோன்ற திட்டங்களால் நமது மாநிலம் உயர் கல்வியில் சிறந்து விளங்குகிறது என ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் சொல்லுகின்றன.
மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் கப்போம், நான் முதல்வன் திட்டம், கல்லூரி கனவு திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என உங்கள் குடும்பங்களில் ஒருவனாக இந்த திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். உலகளவில் தமிழ்நாடு சிறந்து விளங்க வேண்டும் எனபதுதான் என் கனவு. ஒன்றிய அரசின் தரவுகளின் படி, கடந்த மூன்று ஆண்டுகளில் 77,79,000 வேலை வாய்ப்புகள் உங்கள் திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு தேர்வு வாரியங்கள் மூலம் 32,774 பேருக்கும், அரசு அமைப்புகளில், 32,709 பேருக்கும் அரசு பணி நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. 2026 ஜனவரி மாதத்துக்குள் 75,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்” என்றார்.
"வளர்ச்சி என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல..!" - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``திராவிட மாடல் என்றால் என்ன எனக் கேட்பவர்களுக்கு பல முறை பதிலளித்திருந்தாலும், இங்கு மீண்டும் அதை நினவு படுத்துகிறேன். சமூக நிதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி ஆகிய கருத்தியலின் அடித்தளத்தில் இருக்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம். தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும். பொருளாதாரத்தில் மட்டும் வளர்ச்சி என்பது அல்ல. அது சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும். பொருளாதாரம், சமூகம், கல்வி, சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்திலும் இருப்பதுதான் உண்மையான வளர்ச்சி. அதுதான் பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் காண விரும்பிய வளர்ச்சி.” என்றார்.
``இந்த வாய்ப்பை எனக்கு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்றென்றும் நன்றிக்குறியவனாவேன்" - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் ``மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என நடந்த போராட்டம். இந்த உரிமையை பெற்றுதந்ததால்தான் நானும் 4-வது ஆண்டாக சென்னை கோட்டையில் கோடி ஏற்றி பெருமை அடைகிறேன். இந்த வாய்ப்பை எனக்கு தந்த தமிழ்நாட்டு மக்களுக்கு என்றென்றும் நன்றிக்குறியவனாவேன். விடுதலைக்காக, உடமை, உடல் உறுப்புகள், குடும்பம், சொத்து, உயிர் என அனைத்தையும் இழந்த விடுதலை வீரர்களுக்கு, அவர்கள் வாழ்ந்த பகுதியில் சிலை, மணிமண்டபம், நினைவு சின்னங்கள் அமைத்து போற்றி வருகிறோம். 2021-ல் எனது தலைமையில் அமைந்திருக்கும் உங்கள் திராவிட மாடல் ஆட்சியில், கப்பலோட்டிய தமிழன் சிதம்பரனாருக்கும், அஞ்சலை அம்மாளுக்கும், நாமக்கல் கவிஞருக்கும் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
திவான் பகதூர் திராவிட மணி ரெட்டை மாலை சீனிவாசனுக்கு மணி மண்டபம், வீரர் சுந்தர லிங்கம் அவர்களுக்கு சிலை, பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு இரண்டு மண்டபம், இம்மானுவேல் சேகரனாருக்கு திருவுருவ சிலை, மணி மண்டபம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குயிலி, திருப்பூர் குமரன், தியாகி அம்பலம் அம்பல் ஆகியோருக்கான மணி மண்டபம், திருவுருவ சிலை நிறுவும் பணிகள் நடந்து வருகிறது. இந்த தியாகிகளின் கனவையும் நிறைவேற்றி வருக்கியது நமது திராவிட மாடல் அரசு.” என்றார்,
``இதுவும் மாநில உரிமைக்கான போராட்டம்தான்..!" - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``விடுதலை நாள் என்பது அரசியல் விடுதலை நாள் என்பது மட்டுமல்ல. பண்பாட்டு விழாவாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது ஆனந்த சுதந்திரம் அடைந்த நாள்மட்டுமல்ல. ஆனந்தமான இந்தியாவை அடுத்தடுத்த ஆண்டுகளில் உருவாக்க திட்டமிடும் நாள். விடுதலை நாளில் மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை 50 ஆண்டுகளுக்கு முன்னால், முதன்முதலில் 1974-ம் ஆண்டு பெற்று தந்தவர் நமது முன்னாள் முதல்வர் கலைஞர். இதுவும் ஒரு விடுதலைப் போராட்டம் தான். மாநிலங்களுக்கு அதிக உரிமை வேண்டும் என நடந்த போராட்டம்.” என்றார்,
``ஒருவண்ணமல்ல நமது தேசிய கொடி” - முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின், ``வெளிநாடுகளின் உதவியையும் பெற்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படை நடத்தியபோது, அவருடன் கரம் கோர்த்தவர்கள் தமிழ்நாட்டு வீரர்கள். விடுதலை அடைய கால நிர்ணயம் இல்லை எனத் தெரிந்தும், உயிரையும் இழந்தவர்கள் வாழ்ந்த மண் இந்த தமிழ் மண். அறவழியில் எதிரியை பணியவைத்த காந்தியடிகள் பின்னால் முழு மனதுடன் இந்தியா அணி வகுந்தது. அதில் தமிழ்நாடு முழுமையாக கைகோர்த்து நின்றது. முதல்வர் ஸ்டாலின்
சத்தியப் பாதையில் எத்தனை சோதனைகள் வந்தாலும், அதற்காக அணிவகுத்து நின்றவர்கள் தமிழ்நாட்டின் தியாகிகள். இவர்களின் தியாகத்தால்தான் விடுதலை காற்றை சுவைத்தோம். நமக்கான நாடு நமதே என்பதை உணர்ந்தோம். 77 ஆண்டுகளை கடந்துவிட்டது விடுதலை இந்தியா. தியாகிகளின் கனவான அனைவருக்குமான இந்தியாவை உருவாக்கி வளர்த்து வருகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை, ஒருமைபாடு, ஒருங்கிணைந்த வளர்ச்சி இவற்றின் ஒன்றுபட்ட வலிமையே நாட்டின் வலிமையாக உலகுக்கு காட்டி வருகிறோம். ஒருவண்ணமல்ல நமது தேசிய கொடி. அது மூவண்ணக் கொடி. நமது பன்முகத் தன்மையின் அடையாளம் இந்த கொடி.” என்றார்.
'தாயின் மணிக்கொடிப் பாரீர்..." - தேசியக் கொடியை ஏற்றி உரையை தொடங்கினார் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிவைத்து மரியாதை செய்தார். அதைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், ``தாயின் மணிக்கொடிப் பாரீர் என்ற பாடலை பாடும் தகுதியை தந்த இந்திய விடுதலை வீரர்களை வணங்கி உரையை தொடர்கிறேன். நாட்டு மக்களுக்கு விடுதலை நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். விடுதலை பெற்று தந்த வீரர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் போற்றுவோம். அவர்கள் எந்த நோக்கத்துக்காக போராடி சுதந்திரம் பெற்று தந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேற இந்த நாளில் உறுதிஏற்போம். இந்த விடுதலை 300 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகு கிடைத்தது." என்றார்.
ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
இந்திய தேசத்தின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் புனித ஜார்ஜ் கோட்டையில் காலை 9 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி உரையாற்றுகிறார். முதல்வர் ஸ்டாலின் தேசியக்கோடி ஏற்றியதும், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கௌரவிக்கும் விதமாக விருதுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.
சென்னை சுதந்திரதின விழா! நேரலை
கோட்டைக் கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சுதந்திர தின விழாவுக்கான அணிவகுப்பு ஒத்திகை
இந்தியாவில் சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்திருக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக் கொத்தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 4-வது ஆண்டாக தேசியக்கொடி ஏற்றிவைத்து உரையாற்றுகிறார். கோட்டைக் கொத்தளத்துக்கு வரும்முன் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் முதல்வர், காலை 8 மணிக்கு தேசியக்கொடியை ஏற்றுகிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88
">
https://tinyurl.com/crf99e88
/>
http://dlvr.it/TBx72K

Wednesday 14 August 2024
பெண் மருத்துவர் Rape & Murder: `குற்றம்சாட்டப்பட்டவரை காப்பாற்ற முயற்சி?!' - ராகுல் கண்டனம்
மேற்கு வங்கத்தில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தை மாநில காவல்துறை முதலில் விசாரணைக்கு எடுத்த நிலையில், தற்போது சிபிஐ-க்கு இந்த வழக்கு மாற்றப்பட்டிருக்கிறது.ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - கொல்கத்தா
மேலும், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக விமர்சித்தும் வருகின்றன. இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி பல்வேறு கேள்விகளை எழுப்புவதாகத் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து ராகுல் காந்தி தனது X சமூக வலைதளப் பக்கத்தில், ``கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய மனிதாபிமானமற்ற கொடூரமான செயலால், மருத்துவர்கள் சமூகம் மற்றும் பெண்கள் மத்தியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக குற்றம் சாட்டப்பட்டவரைக் காப்பாற்றும் முயற்சி, மருத்துவமனை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின்மீது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவ கல்லூரி போன்ற இடங்களில் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளை எப்படி வெளியில் படிக்க வைப்பார்கள்? ராகுல் காந்தி
நிர்பயா வழக்குக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட கடுமையான சட்டங்கள் கூட இதுபோன்ற குற்றங்களைத் தடுப்பதில் தோல்வியடைந்தது ஏன்... ஹத்ராஸ் முதல் உன்னாவ் வரையிலும், கதுவா முதல் கொல்கத்தா வரையிலும் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் சம்பவங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தீவிர விவாதங்களை நடத்தி உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த சமயத்தில், தாள முடியாத வலியால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பக்கம் நான் நிற்கிறேன். அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். அதோடு, இந்த சமத்துவம் குற்றவாளிகளுக்கு சமுதாயத்தில் முன்னுதாரணமாக இருக்கும் வகையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்" என்று ட்வீட் செய்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88Doctor protest: `எனக்கும் மகள் இருக்கிறார்' - போராட்டத்தில் கலந்துகொள்ளும் திரிணாமுல் காங்கிரஸ் M.P
http://dlvr.it/TBwBWg