Monday 2 September 2024
Bulldozer Justice: புல்டோசர் நீதி... ``இது சரியான அணுகுமுறை அல்ல" - சாட்டை எடுத்த உச்சநீதிமன்றம்!
புல்டோசர் நீதி குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது உச்ச நீதிமன்றம். எப்படி ஒரு குற்றவாளிக்குச் சொந்தமானது என்பதற்காக ஒரு வீடு இடிக்கப்படலாம் எனக் கேள்வி எழுப்பியதுடன், நாடு முழுவதும் வீடுகளை இடிப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
மனுதாரர் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள், துஷ்யந்த் டேவ், சியு சிங் ``நாடு முழுவதும் புல்டோசர் நீதி பரவாமல் இருக்க நடவடிக்கைத் தேவை" என வாதிட்டனர். உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய்ம.பி: பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி; புல்டோசர் ஆக்ஷன் எடுத்த பெண் காவலர்கள்! - நடந்தது என்ன?
நீதிபதி பி.ஆர்.கவாய், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசு சார்பில் வாதாடிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எந்த சொத்தும் ஒருவர் குற்றவாளி என்பதற்காக இடிக்கப்படுவதில்லை, சம்பந்தப்பட்ட கட்டடம் சட்டத்துக்குப் புறம்பானதாக இருந்தால் மட்டுமே இடிக்கப்படும் என வாதாடினார். மேலும் இந்த வழக்கு தவறாகச் சித்தரிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
"இதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், இதன் அடிப்படையில் வழிகாட்டுதல்களை உருவாக்குகிறோம். எப்படி ஒருவர் குற்றவாளி என்பதால் அவரது வீடு இடிக்கப்படலாம்." எனக் கேள்வி எழுப்பினார் நீதிபதி கவாய்.
"கட்டடம் அனுமதியற்றதாக இருந்தால் இடிக்கப்படலாம். ஆனால் அதற்கு நெறிமுறைகள் தேவை. நீங்கள் நகராட்சி விதிமுறைகளை கடைப்பிடிக்கவிட்டால்தான் இடிப்பதாகக் கூறுகிறீர்கள். இப்போது அதற்கான வழிகாட்டுதல்கள் தேவை, ஆவணப்படுத்தப்பட்ட நடைமுறைகளைத்தான் பின்பற்ற வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
"ஒரு கட்டடம் இடிக்கப்படுவதற்கு முன்னர் நோட்டீஸ் அளித்து, அதற்குப் பதிலளிக்க அவகாசம் கொடுங்கள். சட்டப் பூர்வ தீர்வுகளைத் தேட நேரம் கொடுங்கள் அதன்பிறகு இடிக்கலாம்" எனக் காட்டமாகத் தெரிவித்தார் நீதிபதி கே.வி.விஸ்வநாதன். புல்டோசர்
"நாங்கள் சட்டத்தை மீறிய கட்டடங்களைப் பாதுகாக்கவில்லை, அது கோயிலாக இருந்தாலும் சரி. ஆனால் இடிப்பதற்கு முன் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்." என நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கறிஞர் சியு சிங் டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த சம்பவத்தை மேற்கோள்காட்டினார். வாடகைக்கு இருப்பவர்கள் குற்றத்தில் சம்பந்தப்பட்டிருந்ததால், வீடுகள் இடிக்கப்பட்டன. உரிமையாளரின் மகனுக்குக் குற்றச் சம்பவத்தில் தொடர்பிருந்ததால் 50-60 ஆண்டுகள் பழமையான வீடுகள் இடிக்கப்பட்டன. என வாதாடினார்.
ஒரு மகனின் தவற்றுக்காக வீடு இடிக்கப்படுவது சரியான அணுகுமுறை அல்ல என கே.வி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
புல்டோசர் நீதி என்பது கிரிமினல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகள் இடிக்கப்படுவது அதிகரித்து வருவதைக் குறிக்கிறது. சில சம்பவங்களில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் முன்பே புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் தவற்றுக்காக எப்படி மொத்த குடும்பத்தையும் அரசு தண்டிக்க முடியும் எனக் கேள்விகள் எழுகின்றன!புல்டோசர் நீதி!
http://dlvr.it/TCjK3D

`அண்ணாமலை லண்டன் பயணம்... ஹெச்.ராஜா அண்ட் டீம் நியமனம்' - தமிழக பாஜக ஹேப்பியா?!
தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றிருக்கிறார். இதையடுத்து ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் 3 மாதங்களுக்கு நடைபெறும் கல்வி பயிற்சியில் கலந்து கொள்கிறார். எனவே, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜெ.பி.நட்டா வழிகாட்டுதல்படி, மாநில தலைவர் இல்லாதபட்சத்தில் கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா தலைமையில் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது.தமிழிசை, அண்ணாமலை
இதில், மாநில துணை தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, பி.கனகசபாபதி, பொது செயலாளர்கள் எம்.முருகானந்தம், பேராசிரியர் ராமசீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இடம் பெறுவர். இந்த ஒருங்கிணைப்புக் குழு, மாநில மைய குழுவுடன் கலந்துரையாடி, கட்சி நடவடிக்கைகள் குறித்து எந்த முடிவையும் எடுக்கும். ஒருங்கிணைப்புக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களின் செயல்பாடுகளைக் கவனிப்பார்கள். இது மாநிலத் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரால் முடிவு செய்யப்படும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அண்ணாமலையை எப்படி அனுப்புவது என பா.ஜ.க தலைமை தவித்துக்கொண்டு இருந்திருக்கும் போல. அவர் லண்டன் சென்ற பிறகு தமிழ்நாடு சற்று அமைதியாக இருப்பது போல தெரிகிறது. தற்போது ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள ஹெச்.ராஜா நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அரசியல் பண்பாடு, நாகரீகத்தை முழுமையாக உள்வாங்கியவர். இதன்மூலம் பா.ஜ.க தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று சொல்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.ஆர்.பி.உதயகுமார்
இதையடுத்து அண்ணாமலை வெளிநாடு சென்றது பா.ஜ.க தொண்டர்களை ஹாப்பியக்கியிருக்கிறதா என்கிற கேள்வியுடன் கமலாலய சீனியர்கள் சிலரிடம் பேசினோம், "அண்ணாமலை மேல்படிப்புக்காக லண்டன் சென்றிருக்கிறார். முன்னதாக இந்த காலக்கட்டத்தில் பொறுப்பு தலைவரை அமைக்க டெல்லி ஆலோசனை செய்தது. அந்த பதவியைப் பிடிக்கத் தமிழிசை உள்ளிட்ட சீனியர்கள் தீவிரமாக முயன்றார்கள். இதில், அண்ணாமலைக்கு துளியும் விருப்பம் இல்லை. பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டுவந்தார். இந்தச்சூழலில்தான் பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை குறுக்கிட்டது. கூடவே ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல் வரவுள்ளது.`தலைவர்களுக்கு மரியாதை': அண்ணாமலை vs தமிழிசை... மீண்டும் மோதலா?!
இதற்கான பணிகளில் அகில இந்தியத் தலைமை தீவிரம் காட்டியது. இதனால் பொறுப்பு தலைவரை நியமிப்பதில் டெல்லி ஆர்வம் காட்டவில்லை. இதில் அண்ணாமலை தரப்பு மகிழ்ச்சி. மற்ற சீனியர் தலைவர்கள் கடும் அப்செட். இந்த சூழலில்தான் மீண்டும் தமிழிசை vs அண்ணாமலை எனும் நிலை ஏற்பட்டது. கடந்த 25-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் அண்ணாமலை, "மேடையில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வேண்டும் எனச் சொல்லக்கூடிய தலைவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். 2019 தேர்தலில் தோற்கப்போகும் மோடிக்காக நான் ஏன் வாரணாசிக்கு வர வேண்டும் என்றார். அன்றிலிருந்து மானமுள்ள அண்ணாமலை கூட்டணிக் கட்சித் தலைவராக எடப்பாடியைப் பார்த்தது இல்லை" என தாக்கி பேசியிருந்தார். அதே கூட்டத்தில்தான் எடப்பாடியைத் தற்குறி எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.மோடி, அமித்ஷா
இதையடுத்து அ.தி.மு.க தலைவர்கள் பலரும் தமிழிசையைத் தொடர்பு கொண்டு தங்களது வருத்தத்தைச் சொல்லினார்கள். ஏற்கெனவே கூட்டணி அமையாதது, பொறுப்பு தலைவர் பதவி கிடைக்காதது என பெரும் ஆதங்கத்தில் இருந்த தமிழிசைக்கு இது மேலும் அதிருப்தியை கொடுத்தது. இதையடுத்துதான், "பொது மேடையில் பேசுவதில் அவரவர்களுக்கென ஒரு பாணி இருக்கும். அண்ணாமலை பேசியது அவரது பாணி. ஆனால், என்னைப் பொறுத்தவரைத் தலைவர்களுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுக்க வேண்டும். அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க இனி எப்போதும் கூட்டணி கிடையாது என அண்ணாமலை கூறியிருக்கிறார். கூட்டணி குறித்து மேடையில் மட்டுமே முடிவு செய்வது என்பது எனது அரசியல் அனுபவத்தில் சரியா என்பது என் கேள்வி?" எனக் பேசியிருந்தார்.
இதற்கு அண்ணாமலை, "உட்கட்சியாக இருந்தாலும் சரி, வெளிக்கட்சியாக இருந்தாலும் சரி. எனது பாணி மாறாது. கை, கால் பிடித்து பதவிக்கு வந்தேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இன்று பேசக்கூடிய தலைவர்கள் அன்று எங்குப் போனார்கள்" என மீண்டும் தமிழிசையை விமர்சனம் செய்திருந்தார். பிறகு சமூக வலைத்தளங்களில் அண்ணாமலையின் ஆதரவு ஐடி-விங் நிர்வாகிகள் என கூறப்படும் சிலர், 'கட்சியிலிருந்து ஓய்வு பெற்றுவிடுங்கள். அ.தி.மு.க-வுக்கு செல்லுங்கள். அண்ணாமலைக்கு அறிவுரை சொல்லக்கூடாது" என்றெல்லாம் தமிழிசையைக் கடுமையாக மீண்டும் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.கமலாலயம்
இதில் அப்செட்டான தமிழிசை டெல்லிக்கு மீண்டும் புகார் அளித்தார். கூடவே சீனியர் தலைவர்கள் பலரும் அண்ணாமலை மீது மீண்டும் புகார் தெரிவித்தார்கள். இதையடுத்து கட்சியில் நீடிக்கும் குழப்பம், புதிய நிர்வாகிகள் சேர்க்கை போன்ற விஷயங்கள் இருப்பதால் ஒருங்கிணைப்பு குழுவை அமைக்கும் முடிவுக்கு டெல்லி வந்தது. அதன் அடிப்படையில்தான் ஹெச்.ராசா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாகிகளை தேர்வு செய்ததில் அண்ணாமலைதான் முக்கிய பங்கு வகித்திருக்கிறது. அந்த குழுவில் இருப்பவர்களே ஒருவர் மீது ஒருவர் அதிருப்தி கொண்டவர்கள். இந்த விஷயம் டெல்லிக்கு தெரியும்.
எனவேதான் மைய குழுவுடன் கலந்துரையாடி கட்சி நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்க வேண்டும் என 'செக்' வைத்திருக்கிறது, டெல்லி. என்னதான் பொதுவெளியில் ஹெச்.ராசா பேட்டி கொடுத்தாலும், முக்கிய முடிவுகளை அவரால் தனியாக எடுக்க முடியாது. அண்ணாமலையின் டீம் என்பதால் மையக்குழுவில் நிர்வாகிகள் முட்டுக்கட்டை போடுவார்கள். அதேநேரத்தில் இந்த குழுவில் பெண்கள், தலித்துக்கள் இல்லை என்கிற சர்ச்சையும் வெடித்திருக்கிறது. மேலும் தமிழிசை, வானதி, நயினார் போன்றவர்கள் பொறுப்பு தலைவர் பதவி கிடைக்கவில்லை என்பதில் அப்செட்டாக இருக்கிறார்கள். ஆகவே இந்த ஒருங்கிணைப்பு குழுவில் இருக்கும் தலைவர்களின் ஆதரவாளர்கள் மட்டுமே ஹாப்பியாக இருக்கிறார்கள். மற்றவர்கள் அப்செட்டாகவே இருக்கிறார்கள்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://tinyurl.com/crf99e88
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://tinyurl.com/crf99e88`தலைவர்களுக்கு மரியாதை': அண்ணாமலை vs தமிழிசை... மீண்டும் மோதலா?!
http://dlvr.it/TCjJfn

`அக்பர் சிறந்த மன்னர் எனக் கூறும் பாடப்புத்தகங்கள் எரிக்கப்படும்!' - ராஜஸ்தான் கல்வி அமைச்சர் பேச்சு
ராஜஸ்தான் கல்வித்துறை அமைச்சர் மதன் திலாவர், எந்த பாடப்புத்தகம் முகலாய மன்னர் அக்பர் சிறந்தவர் எனக் கூறினாலும் அது எரிக்கப்படும் எனப் பேசியுள்ளார். மேலும், அக்பர் பல ஆண்டுகளுக்கு இந்தியாவைக் கொள்ளையடித்தார் என்றும் அவரை ராஜஸ்தானில் எந்த பாடப்புத்தகமும் 'சிறந்த ஆளுமை' எனக் குறிப்பிடக் கூடாது என்றும் பேசியுள்ளார்.
உதய்பூரில் உள்ள சுகதியா பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், "நன்றாகச் சோதித்துவிட்டோம் எந்த புத்தகத்திலும் அக்பர் பற்றிய குறிப்புகள் இல்லை. அப்படி இருந்தால் அந்தப் புத்தகம் எரிக்கப்படும்" என்றார்.ராஜஸ்தான் மாநில கல்வியமைச்சர் மதன் திலாவர்
"அக்பர் ஓர் ஆக்கிரமிப்பாளர், அவரைச் சிறந்தவர் எனக் கூறுவது முட்டாள்தனம்" எனவும் அமைச்சர் பேசியுள்ளார்.
ராஜஸ்தானில் உள்ள மேவாரை ஆண்ட மஹரனா பிரதாப் (பிரதாப் சிங் I) குறித்துப் பேசிய அமைச்சர், "மன்னர் பிரதாப்புக்கு உரிய வரலாற்று அங்கீகாரம் கிடைக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.
அக்பர் குறித்து அமைச்சர் திலாவர் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசுவது இது முதன்முறை அல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அக்பரை `ரேப்பிஸ்ட்' என்று குறிப்பிட்டதுடன், நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடப் புத்தகங்களிலும் மாமன்னர் அக்பர் சிறந்தவர் எனக் குறிப்பிட்டிருப்பதை நீக்க வேண்டும் எனப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.Ebrahim Raisi: `இப்ராஹிம் ரைசி மரணத்துக்கான காரணம் இதுதான்' - விசாரணை அறிக்கை முடிவை அறிவித்த இரான்!
http://dlvr.it/TChsPP

Jharkhand: காவலர் உடற்தகுதித் தேர்வில் 11 பேர் மரணம் - மருத்துவர்கள் சொல்வதென்ன?
ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த காவலர் உடற்தகுதித் தேர்வில் பங்கேற்ற 11 போட்டியாளர்கள் மரணித்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உடற்தகுதித் தேர்வில் 10 கிலோ மீட்டர் தூரம் உச்சி வெயிலில் ஓடிய 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மயங்கி விழுந்துள்ளனர். பணியிலிருந்து காவலர்கள் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
ஜார்கண்ட் முழுவதும் ஆகஸ்ட் 30ம் தேதி, 7 மையங்களில் காவலர் உடற்தகுதித் தேர்வு நடந்துள்ளது. இதில் 1,27,772 இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதில், 21,582 பெண்கள் உட்பட 78,023 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆகஸ்ட் 22ல் தொடங்கிய ஆட்சேர்ப்பு செயல்முறை பல கட்டங்களாகச் செப்டம்பர் 3ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
உடற்தகுதித் தேர்வில் இறந்தவர்கள், ஊக்க மருந்து பயன்படுத்தியிருக்கலாம் அல்லது தேர்வுக்கு முன்பாக எனர்ஜி ட்ரிங்குகளை குடித்திருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். நீண்ட நேரம் வரிசையில் நின்றதும், சுட்டெரிக்கும் வெயிலும் கூட மரணத்துக்கு வழிவகைச் செய்திருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.ஹேமந்த் சோரன்
"துரதிர்ஷ்டவசமாக இறந்த 11 பேர் குறித்தும் இயற்கைக்கு மாறான மரணம் (unnatural death) என வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவர்கள் மரணத்துக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. உண்மையான காரணத்தைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், அனைத்து மையங்களிலும் மருத்துவக் குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ்கள், குடிநீர் வசதி இருப்பதை உறுதி செய்ய அறிவுறுத்தியிருக்கிறார். பிற்பகலில் நடைபெறும் ஓட்டம் முதலான உடற்தகுதித் தேர்வுகளை மாலை 4:30 மணிக்கு மாற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஹேமந்த் சோரன் அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறதா அல்லது மரணத்தையா வழங்குகிறதா என எதிர்க்கட்சியான பா.ஜ.க கேள்வி எழுப்பியிருக்கிறது.பாபுலால் மராண்டி
"ஹேமந்த் சோரன் அரசின் நிர்வாகம் மற்றும் பிடிவாதத்தால் உடற்தகுதித் தேர்வு ஓட்டம், 'மரணத்துக்கான பந்தயமாக' மாறியுள்ளது." என்று பா.ஜ.க-வின் ஜார்கண்ட் மாநிலத் தலைவர் பாபுலால் மராண்டி எக்ஸ் தளத்தில் விமர்சித்துள்ளார்.
மேலும், உடற்தகுதித் தேர்வுக்கு வந்த இளைஞர்கள் நள்ளிரவு முதல் வரிசையில் நிற்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆட்சேர்ப்பு மையங்களில் போதுமான சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் முறையான நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
http://dlvr.it/TChSGQ

Sunday 1 September 2024
சிவாஜி சிலை உடைந்த விவகாரம்: `பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டதில், ஆணவம் தெரிகிறது!' - உத்தவ் தாக்கு
மகாராஷ்டிரா மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள மால்வான் என்ற இடத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு 35 அடி உயர சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து விழுந்தது. இந்த சிலையை பிரதமர் நரேந்திர மோடிதான் கடந்த டிசம்பர் மாதம் திறந்து வைத்தார். இச்சிலை உடைந்து விழுந்ததற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டார். அதே சமயம் இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. இப்போராட்டம் மும்பை கேட்வே ஆஃப் இந்தியாவில் நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் நிறுவனர் சரத் பவார், முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே உட்பட மூன்று கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இதில் உத்தவ் தாக்கரே பேசும் போதும், புதிய பாராளுமன்ற கட்டடம், அயோத்தி ராமர் கோயிலில் மழை காரணமாக தண்ணீர் கசிவு ஏற்பட்டதை சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததுடன் ஒப்பிட்டு தரம் குறைவாக கட்டியிருப்பதாக குற்றம் சாட்டினார். உத்தவ் தாக்கரே மேலும் பேசுகையில், ``சிலை உடைந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்கையில் அவரது ஆவணத்தை கவனித்தீர்களா? 8 மாதத்திற்கு முன்பு திறந்து வைத்த சிலை உடைந்து விழுந்ததற்கு என்ன மன்னிப்பு வேண்டியிருக்கிறது. சிலை கட்டுவதில் நடந்த ஊழலுக்காக மன்னிப்பு கேட்டாரா? சத்ரபதி சிவாஜியை அவமதித்தவர்களை மகாவிகாஷ் அகாடி (எதிர்க்கட்சி கூட்டணி) ஒன்றிணைந்து தோற்கடிக்கவேண்டும். சத்ரபதி சிவாஜி மன்னர் மட்டும் கிடையாது... அவர் இன்றைக்கு எங்களுக்கு கடவுள்.
நாங்கள் சிலை உடைந்ததை அரசியலாக்குவதாக பா.ஜ.க கூறுகிறது. சிலை உடைந்த தவறை மன்னிக்க முடியாது. நாட்டின் நுழைவு வாயிலாக கருதப்படும் கேட்வே ஆஃப் இந்தியாவில் நின்று கொண்டு சொல்கிறோம். இந்த சட்டவிரோத அரசு வெளியேற வேண்டும். நாங்கள் மாநிலத்தின் பெருமைக்காக போராடுகிறோம். மகாயுதி அரசு வெளியேறவேண்டும் என்று சொல்வதற்காக இங்கு வந்திருக்கிறோம். சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது ஊழலுக்கு எடுத்துக்காட்டாகும். சத்ரபதி சிவாஜியின் ஆதரவாளர்களை இது அவமதிக்கும் செயலாகும்'' என்றார்.
இதில் பேசிய நானா பட்டோலே, ``சிவாஜிக்கு துரோகம் செய்யக்கூடிய இந்த அரசை கொண்டு வந்ததற்காக சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இது போன்று இனி நடக்காது என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்றார். முன்னதாக எதிர்க்கட்சி தலைவர்கள் ஹுதாத்மா சோக்கில் இருந்து கேட்வே ஆஃப் இந்தியாவிற்கு பேரணியாக வந்தனர். எதிர்க்கட்சிகளின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ''எதிர்க்கட்சிகள் இந்த பிரச்னையை அரசியலாக்குகின்றன. கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சத்ரபதி சிவாஜியை அவமதித்தனர். மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி செங்கோட்டையில் இருந்து ஒரு முறை கூட சத்ரபதி சிவாஜியின் பெயரை உச்சரிக்கவில்லை. இதற்காக காங்கிரஸ் மன்னிப்பு கேட்குமா? பிரதமர் மோடி மன்னிப்பு கேட்டார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை அரசியலாக்குகின்றன'' என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, ''சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்தது, அரசியல் பிரச்னை கிடையாது. நடந்தது துரதிஷ்டவசமானது. ஆனால் இதனை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன. கர்நாடகாவில் இரண்டு ஜே.சி.பி மெஷின் கொண்டு வரப்பட்டு சத்ரபதி சிவாஜி சிலை உடைக்கப்பட்டு அடியோடு அகற்றப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் இங்கு போராடிக்கொண்டிருக்கின்றன. மகாராஷ்டிரா மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். தேர்தலில் மக்கள் அவர்களை காலணியால் அடிப்பார்கள்" என்று தெரிவித்தார்.வேலூர்: இன்ஸ்பெக்டர், 2 எஸ்.ஐ-க்கள் ஆயுதப்படைக்கு மாற்றம் - எஸ்.பி நடவடிக்கையும், பின்னணியும்!
http://dlvr.it/TCfVCF

Haryana: மாட்டிறைச்சி சாப்பிட்டதாக இஸ்லாமியர் கொலை; `யாரால் தடுக்க முடியும்?'- முதல்வர் கருத்து!
உலக அளவில் மாட்டிறைச்சி அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் இந்தியாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக, வைத்திருந்ததாகக் குறிப்பிட்ட கும்பலால் அடித்துக்கொல்லப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இப்படியான சூழலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்றுவரும் மகாராஷ்டிராவில், ரயிலில் தனது மகள் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த ஹாஜி அஷ்ரஃப் முனீர் என்ற முதியவர், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்.மாட்டிறைச்சி
அதேபோலவே, பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும் ஹரியானாவில், மாட்டிறைச்சி சாப்பிட்டதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபீர் மாலிக் எனும் புலம்பெயர் தொழிலாளி அடித்துக் கொல்லப்பட்டார். சர்க்கி தாத்ரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றைச் சேகரித்து விற்றுப் பிழைப்பு நடத்திவரும் இவரை, பசுக் காவலர்கள் என்று கூறப்படும் குழுவைச் சேர்ந்த சிலர், பிளாஸ்டிக் பாட்டில்களை வாங்க வருமாறு அழைத்துச் சென்று அடித்தே கொன்றிருக்கின்றனர்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக, இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஏழு பேரை போலீஸார் கைதுசெய்து வழக்கு பதிவுசெய்தனர். இந்த நிலையில், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எப்படித் தடுக்க முடியும் என ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி கைவிரித்திருக்கிறார்.ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி
இந்தச் சம்பவம் குறித்து பேசுகையில் இதனைத் தெரிவித்த முதல்வர் நயாப் சிங் சைனி, ``பசு பாதுகாப்புக்காக சட்டசபையில் கடுமையான சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது இதனைக் கும்பல் படுகொலை என்று கூறுவது சரியல்ல. மேலும், இதில் எந்த சமரசமும் கிடையாது. பசுக்கள் மீது கிராம மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருக்கின்றனர். அப்படியிருக்கும்போது, இத்தகைய விஷயங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தால், அதை யார் தடுக்க முடியும்? இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கக் கூடாது என்றும், இந்த சம்பவங்கள் துரதிஷ்டவசமானது என்றும் நான் கூற விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.``நானும் இந்துதான், விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; கேள்வி கேட்க நீ யார்?” - சித்தராமையா
http://dlvr.it/TCf6Th