கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக ரஷ்யா-உக்ரைன் போர் நடந்துவரும் நிலையில், 'உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்' என ரஷ்ய அதிபர் புதின் பேசியுள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 'உக்ரைன், நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் சேர விரும்புகிறது. இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும்' என ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் மீதான போரை தொடங்கினார். பல நாட்டு தலைவர்கள் 'போரை நிறுத்த வேண்டும். இது பிற உலக நாடுகளையும் பாதிக்கும்' என்று கூறியும், ரஷ்ய அதிபர் புதின் போரை நிறுத்தவில்லை. Putin - புதின்
இந்த நிலையில், 'உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்' எனக் கூறியுள்ளது, அனைத்து தரப்பினருக்கும் நிச்சயம் ஆச்சர்யமான விஷயம்தான். ரஷ்யா, விளாதிவசுத்தோக்கில் (Vladivostok) நடந்த ஈஸ்டர்ன் எக்கனாமிக் ஃபோரமின் (Eastern Economic Forum) கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரஷ்ய அதிபர் புதின் இன்று பேசியுள்ளார்.
அதில், "ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு தயார்தான். 2022-ம் ஆண்டு போர் தொடங்கிய ஆரம்ப வாரங்களில், இஸ்தான்புல்லில் ரஷ்யா-உக்ரைன் இரு நாடுகளுக்கும் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது போடப்பட்ட எந்த ஒப்பந்தமுமே நடைமுறைப்படுத்தப் படவில்லை. அதுவே தற்போது நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக அமையும்.
ரஷ்யா எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு மறுப்பு சொன்னதே கிடையாது. ஆனால், இந்தப் பேச்சுவார்த்தை 'அது...இது' என தற்காலிக கோரிக்கைகளுக்காக நடக்காமல், இஸ்தான்புல்லில் நடந்த ஒப்பந்தந்தின்போது பேசப்பட்ட ஆவணங்களால்தான் நடக்க வேண்டும்.
அந்த பேச்சுவார்த்தையின்போது கிட்டத்தட்ட ஒரு ஒப்பந்தத்திற்கு வந்துவிட்டோம். உக்ரைன் சார்பாக பேச்சுவார்த்தைக்கு வந்த தலைவரும் அந்த ஒப்பந்தத்திற்கு உடன்பட்டுவிட்டார். பின்னர் அவருக்கு வந்த ஆணையால் அந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவில்லை. இதற்கு ரஷ்யாவின் தோல்வியை விரும்பும் அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்ப நாடுகள்தான் முக்கிய காரணம்" என்று பேசியுள்ளார்.
மேலும் இந்த பேச்சுவார்த்தை இந்தியா, சீனா, பிரேசில் நாடுகள் முன்னிலையில் நடக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். வீடியோ காலில் சேட்டை.. முகம் சுளித்த நீதிபதி! `ஹேமா கமிட்டி' அறிக்கைக்குப் பிறகான முதல் தீர்ப்பு?
http://dlvr.it/TCs9Hs