Monday 9 September 2024
Sunday 8 September 2024
`உடல்நிலை காரணமாக வெளிநாட்டுக்குச் சென்றிருக்கிறாரா ஸ்டாலின்?' - இபிஎஸ்-ஸைச் சாடும் ஆர்.எஸ்.பாரதி
"உடல்நிலை சரியில்லாததால் தான் முதலமைச்சர் வெளிநாடு சென்றிருக்கிறார். அதை மறைக்க தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றிருப்பதாக கூறுகிறார்கள்" என்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அறிக்கை வெளியிட்டுள்ளார் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி.
கடந்த வெள்ளிக்கிழமை, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "தி.மு.க ஆட்சியில் பெண்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மக்களுக்குமே பாதுகாப்பு இல்லை. பேச்சுவார்த்தை நடத்த சென்ற பெண் போலீஸ் அதிகாரி தாக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் போலீஸாருக்கும் பாதுகாப்பு இல்லை. எடப்பாடி பழனிசாமி
துபாய், ஜப்பான், சிங்கப்பூர், ஸ்பெயின் என முதலமைச்சர் முன்பு சென்ற வெளிநாட்டுப் பயணங்களிலிருந்து, எத்தனை முதலீடுகள் கொண்டு வரப்பட்டது என்ற வெள்ளை அறிக்கையை நாங்கள் கேட்டிருந்தோம். அதற்கு எந்த பதிலும் இல்லை. முதலீடுகள் குறித்து மக்கள் தெரிந்துகொள்ள வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கும் தொழில் நிறுவனங்களை விஸ்தரிப்பு செய்ய தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்காக வெளிநாடுகளுக்குச் சென்று ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லை. அதற்காக சிகிச்சை எடுக்க அமெரிக்கா சென்றுள்ளார். அதை மறைக்கத்தான் தொழில் முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளன. இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டி பொழுதை போக்கி வருகிறார்.
அமைச்சர்களுடன் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நெருக்கமாக இருந்ததால்தான், அவருக்கு அரசுப் பள்ளிகளில் பேச வாய்ப்பு கிடைத்துள்ளது.
நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து சென்னையின் மத்திய பகுதியில் கார் பந்தயம் நடத்துவது அவசியம் தானா? அந்தப் பணத்தில் அம்மா உணவகத்தில் தரமான உணவை வழங்கலாம்" என்று பேசினார்.RS Bharathi: ஆர்.எஸ்.பாரதி
இதற்கு பதிலளிக்கும் விதமாக தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...
"அமைச்சர்களுடன் நெருக்கமாக இருந்ததால்தான், அசோக் நகர் அரசுப் பள்ளியில் சர்ச்சையாக பேசியவருக்கு அனுமதி கிடைத்துள்ளது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டுபிடித்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சராக இருந்த நீங்கள் வி.ஐ.பி தானே? ஒரு வி.ஐ.பி-யை பார்க்க நிறைய பேர் வருவார்கள் என்பது அடிப்படை தியரி. பார்க்க வரும் அனைவரின் பின்புலத்தை விசாரித்த பின்னர்தான் அனுமதி அளிப்பார்களா? இதுகூட தெரியாத நீங்கள் எப்படி முதலமைச்சராக இருந்தீர்கள்? இப்போது எப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறீர்கள்?
அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி மீது நடந்த தாக்குதல் மூலம் போலீஸுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது என எடப்பாடி பழனிசாமி புலம்பியிருக்கிறார். கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில், திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவுக்கு அழுத்தம் கொடுத்து தற்கொலைக்கு தள்ளியது யார்?
இந்த மாதிரி உங்கள் ஆட்சியில் போலீஸாரால் பெண்களுக்கு மட்டுமல்லாமல், போலீஸாருக்கும் பாதுகாப்பில்லாமல் போனது பற்றி 'செலக்டிவ் அம்னீஷியா' போல் மறந்துவிட்டதா? உடல்நிலை சரியில்லாததை மறைப்பதற்காக முதலமைச்சர் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றிருப்பதாக கூறுவதாக அவர் உளறியிருக்கிறார். ஸ்டாலின்
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துக் காப்பாற்ற வக்கில்லாதவர்கள் முதலமைச்சர் குறித்து பேசாமல் இருப்பது நல்லது. 'இட்லி சாப்பிட்டார்...வார்டுக்கு மாறிவிட்டார்...விரைவில் வீடு திரும்புவார்கள்' என்று அவர்கள் கதைக்கட்டியது போல எங்களுக்கு கதைக் கட்ட தெரியாது. தி.மு.க வெளிப்படையான இயக்கம். ஆனால் திரை மறைவாக செயல்படுவதுதான் அ.தி.மு.க கொள்கை.
முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தால் தினமும் பல ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆவது பொறுக்கமுடியாமல் தான் வயிற்றெரிச்சலில் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு இருக்கும் பொறாமை நோய்க்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கவில்லை. தனது ஆட்சியில் தமிழ்நாட்டின் அனைத்து துறையும் பாழ்படுத்திய அவருக்கு பேச எந்த தகுதியும் கிடையாது. 'நானும் இருக்கிறேன்' என்று காட்ட நடத்தும் பேட்டி நாடகத்தை நிறுத்த வேண்டும்" என்று கூறியுள்ளார். Mahavishnu: 5 பிரிவுகளில் வழக்கு; ஏர்போர்ட்டில் வைத்து கைது... புழல் சிறையில் அடைக்கப்பட்ட மஹாவிஷ்ணு
http://dlvr.it/TCywyM

Saturday 7 September 2024
Kissflow Suresh Sambandam : உங்ககிட்ட START-UP IDEA இருக்கா? இதை முதலில் பண்ணுங்க - வாவ் ஐடியா
Kiss Flow- நிறுவனத்தின் CEO Suresh Sambandam, Imperfect Show Podcast நிகழ்ச்சியில், அவருக்குச் சிறுவயதில் கம்பியூட்டர் மேல் ஏற்பட்ட ஆர்வம் தொடங்கி Start-Up-க்கான ஐடியா, அதை எப்படித் தொடங்குவது, தொடங்கிய பின் தொடர்ந்து நடத்த என்ன மாதிரியான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தரவுகளுடன் விரிவாகப் பேசியிருக்கிறார். ஜூனியர் விகடனில் எழுதிய 'கனவு' தொடர் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
http://dlvr.it/TCy10R
http://dlvr.it/TCy10R
Vinesh Phogat: `வினேஷ் ஏமாற்றினார்... கடவுள் தண்டித்தார்' - பிரிஜ் பூஷன் குற்றச்சாட்டு!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவருமான பிரிஜ் பூஷன், காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் மல்யுத்தப் போட்டிகளில் கலந்துகொள்ள ஏமாற்றியதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், கடவுள் வினேஷ் போகத்தை தண்டித்ததால்தான் அவரால் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வெல்ல முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
பிரிஜ் பூஷனுக்கு எதிராக கடந்த ஆண்டு டெல்லி சாலைகளில் போராடினார் வினேஷ் போகத். இதனால் பிரிஜ் பூஷனுக்குச் சிக்கல் ஏற்பட்டது.வினேஷ் போகத்
ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட வினேஷ் போகத் தங்க பதக்கத்துக்கான இறுதிப்போட்டிக்கு முன் உடல் எடை அதிகரிப்பால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
எனினும் அவர் வெள்ளி வென்றதற்கான மரியாதையை வழங்கியது ஹரியானா அரசு. மக்களும் அவரை தங்கள் மகளாக கொண்டாடித் தீர்த்தனர்.
சில நாள்களுக்கு முன்பு ஹரியானா எல்லையில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் வினேஷ் போகத். அதைத் தொடர்ந்து நேற்றைய தினம் காங்கிரஸில் இணைந்தார். சில மணிநேரங்களிலேயே காங்கிரஸ் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டார்.வினேஷ் போகத் - கார்கே - பஜ்ரங் புனியா - கே.சி.வேணுகோபால்
இந்த நிலையில், வினேஷ் போகத் குறித்து பிரிஜ் பூஷன், "ஒரு வீரர் ஒரே நாளில் இரண்டு எடை பிரிவுகளில் சோதனைகளை வழங்க முடியுமா என்று நான் வினேஷ் போகத்திடம் கேட்க விரும்புகிறேன்? எடைபோட்ட பிறகு ஐந்து மணி நேரம் சோதனைகளை நிறுத்த முடியுமா? நீங்கள் மல்யுத்தத்தில் வெற்றி பெறவில்லை; ஏமாற்றி அங்கு சென்றீர்கள். அதற்காக கடவுள் உங்களை தண்டித்துள்ளார்" எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
வினேஷ் போகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவும் சோதனைப் போட்டிகள் இல்லாமல் ஆசியப் போட்டிகளில் விளையாடியதாக பிரிஜ் பூஷன் குற்றம்சாட்டியுள்ளார்.
பிரிஜ் பூஷன் சரண் சிங்
மேலும், நாட்டின் மகள்களை அவமானப்படுத்திய குற்ற உணர்வு தனக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளார். "நாட்டின் மகள்களை அவமானப்படுத்தியதாக வருத்தப்பட வேண்டியது வினேஷும், புனியாவும்தான். அவர்களுக்கு திரைக்கதை எழுதிக்கொடுத்த பூபேந்தர் ஹூடாவும்." என்றார் பிரிஜ் பூஷன்.
மேலும் அவர் ஹரியானா தேர்தலில் தன்னை பிரசாரம் செய்ய பா.ஜ.க அழைத்தால் பிரசாரம் செய்யத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.Vinesh Phogat: வினேஷ் போகத் மல்யுத்த வீராங்கனை டு காங்கிரஸ் வேட்பாளர்!
http://dlvr.it/TCxlLW

இந்தியர்கள் உணவுக்கு எவ்வளவு செலவு செய்கின்றனர்?
உணவு என்பது அனைவருக்குமான அடிப்படைத் தேவை. சாதாரண குடும்பங்கள் வருமானத்தில் பெரும்பகுதியை உணவுக்குத்தான் செலவிடுகின்றன. புள்ளிவிவரங்களின்படி, 1947-ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு, இந்தியக் குடும்பங்கள் மொத்த செலவில் பாதி தொகையை உணவுக்குத்தான் செலவு செய்து வந்துள்ளன.
ஆனால், சுதந்திரத்துக்குப் பிந்தைய வரலாற்றில் முதல்முறையாக, இந்தியக் குடும்பங்கள் மொத்த செலவில் பாதிக்கும் குறைவான தொகையை உணவுக்கு செலவிட்டுள்ளதாக பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், இந்திய மக்களின் உணவு நுகரும் வழக்கத்திலேயே மாற்றங்கள் வந்திருப்பதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் குடும்பங்கள் உணவுக்கு செலவு செய்யும் தொகை கணிசமாகக் குறைந்திருக்கிறது. கிராமப்புறங்கள் முதல் நகரங்கள் வரை எல்லா இடங்களிலும் இதே நிலைதான்.செலவு - பணவீக்கம் - expenditure - expenses - spending - inflationவேகமாக வளரும் உணவு சேவைத் துறை... போனுக்கு அதிகம் செலவழிக்கும் மக்கள்!
பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் வெளியிட்டுள்ள ரிப்போர்ட்டில், “நவீன இந்தியாவில் (சுதந்திரத்துக்குப் பின்) முதல்முறையாக குடும்பங்களின் ஒட்டுமொத்த மாதாந்திர செலவில் பாதிக்கு கீழே உணவுக்கு செலவு செய்கின்றனர். ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் குடும்பங்களின் சராசரி தனிநபர் மாதாந்திர செலவு அதிகரித்துள்ளது. ஆனால், மாநிலத்துக்கு மாநிலம் வளர்ச்சியில் வேறுபாடு இருக்கிறது.
உதாரணமாக, 2011-12 ஆண்டு முதல் 2022-23 ஆண்டு வரை கிராமப்புறங்களை எடுத்துக்கொண்டால், மேற்கு வங்க குடும்பங்களின் செலவு 151 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலோ 214 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சிக்கீம் மாநிலத்தில் 394 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே நகரங்களை விட கிராமப்புறங்களில் செலவு வளர்ச்சி அதிகமாக இருக்கிறது.ரேஷன் கடை
உணவுப் பொருள்களிலும் பிரித்துப் பார்த்தால், தானியங்களுக்கு மக்கள் செலவு செய்வது கணிசமாக குறைந்துள்ளது. மக்களுக்கு ரேஷன் வழியில் உணவுப் பொருள்களை வழங்குவதே இந்த மாற்றத்துக்கான காரணம் என்கிறது பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில்.
இதுபோக, பதப்படுத்தப்பட்ட மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை மக்கள் நுகருவதும் அதிகரித்திருப்பதாக இந்த ரிப்போர்ட் கூறுகிறது. உணவுப் பதப்படுத்துதல் துறை நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வளர்ச்சிக்கான துறையாக இருக்கிறது. ஆனால், இந்த உணவுகளை நுகருவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்பதையும் பிரதமருக்கான பொருளாதார ஆலோசனை கவுன்சில் குறிப்பிட்டுள்ளது.அரை வயிறு உணவு; கால் வயிறு தண்ணீர்; கால் வயிறு காலி:
சிக்கல் இல்லாத வாழ்க்கைக்கு சிம்பிள் ஃபார்முலா!
http://dlvr.it/TCxFzr