`பெரியண்ணா’ பாஜக
மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பா.ஜ.க கூட்டணி அரசு, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளில் பிளவை ஏற்படுத்திய பிறகே பா.ஜ.கவால் ஆட்சியமைக்க முடிந்தது. அதுவும் முதல்வர் பதவியை கூட அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவிற்கு பா.ஜ.க கொடுத்தது. தற்போது வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் மகாயுதி எனப்படும் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி, கூட்டணி அமைத்து போட்டியிட இருக்கிறது. இதில் கடந்த முறை 150க்கும் அதிகமான தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க இம்முறையும் பெரியண்ணாவாக இருந்து அதிக தொகுதியில் போட்டியிட விரும்புகிறது.மகனுடன் அஜித்பவார்
ஏற்கனவே இதற்காக தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ.க தலைவர்கள் இரு கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசியுள்ளனர். துணை முதல்வர் அஜித்பவார் நாக்பூர் சென்று பா.ஜ.க துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு வந்திருக்கிறார். அதற்குள் சிவசேனா(ஷிண்டே) அமைச்சர்கள் தானாஜி சாவந்த், குலாப்ராவ் ஆகியோர் துணை முதல்வர் அஜித்பவாருக்கு எதிராக பேசியிருப்பது பேசியிருப்பது கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலைவர்கள் முறைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அதோடு அஜித்பவார் கட்சி அமைச்சர்கள் அனுப்பும் பைல்களில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கையெழுத்திட மறுத்து வருகிறார் என்கிற குற்றச்சாட்டும் கிளம்பியுள்ளது. மற்றொரு புறம் சிவசேனா அமைச்சர்கள் அனுப்பும் பைல்களில் அஜித்பவார் கையெழுத்து போட மறுத்து வருகிறார் என்கிறார்கள்.
முதல்வர் வேட்பாளர் யார்?
மேலும் முதல்வர் பதவிக்கான வேட்பாளராக யாரை முன்னிறுத்துவது என்பதிலும் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தன்னை மீண்டும் முதல்வருக்கான வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே கூறி வருகிறார். ஆனால் பா.ஜ.க அதற்கு தயாராக இல்லை. தேர்தல் முடிவுகள் வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டது. இதனால் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தியில் இருக்கிறார். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பா.ஜ.க தலைவர்கள் பலர் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து இருக்கின்றனர். எனவே அவர்களது வீட்டிற்கு செல்வதற்காக மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று மும்பை வந்திருந்தார். அவர் மும்பையில் இன்று லால்பாக் ராஜா கணபதியை தரிசனம் செய்தார். அவருடன் துணைமுதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் பா.ஜ.க தலைவர்கள் வந்திருந்தனர். அமித் ஷா
ஆனால் மற்றொரு துணை முதல்வர் அஜித்பவார் அவர்களுடன் வரவில்லை. முதல்வர் ஷிண்டேயுடன் நிகழ்ச்சியில் பங்கேற்பதை அஜித்பவார் தவிர்த்து வருகிறார். அதோடு டெல்லியில் நடைபெற்ற ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டத்திற்கு கூட அஜித்பவார் செல்வதை தவிர்த்துவிட்டார். நேற்று அஜித்பவார், பட்னாவிஸ் மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து பேசுவதாக இருந்தது. ஆனால் அப்பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அஜித் பவார் மும்பையில் தான் இருக்கிறார். அதோடு அடிக்கடி, `சரத்பவாரிடமிருந்து பிரிந்து வந்து தவறு செய்துவிட்டேன் ’என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்.
இன்று அமித் ஷா டெல்லிக்கு செல்வதற்கு முன்பு மூன்று தலைவர்களையும் ஒன்றாக அமரவைத்து அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாட்டை கலைந்துவிட்டு செல்லவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அமித் ஷா அனைத்து விநாயர் சிலைகளையும் தரிசனம் செய்துவிட்டு விமான நிலையம் செல்லும்போது அங்கு வைத்து மூன்று தலைவர்களையும் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். இதில் கருத்து வேறுபாடுகள் மட்டுமல்லாது தொகுதி பங்கீடு குறித்தும் பேசுகின்றனர். பா.ஜ.க 130 தொகுதியிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 65 தொகுதியிலும், சிவசேனா 85 தொகுதியிலும் போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
">
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY
">
https://bit.ly/3PaAEiY
/>
http://dlvr.it/TD2Jjs