கள்ளக்குறிச்சியில் அக்டோபர் 2 ஆம் தேதி மகளிர் சார்பில் மது ஒழிப்பு மாநாட்டை நடத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அறிவித்திருக்கின்றனர்.
இம்மாநாட்டில் பங்கேற்க `அதிமுக' விற்கு அழைப்பு விடுத்திருகிறார் விசிக தலைவர் திருமாவளவன். இது 'விசிக'வின் தேர்தல் அரசியலுக்கான யுக்தியா? மக்களுக்கான நலனா? என்பது அரசியல் களத்தில் விவாதப் பொருளாகியிருக்கிறது.திருமாவளவன்
இதுகுறித்து பேசியிருக்கும் 'விசிக' தலைவர் திருமாவளவன், "இந்த மது ஒழிப்பு மாநாடு தேர்தலை குறிவைக்கும் யுக்தியல்ல. இது தேர்தலுக்கான மாநாடு அல்ல, மக்களுக்கான மாநாடு. அதிமுக இந்த மாநாட்டில் தாராளமாகப் பங்கேற்கலாம். மதவாத - சாதியவாத சக்திகளைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளும் எங்களுக்குத் துணை நின்று இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருக்கிறோம். காரணம்; மது போதையை விடக் கொடியது மதவாத, சாதிய போதை.
மதவாத - சாதியக் கட்சியைத் தவிர, மற்ற எல்லா ஜனநாயகக் கட்சிகளும் மதுவை ஒழிக்க ஒரே மேடையில் கைகோர்த்து நிற்கவேண்டும். தேர்தல் அரசியல் வேறு, மக்களுக்கான அரசியல் வேறு. மக்களுக்காக எல்லோரும் ஒன்றாக நிற்க வேண்டும், தேர்தல் களத்தில் யாருடன் நிற்க வேண்டும் என்பதை தேர்தல் சமயத்தில்தான் முடிவெடுக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.உதயநிதி ஸ்டாலின்
இதுகுறித்துப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 'அதிமுக' வின் அமைச்சர்கள் இதுகுறித்து தலைமைதான் முடிவெடுக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "அதிமுக-வை அழைப்பது, எந்தக் கட்சியையும் அழைப்பது என்பது 'விசிக' வின் முடிவு. அழைப்பை ஏற்றுச் செல்ல வேண்டுமா என்பதை அந்தந்தக் கட்சியினர் முடிவெடுப்பார்கள். அதில் வேறு யாரும் கருத்துச் சொல்ல முடியாது" என்று கூறியிருக்கிறார். தேசிய கல்விக் கொள்கையில் நீளும் விவாதம்; ஸ்டாலினிடம் மத்திய கல்வியமைச்சர் முன்வைக்கும் 4 கேள்விகள்
http://dlvr.it/TD3DdB