ரசிகரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 4-ம் தேதி நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா கவுடா உள்ளிட்ட 17 பேர் மீது ரேணுகாசுவாமி கொலை வழக்கின் 3991 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், நடிகர் தர்ஷன் தரப்பு நீதிமன்றத்தில், 'குற்றப்பத்திரிக்கையில் இருக்கும் தகவல்களை ஊடகங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும்' என மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி, ஹேமந்த் சந்தங்கவுடர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.நடிகர் தர்ஷன் - ரேணுகா சுவாமிActor Darshan Case: ``அந்தரங்க உறுப்பில் ஷாக்...'' - நடிகர் தர்ஷன் மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல்!
அப்போது, தர்ஷன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபுலிங் கே நவதாகி, ``மனுதாரரின் மனைவி ஏற்கெனவே, டிவி சேனல்களில் இந்த வழக்கு தொடர்பான செய்திகளை ஒளிபரப்ப தடை கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார். சிவில் நீதிமன்றத்தில் நடந்த அந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு, ஆகஸ்ட் 27 அன்று, ஊடக சேனல்கள் எந்த அறிக்கையையும், வாக்குமூலம், விவாதங்கள், இது தொடர்பான நேர்காணல்கள் ஆகியவற்றை ஒளிபரப்பவும், அச்சிடவும், வெளியிடவும் தடை விதித்து இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. இருந்தபோதிலும், குற்றப்பத்திரிகையில் உள்ள ரகசியத் தகவல்களை ஊடக சேனல்கள் ஒளிபரப்பி, அச்சிட்டு, வெளியிட்டு, பரப்பி வந்தன" என வாதிட்டார்.
அதைத் தொடர்ந்து, நீதிபதி, ``மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, ஊடகங்கள், குற்றப்பத்திரிக்கையில் இருக்கும் தகவல்களை ஒளிபரப்பினாலோ, அச்சிட்டாலோ, வெளியிட்டாலோ, அவர்கள் மீது, கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் விதிகள், 1994-ஐ மீறும் அடிப்படையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்." என இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தார்.
இதற்கு அமைச்சகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அரவிந்த் காமத், ``விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.கர்நாடக உயர் நீதிமன்றம்கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன்: பரப்பன அக்ரஹார சிறையில் சிறப்பு கவனிப்பா?! - வைரலாகும் புகைப்படம்
இந்த உத்தரவு தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, `` குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களுக்கு, குற்றப்பத்திரிகை வழங்கப்படுகிறது. அதனால் அது ரகசிய ஆவணமல்ல. அதில் இருக்கும் தகவல்கள் பொது களத்தில் வெளிவரும். அதை யாராலும் தடுக்க முடியாது. அதே நேரம் பொது விவாதத்தின் அடிப்படையில் நீதிமன்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.கேரள பாடத்தில் `மும்பை ஃபேமஸ் டப்பாவாலாக்கள்': 130 ஆண்டுகள் தொடரும் பாரம்பரியம்
http://dlvr.it/TD5HYQ