மதுவிலக்கு கோரிக்கைகான மாநாட்டை அறிவித்திருக்கும் வி.சி.க, `ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு` என்ற கோரிக்கையையும் முன்வைக்கவுள்ளதாக வரும் தகவலால் தி.மு.க கூட்டணியில் புகைச்சல் அதிகரித்துள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்த சிலர்.
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக மது ஒழிப்பு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. அதில் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கலந்து கொள்ளலாம் என சொல்லியது திமுக கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கோரிக்கையை 1999 ஆம் ஆண்டே முன்வைத்த கட்சி விசிக" என முன்னர் திருமாவாளவன் பேசிய வீடியோவை இப்போது பகிர்ந்து பரபரப்பை பற்றவைத்துள்ளார். முதல்வர் சென்னை திரும்பிய தருணத்தில் அந்த வீடியோவை அவர் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது. எனினும் அந்த வீடியோ வை டெலீட் செய்த திருமா, பின்னர் மீண்டும் பதிவிட்டு மீண்டும் டெலீட் செய்திருக்கிறார்.
நம்மிடம் பேசிய திமுக கூட்டணியை சேர்ந்த சிலர், ``ஆக்டோபர் 2-ம் தேதி வி.சி.க நடத்தும் போதை மற்றும் மதுஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு அ.தி.மு.க-வையும் அழைத்திருந்தார் திருமாவளவன். இதனால் தி.மு.க கூட்டணியில் பிளவா.. புதிய கூட்டணிக்கு அச்சாரமிடுகிறதா விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ற விவாதம் ஓடிக் கொண்டிருக்கும்போதே, `ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்பதை 1999-ம் ஆண்டே வலியுறுத்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி’ என திருமா பேசும் பழைய வீடியோ அவரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, சிறிது நேரத்திலேயே டெலீட் செய்யப்பட்டிருப்பது தி.மு.க கூட்டணியில் அனலை கூட்டியிருக்கிறது” என்றனர்
தொடர்ந்து பேசியவர்கள், ``திருமா பேசும் அந்த பழைய வீடியோ வைரலாகவே, அந்த பதிவை டெலீட் செய்திருக்கிறார். ஆனால் அந்த கோரிக்கையை வி.சி.க உறுதியாக முன்னெடுக்கப் போவதாகவும் இக்கோரிக்கை குறித்து உரிய காரணங்களுடன் திருமா வரும் காலத்தில் பேசயிருப்பதால் இப்போதைக்கு பழைய காணொளி கொண்ட பதிவை நீக்கியிருக்கிறார்கள்” என்றனர்.முதல்வர் ஸ்டாலின் - விசிக தலைவர் திருமாவளவன்
புதிய கூட்டணிக்கு ஆச்சாரமிடவில்லை என பேச தொடங்கிய வி.சி.க மாநில பொறுப்பாளர்கள் சிலர், ``அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணி முறிவும் விஜய்யின் அரசியல் வருகையும் எங்களுக்கான வாய்ப்பையும் சுதந்திரத்தையும் அதிகப்படுத்தியுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி கட்சி ரீதியாக பல்வேறு செயல் திட்டங்களை தயார் நிலையில் வைத்திருக்கிறோம். மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கையை 234 ஆக உயர்த்தி அனைத்து மாவட்டங்களிலும் கிளை கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு மகளிர் மற்றும் ஓ.பி.சி சமூக மக்களையும் சேர்த்து கட்சியை வளர்க்க விரும்புகிறார் தலைவர் திருமா. ஆனால் தேர்தல் வரும்போது வழக்கமாக குறைந்த அளவில் சீட் கொடுத்து தி.மு.க அமுக்கிவிட்டால் எங்கள் உழைப்பே விரையமாகிவிடும் என்பதால் இப்போதே விழித்துக் கொண்டது வி.சி.க. திருமாவளவன்
200 தொகுதிகளை டார்கெட்டாக நிர்ணையத்திருக்கும் தி.மு.க பா.ஜ.க வளர்ந்துவிடுமென பூச்சாண்டி காட்டி 2021-ல் தந்த 6 தொகுதிகளைபோல ஒற்றை எண்ணிக்கையை தந்துவிட்டால் `கதைக்கு ஆகாது`. ஆகையால் தொகுதி எண்ணிக்கை உட்பட எங்களின் நீண்ட கால கோரிக்கைகளை குறைந்தபட்ச செயல்திட்டமாக கொடுப்பதும், `ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு` என்ற கோரிக்கை நிறைவேற்றிக் கொள்ளும் நிர்பந்தங்களையும் முன்வைக்க விரும்புகிறோம். அதற்கு ஏதுவானத்தான் `ஆட்சியில் பங்கு கொடுப்பதுதானே உண்மையான சமத்துவம்’ `திருமா ஏன் துணை முதல்வராகக் கூடாது’ போன்ற ஸ்டேட்மெண்டுகளை இப்போதே முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்” என்றனர்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருப்பதால் எதுவும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்! Loading…``திருமாவளவன் எதிர்காலத்தில் ஏன் துணை முதலமைச்சராக உருவாக கூடாது?!” - கேட்கிறார் விசிக ஆதவ் அர்ஜூனா
http://dlvr.it/TDDWyD