"கூவத்தைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தொகை குறித்து நீங்கள் வெள்ளை அறிக்கை கேட்டதுபோல், ‘முதல்வர் வெளிநாடு பயணம் குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கேட்கின்றனவே?"
"நான் பள்ளிக்குச் செல்லும் காலத்திலிருந்து கூவத்தைச் சுத்தம் செய்கிறோம் என்கிறார்கள். ஆனால் சுத்தமானதாகத் தெரியவில்லை. அண்மையில் நடந்த மாமன்ற கூட்டத்தில் மேயர், 'கூவத்தைச் சுத்தம் செய்வதற்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரூ.529 கோடி செலவு செய்துள்ளோம்' என்றார். எனவேதான் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதற்காக இவ்வளவு ஆண்டுக்காலம் கூவத்தைச் சுத்தம் செய்ய எவ்வளவு தொகை செலவு செய்திருக்கிறீர்கள் என்று வெள்ளை அறிக்கை கேட்டேன். முதல்வரின் வெளிநாடு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பதில் தவறு இல்லை.கூவம் நதி
அவர்கள் தினமும் அறிக்கை கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். 10 ஆண்டுக்காலம் அ.தி.மு.க ஆட்சியிலிருந்தது. அவர்களும் இதுபோன்ற வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதற்கான மாநாடுகளை நடத்தியிருக்கிறார்கள். லட்சக்கணக்கான கோடி முதலீடு வந்திருக்கிறது என்று அறிக்கை வெளியிட்டார்கள். எனவே அவர்கள் முதலில் கிடைத்த முதலீடு, கட்டப்பட்ட தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு குறித்து எடப்பாடி அறிக்கை வெளியிட வேண்டும். அதேபோல தி.மு.க-வும் மூன்று ஆண்டுகளில் கிடைத்த முதலீடுகள் குறித்து முதல்வர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்."
"இதன் மூலம் அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடந்ததுதான் இப்போதும் நடக்கிறது என்கிறீர்களா?"
"என்னிடம் தரவுகள் இல்லாமல் எதுவும் சொல்ல முடியாது. செல்வி ஜெயலலிதா முதல்வரான பிறகு வெளிநாட்டுக்குச் சென்றது கிடையாது. கடைசியாக சினிமா சூட்டிங்கிற்கு சென்றிருப்பார். எடப்பாடி ஒருமுறைதான் சென்றார். ஆனால் முன்பு இருந்த முதல்வர்களைவிட ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்தில் வெளிப்படைத் தன்மை அதிகரித்துள்ளது."முதல்வர் ஸ்டாலின்
"முருகன் மாநாடு நடத்தியதன் மூலம் வரம்புகளை மீறி பா.ஜ.க போல அமைச்சர் சேகர்பாபு செயல்படுகிறார் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"அரசில் அறநிலையத்துறை இருக்கும் வரையில் கோயில்களில் நிகழ்ச்சிகளை நடத்தித்தான் ஆக வேண்டும். மாநாடு நடத்தி முருகன் பெருமை குறித்துப் பேசியதில் பெரிய தவறாகத் தெரியவில்லை. தி.மு.க-வுக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறது. ஆனால் அரசாங்கம் மதச்சார்பற்ற கொள்கையில் இருக்கிறது. கடவுள் மறுப்பு கொள்ளை இருப்பதால் அறநிலையத்துறையை மூட முடியாது."பழனி முத்தமிழ் முருகன் மாநாடு'10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்... காங்கிரஸ், பாஜக மோதல்' - பரபர ஜம்மு காஷ்மீர் தேர்தல்
"செல்வப்பெருந்தகையின் பாதுகாப்பு வாபஸ், வி.சி.க கொடிக்கம்பத்துக்குத் தடை எனச் சமீப காலமாக தி.மு.கவுக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையில் முரண் நிலவி வருகிறதே?"
"முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதற்காகவே அனைத்து விஷயங்களிலும் ஒன்றுபட வேண்டிய அவசியம் இல்லை. அப்படி இருந்தால் நாங்கள் ஒரே கட்சியாக ஆகிவிடலாம்தானே. எங்களுக்கு என்று சில கோட்பாடுகள் இருக்கும். அதேபோல அவர்களுக்கு என்று சில கோட்பாடுகள் இருக்கும். அவர்கள் அரசாங்கத்தில் இருக்கிறார்கள். நாங்கள் இல்லை. முரண் இருப்பதால் எங்களுக்குள் பிரச்னை இருப்பதாக அர்த்தம் இல்லை. மதச்சார்பின்மை, பா.ஜ.க-வை தனிமைப் படுத்த வேண்டும் என்கிற கொள்கையில் ஒன்றாக இருக்கிறோம்." திருமாவளவன்
"ஆனால் 'யாருடைய தயவில் ஆட்சியமைக்க வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை' என்கிறாரே தி.மு.க அமைச்சர் ரகுபதி?"
"அது அவர்களுடைய பார்வை. அவர்கள் மெஜாரிடியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு யாருடைய தயவும் தேவையில்லை. ஆனால் தேர்தலின் போது யார் எத்தனைச் சீட்டில் நிற்கிறார்கள். எவ்வளவு இடங்களில் வெற்றி பெறுகிறார்கள் என்பதைப் பார்த்துவிட்டுத்தான் முடிவு சொல்ல முடியும். எல்லா கட்சிகளும் தங்களுடைய சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்கிற விருப்பத்தைச் சொல்வதில் தவறு இல்லை!"அமைச்சர் ரகுபதி
"இந்த சூழலில் வி.சி.க-வின் மாநாட்டுக்கு அ.தி.மு.க-வை தொல்.திருமாவளவன் அழைத்திருப்பது சந்தேகத்தை மேலும் கூட்டுகிறதே?"
"வி.சி.க சுதந்திரமான அரசியல் கட்சி. அவர்கள் பிற அரசியல் கட்சிகளுடன் உறவு வைத்துக்கொள்ளத்தான் செய்வார்கள். கொள்கை ரீதியாக பா.ஜ.க-வைத்தான் விரோதியாகப் பார்ப்பார்கள். பிற கட்சிகளை அப்படிப் பார்க்க முடியாது. பா.ம.க-வுடன் முரண்பாடு இருக்கலாம். பெரிய முரண்பாடுகள் இல்லாத கட்சிகளை மேடைக்கு அழைப்பதில் ஒரு விசித்திரமும் கிடையாது."எடப்பாடி பழனிசாமி
"ஆனால் இதன் மூலமாக வரும் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படலாம் என்கிற பேச்சு எழுகிறதே?"
"அதை இப்போது சொல்ல முடியாது. இன்னும் 18 மாதங்கள் இருக்கின்றன. யார் களத்தில் ஆடப்போகிறார்கள். யார் எந்த அணியில் இருக்கப் போகிறார்கள் என்பதை இப்போதே எப்படிச் சொல்ல முடியும். இன்று இந்தியா கூட்டணியில் இருக்கிறோம் என்றுதான் சொல்ல முடியும். எதிர்காலம் குறித்துச் சொல்லும் சக்தி என்னிடம் இல்லை."முதல்வர் ஸ்டாலின் / திமுக
"ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நீங்கள் சொல்லிருந்தீர்கள். ஆனால் அதை தி.மு.க கண்டுகொள்ளவில்லையே?"
"கண்டிப்பாக வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அந்த ஆசை இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு தானே அரசியல் கட்சிகளை ஆரம்பிக்கிறோம். கிரிக்கெட்டில் பேட் பிடிப்பவர்கள் எல்லோரும் ரன் அடிக்க வேண்டும் என்றுதானே நினைப்பார்கள். வெறுமென போட்டோ எடுத்துவிட்டுச் செல்ல விரும்ப மாட்டார்கள். அதேதான் அனைத்து அரசியல் கட்சிக்கும். நான் எனது கட்சி தொண்டர்களிடம் தெரிவித்தேன். அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள்"செல்வப்பெருந்தகை, கார்த்தி சிதம்பரம்
"கோரிக்கை நியாயமாக இருந்தபோதும் உங்களுடன் காங்கிரஸ் தலைவர்களே துணை நிற்கவில்லையே?"
"எனக்கு இருக்கும் துணிச்சல் பலருக்கு இல்லை. சிலர் மன ரீதியாக வாழ்த்துகிறார்கள். ஆனாலும் என்னை எதிர்க்கவில்லையே?. ஈவிகேஎஸ் மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு யாரும் ஆதரவு தரவில்லை!"சத்தியமூர்த்தி பவன்
"இதை விட்டுவிடலாம் கூவம் நதி குறித்து வெள்ளை அறிக்கை கேட்டதாகட்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்கிற உங்களது அடிப்படை கோரிக்கைகளுக்குக் கூட அவர்கள் ஆதரவு தரவில்லையே?"
"அவர்கள் ஆதரவு தரவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். என்னைப்போல் வெளிப்படையாகக் கருத்துச் சொல்வதற்கு மனநிலை இல்லை. அதனால் எனக்கு ஆதரவு இல்லை என்று அர்த்தம் கிடையாது. காங்கிரஸ் கட்சியின் 90% தொண்டர்கள் நான் பேசுவது நியாயம் என்றுதான் சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் சில தர்ம சங்கடங்கள், நெருடல்கள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அதற்குள் அவர்கள் இயங்குகிறார்கள்"விஜய்
"விஜய் கட்சி மாநாடு அறிவிக்கப்பட்டுவிட்டது. வரும் தேர்தலில் களமாட இருக்கிறார். அது குறித்து?"
"கட்சியின் பெயர், கொடி தெரியும். வேறு எதுவும் எனக்குத் தெரியாது. அவர் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்று சொன்னால்தானே எடை போட முடியும். அவர் தமிழ்நாடு அரசியலுக்கு மாற்றம் என்றால், தி.மு.க-வுக்கு மாற்றா அவர்?. தி.மு.க-வில் இருந்து எந்த விதத்தில் மாறுபடுகிறார் என்பதை முதலில் சொல்ல வேண்டும். தி.மு.க அரசு, கொள்கைகள், கோட்பாடுகளுக்கு மாற்றுக் கருத்துச் சொல்ல வேண்டும். அப்படிச் சொன்னதாகத் தெரியவில்லை. அவர் திரைத்துறையைச் சேர்த்தவர் என்பதால்தான் எல்லோரும் பேசுகிறார்கள். இதுவே அவர் பொருளாதார நிபுணராக இருந்து கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தால் கண்டுகொள்ள மாட்டார்கள்"ஜெயலலிதா'10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்... காங்கிரஸ், பாஜக மோதல்' - பரபர ஜம்மு காஷ்மீர் தேர்தல்
"ஆனாலும் சினிமாவில் இருந்து வந்தவர்கள்தானே தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்?"
"எம்ஜிஆர் மட்டும்தான் திரையுலகத்திலிருந்து வந்து வெற்றிபெற்றார். அதுவும் முதலில் ஒரு அரசியல் கட்சியிலிருந்தார். பிறகு அங்கிருந்து பிரித்து, பாதியை எடுத்துவந்துதான் கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றார். லெட்டர் பேடில் கட்சி ஆரம்பித்து வெற்றிபெறவில்லை. எந்த நடிகரும் லெட்டர் பேடில் கட்சி பெயரை எழுதி, கொடி வரைந்து வெற்றிபெற்றது கிடையாது. எதிர்காலத்திலும் வெற்றிபெற மாட்டார்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், விஜயகாந்த், கமலஹாசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ் பட்டியலில் விஜய்யும் ஒருநாள் சேர்ந்து கொள்வார்"பாக்யராஜ்
" 'நீங்கள் ஒருமுறை இளைஞர்கள் காங்கிரஸ் பக்கம் வரவில்லை' எனச் சொல்லிருந்தீர்கள். விஜய்க்கு இளைஞர்கள் ஆதரவு அதிகமாக இருப்பதாகச் சொல்லப்படுவது காங்கிரஸுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்துமா?"
"இளைஞர் இல்லை. ரசிகர்கள்தான் இருக்கிறார்கள். அவரது சினிமா ரசிப்பவர்களைத் தாண்டி பிறர் செல்வதற்குக் காரணமே இல்லை. எதன் அடிப்படையில் செல்வார்கள். இவர் ஒன்றும் சமுதாய சீர்திருத்தத்தை நடத்திவிட்டு, அரசியல் கட்சியாக மாறவில்லை. சுதந்திரப் போராட்டத்துக்காக உருவாகி பிறகு அரசியல் கட்சியாகக் காங்கிரஸ் மாறியது. தி.மு.க சமுதாய சீர்திருத்தத்தைச் செய்துவிட்டு பிறகு அரசியல் கட்சியாக மாறியது. இதுபோல் எந்த சமூக காரணங்களுக்காகவும் விஜய் வரவில்லை. அடித்தட்டு மக்களுக்கு ஆளும் கட்சி என்ன செய்யவில்லை என்றும் தான் என்ன மாறுபட்டுச் செய்யப்போகிறேன் என்றும் சொல்லவில்லை. ஆளும்கட்சியை விமர்சனம் செய்து பேசுவதற்குத் தயாராக இருக்கிறாரா?. பிறகு எப்படி அவரை மாற்றம் என எடுத்துக்கொள்ள முடியும்."சீமான்
"இதேபோல் மக்களின் பிரச்னைகளுக்குத் தமிழக காங்கிரஸ் குரல் கொடுக்கவில்லை என்கிற விமர்சனமும் இருக்கிறதே?"
"இதை நீங்கள் மாநில தலைவரிடம்தான் கேட்க வேண்டும். நம்ம முன்னேறும் நடுத்தர வர்க்க மாநிலம். போராட்டத்துக்கொல்லா மக்கள் யாரும் வரமாட்டார்கள். அநியாயம் நடக்கும் இடத்தில்தான் மக்கள் நிற்பார்கள். என் மனதில் படுவதை நான் பேசுகிறேன். மாநில தலைவருக்கென்று சில தர்ம சங்கடங்கள், கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த சீட்டில் இருப்பவர்களுக்குத்தான் அது தெரியும். நான் அதில் இல்லை"தமிழிசை செளந்தரராஜன்
"ஆனால் விஜயை பார்த்து தி.மு.க பயப்படுகிறது எனத் தமிழிசை சொல்கிறாரே?"
"யாரும் பயப்படவில்லை. திரைத்துறையைச் சேர்த்தவர் என்பதால் ஊதி பெரிதாக்குகிறார்கள். அக்கா தமிழிசையின் நிலையைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. சவுரியமாக இரண்டு மாநிலத்துக்கு ஆளுநராக இருந்தார். அவரை கட்சியில் சித்து விளையாட்டு செய்து பஸ் ஸ்டாண்டில் ஒட்டுக்கேட்க வைத்து காலிசெய்து விட்டார்கள் என வருத்தமாக இருக்கிறது."ராகுல் காந்தி
"விஜய் மாநாட்டில் ராகுல் காந்தி கலந்து கொள்வதாகச் சொல்லப்படுகிறதே?
"ஒபாமா கூட கலந்து கொள்வதாக கேள்விப்பட்டேன் (சிரிக்கிறார்..)"அண்ணாமலை'10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்... காங்கிரஸ், பாஜக மோதல்' - பரபர ஜம்மு காஷ்மீர் தேர்தல்
" 'அந்நிய மண்ணிலிருந்து தாய்நாட்டை ராகுல் காந்தி இழிவு படுத்தி உள்ளார்' என அண்ணாமலை கூறியுள்ள கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"அண்ணாமலை முதலில் ஒழுங்காகப் புத்தகங்களைப் படிக்கச் சொல்லுங்கள் (மீண்டும் சிரிக்கிறார்..)"பாஜக
"இதேபோல, 'ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்தில் ஒரு கரும்புள்ளி' என பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறாரே?"
"எதார்த்த உண்மையை எடுத்துச் சொன்னால் அவர்களுக்கு ஏன் கசக்கிறது. இந்தியாவில் இருக்கும் உண்மை நிலையைப் பேசுகிறார். வெளிநாட்டில் பேசினால் என்ன?. இங்குப் பேசினால் என்ன?. இன்று இருக்கும் தொழிநுட்ப வளர்ச்சியில் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்து கூட பேசலாம். இங்கு இருந்து பேசினால் நியாயம், அமெரிக்காவிலிருந்து பேசினால் நியாயம் இல்லை என்றால் எப்படி?. அவர் ஒரு கருத்தைச் சொல்கிறார். அதற்கு முடிந்தால் பதில் சொல்லுங்கள். அமெரிக்க ஜனநாயக கட்சி என்னை ஒருமுறை மாநாட்டுக்கு அழைத்ததின் பேரில் சென்றேன். அதற்கு நான் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறேன் என்று ஆகிவிடுமா?"சீமான்
"சீமான் ஆட்சிக்கு வந்தால் எந்த மாற்றமும் வராது என நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் அவர் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்வேன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என பல்வேறு விஷயங்களை முன்னிறுத்தி அரசியல் செய்கிறாரே?"
"இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்றால் என்ன செய்வார். அனைத்தையும் தேசிய மயமாக்குவாரா அல்லது தனியார் மயமாக்குவாரா?. தனியார்த்துறையில் தமிழர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்பு என்பது சட்ட ரீதியாக நடைபெறாத ஒன்று. இப்படிப்பட்ட சட்டத்தைக் கர்நாடகாவில் கொண்டுவந்தார்கள். ஆனால் நடைமுறைப் படுத்த முடியவில்லை. இந்திய யூனியனில் அப்படிச் செய்ய முடியாது. ஒருவேளை அப்படி நடந்தால் கர்நாடகாவில், மும்பையில், டெல்லியில் வேலை செய்து கொண்டிருக்கும் தமிழர்களின் நிலை என்னவாகும்?. அதற்கெல்லாம் சீமான் தீர்வு வைத்திருக்கிறாரா?. சும்மா வீரவசனம் பேசுகிறார்.மகா விஷ்ணு - MahaVishnu
நடைமுறையில் ஜீரோ தீர்வுதான் சீமானிடம் இருக்கிறது. சீமான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு தனியாகப் பிரிந்துவிடுமா?. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எப்படி முக்கியத்துவம் இல்லை என்று பேசுகிறார். தமிழ் படிக்க வேண்டாம், பேச வேண்டாம் எனச் சொல்கிறார்களா?. தமிழராக இருந்தால் வெளியேறுங்கள் என்று சொல்கிறார்களா?. தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு எங்கு மரியாதை இல்லாமல் இருக்கிறது?. உலகமெங்கும் மரியாதை இருக்கிறது. சீமான் தரவுகளை வைத்துக்கொண்டு பேச வேண்டும். மேலோட்டமாக பேசக்கூடாது"
"மகா விஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசியது, விநாயகர் தினம் சுற்றறிக்கை எனப் பள்ளிக் கல்வித்துறையின் ஏராளமான சர்ச்சைகள் நிலவுகின்றதே?"
"அரசுப் பள்ளிகள் மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும். எந்த மதத்தையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. மகா விஷ்ணு பேசியதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் அவர் ஆன்மீக பேச்சாளர் அல்ல. ஒரு காமெடி பீஸ். காமெடியாக இருந்துவிட்டு புது நித்தியானதாகவாக வந்திருக்கிறார். இவருக்கு உண்மையாக மகா விஷ்ணு என்றுகூட வீட்டில் பெயர் வைத்திருக்க மாட்டார்கள். விஷ்ணு அல்லது மகா என்றுதான் வைத்திருப்பார்கள் என நினைக்கிறன. இதுபோன்ற நபர்களின் பின்னணியைப் பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் அனுமதித்திருக்க வேண்டும். பாவம் செய்ததால்தான் மாற்றுத்திறனாளியாக பிறந்திருக்கிறாய் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அவரை மனநலம் குன்றியோருக்கான மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்."கார்த்தி சிதம்பரம்
"திருவள்ளுவர், வள்ளலார் கூறிய கருத்துக்களைத்தான் மகா விஷ்ணு பேசியிருக்கிறார் என்கிற பா.ஜ.க-வின் கருத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?"
"திருக்குறளை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். அதில் நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. பூர்வ ஜென்மம் குறித்தெல்லாம் பேசவில்லை. அறிவியல் ரீதியாக முன் ஜென்மம் இருப்பதாக நிரூபிக்க முடியுமா?"
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...
https://bit.ly/3PaAEiY
/>
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...
https://bit.ly/3PaAEiY'10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல்... காங்கிரஸ், பாஜக மோதல்' - பரபர ஜம்மு காஷ்மீர் தேர்தல்
http://dlvr.it/TDJFTQ