திருப்பூர் மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளின் இல்ல நிகழ்வுகளில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரே நாடு ஒரு தேர்தல் கொள்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உடன்பாடு இல்லை. இது நாட்டை அதிபர் ஆட்சி முறைக்கு கொண்டு செல்வதற்கு வழிவகுக்கும் என்ற அச்சம் உள்ளது. ஒருமித்த கருத்துள்ள இயக்கங்களுடன் இணைந்து ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை வலுவாக எதிர்க்க திட்டமிட்டுள்ளோம். திருமாவளவன்`மது ஒழிப்பு மாநாடு யார் நடத்தினாலும் நாங்கள் ஆதரிப்போம்; ஆனால் திருமாவளவன் எங்களை...' - அன்புமணி
இந்து அறநிலைத் துறை கோயில் நிர்வாகத்தில் இருந்து வெளியேறி பக்தர்களிடம் அதை ஒப்படைக்க வேண்டும் என பாஜக நீண்டகாலமாக கூறி வருகிறது. இந்துக்களின் நலனுக்காகவும், கோயில்களின் நிர்வாகத்தை முறைப்படுத்துவதற்காகவும், நிதியை முறையாக கையாளுவதற்காகவுமே உருவாக்கப்பட்டதுதான் இந்துசமய அறநிலையத் துறை. இது இந்து சமூகத்துக்கு எதிரானது அல்ல. பாஜக-வினர் வேண்டுமென்றே கோயில், கடவுள், மதத்தை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகின்றனர். பாஜக-வின் நாடகத்தை இந்து மக்கள் ஏற்கவும் மாட்டார்கள்; நம்பவும் மாட்டார்கள்.
மதுவிலக்கு மாநாட்டுக்கு அனைத்துக் கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க உள்ளோம். மது ஒழிப்பு என்பது பொதுவான மக்கள் கோரிக்கை என்பதால், பொதுவாக எல்லோருக்கும் அழைப்பு விடுத்தோம். தனிப்பட்ட முறையில் எந்த அரசியல் கட்சித் தலைவருக்கும் கடிதம் எழுதி அழைப்பு விடுக்கவில்லை. திமுக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் மற்றும் மகளிர் அணியின் தலைவர்கள் பங்கேற்க வேண்டும் என்பதால் அவர்களை அழைக்க முடிவு செய்துள்ளோம்.திருமாவளவன்
அதிகாரத்தை ஜனநாயகப்படுத்த வேண்டும் என்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்டகால கோரிக்கை. இந்த கோரிக்கையை நான் பல ஆண்டுகளாக பேசி வருகிறேன். இது ஒரு ஜனநாயக கோரிக்கை. இதில் தவறேதுமில்லை. ஆட்சியில் பங்கு என்பது கேட்க கூடாத ஒன்றா?. தேர்தல் அரசியலில் நுழைந்த காலம் முதல் இந்த கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது." என்றார்.``2026 -ல் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு... வருங்கால முதல்வர் திருமாவளவன்.." - இறங்கியடிக்கும் விசிக
http://dlvr.it/TDPBbX