"தமிழ்நாட்டில் ஓர் ஆண்டுக்கு மது விற்பனை மூலம் 45 ஆயிரம் கோடி வருகிறது என்று எதிர்பார்க்கிறார்கள். மது பழக்கத்தால் நாட்டுக்கு சீரழிவு ஏற்படுகிறது. மனித வளம் அழிகிறது..." என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார். திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி 30 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் தொடங்கியபோது கோ.புதூரில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கொடி கம்பத்தின் உயரத்தை அதிகப்படுத்தி, கடந்த வாரம் மீண்டும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடத்தவிருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் போலீஸ் மூலம் அகற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்த, அப்போது மதுரை வந்திருந்த திருமாவளவன், கொடி கம்பத்தை அகற்ற மதுரை கலெக்டர் சங்கீதாதான் காரணம் என்று கடுமையான குற்றச்சாட்டு முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மீண்டும் கொடி கம்பம் விசிக நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டத்துக்கு நேற்று மாலை மதுரை வந்த திருமாவளவன், கம்பம் அகற்றப்பட்ட அதே இடத்தில் கொடி ஏற்றினார். கொடி ஏற்றும் நிகழ்வில்
இந்த நிகழ்ச்சியை மதுரை மாவட்ட விசிக நிர்வாகிகள் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தனர். கிரேன் வைத்து மெகா சைஸ் மாலை திருமாவளவனுக்கு அளிக்கப்பட்டது. இதில் கொடி கம்பத்துக்காக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் பேசியவர், "ஒரே நாடு ஒரே தேர்தல் என்று தேசிய அளவில் ஒரு சலசலப்பை உருவாக்குவதற்கு பாஜக முயற்சிக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு மாநிலங்கள் ஆதரவு தர வேண்டும். அதற்கு வாய்ப்பு குறைவு. ஒரே நாடு ஒரே தேர்தல் கோட்பாடு என்பது அடுத்தடுத்த ஆண்டுகளில் குடியரசுத் தலைவரின் ஆட்சியை திணிப்பதற்கான முயற்சி என அச்சப்படுகிறோம். இது தொடர்பாக முன்னாள் குடியரசுத்nதலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கைவிட வேண்டும், நடைமுறைபடுத்த அனுமதிக்கக் கூடாது என விசிக சார்பில் மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளோம். ஒருமித்த கருத்துடைய அரசியல் சக்திகளோடு இணைந்து எதிர்ப்பை பதிவு செய்வோம்" என்றவரிடம்,
'திருப்பதி லட்டுவில் மாட்டுக்கொழுப்பு கலப்பு' தொடர்பான கேள்விக்கு, "பெரும்பாலான இனிப்பு அல்லது உணவு பொருட்களில் இது போன்ற விலங்கு கொழுப்பு பயன்படுத்துவது உலகம் முழுவதிலும் நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். இதனையும் அரசியலாக்குவது ஏன் என்று தெரியவில்லை. விலங்கு கொழுப்பு மற்றும் மாட்டுக்கொழுப்பு இருக்கக்கூடாது என்றால் அதற்குரிய வழிகாட்டுதலை ஏற்படுத்தி எதிர்காலத்தில் இதுபோன்று இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்றவரிடம்,
'ஆட்சியில் பங்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் கேட்கப்படுமா' என்ற கேள்விக்கு,
"இதற்குப் போதிய அளவு விளக்கம் சொல்லிவிட்டோம்" என்றார்.திருமாவளவன்
பின்பு பசுமலையில் நடந்த மது ஒழிப்பு மாநாடு தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கட்டத்தில் பேசிய திருமாவளவன், "மக்களுக்கான களம் வேறு, கூட்டணிக் கட்சிக்கான களம் வேறு. திமுக கூட்டணியில் பிளவு ஏற்படுமா, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பலவீனம் ஏற்பட்டு விட்டதா என்று இலவு காத்த கிளியாக எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து போனார்கள். அதிமுக-விற்குள் பலவீனம் உள்ளது.
திமுக கூட்டணி தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெறுகிறது, இந்த கூட்டணியில் எப்போது பிளவு வரும் என்று எதிர்பார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஓர் ஆண்டுக்கு மது விற்பனை மூலம் 45 ஆயிரம் கோடி வருகிறது என்று எதிர்பார்க்கிறார்கள். மது பழக்கத்தால் நாட்டுக்கு சீரழிவு ஏற்படுகிறது. மனித வளம் அழிகிறது. திருமாவளவன்
ஆளும்கட்சி கூட்டணியில் இருந்துகொண்டு மக்கள் பிரச்னைக்காக குரல் கொடுக்கும் போது நெருடல் வரத்தான் செய்யும். அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாட்டுக்கு பிறகு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு வேண்டும் என்றும், இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தவும் நாம் குரல் கொடுப்போம்" என்று பேசினார்.
http://dlvr.it/TDW7tQ