தந்தை பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் தருணத்தில்தான் தமிழ்ச் சமூகத்தின் அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தில் கொள்ளிவைக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு. மத்திய பா.ஜ.க அரசின் கைப்பாவையாக இருக்கும் தமிழக அரசு, புதிய கல்விக்கொள்கை நடைமுறைக்கு வரும் முன்பே ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு என்று அறிவித்திருக்கிறது. பெரியாரை சுவரொட்டிகளில் மட்டும் போட்டுவிட்டு, அவர் கொள்கைகளைக் குப்பைத்தொட்டியில் தூக்கிப்போடும் தமிழக அரசின் பகுத்தறிவற்ற செயல்களை எதிர்ப்பதற்கும் நமக்குப் பெரியார் தேவைப்படுகிறார். Periyar
"கல்வி என்பதை ஒரு மனிதனுக்குக் கற்பிக்க வேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தன் வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும்" என்றார் பெரியார். உண்மையில் கல்வி என்பது பாடப்புத்தகங்களுடன் முடிந்துவிடுவதில்லை. அறிதலுக்கான பல திறப்புகளை உருவாக்குவதே கல்வி. அதனால்தான் பள்ளிக்கூடங்களில் புராணங்கள் கற்றுத்தருவதைவிடவும் நவீனக் கல்விக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார்.
"உலக ஞானமற்ற சோம்பேறிகள் என்றால் உபாத்தியாயர்களைத்தான் சொல்ல வேண்டும்" என்று அவர் ஆசிரியர்களைக் கடுமையாக விமர்சிக்கவும் தவறவில்லை. மனப்பாடக் கல்விமுறையைக் கடுமையாக விமர்சித்த பெரியார், "உருப்போட்டு ஒப்புவிப்பது என்பதே எந்தப் பரிட்சைக்கும் பாடமாக இருக்க முடியாது. அப்படியானால் அர்ச்சகனும் புரோகிதனும்தான் ஒப்புவிக்க முடியும்" என்று சொன்னார். சமூக விஞ்ஞானம், தேர்வுமுறைகள் ஒரு மாணவரின் திறமையையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதைக் கடுமையாக எதிர்த்த பெரியார், இன்று நமக்குத் தேவை.
பெரியாரின் சிறப்பு என்பதே அவர் காலங்கடந்து நிற்க விரும்பிய தலைவர் அல்ல என்பதுதான். "இன்னும் 50 ஆண்டுகளுக்குத்தான் என்னுடைய தேவை இருக்கும். அதற்குப் பிறகு ஈ.வெ.ராமசாமி என்ற மூடக்கொள்கைக்காரன் இருந்தான் என்று உலகம் பேசும்" என்றும் அவர் கூறினார். ஒருகாலத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் இன்னொருகாலத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். "எதிர்காலத்தில் சாதி, மதம், கடவுள் போன்றவை இருக்காது. அப்போது 'இவற்றையெல்லாம் ஈ.வெ.ராமசாமி என்று ஒருவர் எதிர்த்தார்' என்பதே கேலிப்பொருளாக இருக்கும்" என்று அவர் எதிர்பார்த்தார். அவர் இறந்து 45 ஆண்டுகள் கடந்துவிட்டோம். ஆனால், பெரியார் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறார் என்றால் சமூகம் இன்னும் பிற்போக்காக இருக்கிறது என்றே அர்த்தம். Periyar
பெரியார் காலங்கடந்து நிற்க விரும்பிய தலைவரில்லை. ஆனால், காலம் தாண்டிச் சிந்தித்தவர். அவர் வெறுமனே சமகாலச் சூழல்களுக்கான எதிர்வினைகளை மட்டும் நிகழ்த்தவில்லை. காலமாற்றங்களை அவர் உருவாக்கினார். எதிர்காலத்தில் உலகமும் மனிதச் சமூகமும் அடைய வேண்டிய மாற்றங்கள் குறித்து சிந்தித்தார். அதனால்தான் தமிழ்ப் பற்றையும் தமிழ்ப் புலவர்களையும் தமிழ் இலக்கியங்களையும் கடுமையாக விமர்சித்த பெரியார்தான், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தையும் முன்மொழிந்தார். இன்று நம் கணிப்பொறிக்கேற்ற தமிழ் வடிவத்தை உருவாக்கியது பெரியாரின் சாதனை. 'இனிவரும் உலகம்' என்னும் நூலில் 'எதிர்காலத்தில் அனைவரின் பையிலும் கம்பியில்லா தந்திச் சாதனம் இருக்கும்' என்றார். 'குழந்தை பெறுவதற்கு ஆண், பெண் சேர்க்கை தேவைப்படாத காலம் உருவாகும்' என்று யோசித்தவர் அவர். டெஸ்ட் டியூப் பேபியும் செல்போனும் அவர் கனவில் இருந்தன.
இவற்றைச் சொன்னதாலேயே அவர் குறி சொல்பவரோ தீர்க்கதரிசியோ, மகானோ தேவகுமாரனோ அல்ல. அப்படி யாரும் தன்னை ஆக்கிவிடக் கூடாது என்பதற்காகத்தான் தன் சிலைகளின் கீழ் கடவுள் மறுப்பு வாசகங்களை எழுதச் சொன்னார். தன்னுடைய ஒவ்வொரு உரையின் தொடக்கத்திலும் ''நான் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. உங்கள் பகுத்தறிவு கொண்டு சிந்தியுங்கள். உங்கள் அறிவு ஏற்றுக்கொள்வதை ஏற்றுக்கொள்ளுங்கள். பொருந்தாதவற்றை விட்டுத்தள்ளுங்கள்" என்று கூறினார். Periyar
அவருடைய பகுத்தறிவு என்பது வெறுமனே நாத்திகமோ மூடநம்பிக்கை ஒழிப்போ அல்ல. சிந்தனைக்கான உரிமை, ஜனநாயகத்தின் உச்சம்தான் அவருடைய பகுத்தறிவு என்ற கருத்தாக்கம். "கற்பு என்கிற ஒன்று கிடையாது என்கிறீர்களே, உங்களுடைய மனைவி வேறொருவரிடம் போனால் ஏற்றுக்கொள்வீர்களா?" என்று அவரை கூட்டத்தில் கேட்கும் உரிமை இருந்தது. "இதை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? அதை முடிவு செய்ய வேண்டிய உரிமை என் மனைவியுடையது அல்லவா?" என்று பதிலளித்தார் பெரியார். இப்படியொரு பதிலையும் உலகத்தில் எந்தத் தலைவரும் அளித்திருக்க மாட்டார்கள். அவர்தான் பெரியார்!
பெண்ணியச் சிந்தனையாளர்களில் உலகளவில் முக்கியமான சிந்தனையாளர் என்று பெரியாரைச் சொல்லலாம். சமகாலத்தில் பேசப்படும் பல பெண்ணியச் சிந்தனைகளை 30-களில் பேசியவர் அவர். இன்றளவும் உலகளவில் கருக்கலைப்பு என்பது சமயத்துக்கு எதிரான சிந்தனையாகக் கருதப்படுகிறது. குடும்பக்கட்டுப்பாடு என்பது மக்கள்தொகைப் பெருக்கத்துக்காக என்ற பிரசாரம் தொடங்குவதற்கு முன்பு, அதை மக்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லாத காலத்தில், மக்கள்தொகைப் பெருக்கத்துக்காக மட்டுமல்லாது பெண்களின் விடுதலைக்காகக் கருத்தடையை முன்வைத்தவர் பெரியார்.
பிள்ளை பெறும் இயந்திரமல்ல பெண்கள். குழந்தை பெறுவதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டியவர்கள் பெண்கள்தான் என்றார். 'காதலுக்கு வழிவைத்து கருப்பாதை சாத்த கதவொன்று கண்டறிவோம். இதிலென்ன குற்றம்?' என்றார் பெரியாரியக்க புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். 'ஐயயோ, பெண்கள் குழந்தை பெறாவிட்டால் மனித சமூகம் விருத்தியடையாதே?" என்ற கேள்விக்குப் பெரியாரின் பதில், "மனித சமூகம் விருத்தியடையாவிட்டால் என்ன, மற்ற ஜீவராசிகள் விருத்தியடையட்டுமே! பெண்களை ஒடுக்கும் மனித சமூகம் விருத்தி அடைந்தால் என்ன, அடையாவிட்டால் என்ன?' அவர்தான் பெரியார்! Periyar and Maniammai
பெரியார் வெறுமனே பேச்சளவில் நிற்கவில்லை. இன்றைக்குத் திருமணம் செய்யாமல் தனியாக வாழும் பெண்கள், கணவனைப் பிரிந்து வாழும் பெண்கள், சிங்கிள் பேரண்ட், பாலியல் தொழிலாளர்கள் ஆகியோரின் நிலை குறித்தும் உரிமை குறித்தும் பேசுகிறோம். ஆனால், பெரியாரோ 1928-ல் செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாகாண மாநாட்டில், 'தனியாக வாழும் பெண்கள், விதவைகள், விலைமகள் என்று தங்களைக் கருதிக்கொள்வோர் இந்த மாநாட்டில் சிறப்பாகக் கலந்துகொள்ள வேண்டும்' என்று அழைப்பு விடுத்தார். தனது வீட்டிலேயே பெண்களுக்கான முறைசாரா அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தி, அதில் பெண்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கும் வசதி செய்து தந்தார். வீட்டைவிட்டு வெளியேறும் பெண்கள், அநாதரவான பெண்கள் தங்குவதற்காக ஒரு விடுதியையும் நடத்தியிருக்கிறார் பெரியார்.
மூன்றாவது தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் 22 வயதான சின்னராயம்மாள் என்ற பெண்ணின் சார்பாக ஒரு கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. 50 வயதான ஓர் ஆணுக்கு மூன்றாம் தாரமாக வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்யப்பட்டிருந்தார் சின்னராயம்மாள். ‘குழந்தை வேண்டும்’ என்று அவரின் கணவர் கட்டாய உறவுகொள்ள முயன்றபோது, சின்னராயம்மாள் வீட்டைவிட்டு வெளியேறி பெரியார் நடத்திய விடுதியில் குடிபுகுந்தார்.
தேவதாசி முறையை ஒழிப்பதற்காகத் துணை நின்றவர் பெரியார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் சத்தியமூர்த்தி அய்யர், தேவதாசி முறையை ஆதரித்தபோது, அதை எதிர்த்த டாக்டர் முத்துலெட்சுமி அம்மையாருக்கு உறுதியுடன் துணைநின்றவர் பெரியார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் தேவதாசி ஒழிப்புப் போராட்டங்களுக்குத் தன்னை முன்னிறுத்தாமல் துணை நின்றார். ராமாமிர்தம் அம்மையாரின் நாவலான 'மதிகெட்ட மைனர்' நூலுக்கு அணிந்துரை, சாற்றுக்கவி ஆகியவற்றை எழுதியவர்கள் முழுக்கப் பெண்கள். தன்னை முன்னிறுத்தாமல் ஈரோட்டில் உள்ள தன் அச்சகத்தில் அந்த நாவலை அச்சிட்டவர் பெரியார். Periyar and Rajaji
சமீபத்தில் ஓர் ஈழத்தமிழர் திருமணத்தில் மணப்பெண் மணமகனுக்குத் தாலி கட்டியதற்காக அந்தப் பெண்ணைச் சொல்லத்தகாத வார்த்தைகளால் சமூகவலைதளங்களில் விமர்சிக்கின்றனர். ஆனால், 1935-ல் மாநில சுயமரியாதை சங்கப் பொருளாளர் வை.சு.சண்முகத்தின் மகளின் திருமணத்தில் மணப்பெண், மணமகனுக்குத் தாலி கட்டினார் என்றால் பெரியாரின் துணிச்சலை நாம் புரிந்துகொள்ளலாம். பொதுவாழ்க்கைக்காகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டாலும் அதை எப்போதும் பெருமையாக அவர் கூறிக்கொண்டதில்லை. ஒரு மாநாட்டில் பெரியாரைப் பலரும் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். இறுதியாகப் பேசவந்த பெரியார், "நான் என்னென்னவோ கஷ்டங்களை அனுபவித்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், இவ்வளவு நேரம் என்னைப் புகழ்ந்தார்களே அதைக் கேட்பதுதான் நான் அனுபவித்த கஷ்டம்" என்றார்.
'பொதுநலமோ தியாகமோ பெருமைக்குரியதல்ல. பொதுவாழ்க்கையில் கிடைக்கும் திருப்தி என்பதும் சுயநலம்தான்' என்ற பெரியார், 'ஒருவர் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் தனிப்பட்ட மான, அவமானத்தைப் பார்க்க முடியாது' என்றார். எல்லோருக்கும் பொதுவான ஒழுக்கம் என்பதோ எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் ஒழுக்கம் என்ற ஒன்றோ கிடையாது என்றார். 'பிறர் உனக்கு எதைச் செய்யக் கூடாது என்று நினைக்கிறாயோ அதை நீ பிறருக்குச் செய்யாமல் இருப்பதுதான் ஒழுக்கம்' என்றார். இப்படிப் பல விஷயங்களில் அவர் தன் காலத்தைத் தாண்டி சிந்தித்த நவீனச் சிந்தனையாளராக இருந்தார். Periyar
அதனால்தான் அவர் காலாவதியான தலைவராக இல்லாமல், காலத்தைத் தாண்டி நின்ற, வென்ற தலைவராக, சிந்தனையாளராக இருக்கிறார். இன்று பெரியார் பெரியாரிஸ்ட்களைத் தாண்டி, பெரியார் இயக்கங்களைத் தாண்டி இளைஞர்களின் பேசுபொருளாக இருக்கிறார். சமூக வலைதளத்தில் பெரியாரை முன்வைத்து உரையாடும் லட்சக்கணக்கான இளைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள் பெரியாரைக் கொண்டாடுகிறார்கள். இது தமிழகத்தில் மட்டுமல்ல. எந்த இந்தியைப் பெரியார் எதிர்த்தார் என்று சொல்லப்படுகிறதோ அந்த இந்தியில் பெரியாரின் சிந்தனைகள் மொழிபெயர்க்கப்படுகின்றன.
சாதி ஆதிக்கத்தால் தற்கொலை செய்துகொண்ட ஹைதராபாத் மாணவர் ரோகித் வெமுலா பெரியாரைத் தன் ஆதர்சமாக முன்னிறுத்தினார். வட இந்தியாவின் முற்போக்கு ஆளுமைகளான கன்ஹையா குமார், ஜிக்னேஷ் மேவானி போன்றவர்கள் பெரியாரைப் பேசுகிறார்கள். மதவாதமும் சாதியமும் ஆணாதிக்கமும் ஒற்றைத்துவ பண்பாட்டு ஆதிக்கமும் மேலெழும் சூழலில், பெரியார் இன்று இந்தியாவின் தேவை.Periyar
பெரியாரை வெறுமனே கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன எதிர்ப்பாளராகவும் மட்டுமே புரிந்துகொண்டு கொண்டாடுபவர்களும் சரி, நிராகரிப்பவர்களும் சரி இருதரப்புமே பரிதாபத்துக்குரியவர்கள். ஏனெனில், அவருடைய நாத்திகத்துக்கும் பார்ப்பன எதிர்ப்புக்கும் அடிப்படையாக இருந்தவை சாதியொழிப்பு சமத்துவச் சிந்தனையும் சகமனிதர்களை மதிக்கும் சுயமரியாதை வேட்கையும்தான். அவர் எந்தக் கோயில்களுக்கும் எந்தத் தனிப்பட்ட பார்ப்பனருக்கும் எதிராக வன்முறையைத் தூண்டவில்லை. அப்படியான சூழல் அமையும் காலகட்டங்களில் வன்முறையைத் தடுத்து அறத்தை நிலைநாட்டியவர். அவர்தான் பெரியார்!
சமகாலச் சூழலுக்கு ஏற்ப பெரியாரைக் கட்டமைக்க வேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது. 'பறையன் பட்டம் ஒழியாமல் சூத்திரன் பட்டம் ஒழியாது' என்றார் பெரியார். இன்று அவருடைய கருத்துப்படி சூத்திர இழிவு ஒழியாமல் இருக்கலாம். ஆனால், 'சூத்திரன்' என்ற சொல் இன்றைய தலைமுறை அறியாத ஒன்றாக மாறியிருக்கிறது. ஆனால், இன்னமும் 'பறையன்' பட்டம் ஒழியவில்லை. சாதி ஒழிப்பை பார்ப்பன எதிர்ப்போடு நிறுத்தாமல் இடைநிலைச் சாதி ஆதிக்கத்தையும் எதிர்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கல்வி கற்க, பணிக்குச் செல்ல இன்று பெண்களுக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது. ஆனால், இந்த உடையைத்தான் போட வேண்டும், இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் மாறவில்லை. வேலைக்கும் செல்ல வேண்டும், வீட்டிலும் சமைக்க வேண்டும் என்ற இரட்டை அடிமைமுறை உருவாகியிருக்கிறது. Periyar
பிள்ளை பெறுவதைப் பெண்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்ற பெரியாரின் மண்ணில் பெண்கள் யாரைத் திருமணம் செய்ய வேண்டும் என்று சாதிச்சங்கத் தலைவர்கள் தீர்மானிக்கிறார்கள். சாதிவெறியும் ஆணவக்கொலையும் மதவாதமும் ஆணாதிக்கமும் இருக்கும்வரை பெரியார் இருப்பார். ஏனெனில் பெரியார் எங்கள் காலத்தின் கைத்தடி.
2019- செப் 17 எழுதப்பட்ட கட்டுரை
http://dlvr.it/TDKVWk