இனி, ஏவிய கால் மணி நேரத்தில் விண்ணைத் தொட்டு விடுமாம் ராக்கெட்கள்
லண்டன்: வெறும் 15 நிமிடத்தில், ஒலியை விட 5 மடங்கு வேகத்தில் செல்லும் ராக்கெட் ஒன்றினை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளார்கள். பொதுவாக பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப் படும் ராக்கெட்டுகளின் பயணநேரம் பல மணி நேரங்கள் ஆகும்.
ஆனால், ராக்கெட்டுகளின் பயண நேர விரயத்தை குறைக்கும் வகையில் மாற்றுப் பாதையினை குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். தற்போது, அம்முயற்சியில் வெற்றி பெற்றுள்ளனர் விஞ்ஞானிகள்.
அதாவது, காற்றை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ராக்கெட்டின் உதவியால் 15 நிமிடத்தில் விண்வெளியை அடைய முடியும் என அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சாப்ரீ என்ஜின்
ஒலியை விட வேகமாக சீறிப்பாயும் அதிநவீன 'சாப்ரீ' என்ஜின் ஒன்றினை கண்டுபிடித்துள்ளனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள். இவற்றைப் பயன் படுத்தி உருவாக்கும் ராக்கெட்டுகளை சாதாரண விமான ஓடுதளத்திலேயே பயன் படுத்த முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.
ஒலியை விட 5 மடங்கு வேகம்
மேலும், இந்த ராக்கெட் ஒலியைவிட 5 மடங்கு கூடுதல் வேகத்தில் இயங்க கூடியது. அதாவது, கிட்டத்தட்ட மணிக்கு 19 ஆயிரம் மைல் (30,577 கி.மீ) வேகத்தில் பாய்ந்து செல்லும் திறன் மிக்கது.
ஆளின்றி இயங்க கூடிய, மிகவும் எடை குறைந்த இந்த ராக்கெட் 15 டன் எடையை சுமந்து செல்லக்கூடிய திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திரவ ஹைட்ரஜன்
‘சாப்ரீ' என்ஜின் இயங்க திரவ ஹைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது. இது காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் சேர்ந்து எரிபொருளை எடுத்துக் கொள்கிறது.
English summary
Skylon, a revolutionary spacecraft that can take adventurers to Earth's stratosphere in just 15 minutes will soon be a reality. It will travel at a speed of 30,577.5km (19,000 miles) per hour — five times the speed of sound.