பரங்கிமலை பயிற்சி மையத்தில் 2 ராணுவ அதிகாரிகள் பலி
சென்னையை அடுத்த பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் அலுமினிய ஏணி மூலமாக மின்சாரம் தாக்கி 2 பயிற்சி அதிகாரிகள் பலியாயினர். 2 பேர் காயமடைந்தனர்.
பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்று வரும் அதிகாரிகள், நேற்று பல்வேறு பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அலுமினிய ஏணி ஒன்றை இரண்டு வீரர்கள் தள்ளிக் கொண்டு வந்தனர். அப்போது, மேலே சென்ற மின்சார வயரில், ஏணி உராசியதில், ஏணியை தள்ளிக் கொண்டு வந்த வீரர்களுக்கு மின்சாரம் பாய்ந்து தூக்கி அடிக்கப்பட்டனர்.
இதில், இமாச்சலை சேர்ந்த தர்சின்சிங் (31), உத்தர்கண்டைச் சேர்ந்த மன்வர் சிங் (31) ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்றச் சென்ற சசிசிங் (33), ராஜேந்திரசிங் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.