இடதுசாரிகளால் எனக்கு போதாத காலம்: சாண்டி ஆதங்கம்
( Kerala , India, Left party, Congress, Politics, India Politics, Kerala CM, CM Umma chandi )
இடதுசாரி கட்சியால் எனது 40 ஆண்டு காலஅரசியல் வாழ்வில் இது போதாத
காலம் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி புலம்பித் தீர்த்தார். கேரளா
அரசியலை உலுக்கி எடுத்து வரும் சூரிய சக்தி மின்சார பேனல் மோசடி விவகாரம்
விஸ்வரூபம் எடுத்துள்ளது. முக்கிய எதிர்க்கட்சியான இடதுசாரிகள் இதை பெரும்
அரசியலாக்கி சட்டசபையில் அமளி ஏற்படுத்தி வருகின்றனர். சாண்டி பதவி விலக
வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சாண்டி பதவியை ராஜினாமா செய்யும் அளவிற்கு சென்றார். காங். மேலிடம் சமாதானம் செய்ததை தொடர்ந்து அமைதியானர். இது குறித்து உம்மன்சாண்டி கூறுகையில், கடந்த 40 ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து வருகிறேன். இரண்டாவது முறையாக முதல்வராக உள்ளேன்.
தற்போதைய சூழ்நிலையில் இடதுசாரி கட்சிகளால் எனக்கு போதாத காலம் ஏற்பட்டுவிட்டது. இதே போன்று தான் 1982-87-ம் ஆண்டுகளில் நான் அமைச்சராக இருந்த போது, ஈ.கே.நாயனார், ராகவன் உள்ளிட்ட கம்யூ. தலைவர்கள் என்மீது வன மரங்களை சட்டவிரோதமாக கடத்தி விற்பனை செய்ததாக பொய் புகார் கூறி என்னை பதவி விலக கோரினர்.
அரசியலாக்குகின்றனர்
தற்போது சூரிய மின்சார பேனல் விவகாரத்தில் என்னை சி்க்க வைக்க முயற்சிக்கின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என்பதனை சட்டசபையிலேயே தெரிவித்துவிட்டேன். ஆனால் இடது சாரி கட்சிகள் தான் தொடர்ந்து இதனை அரசியலாக்கி எனக்கு குடைச்சல் கொடுக்கின்றனர் என்றார்.
( Kerala , India, Left party, Congress, Politics, India Politics, Kerala CM, CM Umma chandi )