இளையராஜா ரஹ்மான் இசை, ரஜினி கமல் நடனம் ???
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவையொட்டி செப்டம்பர் ஒன்று முதல் மூன்றாம் தேதி வரை சென்னை ஒம்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விழாவில் பாடுவதற்கு என்று ஸ்பெஷல் பாடல் ஒன்றை உருவாக்க திட்டமிட்ட விழாக்குழுவினர், இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து இசையமைத்தால் நன்றாக இருக்கும் என இருவரையும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள். புன்னகையுடன் கேட்டுக் கொண்டவர்கள் இன்னும் சம்மதத்தை தெரிவிக்கவில்லையாம். இந்தத் தகவலை பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவர் சி.கல்யாண் தெரிவித்தார்.
ஒருவேளை இருவரும் சம்மதித்து, பாடலை உருவாக்கினால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப் பாடலை சும்மா இரண்டு பாடகர்களை வைத்து பாட வைக்க முடியாது. அதனால் அந்தப் பாடலுக்கு இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார்களை ஆட வைக்க திட்டமிட்டுள்ளனர். அமிதாப்பச்சன், கமல், ரஜினி, நாகார்ஜுன், மம்முட்டி, மோகன்லால், சிரஞ்சீவி... என பட்டியல் போகிறது.
ரஜினியின் பெயரை பார்க்கையில் ஆடுவார்களா இல்லை பாடலுக்கு வாய் அசைப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ரஜினி என்றைக்கு மேடையில் ஆடியிருக்கிறார்?
ரஜினியின் பெயரை பார்க்கையில் ஆடுவார்களா இல்லை பாடலுக்கு வாய் அசைப்பார்களா என்ற சந்தேகம் எழுகிறது. ரஜினி என்றைக்கு மேடையில் ஆடியிருக்கிறார்?