ஜடேஜாவை நன்றாகப் பயன்படுத்துகிறார்- தோனிக்கு லஷ்மண் பாராட்டு!
தோனி தலைமையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏறக்குறைய வெற்றி பெற முடியாத அணியாக உருவெடுத்துள்ளதை பாராட்டிய லஷ்மண் இந்தியாவுக்கு தோனி போன்ற ஒரு கேப்டன் கிடைத்தது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.
முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் இறுதியில் மிகவும் பொறுமையாக நின்று கடைசி ஓவரில் வீறு கொண்டு எழுந்து இலங்கையின் இதயத்தை நொறுக்கிய தோனியின் அந்த வெற்றி குறித்து லஷ்மண் கூறுகையில்:
டோனி கேப்டனாக கிடைத்தது இந்திய அணிக்கு அதிர்ஷ்டமே. அனைத்து உலக கோப்பையும் வென்றுள்ளார். இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக விளையாடக்கூடியவர். அவர் எப்போதுமே உணர்ச்சி வசப்படமாட்டார்.
இதுதான் அவரிடம் உள்ள சிறப்பு அம்சமாகும். ரவிந்திர ஜடேஜாவை டோனி சிறப்பாக பயன்படுத்துகிறார். ஜடேஜா அணியின் முக்கிய வீரராக உருவெடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.