மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 அமைச்சர்கள், அவர்களுக்கு கீழ் 67 எம்.எல்.ஏ.,க்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தொகுதியில் நவ.,19ல் இடைத்தேர்தல் நடக்கிறது.
மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெறும் நிலையில், அவரது பிரசாரமின்றி அ.தி.மு.க.,வினர் இத்தேர்தலை சந்திக்கின்றனர். எப்படியும் வெற்றி பெற்று, அதை ஜெ.,வுக்கு பரிசாக அளிக்க வேண்டும் என முடிவு செய்து இரவு, பகலாக தொகுதியில் கட்சி நிர்வாகிகள் முகாமிட்டுள்ளனர்.இதற்காக 10 அமைச்சர்கள், அவர்களுக்கு கீழ் 67 எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் என தமிழகம் முழுவதிலும் இருந்து திருப்பரங்குன்றம் தொகுதியில் முகாமிட்டுள்ளனர். ஆளுக்கு ஒரு வார்டு, கிராமங்களை 'தத்தெடுத்து' தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு அமைச்சருக்கும் குறிப்பிட்ட வார்டுகள், கிராமங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.உதாரணமாக, அமைச்சர் செல்லுார் ராஜூ, மதுரை மாநகராட்சி வார்டு 56,58க்கு பொறுப்பாளர். இவரது மேற்பார்வையில் எம்.பி., கோபாலகிருஷ்ணன், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன் தங்கள் ஆதரவாளர்களை கொண்டு வீடு வீடாக வாக்காளர் பட்டியலை வைத்து, 'இவர் அ.தி.மு.க.,விற்கு ஓட்டளிப்பாரா, குடும்பத்தில் எத்தனை ஓட்டுகள் உள்ளன, அதில் எத்தனை பேர் உள்ளூரில் உள்ளனர்' என களஆய்வு செய்கின்றனர். மறக்காமல் அலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக்கொள்கின்றனர். ஓட்டளிக்க கூடியவர் வெளியூரில் இருந்தால், தேர்தல் அன்று அவரை வரவழைத்து, ஓட்டளிக்க செய்வது அந்தந்த பகுதி செயலாளர்களின் பொறுப்பு. இதனால், ஒவ்வொரு 20 வாக்காளர்களுக்கும் ஒரு கட்சி தொண்டரை நியமித்து தேர்தல் வரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், எம் எல்.ஏ., க்களுக்கு ஒன்றியம், கிராமங்கள் ஒதுக்கப்பட்டு, அவர்களின் கீழ் கட்சி தொண்டர்கள் பணியாற்றி வருகின்றனர். காலை 8:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை, தெருத் தெருவாக அலைந்து வாக்காளர் பட்டியலை 'சரிபார்ப்பது' அவர்களது வேலை. இதற்காக உணவு மற்றும் 'இதர படிகள்' வழங்கப்படுகிறது. காலியான கடைகள், வீடுகளை வாடகைக்கு பிடித்து ஒவ்வொரு 200 அடிக்கும் ஒரு மினி தேர்தல் அலுவலகம் இயங்கி வருகிறது.