பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்காத பெட்ரோல் 'பங்க்' மீது, கடும் நடவடிக்கை எடுக்க போவதாக, எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, பெட்ரோல் 'பங்க், காஸ்' ஏஜென்சிகளில் மாற்றி கொள்ள, மத்திய அரசு நேற்று வரை அவகாசம் வழங்கி இருந்தது. தற்போது, அந்த
அவகாசத்தை, 24ம் தேதி வரை நீட்டித்துள்ளது. எனவே, பழைய ரூபாய் நோட்டு வாங்காத, பெட்ரோல் பங்க் மீது, கடும்நடவடிக்கை எடுக்க இருப்பதாக, எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
கடும் நடவடிக்கை:
இதுகுறித்து, எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: சில்லரை தட்டுப்பாடு என்ற காரணத்தை கூறி, பெட்ரோல் 'பங்க்'கில், பழைய ரூபாய் நோட்டுவாங்க மறுப்பதாக புகார் வருகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் குறிப்பாக, பிற மாநிலங்களில் இருந்து, சரக்குகளை கொண்டு வந்துள்ள லாரி ஓட்டுனர்கள் பாதிக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
எனவே, அரசின் உத்தரவை மதிக்காமல் இருக்கும், பங்க் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களை கண்டறிய, எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஆய்வு செய்வர்.இவ்வாறு அவர் கூறினார்.