புது தில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தற்போதைக்கு புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் திட்டம் மத்திய அரசுக்கு இல்லை என்று தெரிவித்தார்.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2000 மற்றும் 500 புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
எனினும் இதுவரை 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்படவில்லை. 2000 ருபாய் நோட்டுகளுக்கும் சில்லறை கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆயிரம் ரூபாய்க்கே சில்லறை இல்லாமல் சிரமப்படும் மக்கள், 2 ஆயிரம் ரூபாயை எங்கே மாற்றுவது என்று புலம்பி வருகிறார்கள்.
புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் அதிகம் விடப்பட்டாலும், 1000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டாலும் தான் இந்த அவதி தீரும் என்று நம்பி வந்த மக்கள், தற்போது மத்திய நிதியமைச்சரின் இந்த அறிவிப்பால் சற்று கலக்கத்தில் தான் உள்ளனர்.
Summary : At the moment there is no plan to introduce a 1000 rupee, Finance Minister Arun Jaitley said.