சேலம்: பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள மணிமுத்தாறில் ஆயிர்ம் ரூபாய் நோட்டுகள் மிதப்பதாக வெளியான தகவலால் அங்கு ஏராளமான மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி வணிக வளாகத்தின் பின்புறம் உள்ள மணிமுத்தாறு ஆட்கொல்லி பாலத்தின் கீழ் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மிதந்து சென்றுள்ளன. இதனை அவ்வழியாக வாகனங்களில் சென்ற சிலர் பார்த்துள்ளனர். இந்த விஷயம் காட்டுத்தீப்போல் பரவியதால் அடுத்த சில நிமிடங்களில் ஏராளமானோர் பாலம் அருகே திரண்டனர்.
ஒரே நேரத்தில் பாலத்தின் மீது 300க்கும் மேற்பட்டோர் கூடியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அங்குவந்த காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். பின்னர் நடத்திய விசாரணையில் சிவப்பு பாலித்தீன் பைகளில் கட்டப்பட்ட குப்பைகள் ஆற்றில் மிதந்தது சென்றது தெரியவந்தது.
அவை 1000 ரூபாய் நோட்டு போல் தெரிந்ததால் வதந்தி பரவியதும் விசாரணையில் கண்டுபிக்கப்பட்டது.

English summary:
After rumour spread that Rs 1000 notes are floating in Salem's Thirumanimutharu river, people were thronging the place and found that it was hoax.