மூன்று தொகுதிகளில், அதிக ஓட்டுகளைப் பெற, அ.தி.மு.க., சார்பில், 100 வாக்காளர் களுக்கு, ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும், 19ல், தேர் தல் நடைபெற உள்ளது.முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று தொகுதிகளிலும், வெற்றி பெற வேண்டும் என்ற துடிப்புடன், அ.தி.மு.க.,வினர் களம் இறங்கி உள்ளனர்.
அதேபோல, தி.மு.க.,வும், இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை உடைக்க வேண்டும் என்ற
எண்ணத்துடன், களம் இறங்கி உள்ளது. அ.தி.மு.க., சார்பில், தேர்தல் பணி செய்ய, அமைச்சர்கள் தலை மையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வில் முன்னாள் அமைச்சர்கள் இடம் பெற்ற,பணிக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இரு கட்சிகளும், மாநிலம் முழுவதும் இருந்து, கட்சி நிர்வாகிகளை அழைத்து வந்து, மூன்று தொகுதிகளி லும் குவித்துள்ளன. அ.தி.மு.க.,வில், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள் என அனைவருக்கும், பகுதிகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன.
அவர்கள், தங்கள் மாவட்ட கட்சியினருடன், ஒதுக் கப்பட்ட பகுதியில் முகாமிட்டுள்ளனர். தினமும், ஆதரவாளர்களுடன் சென்று ஓட்டுசேகரிக்கின்றனர். அத்துடன், 100 வாக்காளர் களுக்கு, ஒரு நிர்வாகியை பொறுப்பாளராக நியமித்துள்ளனர்.அவர், தனக்கு ஒதுக்கப் பட்டுள்ள, 100 வாக்காளர்கள் எங்கு வசிக்கின்ற னர்; எங்கு பணிபுரிகின்றனர்; கட்சி சார்ந்தவர் களா, சாராதவர்களா என்ற விபரங்களை சேகரிக்க வேண்டும்.
தினமும் அவர்களை சந்தித்து, ஓட்டு சேகரிக்க வேண்டும்.வாக்காளர்கள், வெளியூர்களில்வ
சித்தால், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று சந்திக்க வேண்டும்; தேர்தல் அன்று அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது, இரு கட்சியினரும், வீடு வீடாக சென்று, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுஉள்ளனர். அடுத்த வாரம், பட்டுவாடாவை துவக்க முடிவு செய்துள்ளனர்.